ராயகடா மாவட்டம்: ஒடிசாவின் மாவட்டம்

ராயகடா மாவட்டம் (Rayagada) ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் கனிம வளங்கள் நிறந்துள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.

அக்டோபர் 2, 1992 முதல் ராயகடா தனி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது. இந்த மாவட்டத்தில் பெரும்பகுதி பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். சௌரா இன மக்களுக்கு அடுத்தபடியாக திராவிட மொழி பேசும் கோந்தாஸ் இன மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். இங்கு ஒடியா மொழி தவிர சில ஆதிவாசி மொழிகளும் பேசப்படுகின்றன. குறிப்பாக குய், கோந்தா, சௌரா ஆகிய மொழிகள் இந்த மாவட்டத்தில் உள்ளவர்களால் பேசப்படுகின்றன.

ராயகடா மாவட்டம்
மாவட்டம்
இந்தியாவில் ஒடிசா
இந்தியாவில் ஒடிசா
ஆள்கூறுகள்: 19°09′58″N 83°24′58″E / 19.166°N 83.416°E / 19.166; 83.416
நாடுராயகடா மாவட்டம்: வரலாறு, நிலவியல், பொருளாதாரம் இந்தியா
இந்திய மாநிலங்கள்ஒடிசா
தலைமையிடம்ராயகடா
அரசு
 • மாவட்ட ஆட்சியர்திருமதி. குஹா பூனம் தபாஸ் குமார்
பரப்பளவு
 • மொத்தம்7,584.7 km2 (2,928.5 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,67,911
 • அடர்த்தி116/km2 (300/sq mi)
மொழிகள்
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
Postal Index Number|PIN765 xxx
வாகனப் பதிவுOD-18
பாலின வீதம்0.972 /
எழுத்தறிவு49.76%
லோக்சபா தொகுதிகோரபுத் லோக்சபா தொகுதி
இணையதளம்www.rayagada.nic.in

இந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பதினொரு தேர்தல் தொகுதிகள் உள்ளன.

இங்கு வேளாண்மை மற்றும் அது தொடர்பான வேலைகளே வருவாய் தரும் முக்கியத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை, கேழ்வரகு, பாசிப் பயறு, உளுந்து , மக்காச்சோளம், மற்றும் வற்றாளை ஆகியவை இங்கு முக்கியப் பயிர்களாக உள்ளன.

வரலாறு

கிமு 3-ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசுவின் ஆட்சிக் காலத்தில் கலிங்க சாம்ராஜ்ஜியத்தின் (பண்டைய ஒடிசா) கீழ் இருந்தது. நாகவல்லி மற்றும் பன்சாத்ரா மலைத் தொடர்களுக்கு இடையே கிடைக்கக் கூடிய மசாலாப் பொருள் மிகவும் புகழ் பெற்றது ஆகும் .ராஷ்டியாக்களை வெற்றி கொண்ட பிறகு கலிங்க நாட்டை ஆட்சி செய்த ஒரே ஆரிய அரசன் காரவேலன் ஆவார்.

இந்த மாவட்டம் தற்போது சிவப்பு தாழ்வாரம் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

நிலவியல்

இந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பாபிலிமலி, அழிமலி, திக்ரிமலி, போன்ற மலைகள் உள்ளன. இங்குள்ள மலைகளில் அரிய வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன.

பொருளாதாரம்

கடந்த ஆறு தசாப்தங்களாக ஐ எம் எஃப் ஏ மற்றும் ஜே கே காகித ஆலைகள் ராயகடா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன.

இங்கு கனிமங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பாக்சைட், சிலிக்கான் ஆகியவை பெருமளவில் கிடைக்கின்றன. அண்மையில் உள்ள புள்ளியியல் படி உலகத்தில் உள்ள பாக்சைட்டு அளவில் 56 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 62 விழுக்காடு ஒடிசாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 84 விழுக்காடு ராயகடாவில் உள்ளது. அதனால் தான் பிர்லா மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய தொழிற்சாலைகள் ராயகடாவில் தொழில் துவங்க விருப்பம் தெரிவிக்கின்றன.

