நிலத்தோற்றம்

ஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் நிலத்தோற்றம் எனப்படுகின்றது.

இவற்றுள், இயற்பியல் சிறப்புகளான நில அமைப்பு, மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், உயிரியல் சிறப்புகளான விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் அடங்கும். இவற்றுடன் ஒளி, காலநிலை முதலியனவும், மனிதச் செயற்பாடுகளின் விளைவுகளான கட்டிடச் சூழல் போன்றனவும் இவற்றுள் அடங்குகின்றன.

இச்சிறப்புகளுட் பெரும்பாலானவை தம்முள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. நில அமைப்பு, அமைவிடம் போன்றன காலநிலையில் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் அப்பகுதியில் எத்தகைய உயிரினங்கள் வாழமுடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால், ஒரேசமயத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் கூடிய நிலத்தோற்றம் அமைகின்றன. கடல் சார்ந்த நிலப்பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றிலும் வேறுபட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஒரே இடத்திலும்கூட காலத்துக்குக் காலம் நிலத்தோற்றம் மாறுபடுவதையும் காணமுடியும். மாரி காலத்தில், ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்வதும், நீர்நிலைகள் நிரம்பி வழிவதும், தாவரங்கள் பச்சைப்பசேலெனக் காட்சி தருவதும், கோடை காலத்தின் போது மாறிவிடும்.

பரந்த பகுதிகளில் இயற்கையின் செல்வாக்குக்கு எதிராக நிலத்தோற்ரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மனிதனால் முடியக்கூடிய விடயம் அல்லவெனினும், பரந்து விரிந்த நகரங்கள், பெரும் நீர்த்தேக்கத் திட்டங்கள், போன்றவை நேரடியாகவும்,சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் மூலம் மறைமுகமாகவும் இயற்கை நிலத்தோற்றத்தில் பெருமளவில் மாறுபாடுகள் ஏற்படவே செய்கின்றது.

சிறிய அளவில் கட்டிடங்களைச் சூழவும், நகரங்களில் பொது இடங்களிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிலத்தோற்றங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். இதற்கான துறையை நிலத்தோற்றக் கலை எனப்படுகின்றது.

Tags:

இயற்பியல்உயிரியல்ஒளிகாலநிலைதாவரம்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவகார்த்திகேயன்யூடியூப்நரேந்திர மோதிஅயோத்தி தாசர்விஜய் (நடிகர்)தமிழர் சிற்பக்கலைவில்லங்க சான்றிதழ்கணியன் பூங்குன்றனார்மார்பகப் புற்றுநோய்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சித்தர்கு. ப. ராஜகோபாலன்கருப்பை வாய்தினகரன் (இந்தியா)பௌத்தம்சிங்கம் (திரைப்படம்)காளமேகம்சினைப்பை நோய்க்குறிஅம்பேத்கர்வெண்ணிற ஆடை மூர்த்தியாப்பகூவாதைப்பொங்கல்குலசேகர ஆழ்வார்விளம்பரம்பாண்டவர்நாட்டு நலப்பணித் திட்டம்சிறுகதைசங்க காலப் புலவர்கள்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுவேதாத்திரி மகரிசிஇசுலாமிய நாட்காட்டிசிலேடைஉதயநிதி ஸ்டாலின்மெட்ரோனிடசோல்மாநிலங்களவைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நீர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்முனியர் சவுத்ரிதமிழ்த்தாய் வாழ்த்துஅமீதா ஒசைன்நாட்டுப்புறக் கலைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கழுகுமலைநண்பகல் நேரத்து மயக்கம்108 வைணவத் திருத்தலங்கள்அகமுடையார்முக்குலத்தோர்வியாழன் (கோள்)தேம்பாவணிவல்லம்பர்குருத்து ஞாயிறுடொயோட்டாபஞ்சாயத்து ராஜ் சட்டம்நேச நாயனார்சிறுகோள்முன்மார்பு குத்தல்தற்கொலை முறைகள்புரோஜெஸ்டிரோன்சிவன்மயங்கொலிச் சொற்கள்நாயக்கர்இராமாயணம்அறுபடைவீடுகள்மதுரகவி ஆழ்வார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பரிபாடல்மகேந்திரசிங் தோனிமாணிக்கவாசகர்குதுப் நினைவுச்சின்னங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஆற்றுப்படைபிலிருபின்சமூகம்தமிழர் நிலத்திணைகள்விஷ்ணு🡆 More