சமாரா

சமாரா (Samara, உருசியம்: Сама́ра), 1935 முதல் 1991 வரை குய்பீசெவ், Куйбышев), என்பது உருசியாவின் ஒரு நகரமும், சமாரா மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும்.

மக்கள்தொகை அடிப்படையில் இது உருசியாவின் ஆறாவது பெரிய நகரம் ஆகும். இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கே வோல்கா மற்றும் சமாரா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இந்நகரின் மேற்கு எல்லையாக வோல்கா ஆறு உள்ளது. ஆற்றின் அடுத்த கரையில் சிகூலி மலைகள் உள்ளன. வடக்கு எல்லையில் சோக்கோலி மலைகளும், தெற்கு மற்றும் கிழக்கே தெப்புவெளிகளும் காணப்படுகின்றன. நகரின் நிலப்பரப்பு 46,597 எக்டேர்கள் ஆகும். மக்கள்தொகை: 1,164,685 (2010).

சமாரா
Самара
நகரம்
சமாரா-இன் கொடி
கொடி
சமாரா-இன் சின்னம்
சின்னம்
சமாரா-இன் அமைவிடம்
சமாரா is located in உருசியா
சமாரா
சமாரா
சமாரா-இன் அமைவிடம்
சமாரா is located in உருசியா
சமாரா
சமாரா
சமாரா (உருசியா)
ஆள்கூறுகள்: 53°12′10″N 50°08′27″E / 53.20278°N 50.14083°E / 53.20278; 50.14083
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்சமாரா மாகாணம்
நிறுவிய ஆண்டு1586
நகரம் status since1688
அரசு
 • நிர்வாகம்சமாரா நகரசபை
 • முதல்வர்எலேனா லப்பூச்கினா
பரப்பளவு
 • மொத்தம்541.382 km2 (209.029 sq mi)
ஏற்றம்100 m (300 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்11,64,685
 • Estimate (2018)11,63,399 (−0.1%)
 • தரவரிசை2010 இல் 6வது
 • அடர்த்தி2,200/km2 (5,600/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைcity of oblast significance of Samara
 • Capital ofசமாரா மாகாணம், வோல்சுக்கி மாவட்டம்
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்சமாரா நகர வட்டம்
 • Capital ofசமாரா நகர வட்டம், வோல்ஸ்கி மாநகர மாவட்டம்
நேர வலயம் (ஒசநே+4)
அஞ்சல் குறியீடு(கள்)443XXX
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 846
இணையதளம்city.samara.ru

சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியில் சமாரா ஒரு மூடிய நகராக இருந்தது. தற்போது இது ஐரோப்பிய உருசியாவின் ஒரு முக்கிய அரசியல், வணிக, தொழிற்துறை, கலாசார மையமாக உள்ளது. 2007 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய—உருசிய உச்சி மாநாடு இங்கு நடைபெற்றது. இந்நகரம் கோடை காலத்தில் மிகவும் வெப்பமாகவும், குளிர் காலத்தில் மிகவும் குளிரான காலநிலையும் நிலவுகின்றன.

சமாரா 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்த்தத் தெரிவான உருசியாவின் 11 நகரங்களில் ஒன்றாகும். இங்கு நான்கு குழுநிலை ஆட்டங்களும், ஒரு 16-சுற்று ஆட்டமும், ஒரு காலிறுதி ஆட்டமும் நடைபெறவிருக்கின்றன. அனைத்து ஆட்டங்களும் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட கொசுமசு அரங்கில் நடைபெறும்.

சோவியத் காலம்

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941 இல் சமாரா (அன்றைய பெயர் குய்பீசெவ்) சோவியத் ஒன்றியத்தின் தற்காலிக தலைநகராக இருந்தது. உருசியாவை முற்றுகையிட்ட செருமனி மாஸ்கோவைக் கைப்பற்றும் பட்சத்தில், இந்நகரம் மாஸ்கோவிற்கு மாற்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டில் தலைநகர் மீண்டும் மாஸ்கோவிகு மாற்றப்பட்டது.

போரின் ஆரம்ப காலம் முதல் இங்கு போருக்குத் தேவையான இராணுவ வானூர்திகள், சுடுகலன்கள், படைத்தளவாடங்கள் இங்கு தயாரிக்கப்பட்டன. சமராவின் குடிமக்கள் பலரும் போரில் பங்கு கொண்டனர்.

போருக்குப் பின்னர் பாதுகாப்புத் தொழிற்துறை இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதனால் இது ஒரு மூடிய நகராக ஆக்கப்பட்டது. 1960 இல், நாட்டின் ஏவுகணை பாதுகாப்பு மையமாக ஆக்கப்பட்டிருந்தது. உலகின் முதலாவது மனிதரை விண்ணுக்குக் கொண்டு சென்ற விண்கலத்தை ஏவிய வஸ்தோக் என்ற ஏவுகலம் இங்கேயே தயாரிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 12 இல் விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதர் யூரி ககாரின் பூமிக்குத் திரும்பிய போது இங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆற்றுச்சந்திஉருசியம்உருசியாசமாரா மாகாணம்வோல்கா ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொலைக்காட்சிபட்டினப் பாலைமணிமேகலை (காப்பியம்)அப்துல் ரகுமான்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மதுரைக்காஞ்சிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பரிபாடல்ஜெ. ஜெயலலிதாவிஷால்குறிஞ்சி (திணை)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இன்ஸ்ட்டாகிராம்திவ்யா துரைசாமிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சங்க இலக்கியம்கேள்விமீனா (நடிகை)எலுமிச்சைசட்டம்தமிழ்நாடு சட்ட மேலவைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மக்களவை (இந்தியா)கடலோரக் கவிதைகள்மருதமலை (திரைப்படம்)பாரதிதாசன்கல்லீரல்இந்திய நாடாளுமன்றம்சுந்தரமூர்த்தி நாயனார்கல்விஇந்தியக் குடியரசுத் தலைவர்அறுசுவைசிவாஜி (பேரரசர்)சேரன் (திரைப்பட இயக்குநர்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிநவக்கிரகம்தசாவதாரம் (இந்து சமயம்)பத்து தலமுல்லைப்பாட்டுகாயத்ரி மந்திரம்தலைவி (திரைப்படம்)ஜவகர்லால் நேருஇந்திய தேசிய சின்னங்கள்ஜிமெயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமஞ்சள் காமாலைதிராவிசு கெட்திட்டக் குழு (இந்தியா)திருச்சிராப்பள்ளிபவன் கல்யாண்கௌதம புத்தர்விநாயகர் அகவல்பணவீக்கம்நீர் பாதுகாப்புயுகம்கொன்றை வேந்தன்தமிழ் இணைய மாநாடுகள்பீப்பாய்இயேசுநாளந்தா பல்கலைக்கழகம்ர. பிரக்ஞானந்தாவழக்கு (இலக்கணம்)வண்ணார்மங்காத்தா (திரைப்படம்)நருடோகணையம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)இந்திரா காந்திதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கள்ளுதூது (பாட்டியல்)எச்.ஐ.விவடிவேலு (நடிகர்)தமிழர் கலைகள்திருவோணம் (பஞ்சாங்கம்)🡆 More