உணவக துறைக்கான இலக்கிடமாக ராயகடா உள்ளது. குறிப்பாக ஜோய்ஹிமஹால், தேஜஸ்வினி, கபிலாஸ் மற்றும் ராஜ் பவன் ஆகியவைகள் உள்ளன.

போக்குவரத்து

ராயகடா தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து (இந்தியா), புவனேசுவரம், ராய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், மும்பை,ஜம்சேத்பூர், ஜோத்பூர், புது தில்லி மற்றும் பல முக்கிய நகரங்களுக்கும் தொடருந்துச் சேவை உள்ளது. குனுப்பூர் தொடருந்து நிலையமும் மிக முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும்.

மக்கள் தொகையியல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ராயகடா மாவட்டத்தின் மக்கள் தொகை 9,67,911 ஆகும். இது பிஜி நாட்டின் மக்கள் தொகை மற்றும் அமெரிக்காவின் மொன்ட்டானா மாகாணத்தின் மக்கள் தொகைக்கு சமமானதாக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மொத்தமுள்ள 640 இல் 454 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.சதுர கிலோ மீட்டருக்கு 136 பேர் இருக்கிறார்கள் (350 / சதுர மைல்). 2001-2011 கால தசாப்தத்தில் இதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.74% ஆகும். ராயகடாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1048 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு வீதம் 50.88 விழுக்காடு ஆகும்.

உட்பிரிவுகள்

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு குணுபூர், பிஸ்ஸம்-கட்டக், ராயகடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டம் கோராபுட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

ராயகடா மாவட்டம் வரலாறுராயகடா மாவட்டம் நிலவியல்ராயகடா மாவட்டம் பொருளாதாரம்ராயகடா மாவட்டம் போக்குவரத்துராயகடா மாவட்டம் மக்கள் தொகையியல்ராயகடா மாவட்டம் உட்பிரிவுகள்ராயகடா மாவட்டம் சான்றுகள்ராயகடா மாவட்டம் இணைப்புகள்ராயகடா மாவட்டம்1992அக்டோபர் 2ஆதிவாசிஒடிசாஒடியா மொழிகனிமம்திராவிட மொழிக் குடும்பம்பழங்குடிகள்மொழிகளும், மொழிக் குடும்பங்களும்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்வல்லக்கோட்டை முருகன் கோவில்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழர் நெசவுக்கலைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்புறநானூறுபெண்வெ. இராமலிங்கம் பிள்ளைபிரேமலதா விஜயகாந்த்ந. பிச்சமூர்த்திகிருட்டிணன்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஔரங்கசீப்அண்ணாமலை குப்புசாமியோனிஇங்கிலாந்துதாயே நீயே துணைஇலங்கையின் மாவட்டங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்மணிமேகலை (காப்பியம்)செக் மொழிமு. களஞ்சியம்மாடுடி. எம். கிருஷ்ணாஅலீஆடு ஜீவிதம்மூதுரைலோ. முருகன்பிரபுதேவாபி. காளியம்மாள்நா. முத்துக்குமார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருப்பதிஆடுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்2022அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)ஆபுத்திரன்ஹர்திக் பாண்டியாநருடோதொகாநிலைத்தொடர்மூலம் (நோய்)முகலாயப் பேரரசுகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்இலக்கியம்ஹோலிஇந்திய நாடாளுமன்றம்பிள்ளைத்தமிழ்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சென்னைசெவ்வாய் (கோள்)வானதி சீனிவாசன்சூரரைப் போற்று (திரைப்படம்)சோழர்கை கொடுக்கும் கைசுற்றுச்சூழல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பொதியம்கிராம சபைக் கூட்டம்பூனைகுமரி அனந்தன்விஷ்ணுதிருவள்ளுவர்தீரன் சின்னமலைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நான் அவனில்லை (2007 திரைப்படம்)புதுச்சேரிஇந்திரா காந்திமக்களாட்சிசெம்மொழிகீழடி அகழாய்வு மையம்எட்டுத்தொகை தொகுப்புகொல்லி மலைதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நீலகிரி மாவட்டம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதிருநெல்வேலிதுள்ளுவதோ இளமை🡆 More