இதய மாற்று அறுவை சிகிச்சை

இதய மாற்றீட்டு சத்திரச் சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை (heart transplant, cardiac transplant) இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது தீவிர குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ளவருக்கு இன்னொரு மனிதனில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான இதயத்தை மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சையாகும்.

2008ஆம் ஆண்டு நிலவரப்படி பெரும்பாலும் அண்மையில் இறந்த உடல் உறுப்புக் கொடையாளரின் வேலை செய்கின்ற இதயம் எடுக்கப்பட்டு நோயாளிக்குப் பொருத்தப்படுகின்றது. நோயாளியின் இதயம் அகற்றப்படலாம் அல்லது தனது இடத்திலேயே கொடையாளி இதயத்திற்கு ஆதரவாக செயல்படுமாறு விட்டு வைக்கப்படலாம். மாற்று இதய சிகிச்சை மேற்கொண்டவர்களின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகள் வரை கூடுவதாக மதிப்பிடப்படுகின்றது. இதய மாற்று அறுவை சிகிச்சை இதய நோய்க்கான மருத்துவத் தீர்வாக கருதப்படுவதில்லை; நோயாளியின் வாழ்நிலை தரத்தை உயர்த்தும் உயிர்காப்பு சிகிச்சையாக கருதப்படுகின்றது.

இதய மாற்று அறுவை சிகிச்சை
இதய மாற்று அறுவை சிகிச்சை
ஓர்த்தோடோபிக் சிகிச்சை முறையில் கொடை இதயம் வைக்கப்படுவதைக் காட்டும் வரைபடம். நோயாளியின் இடது சோணையறையும் பெருந்தமனிகளும் பெருஞ்சிரைகளும் அகற்றப்படவில்லை என்பதை நோக்குக.
சிறப்புஇதயவியல்
ICD-9-CM37.51
MeSHD016027
மெட்லைன்பிளஸ்003003

நீண்ட காலம் இதய நோய் உள்ளவர்களுக்கும், இதயத் தசை நோய்கள் காரணமாக இதயம் செயலிழக்கும் நிலையில் உள்ளவர்களுக்கும் இது தேவைப்படுகிறது. பொதுவாக மூளை செயலிழந்த ஒருவரிடமிருந்து இதயம் பெறப்படுகிறது. இவ்வாறான சத்திரசிகிச்சையில் இதயம்-நுரையீரல் மாற்றுவழி இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. நோயாளியின் இதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு இடது வலது சோனை அறைகளிலன் சுவரின் ஒரு பகுதியை விட்டு ஏனைய இதயப்பகுதி அகற்றப்படுகிறது. வழங்கியில் இருந்து பெறப்பட்ட இதயம் நோயாளியின் விடப்பட்ட இதயத்தின் பகுதிகளுடன் பொருந்துமாறு இணைக்கப்படுகின்ற்து. முடியுரு நாடிகளுடனும் நாளங்கள் போன்ற பிரதான குருதிக் குழாய்களுடனும் புதிய இதயம் இணைக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்

Tags:

இதயம்உடல் உறுப்புகள் கொடைஉறுப்பு மாற்றுகுருதி ஊட்டக்குறை இதய நோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதி வகைராஜா ராணி (1956 திரைப்படம்)தேர்தல்இசுலாமிய வரலாறுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்மருது பாண்டியர்இந்திய தேசியக் கொடிதமிழ்த் தேசியம்வைகைஅனுஷம் (பஞ்சாங்கம்)பட்டா (நில உரிமை)சப்ஜா விதைஉரிச்சொல்பிரேமலுதிருமால்கன்னி (சோதிடம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதேவநேயப் பாவாணர்தைப்பொங்கல்பாடாண் திணைவசுதைவ குடும்பகம்தமிழிசை சௌந்தரராஜன்மரகத நாணயம் (திரைப்படம்)நோய்பித்தப்பையானைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்புவியிடங்காட்டிபெ. சுந்தரம் பிள்ளைபஞ்சபூதத் தலங்கள்பட்டினப் பாலைதண்டியலங்காரம்முத்தொள்ளாயிரம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ரஜினி முருகன்புதன் (கோள்)இந்தியாநான் அவனில்லை (2007 திரைப்படம்)முல்லைப்பாட்டுஆல்வேதநாயகம் பிள்ளைரச்சித்தா மகாலட்சுமிவெந்து தணிந்தது காடுஅத்தி (தாவரம்)தமிழர் அளவை முறைகள்திருவரங்கக் கலம்பகம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்புங்கைதூது (பாட்டியல்)மியா காலிஃபாஇனியவை நாற்பதுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இசைவிஷால்விழுமியம்மொழிஅமலாக்க இயக்குனரகம்வன்னியர்விசயகாந்துதற்கொலை முறைகள்இரசினிகாந்துகண்ணகிஅதிமதுரம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மனோன்மணீயம்மயில்இலிங்கம்தமிழர் நிலத்திணைகள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பொருநராற்றுப்படைவேலு நாச்சியார்ஏலகிரி மலைசினேகாமனித மூளைபதினெண் கீழ்க்கணக்குசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகம்பராமாயணம்சேமிப்புஐந்திணைகளும் உரிப்பொருளும்🡆 More