அசினோனிக்சு

அசினோனிக்சு (Acinonyx) என்பது பூனை குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும்.

அசினோனிக்சு
புதைப்படிவ காலம்:Pliocene – Holocene, 3–0 Ma
PreЄ
Pg
N
அசினோனிக்சு
Cheetah, Acinonyx jubatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அசினோனிக்சு
சிற்றினங்கள்
  • அசினோனிக்சு அய்ச்சா
  • அசினோனிக்சு இண்டர்மீடியசு
  • அசினோனிக்சு சூபாடசு
  • அசினோனிக்சு பார்தினென்சிசு
வேறு பெயர்கள்
  • சினைலூரசு வாக்னர், 1830
  • சினோபெலிசு லெசன், 1842
  • குபேர் போய்தர்டு, 1842
  • குபர்டா கிரே, 1843
  • குபார்டசு துவெர்னாய், 1834
  • பாராசினோனிக்சு கிரெட்சூய், 1929

இப்பேரினத்தில் உயிருடன் உள்ள ஒரே ஒரு சிற்றினம் சிவிங்கிப்புலி (அ. சூபாடசு) ஆகும். இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் திறந்த புல்வெளிகளில் வாழ்கிறது.

சிறுத்தை போன்ற பூனைகளின் பல புதைபடிவ எச்சங்கள் பிலியோசீன் மற்றும் நடு பிளீசுடோசீனின் பிற்பகுதியில் தோண்டியெடுக்கப்பட்டன. இந்த பூனைகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்பட்டன. மிராசினோனிக்சு பேரினத்தில் வகைப்படுத்தப்பட்ட பல ஒத்த சிற்றினங்கள், இதே காலகட்டத்தில் வட அமெரிக்காவில் வாழ்ந்தன. இவை பூமா பேரினத்துடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையதாக இருக்கலாம்.

வகைப்பாட்டியல்

அசினோனிக்சு பேரினம் 1828-ல் ஜோசுவா புரூக்சு என்பவரால் முன்மொழியப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், பின்வரும் அசினோனிக்சு சிற்றினங்கள் மற்றும் துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • 1777-ல் ஜோஹன் கிறிஸ்டியன் டேனியல் வான் சிரெபர் விவரித்த பெலிசு சூபாட்டசு காம்டே டி பப்பன் மற்றும் தாமஸ் பென்னன்ட் ஆகியோரின் முந்தைய விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.
    • 1821-ல் கிரிபித் விவரித்த பெலிசு வெனாட்டிகா இந்திய சிவிங்கிப்புலியின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டது.
    • 1855-ல் பிட்சிங்கரால் சைனைலூரசு சோமெரிங்கி என்பது தெற்கு சூடானில் உள்ள கோர்டோபனிலிருந்து தியோடர் வான் ஹியூக்லின் டியர்கார்டன் ஷான்ப்ரூனுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு ஆண் சிவிங்கிப்புலி ஆகும்.
    • 1913-ல் ஹில்சைமர் எழுதிய அசினோனிக்சு கெக்கி என்பது பெர்லின் விலங்கியல் பூங்காவில் உள்ள செனிகலில் உள்ள சிவிங்கிப்புலி ஆகும். இதற்கு இந்த மிருகக்காட்சிசாலையின் இயக்குநரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

1993ஆம் ஆண்டில், அசினோனிக்சு ஒற்றைத் தொகுதிமரபு உயிரினத் தோற்றத் துணைக் குடும்பமான அசினோனிசினேவில் வைக்கப்பட்டது. மூலக்கூறு தொகுதிப் பிறப்பு பகுப்பாய்வு இதனைப் பூமா பேரினத்தின் சகோதர குழுவாகக் காட்டுகிறது. மேலும் இது இப்போது பெலினே என்ற துணைக் குடும்பத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பின்வரும் புதை படிவ அசினோனிக்சு சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • அ. பார்டினென்சிசு பெரும் சிவிங்கிப்புலி -1828-ல் குரோய்செட் எட் ஜோபர்ட் மூலம்
  • அ. இன்டர்மீடியசு-1954-ல் தேனியசு
  • . ஐச்சா-1997-ல் ஜெராட்சு
  • அ. குர்தெனி-2009-ல் கிறிசுடியன்சென் மற்றும் மசாக்

"லின்க்சியா சிவிங்கிப்புலி " ஆரம்பத்தில் சீனாவில் உள்ள பிலியோசீன் அடுக்குகளிலிருந்து காணப்பட்ட மண்டை ஓட்டின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது. மேலும் இது மிகவும் பழமையான பேரினத்தின் உறுப்பினராகக் கூறப்பட்டது. 2012ஆம் ஆண்டில், அ. குர்தேனி ஒரு சிற்றினமாகச் செல்லாததாக்கப்பட்டது, ஒப்புவகை என்பது மியோசீன்-வயதுடைய துண்டுகளால் ஆன போலியானது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பார்க்கவும்

  • மிராசினோனிக்ஸ் இனத்தைச் சேர்ந்த அமெரிக்க சிறுத்தைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அசினோனிக்சு வகைப்பாட்டியல்அசினோனிக்சு மேலும் பார்க்கவும்அசினோனிக்சு மேற்கோள்கள்அசினோனிக்சு வெளி இணைப்புகள்அசினோனிக்சுகுடும்பம் (உயிரியல்)சிவிங்கிப்புலிபுல்வெளிபூனைக் குடும்பம்பேரினம் (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதுமலை தேசியப் பூங்காபொருநராற்றுப்படைபால்வினை நோய்கள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கருக்கலைப்புகள்ளர் (இனக் குழுமம்)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிநவரத்தினங்கள்சிலிக்கான் கார்பைடுபுவிவெப்பச் சக்திவிளையாட்டுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தஞ்சாவூர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்இலக்கியம்அபுல் கலாம் ஆசாத்உஹத் யுத்தம்அன்னை தெரேசாசன்ரைசர்ஸ் ஐதராபாத்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பூட்டுதிராவிசு கெட்மண்ணீரல்சுக்ராச்சாரியார்பல்லவர்மாதவிடாய்திராவிடர்பாஸ்காகடையெழு வள்ளல்கள்வாட்சப்பிள்ளையார்நீலகிரி மாவட்டம்தங்கம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கணையம்நிணநீர்க்கணுஎஸ். ஜானகிசுரதாமருது பாண்டியர்மூசாஉமறு இப்னு அல்-கத்தாப்நஞ்சுக்கொடி தகர்வுபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காயத்ரி மந்திரம்இசுலாம்நான்மணிக்கடிகைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசஞ்சு சாம்சன்கேரளம்உன்னாலே உன்னாலேசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்தியன் பிரீமியர் லீக்வாணிதாசன்ஆண் தமிழ்ப் பெயர்கள்ஆதம் (இசுலாம்)நிலக்கடலைஅஜித் குமார்உணவுபஞ்சபூதத் தலங்கள்யானைசிலுவைதென் சென்னை மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்ஆனைக்கொய்யாதற்கொலை முறைகள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)கடலூர் மக்களவைத் தொகுதிதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)தவக் காலம்காடைக்கண்ணிபொதுவாக எம்மனசு தங்கம்அளபெடைபூப்புனித நீராட்டு விழா🡆 More