கஜபதி மாவட்டம்

கஜபதி மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று.

இதன் தலைமையகம் பாரளாகேமுண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

வரலாறு

கஜபதி மாவட்டத்தின் வரலாறு பராலகேமுண்டி இராச்சியத்திற்கு செல்கிறது. இது ஒடிசாவின் கஜபதி இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 12 ஆம் நூற்றாண்டில் பராலா கெமுண்டி பகுதி கெமுண்டி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. முகுந்தா தேவ் என்பவர் கெமுண்டி ஆட்சியின் போது பாடா கெமுண்டி, சனா கெமுண்டி மற்றும் பராலகேமுண்டி ஆகிய 3 மாநிலங்களை உருவாக்கினார். அவருக்கு பின்னர், சுபாலிங்க பானு பராலகேமுண்டியின் ஆட்சியாளரானார். ஒடிசாவின் முகலாய மராத்தா ஆட்சி முழுவதும் இந்த மன்னர்களின் வரிசை பராலகேமுண்டியை தொடர்ந்து ஆட்சி செய்தது. 1767 ஆம் ஆண்டில் பராலா கஜபதி ஜெகந்நாத நாராயணதேவின் ஆட்சியின் போது  பிரித்தானிய நிலப்பிரபுத்துவ மாநிலமாக மாறியது. பிரித்தானிய நிர்வாகிகளுடன் அரசு சில மோதல்களைக் கொண்டிருந்தது. மன்னர் கஜபதி ஜெகந்நாத நாராயணதேவ் மற்றும் அவரது மகன் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அரசு நேரடி பிரித்தானிய கண்காணிப்பில் வந்தது. மன்னரின் தடுப்புக்காவலுக்கு எதிராக மாநிலத்தின் பழங்குடியினர் மற்றும் பைக்காக்கள் மத்தியில் கிளர்ச்சியினால்  மன்னர் மீண்டும் தனது பதவியில் அமர்த்தப்பட்டார். ஒடிசாவுடன் ஒன்றிணைக்கும் வரை பராலகேமுண்டி ஒரு நிலப்பிரபுத்துவ அரசாக நிர்வாகத்தின் கீழ் இருந்தது. கிருஷ்ணா சந்திர கஜபதி என்பவர் பராலாவின் முக்கிய மன்னர்களில் ஒருவராவார். அவர் உத்கல் சம்மிலானியின் தீவிர உறுப்பினராக இருந்தார். மேலும் ஒடிசாவிற்கு தனி மாநிலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இறுதியாக கிருஷ்ணா சந்திர கஜபதி மற்றும் உத்கல் சம்மிலானி ஆகியோரின் முயற்சியால் ஒடிசாவின் தனி மாநிலமாக 1936 ஏப்ரல் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. விசாகப்பட்டம் மாவட்டத்தில் பரல்கேமுண்டி மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது - தலைநகரம் மற்றும் பெரும்பாலான சுதேச மாநிலங்கள் ஒரிசாவின் கீழும், மீதமுள்ள  தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்சியின் கீழும் இருந்தன. 1937 ஆம் ஆண்டில், ஒடிசாவின் முதல் ஆளுநரான சர் ஜான் ஆஸ்டின் ஹப்பாக் கிருஷ்ணா சந்திர கஜபதி தேவ் அமைச்சரவை அமைக்க அழைத்தார். ஸ்ரீ கஜபதி ஒடிசா மாநிலத்தின் முதல் பிரதமராக 1937 ஏப்ரல் 1 முதல் 1937 ஜூலை 18 வரை இருந்தார். 1941 நவம்பர் 24 முதல் 1944 ஜூன் 30 வரை இரண்டாவது முறையாக ஒரிசாவின் பிரதமராக இருந்தார்.

புவியியல்

கஜபதி மாவட்டம் ஒடிசாவின் தென்கிழக்கில் தீர்க்கரேகை 84 ° 32'E மற்றும் 83 ° 47'E மற்றும் அட்சரேகை 18 ° 44'N மற்றும் 19 ° 39'N இடையே அமைந்துள்ளது. மகேந்திரநாய நதி அதன் வழியாக பாய்கிறது. தெற்கில் ஆந்திரா, மேற்கில் ராய்கடா மாவட்டம், கிழக்கில் கஞ்சாம் மாவட்டம் மற்றும் வடக்கே காந்தமாலா மாவட்டம் என்பன எல்லைகளாக அமைந்துள்ளன.  கிழக்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மஹேந்திரகிரி மலை இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.

