தோக்கியோ: யப்பானின் தலைநகரம்

தோக்கியோ (Tokyo, டோக்கியோ, சப்பானியம்: 東京, கிழக்குத் தலைநகரம்), அலுவல்முறையாக தோக்கியோ பெருநகரம் (東京都, Tōkyō-to?), சப்பான் நாட்டின் 47 மாநிலங்களில் ஒன்றும் அதன் தலைநகரமுமாகும்.

மேலும் இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும். தோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர்.

東京都
தோக்கியோ-தோ
தோக்கியோ மாநகரம்
அலுவல் சின்னம் 東京都 தோக்கியோ-தோ தோக்கியோ மாநகரம்
சின்னம்
Official logo of 東京都 தோக்கியோ-தோ தோக்கியோ மாநகரம்
Logo
ஜப்பானில் அமைவிடம்
ஜப்பானில் அமைவிடம்
நாடுதோக்கியோ: பெயர்க்காரணம், போக்குவரத்து, பருவ நிலைகள் சப்பான்
மாகாணம்கான்டோ பகுதி
தீவுஹொன்ஷு
அரசு
 • ஆளுனர்ஷின்டாரோ இஷிஹாரா
பரப்பளவு
 • நகரம்2,187.08 km2 (844.44 sq mi)
மக்கள்தொகை (2007)
 • நகரம்12,790,000
 • நகர்ப்புறம்8,652,700
 • நகர்ப்புற அடர்த்தி5,796/km2 (15,010/sq mi)
இணையதளம்metro.tokyo.jp

தோக்கியோ சப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் தென்கிழக்குப் பகுதியில் கன்டோ மண்டலத்தில் அமைந்துள்ளது. தோக்கியோ பெருநகரம் 1943ஆம் ஆண்டு முந்தைய தோக்கியோ மாநிலத்தையும் தோக்கியோ நகரத்தையும் ஒன்றிணைத்து உருவானது. தோக்கியோ ஒரு நகரமாகக் கருதப்பட்டாலும் இதனை பெருநகர மாநிலம் என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர மாநிலமாக தோக்கியோ நகரத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பிருந்த 23 நகராட்சி வார்டுகளும் சிறப்பு வார்டுகளாக அரசாளப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனி நகரமாகவே ஆளப்படுகிறது. இவற்றைத் தவிர பெருநகர மாநிலத்தில் 39 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 30 மாநிலத்தின் மேற்கிலும் 8 இசூ தீவிலும் ஒன்று ஓகசவரா தீவிலும் உள்ளன.

சப்பானில் உள்ள நான்கு நபர்களில் ஒருவர் தோக்கியோவில் வாழ்கின்றார். 100 க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் பெருமளவு சப்பானியர்கள் இந்த நகரிற்கு குடி பெயருகின்றனர். பெரும்பாலான சப்பானிய நிறுவனங்கள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர். அமெரிக்க $1.479 டிரில்லியன் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட தோக்கியோ உலகின் மிகப்பெரும் பொருளியல் சமூகத்தைக் கொண்ட நகரங்களில் முதலாவதாக விளங்குகிறது. உலகின் எந்த நகரத்திற்கும் இல்லாத பெருமையாக உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் இந்த நகரிலிருந்து இயங்குகின்றன.

உலகப் பொருளாதாரத்தின் மூன்று கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாக நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் நகரங்களுடன் அறியப்படுகிறது. இந்த நகரம் ஓர் உலகளாவிய நகரமாக கருதப்படுகிறது. பல்வேறு உலக மக்கள் வாழும் நகரங்களில் நான்காவதாக மற்றொரு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 2012இல் தோக்கியோ வெளிநாட்டினருக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக வாழும் செலவினங்களை கணிக்கும் மெர்சர் அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும் 2009இல் மிகவும் வாழத்தக்க நகரமாகவும் மோனோக்கிள் என்ற வாழ்நிலை இதழ் அறிவித்துள்ளது. உணவகங்களுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் நட்சத்திரங்கள் வழங்கும் மிச்லின் வழிகாட்டியில் தோக்கியோவிற்கு உலகின் வேறெந்த நகரையும் விட கூடுதலான நட்சத்திரங்கள் கிடைத்துள்ளன.

