வம்சதாரா ஆறு

வம்சதாரா ஆறு (Vamsadhara or Bansadhara River) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் வழியே கிழக்கு நோக்கிப் பாயும் ஒரு முக்கியமான ஆறு ஆகும்.

இது ருசிகுல்யா ஆறு மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே பாய்கிறது.

இந்த ஆறு ஒடிசா மாநிலத்தின் களாஹாண்டி மாவட்டம் மற்றும் ராயகடா மாவட்டம் ஆகிய இடங்களில் தொடங்கி கிழக்கு நோக்கி 254 கி.மீ தூரம் ஓடி வருகிறது. பின்னர் ஆந்திரப்பிரதேச மாநிலம் கலிங்கப்பட்டினம் என்ற இடத்தில் வங்காள வரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீர்பிடிப்புப் பகுதி 10,830 சதுர கிலோமீட்டர் ஆகும்

சிறீகாகுளம் மாவட்டத்தின் கலிங்கப்பட்டினம் இந்த ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும்.

மகேந்திர தனாயா  வம்சதாரா ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். இது ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் உருவாகிப் பின்னர் ஆந்திர மாநிலம் கோட்டா அணைக்கட்டில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ரேகுலப்பாடு என்ற இடத்தில் ஆற்றைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்த புதிய அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுவருகிறது.

வம்சதாரா திட்டம்

பொட்டெபள்ளி ராஜகோபால ராவ் செயல்திட்டம் இந்த வம்சதாரா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

ஆந்திரப் பிரதேசம்இந்தியாஒடிசாகோதாவரி ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரோசுமேரிகூலி (1995 திரைப்படம்)வெண்குருதியணுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திட்டம் இரண்டுஇரட்டைக்கிளவிகா. ந. அண்ணாதுரைசினைப்பை நோய்க்குறிவிளையாட்டுதங்கராசு நடராசன்ஆனந்தம் (திரைப்படம்)பழமொழி நானூறுஉப்புச் சத்தியாகிரகம்பணவீக்கம்ராதிகா சரத்குமார்வெ. இறையன்புபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருக்குறள்நீரிழிவு நோய்காடுபுற்றுநோய்கொன்றைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்விளம்பரம்தனுசு (சோதிடம்)திவ்யா துரைசாமிவணிகம்குறவஞ்சிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுஇயேசுசெம்மொழிதிருவிளையாடல் புராணம்வினைச்சொல்நிதி ஆயோக்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இன்னா நாற்பதுநெல்சுய இன்பம்தேனீஆங்கிலம்செயற்கை நுண்ணறிவுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019உரைநடைகருத்துஇந்திய நிதி ஆணையம்மண் பானைகிராம ஊராட்சிபுவிஅழகிய தமிழ்மகன்ஆண்டு வட்டம் அட்டவணைஇயேசு காவியம்திருச்சிராப்பள்ளிஒற்றைத் தலைவலிசேமிப்புக் கணக்குமழைஓ காதல் கண்மணிசூர்யா (நடிகர்)திருப்பாவைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைபள்ளர்விண்ணைத்தாண்டி வருவாயாசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குதிரைமலை (இலங்கை)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மதீச பத்திரனசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சுற்றுலாகண்டம்திருவிழாநிணநீர்க்கணுவினோஜ் பி. செல்வம்ஊராட்சி ஒன்றியம்விசயகாந்துபெண்ணியம்🡆 More