பனி

நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் திண்மப் பொருளே பனி (Ice) ஆகும்.

இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.

பனி
பனிக்கட்டி
பனி
நீர்த்தாரை உள்ள இடத்தில் குளிர் அதிகமாகி உறைநிலைக்குப் போகும்போது, நீரானது மேல்நோக்கி தெறிக்கும் நிலையிலேயே உறைந்திருக்கின்றது

பனியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து வளிமண்டலத்தினூடாக விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் பனித்தூவி (Snow or Snowflakes) எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை (Hail) எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் கூரான ஈட்டி போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை பனிக்கூரி (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனி சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை பனியாறு (Glacier) என்பர். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனியாக (Sea ice) மாறும். நீராவியானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனித்தூளாக உறைந்த நிலையில் காணப்படும்போது அதனை பனிப்பூச்சு (Frost) எனலாம். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் பனிவிரிப்பு (Ice sheet) எனவும் அழைக்கப்படும் .

பனியானது புவியின் காலநிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர குளிர்கால விளையாட்டுக்கள், குளிர்பானங்கள் தயாரிப்பு, பனிச் சிற்பம் செய்யும் கலை போன்ற பல பண்பாட்டுசார் பயன்களைத் தருகின்றது. பனியிலிருந்து பெறப்படும் பனி உள்ளகங்கள், நீண்டகால அடிப்படையில் புவியில் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றங்களை அறியவும், அதன்மூலம் காலநிலையின் காலவரிசையை அல்லது வரலாற்றை அறியவும், அதனை ஆய்வு செய்வதனால், தற்கால அல்லது எதிர்கால காலநிலையை விளைவு கூறவும் உதவுகின்றது.

படத்தொகுப்பு

பனித்தூவி

பனிக்கூரி

பனிப்பூச்சு

மேற்கோள்கள்

Tags:

பனி படத்தொகுப்புபனி ப்பூச்சுபனி மேற்கோள்கள்பனிஉறைதல்ஒளிதிண்மம்நீர்நீர்மம்மண்வளிமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதமலைகாதல் கொண்டேன்சுயமரியாதை இயக்கம்மக்களவை (இந்தியா)வல்லினம்இந்தியச் சிறுத்தைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திதி, பஞ்சாங்கம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்க் கல்வெட்டுகள்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்ரோகித் சர்மாஉணவுமாதவிடாய்அம்மன் கோவில் வாசலிலேதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்தொல்காப்பியர்கருப்பை நார்த்திசுக் கட்டிநவரத்தினங்கள்அட்சய திருதியைசங்கம் (முச்சங்கம்)நாயன்மார்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்பிள்ளைத்தமிழ்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மலேசியாஉரிச்சொல்பாவக்காய் மண்டபம்எங்கேயும் காதல்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமகரம்செயற்கை நுண்ணறிவுகரூர் மக்களவைத் தொகுதிதிருநங்கைஉப்புச் சத்தியாகிரகம்ஐம்பெருங் காப்பியங்கள்குப்தப் பேரரசுமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)இந்திய மக்களவைத் தொகுதிகள்முத்தொள்ளாயிரம்சிவனின் 108 திருநாமங்கள்சங்க இலக்கியம்செவ்வாய் (கோள்)இந்தியக் குடியரசுத் தலைவர்இன்று நீ நாளை நான்பாளையக்காரர்ஹோலிமியா காலிஃபாகாச நோய்ஐராவதேசுவரர் கோயில்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசித்தர்கள் பட்டியல்திருமுருகாற்றுப்படைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கடையெழு வள்ளல்கள்தினேஷ் கார்த்திக்பசுபதி பாண்டியன்பனைகரகாட்டம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நயன்தாராஜே பேபிபெரியபுராணம்பாலுறவுகுறிஞ்சி (திணை)சிலம்பம்பெருமாள் திருமொழிஆபிரகாம் லிங்கன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சேக்கிழார்பிள்ளையார்கினோவாகருணாநிதி குடும்பம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நா. காமராசன்கலம்பகம் (இலக்கியம்)அக்கி🡆 More