தோக்கியோவில் 1964 கோடைக்கால ஒலிம்பிக்ப் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது 2020ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பித்துள்ளது.

பெயர்க்காரணம்

தோக்கியோ துவக்கத்தில் கழிமுகம் எனப் பொருள்படும் எடோ என்ற சிற்றூராக இருந்தது. இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் தோக்கியோ (தோக்யோ: தோ (கிழக்கு) + க்யோ (தலைநகர்)) என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது.

போக்குவரத்து

தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (புல்லட் இரயில்) ஓசாகா மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. சப்பானில் ஓடும் அனைத்துவகையான ரயில்களும் காலந்தவறாமைக்கு புகழ் பெற்றவை. புல்லெட் ட்ரெயின் என்று அழைக்கப்படும் மிக அதி வேக ரயில்கள் சராசரியாக வருடத்திற்கு 0.6 நிமிடங்களே தாமதமாக செல்கின்றது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.பேரங்காடிகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிதிவண்டி நிறுத்துவதற்கு பிரத்தியேகமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தோக்கியோ மக்கள் வாடகைக் கார்களை (டாக்ஸி) போக்குவரத்திற்காக உபயோகிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர் . சேரும் இடமோ புறப்படும் இடமோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் இல்லாமல் இருந்தால் மக்கள் வாடகைக்காரை தேர்வு செய்யும் பழக்கம் உள்ளது. குழுக்களாக சிறு தூரங்கள் பயணிக்கும் பொழுதும் மக்கள் வாடகைக்கர்களை தேர்ந்தெடுக்கின்றனர் . இரவு நேரங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவை இல்லாத நேரங்களில் வாடகைக்கார்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் வாடகைக்கார் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . வாடகைக்கார் ஓட்டுனர்கள் வரிசை முறைப்படி தங்களது வாகனங்களை நிறுத்தி வாடிகையாளர்களை ஏற்றி செல்கின்றனர். காரின் உட்புறம் கட்டணம் அளவைக்கருவி உள்ளது. கருவி காண்பிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.வாடகைக்கார் கட்டணம் ரயில் கட்டணத்தை ஒப்பிடுகையில் மிக அதிகமாகவே உள்ளது.

