தேசியப் பூங்கா

தேசியப் பூங்கா (National park) என்பது, ஓர் அரசால் அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஓர் ஒதுக்ககம் ஆகும்.

இது மனிதருடைய பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், விலங்குகள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும் (இ.பா.ப.ஒ.) அதன் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும் தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு II என்னும் வகையுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ. வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப் பெரிய தேசியப்பூங்கா வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா ஆகும். இ.பா.ப.ஒ. வின் தகவல்களின்படி, உலகில் சுமார் 7000 தேசியப் பூங்காக்கள் உள்ளன.

தேசியப் பூங்கா
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்டாப்பாரா காட்டுயிர் ஒதுக்ககத்தின் ஊடாக யானைப் பயணம்.
தேசியப் பூங்கா
அர்ஜென்டீனா தேசிய பூங்கா.
தேசியப் பூங்கா
இசுப்பெயினில் தெனெரைபில் அமைந்துள்ள டெய்டே தேசியப் பூங்கா. வருவோர் தொகை அடிப்படையில் உலகில் இரண்டாவது பெரியது.

வரைவிலக்கணம்

1969 ஆம் ஆண்டில் இ.பா.ப.ஒ (), தேசியப் பூங்காக்கள் ஒப்பீட்டளவில் பெரியவையாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பிட்ட வரைவிலக்கணத்துக்கு அமையும் இயல்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும் எனவும் அறிவித்தது.. இதன்படி ஒரு தேசியப் பூங்கா பின்வரும் இயல்புகளைக் கொண்டிருக்கவேண்டும்:

  • மனிதர் பயன்படுத்தியதனாலோ அல்லது வாழ்ந்ததினாலோ மாற்றங்களுக்கு உட்படாத, ஒன்று அல்லது பல சூழல்மண்டலங்களைக் கொண்டிருக்கவேண்டும். இங்குள்ள தாவர விலங்கு இனங்கள், புவிப்புறவியல் களங்கள் மற்றும் வாழிடங்கள் என்பன அறிவியல், கல்வி பொழுதுபோக்கு போன்ற அடிப்படைகளில் சிறப்புப் பெற்றவையாக இருக்கவேண்டும் அல்லது மிகுந்த அழகுடன் கூடிய இயற்கை நிலத்தோற்றம் கொண்டவையாக இருக்கவேண்டும்.
  • நாட்டின் அதி உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு இப்பகுதியை மனிதர் பயன்படுத்துவதையும், வாழ்வதையும் தடுக்கவேண்டும் அல்லது கூடிய விரைவில் அகற்றவேண்டும். அத்துடன், பூங்கா அமைப்பதற்குக் காரணமாக இருந்த சூழலியல், புவிப்புறவியல் அல்லது அழகியல் அம்சங்களை மதிப்பதற்கான இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
  • அகத்தூண்டல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற தேவைகளுக்காக சிறப்பு நிபந்தனைகளின்கீழ் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.

1971 ஆம் ஆண்டில், இந்தக் கட்டளை விதிகள் மேலும் விரிவாக்கப்பட்டு, தேசியப் பூங்காக்களின் மதிப்பீட்டை இலகுவாக்குவதற்காக தெளிவானதும் வரையறுக்கப்பட்டவையுமான மட்டக்குறிகளுடன் அமைக்கப்பட்டன. இவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன:

  • குறந்தது 1000 எக்டேர்கள் பரப்பளவு கொண்டவையாக இருக்க வேண்டும்.
  • சட்டப் பாதுகாப்பு.
  • முறையான பாதுகாப்புக் கொடுப்பதற்குத் தேவையான போதிய நிதி ஒதுக்கீடும், பணியாட்களும்.
  • வேட்டை, மீன்பிடி, என்பவை உள்ளடங்கிய இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தல், மேலாண்மை, வசதிகள்.

பொதுவாகத் தேசியப் பூங்காக்கள் நடுவண் அரசுகளினால் நிர்வாகம் செய்யப்பட்டாலும், ஆசுத்திரேலியாவில் மாநில அரசுகளே இவற்றை நிர்வாகம் செய்கின்றன.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

  • தேசியப் பூங்காக்களின் பட்டியல்
  • புதைபடிவப் பூங்கா
  • தேசியப் பூங்கா சேவை
  • புவியியற்பூங்காக்களின் பன்னாட்டு வலையமைப்பு
  • பன்னாட்டுப் பூங்கா
  • தேசியக் காடு
  • பேண்தகு வளர்ச்சி
  • ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்
  • மாகாணப் பூங்கா

வெளியிணைப்புக்கள்

Tags:

தேசியப் பூங்கா வரைவிலக்கணம்தேசியப் பூங்கா குறிப்புகள்தேசியப் பூங்கா இவற்றையும் பார்க்கவும்தேசியப் பூங்கா வெளியிணைப்புக்கள்தேசியப் பூங்காஅரசுஇயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்ஐக்கிய அமெரிக்காபாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்பொழுதுபோக்குயெலோஸ்ட்டோன் தேசியப் பூங்காவடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்காவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜய் வர்மாநரேந்திர மோதிரெட் (2002 திரைப்படம்)தேசிக விநாயகம் பிள்ளைதமிழர் பருவ காலங்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)குடும்ப அட்டைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்எஸ். ஜானகிஇந்திய ரூபாய்ஆயுள் தண்டனைகுண்டூர் காரம்பாரதிதாசன்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்அயோத்தி தாசர்நாட்டு நலப்பணித் திட்டம்வாணிதாசன்திரவ நைட்ரஜன்மோகன்தாசு கரம்சந்த் காந்திஎட்டுத்தொகை தொகுப்புசென்னை சூப்பர் கிங்ஸ்புனித ஜார்ஜ் கோட்டைதமிழ் இணைய இதழ்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்சித்ரா பௌர்ணமிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆழ்வார்கள்எட்டுத்தொகைதமிழச்சி தங்கப்பாண்டியன்முத்துலட்சுமி ரெட்டிமுக்கூடற் பள்ளுபர்வத மலைஅக்பர்திருக்குறள் பகுப்புக்கள்முதற் பக்கம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பகிர்வுசங்ககால மலர்கள்காவிரிப்பூம்பட்டினம்மரகத நாணயம் (திரைப்படம்)கேரளம்சைவத் திருமுறைகள்இந்திய நாடாளுமன்றம்இணையம்கஞ்சாஇந்தியக் குடியரசுத் தலைவர்சேக்கிழார்கார்ல் மார்க்சுமதுரை வீரன்தமிழ் எண்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஓமியோபதிநவரத்தினங்கள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அழகர் கோவில்பாரிஉலர் பனிக்கட்டிவிண்ணைத்தாண்டி வருவாயாவன்னியர்பௌத்தம்நாடகம்வேளாண்மைசினைப்பை நோய்க்குறிதிருமூலர்நெசவுத் தொழில்நுட்பம்ஜீரோ (2016 திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பக்கவாதம்இந்திய அரசியலமைப்புமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கருச்சிதைவுமணிமேகலை (காப்பியம்)திருக்குறிப்புத் தொண்ட நாயனார்ரத்னம் (திரைப்படம்)🡆 More