காலநிலை

கஜபதி மாவட்டம் அதிக ஈரப்பதத்துடன் துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. கோடை காலம் மார்ச் முதல் சூன் நடுப்பகுதி வரையும், குளிர்காலம்  நவம்பர் முதல் பிப்ரவரி வரையும் காணப்படும். கோடைகாலத்தில் வெப்பநிலை 46 °C ஐ அடையும்.  மழைக்காலம் சூன் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை நீடிக்கும். மேலும் இந்த மாவட்டம் தென்மேற்கு பருவமழைகளிலிருந்து சுமார் 1000 மிமீ மழையைப் பெறுகிறது.

பொருளாதாரம்

2006 ஆம் ஆண்டில்  கஜபதி மாவட்டத்தை பஞ்சாயத்து ராஜ்அமைச்சகம் நாட்டின் 250 பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் ஒடிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

புள்ளி விபரங்கள்

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடிப்பின்படி கஜபதி மாவட்டத்தில் 575,880 மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் 640 மாவட்டங்களில் 533 ஆவது இடத்தைப் பெறுகின்றது. மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு (340 / சதுர மைல்) 133 மக்கள் அடர்த்தி உள்ளது. 2001-2011 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி வீதம் 10.99% ஆகும். மக்களின் கல்வியிறிவு விகிதம் 54.29% ஆகும். 2011 ஆம் ஆண்டின் இந்திய சனத்தொகை கணக்கெடிப்பின்படி மாவட்டத்தில் 41.51% மக்கள் ஒடியா மொழியையும், 34.49% மக்கள் சோரா மொழியையும், 15.53% வீதமானோர் தெலுங்கு மொழியையும், 5.54% வீதமானோர் குய் மொழியையும் முதன்மை மொழியாக பேசினர்.

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

இதன் பகுதிகள் பாரளாகேமுண்டி, மோகனா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டம் பிரம்மபூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

கஜபதி மாவட்டம் வரலாறுகஜபதி மாவட்டம் புவியியல்கஜபதி மாவட்டம் காலநிலைகஜபதி மாவட்டம் பொருளாதாரம்கஜபதி மாவட்டம் புள்ளி விபரங்கள்கஜபதி மாவட்டம் உட்பிரிவுகள்கஜபதி மாவட்டம் போக்குவரத்துகஜபதி மாவட்டம் சான்றுகள்கஜபதி மாவட்டம் இணைப்புகள்கஜபதி மாவட்டம்ஒடிசா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீவக சிந்தாமணிசே குவேராஇரண்டாம் உலகப் போர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கீழடி அகழாய்வு மையம்உ. வே. சாமிநாதையர்தமிழச்சி தங்கப்பாண்டியன்நிலம்வெள்ளி (கோள்)பதினெண்மேற்கணக்குவராகிதொல்காப்பியர்புற்றுநோய்தேவேந்திரகுல வேளாளர்வேதநாயகம் சாஸ்திரியார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பெட்டிஇயற்கைகிரியாட்டினைன்சிங்கம் (திரைப்படம்)மனோன்மணீயம்சமந்தா ருத் பிரபுஇராபர்ட்டு கால்டுவெல்மலேசியாபணவியல் கொள்கைமகேந்திரசிங் தோனிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மருதமலை முருகன் கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இரட்டைப்புலவர்தமிழ் மன்னர்களின் பட்டியல்கண்ணதாசன்ஒழுகு வண்ணம்தினமலர்பாரதிதாசன்உரிப்பொருள் (இலக்கணம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்உப்புச் சத்தியாகிரகம்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்சிவம் துபேபாரிமதுரைசிறுதானியம்போயர்இலங்கையின் தலைமை நீதிபதிஇந்தியன் பிரீமியர் லீக்கூத்தாண்டவர் திருவிழாபொன்னகரம் (சிறுகதை)மறைமலை அடிகள்சனீஸ்வரன்கொங்கு வேளாளர்முத்துராஜாதினகரன் (இந்தியா)இன்ஸ்ட்டாகிராம்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்நஞ்சுக்கொடி தகர்வுபித்தப்பைசந்தனம்நாழிகைதிருநீலகண்ட நாயனார்இந்திய நாடாளுமன்றம்திட்டக் குழு (இந்தியா)நந்தா என் நிலாமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்குருதி வகைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விபுலாநந்தர்வேலு நாச்சியார்இரட்டைமலை சீனிவாசன்மாதவிடாய்புறப்பொருள்பஞ்சபூதத் தலங்கள்தமிழர் பருவ காலங்கள்ஏப்ரல் 30முத்துராமலிங்கத் தேவர்செக் மொழிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்குறிஞ்சிப் பாட்டுஆனைக்கொய்யா🡆 More