பருவ நிலைகள்

தட்பவெப்ப நிலைத் தகவல், Ōtemachi, Chiyoda ward, Tokyo (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.6
(72.7)
24.9
(76.8)
25.3
(77.5)
29.2
(84.6)
32.2
(90)
36.2
(97.2)
39.5
(103.1)
39.1
(102.4)
38.1
(100.6)
32.6
(90.7)
27.3
(81.1)
24.8
(76.6)
39.5
(103.1)
உயர் சராசரி °C (°F) 9.6
(49.3)
10.4
(50.7)
13.6
(56.5)
19.0
(66.2)
22.9
(73.2)
25.5
(77.9)
29.2
(84.6)
30.8
(87.4)
26.9
(80.4)
21.5
(70.7)
16.3
(61.3)
11.9
(53.4)
19.8
(67.6)
தினசரி சராசரி °C (°F) 5.2
(41.4)
5.7
(42.3)
8.7
(47.7)
13.9
(57)
18.2
(64.8)
21.4
(70.5)
25.0
(77)
26.4
(79.5)
22.8
(73)
17.5
(63.5)
12.1
(53.8)
7.6
(45.7)
15.4
(59.7)
தாழ் சராசரி °C (°F) 0.9
(33.6)
1.7
(35.1)
4.4
(39.9)
9.4
(48.9)
14.0
(57.2)
18.0
(64.4)
21.8
(71.2)
23.0
(73.4)
19.7
(67.5)
14.2
(57.6)
8.3
(46.9)
3.5
(38.3)
11.6
(52.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -9.2
(15.4)
-7.9
(17.8)
-5.6
(21.9)
-3.1
(26.4)
2.2
(36)
8.5
(47.3)
13.0
(55.4)
15.4
(59.7)
10.5
(50.9)
-0.5
(31.1)
-3.1
(26.4)
-6.8
(19.8)
−9.2
(15.4)
பொழிவு mm (inches) 52.3
(2.059)
56.1
(2.209)
117.5
(4.626)
124.5
(4.902)
137.8
(5.425)
167.7
(6.602)
153.5
(6.043)
168.2
(6.622)
209.9
(8.264)
197.8
(7.787)
92.5
(3.642)
51.0
(2.008)
1,528.8
(60.189)
பனிப்பொழிவு cm (inches) 5
(2)
5
(2)
1
(0.4)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
11
(4.3)
ஈரப்பதம் 52 53 56 62 69 75 77 73 75 68 65 56 65
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.5 mm) 5.3 6.2 11.0 11.0 11.4 12.7 11.8 9.0 12.2 10.8 7.6 4.9 114.0
சராசரி பனிபொழி நாட்கள் 2.8 3.7 2.2 0.2 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.8 9.7
சூரியஒளி நேரம் 184.5 165.8 163.1 176.9 167.8 125.4 146.4 169.0 120.9 131.0 147.9 178.0 1,876.7
ஆதாரம்: Japan Meteorological Agency (records 1872–present)
தட்பவெப்ப நிலைத் தகவல், Ogouchi, Okutama town, Tokyo (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 6.7
(44.1)
7.1
(44.8)
10.3
(50.5)
16.3
(61.3)
20.5
(68.9)
23.0
(73.4)
26.8
(80.2)
28.2
(82.8)
23.9
(75)
18.4
(65.1)
13.8
(56.8)
9.3
(48.7)
17.1
(62.8)
தினசரி சராசரி °C (°F) 1.3
(34.3)
1.8
(35.2)
5.0
(41)
10.6
(51.1)
15.1
(59.2)
18.5
(65.3)
22.0
(71.6)
23.2
(73.8)
19.5
(67.1)
13.8
(56.8)
8.5
(47.3)
3.8
(38.8)
11.9
(53.4)
தாழ் சராசரி °C (°F) −2.7
(27.1)
−2.3
(27.9)
0.6
(33.1)
5.6
(42.1)
10.5
(50.9)
14.8
(58.6)
18.7
(65.7)
19.7
(67.5)
16.3
(61.3)
10.3
(50.5)
4.6
(40.3)
−0.1
(31.8)
8.1
(46.6)
பொழிவு mm (inches) 44.1
(1.736)
50.0
(1.969)
92.5
(3.642)
109.6
(4.315)
120.3
(4.736)
155.7
(6.13)
195.4
(7.693)
280.6
(11.047)
271.3
(10.681)
172.4
(6.787)
76.7
(3.02)
39.9
(1.571)
1,623.5
(63.917)
சூரியஒளி நேரம் 147.1 127.7 132.2 161.8 154.9 109.8 127.6 148.3 99.1 94.5 122.1 145.6 1,570.7
ஆதாரம்: Japan Meteorological Agency

நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள்

தோக்கியோ மிக மோசமான புவி நடுக்க மற்றும் தீ விபத்துக்களை சந்தித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விபத்து 1923 ல் ஏற்பட்டது. இதில் சுமார் 100,000 மக்கள் இறந்தனர். இதன் காரணமாக இங்கு வானுயர்ந்த கட்டடங்களை காண முடியாது.

உலக யுத்தம் II ன் பின்னர்

இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோக்கியோவின் பெரும் பகுதி நேச படைகளின் (Allied bombing) தாக்குதலால் அழிவடைந்தது. இதன் பின்பு சுமார் ஏழு வருடங்கள் (1945-1952) அமெரிக்கப் படைகள் தோக்கியோவில் இருந்தன. 1964 ல் கோடைகால ஓலிம்பிக் போட்டிகளை நடத்தியது.

இன்று தோக்கியோ

தோக்கியோ உலகின் முன்னேறிய நகரமாயினும், அதிகரிக்கும் மக்கள்தொகை பெரும் பிரச்சனையாக உள்ளது. அத்துடன் சூழல் மாசடைதலும் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. யப்பான் அரசு மக்களை நகரின் புறநகர் பகுதிகளில் வசிக்கும்படி ஊக்கம் அளிக்கின்றது.

