மூங்கில்

மூங்கில் (Bamboo) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 cm (98 அங்) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர். ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள். சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம்,பங்களாதேசு, கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.

மூங்கில்
மூங்கில்
மூங்கில், மஞ்சள் மலைகள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
உயிரிக்கிளை:
BOP clade
துணைக்குடும்பம்:
Bambusoideae
Tribes
  • Arundinarieae
  • Bambuseae
  • Olyreae
உயிரியற் பல்வகைமை
>1,400 species in 115 genera
வேறு பெயர்கள்
  • Olyroideae Pilg. (1956)
  • Parianoideae Butzin (1965)

இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஓர் அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.

பயன்கள்

மூங்கில் 
ஹொங்கொங் கட்டடக் கலையில் மூங்கில் இன்றும் ஒரு பிரதான அங்கமாக பயன்படுகின்றது.

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும் (சாரம் கட்ட), கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 1500 பயன்களுக்கு மேல் தரக்கூடிய மூங்கில் மரத்திலிருந்து இன்றும் கூட பலப் பயன்களைப் பெற முடியும் என்று வேளாண் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் மூங்கிலில் 40 சதவீதம் மரக்கூழ் செய்யவும், காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை ஒன்று சேர்க்கப்படாத பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

விலங்குகளின் உணவு

இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பாண்டா, சிவப்பு பாண்டா, மூங்கில் லெமூர் விலங்குகளின் முதன்மையான உணவாகும். எலிகளும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மூங்கில் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

மூங்கில் பயன்கள்மூங்கில் இவற்றையும் பார்க்கவும்மூங்கில் மேற்கோள்கள்மூங்கில் வெளி இணைப்புகள்மூங்கில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்பர்பாரதிதாசன்தினகரன் (இந்தியா)டொயோட்டாஉ. வே. சாமிநாதையர்மகாபாரதம்முருகன்நாச்சியார் திருமொழிவல்லினம் மிகும் இடங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கௌதம புத்தர்கண்டேன் காதலைகளவழி நாற்பதுகதீஜாகுடும்பம்ஏறுதழுவல்மருத்துவம்சீமான் (அரசியல்வாதி)அறுபது ஆண்டுகள்வயாகராராதிகா சரத்குமார்நாட்டு நலப்பணித் திட்டம்மாணிக்கவாசகர்ஐம்பெருங் காப்பியங்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்யோகம் (பஞ்சாங்கம்)இரட்டைக்கிளவிசிறுகோள்சங்க காலம்திருப்பாவைபார்க்கவகுலம்பாஞ்சாலி சபதம்இந்திய புவிசார் குறியீடுமீனா (நடிகை)சட்டவியல்அஜித் குமார்பாரதிய ஜனதா கட்சிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)யோகக் கலைஅகத்தியர்கட்டுரைவராகிதமிழ்நாடுபெரும்பாணாற்றுப்படைமுதலாம் கர்நாடகப் போர்வளைகாப்புகுலசேகர ஆழ்வார்தமிழ் மாதங்கள்இந்தியாவின் பண்பாடுஇதழ்யூடியூப்சோழர்பரதநாட்டியம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ் நாடக வரலாறுவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுகுண்டலகேசிசிறுநீரகம்காதல் மன்னன் (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிராவிடர்தமிழ் மன்னர்களின் பட்டியல்நம்மாழ்வார் (ஆழ்வார்)சிட்டுக்குருவிமுகம்மது இசுமாயில்பெ. சுந்தரம் பிள்ளைகருக்காலம்ஏ. ஆர். ரகுமான்கார்லசு புச்திமோன்கணினிதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கருப்பைநாடார்பணம்சிலேடை🡆 More