பஞ்சாங்கம் யோகம்

யோகம் இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளுள் ஒன்று.

ஏனைய நான்கும் வாரம், திதி, கரணம், நட்சத்திரம் என்பவை. யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்", போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

இருபத்தேழு யோகங்கள்

1. விஷ்கம்பம் 10. கண்டம் 19. பரிகம்
2. பிரீதி 11. விருத்தி 20. சிவம்
3. ஆயுஷ்மான் 12. துருவம் 21. சித்தம்
4. சௌபாக்கியம் 13. வியாகதம் 22. சாத்தியம்
5. சோபனம் 14. அரிசணம் 23. சுபம்
6. அதிகண்டம் 15. வச்சிரம் 24. சுப்பிரம்
7. சுகர்மம் 16. சித்தி 25. பிராமியம்
8. திருதி 17. வியாதிபாதம் 26. ஐந்திரம்
9. சூலம் 18. வரியான் 27. வைதிருதி

கணிப்பு

யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:

      (சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20'

இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.

நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். தற்காலத்தில் இணையத்திலும், சோதிடம் சார்ந்த பல தளங்களில் குறித்த ஒரு நேரத்தின் யோகத்தை அறிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பஞ்சாங்கம் யோகம் இருபத்தேழு யோகங்கள்பஞ்சாங்கம் யோகம் கணிப்புபஞ்சாங்கம் யோகம் மேற்கோள்கள்பஞ்சாங்கம் யோகம் வெளி இணைப்புகள்பஞ்சாங்கம் யோகம்கரணம்கிழமைசந்திரன்சூரியன்திதிநட்சத்திரம் (பஞ்சாங்கம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்த்திக் (தமிழ் நடிகர்)கற்பித்தல் முறைதேம்பாவணிஆதி திராவிடர்அன்னை தெரேசாகற்றது தமிழ்செயற்கை அறிவுத்திறன்தீரன் சின்னமலைதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)மழைநீர் சேகரிப்புதமிழக வரலாறுஇந்திய தேசிய காங்கிரசுமயக்கம் என்னதிரைப்படம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருப்பாவைஅஜித் குமார்முகம்மது நபியின் இறுதிப் பேருரைபெரியம்மைமனித உரிமைகம்பர்பெரும்பாணாற்றுப்படைசாதிவேலைகொள்வோர்ராதிகா சரத்குமார்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்முத்துராமலிங்கத் தேவர்உலகமயமாதல்சிந்துவெளி நாகரிகம்கருப்பை நார்த்திசுக் கட்டிஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956வைணவ சமயம்சௌராட்டிரர்மலேசியாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சிலேடைமக்காகோயம்புத்தூர் மாவட்டம்நாச்சியார் திருமொழிஅலீபெண் தமிழ்ப் பெயர்கள்மருதம் (திணை)தேவநேயப் பாவாணர்தமிழ்நாடுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆந்திரப் பிரதேசம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஏறுதழுவல்மக்களாட்சிதமிழர் பண்பாடுநாழிகைசாரைப்பாம்புஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்விருத்தாச்சலம்நாட்டு நலப்பணித் திட்டம்முன்னின்பம்டொயோட்டாகுப்தப் பேரரசுயாப்பகூவாதமிழ் இலக்கியம்வாட்சப்எங்கேயும் காதல்மொழிநரேந்திர மோதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைநயன்தாராராம் சரண்இராமாயணம்பால் (இலக்கணம்)விஜயநகரப் பேரரசுதிரௌபதி முர்முபிள்ளையார்திருவாதிரை (நட்சத்திரம்)நம்ம வீட்டு பிள்ளைகொன்றைமெட்பார்மின்திராவிட மொழிக் குடும்பம்விளம்பரம்🡆 More