இரட்டை நகரங்களும் சகோதர நகரங்களும்

தோக்கியோ கீழ்காணும் நகரங்களுடனும் மாநிலங்களுடனும் இரட்டையாக அறிவிக்கப்பட்டுள்ளது:

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வழிகாட்டிகள்

தற்போதையவை

  • Allinson, Gary D. Suburban Tokyo: A Comparative Study in Politics and Social Change. (1979). 258 pp.
  • Bestor, Theodore. Neighborhood Tokyo (1989). online edition
  • Bestor, Theodore. Tsukiji: The Fish Market at the Center of the World, (2004) online edition
  • Fowler, Edward. San’ya Blues: Laboring Life in Contemporary Tokyo. ( 1996) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801485703.
  • Friedman, Mildred, ed. Tokyo, Form and Spirit. (1986). 256 pp.
  • Jinnai, Hidenobu. Tokyo: A Spatial Anthropology. (1995). 236 pp.
  • Reynolds, Jonathan M. "Japan's Imperial Diet Building: Debate over Construction of a National Identity." Art Journal. 55#3 (1996) pp 38+. online edition
  • Sassen, Saskia. The Global City: New York, London, Tokyo.(1991). 397 pp.
  • Sorensen, A. Land Readjustment and Metropolitan Growth: An Examination of Suburban Land Development and Urban Sprawl in the Tokyo Metropolitan Area (2000) excerpt and text search
  • Waley, Paul. "Tokyo-as-world-city: Reassessing the Role of Capital and the State in Urban Restructuring." Urban Studies 2007 44(8): 1465-1490. Issn: 0042-0980 Fulltext: Ebsco

வெளி இணைப்புகள்

Tags:

தோக்கியோ பெயர்க்காரணம்தோக்கியோ போக்குவரத்துதோக்கியோ பருவ நிலைகள்தோக்கியோ நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள்தோக்கியோ உலக யுத்தம் II ன் பின்னர்தோக்கியோ இன்று தோக்கியோ இரட்டை நகரங்களும் சகோதர நகரங்களும்தோக்கியோ மேற்கோள்கள்தோக்கியோ மேலும் படிக்கதோக்கியோ வெளி இணைப்புகள்தோக்கியோசப்பான்ஜப்பானிய மொழிமக்கள் தொகைமாநிலங்கள் (சப்பான்)மில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நற்றிணைஆசிரியர்தமிழர் நிலத்திணைகள்கௌதம புத்தர்பிள்ளைத்தமிழ்எங்கேயும் காதல்நருடோதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மத கஜ ராஜாஅக்கி அம்மைவெ. இராமலிங்கம் பிள்ளைசீமான் (அரசியல்வாதி)மூகாம்பிகை கோயில்புற்றுநோய்தமிழ்நாடு சட்ட மேலவைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகொங்கு வேளாளர்சீர் (யாப்பிலக்கணம்)மனித உரிமைபெண்களின் உரிமைகள்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஊராட்சி ஒன்றியம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திருக்குறள்பிரெஞ்சுப் புரட்சிகன்னியாகுமரி மாவட்டம்கருத்தரிப்புஎச்.ஐ.விஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்உலக மலேரியா நாள்எட்டுத்தொகைதமிழ்ப் புத்தாண்டுசிவபெருமானின் பெயர் பட்டியல்கார்த்திக் சிவகுமார்இந்திய தேசிய காங்கிரசுதஞ்சைப் பெருவுடையார் கோயில்கண்ணதாசன்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)திவ்யா துரைசாமிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திய மக்களவைத் தொகுதிகள்அகத்திணைதஞ்சாவூர்மோகன்தாசு கரம்சந்த் காந்திகார்த்திக் (தமிழ் நடிகர்)அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்ரத்னம் (திரைப்படம்)முன்னின்பம்சீறாப் புராணம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்காதல் தேசம்திணையும் காலமும்நுரையீரல் அழற்சிஇரட்சணிய யாத்திரிகம்அண்ணாமலையார் கோயில்தமிழர் கப்பற்கலைமுதுமொழிக்காஞ்சி (நூல்)தசாவதாரம் (இந்து சமயம்)முத்துலட்சுமி ரெட்டிதேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்பறவைக் காய்ச்சல்ஏப்ரல் 24வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஜவகர்லால் நேருசிவம் துபேகட்டுரைஇந்திய உச்ச நீதிமன்றம்குறவஞ்சிஆண்டுகருப்பசாமிஞானபீட விருதுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்போக்குவரத்துதமிழ் இணைய மாநாடுகள்கரிகால் சோழன்🡆 More