மாசுக்கோ மாகாணம்

மாசுக்கோ மாகாணம் (Moscow Oblast, உருசியம்: Моско́вская о́бласть, மாஸ்கொவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும்.

இதன் பரப்பளவு 45,900 கிமீ 2 (17,700 சதுர மைல்) இது மற்ற நடுவண் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, ஆனால் அது நாட்டின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை 7,231,068 (2015) ஆகும், உருசியக் கூட்டமைப்பின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இந்த மாகாணம் 1929 இல் நிறுவப்பட்டது.

மாசுக்கோ மாகாணம்
Moscow Oblast
மாகாணம்
Московская область
மாசுக்கோ மாகாணம் Moscow Oblast-இன் கொடி
கொடி
மாசுக்கோ மாகாணம் Moscow Oblast-இன் சின்னம்
சின்னம்
மாசுக்கோ மாகாணம்
நாடுமாசுக்கோ மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய
பொருளாதாரப் பகுதிமத்திய
நிருவாக மையம்எதுவுமில்லை
அரசு
 • நிர்வாகம்மாகாண சட்டமன்றம்
 • ஆளுநர்அந்திரே வரபியோவ்
பரப்பளவு
 • மொத்தம்45,900 km2 (17,700 sq mi)
பரப்பளவு தரவரிசை54வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்70,95,120
 • Estimate (2018)75,03,385 (+5.8%)
 • தரவரிசை2வது
 • அடர்த்தி150/km2 (400/sq mi)
 • நகர்ப்புறம்80.1%
 • நாட்டுப்புறம்19.9%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-MOS
அனுமதி இலக்கத்தகடு50, 90, 150, 190
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.mosreg.ru

இதன் எல்லைகளாக வடமேற்கில் துவேர் மாகாணம், வடக்கில் யாரோசிலாவ் மாகாணம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் விளதீமிர் மாகாணம்ம், தென்கிழக்கில் ரியாசன் மாகாணம், தெற்கில் தூலா வட்டாரம், தென்மேற்கில் கலூகா மாகாணம், மேற்கில் சிமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. உலோகம், எண்ணெய் சுத்திகரிப்பு, இயந்திர பொறியியல், உணவு, எரிசக்தி, வேதிப்பொருட்கள் உற்பத்தி முதலிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்த ஓப்லஸ்து பெருமளவில் தொழில்மயமாகியுள்ளது.

நிலவியல்

மாசுக்கோ மாகாணம் 
மாஸ்கோ வட்டாரம் மற்றும் மாஸ்கோவின் வரைபடம்

ஓப்லஸ்து பெருமளவில் சமவெளியாக உள்ளது. இதில் சுமார் 160 மீ (520 அடி) உயரம் கொண்ட சில மலைகள் உள்ளன. மாஸ்கோ ஓப்லஸ்து கிழக்கு ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

காலநிலை

மாஸ்கோ ஓப்லஸ்து காலநிலையில் குறுகிய ஆனால் வெப்பமான கோடைக் காலமும், நீண்ட குளிர் காலமும் கொண்டது. சராசரி ஆண்டு வெப்பநிலை +3.5 °செல்சியஸ் (38.3 °பாரங்கீட்) முதல் +5.5 °செல்சியஸ் (41.9 °பாரங்கீட்) வரை இருக்கும்.

குளிரான மாதங்கள் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும். இம்மாதங்களின் சராசரி வெப்பநிலை மேற்கு பகுதிகளில் −9 °செல்சியஸ் (16 °பாரங்கீட்) கிழக்கில் −12 °செல்சியஸ் (10 °பாரங்கீட்). ஆர்க்டிக் காற்றுவீசும் காலத்தில், வெப்பநிலை - 20 °செல்சியஸ் (- 4 °பாரங்கீட்) வரை குறையும். இந்த குளிர்காலக்காற்று இருபது நாட்கள் வரை நீடிக்கும். சிலவேளைகளில் -45 °செல்சியஸ் (-49 °பாரங்கீட்) முதல் -54 °செல்சியஸ் (-65 °பாரங்கீட்) வரை வெப்பநிலை வீழ்ச்சியடைந்து காணப்படும்.

பொதுவாக நவம்பரில் பனிமழை துவங்கும், சிலசமயம் செப்டம்பரிலோ அல்லது திசம்பரிலோ துவங்கும். ஏப்ரல் மாதத்தினிடையில் (சில சமயம் மார்ச் மாத பிற்பகுதியில்) பனிமழை மறையும். பனி ஆழம் 25-50 சென்டிமீட்டர் (9.8-19.7 அங்குலம்) மண் 65-75 சென்டி மீட்டர் (26-30) வரை உறையும். வெப்பமான மாதம் சூலை மாதமாகும் சராசரி கோடைக்கால வெப்பநிலை வடமேற்கில் +18.0 °செல்சியஸ் (64.4 °பாரங்கீட்) தென்கிழக்கில் +20.0 °செல்சியஸ் (68.0 °பாரங்கீட்) ஆகும்.

அதிகபட்ச வெப்பநிலையான +40 °செல்சியஸ் (104 °பாரங்கீட்)ஆக கலோம்னா பகுதியில் 2010 இல் பதிவானது. சராசரி மழையளவு 450-650 மில்லி மீட்டர் (18-26 அங்குலம்), வடமேற்குப்பகுதிகளில் மிகுந்தும், தென்கிழக்குப்பகுதிகளில் குறைந்தும் மழை பொழியும்.

மேற்கோள்கள்

Tags:

உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்உருசியாவின் மாகாணங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புறப்பொருள் வெண்பாமாலைபட்டினத்தார் (புலவர்)போக்கிரி (திரைப்படம்)கருப்பசாமிஜோக்கர்திருமூலர்சுந்தர காண்டம்தேர்தல்சிறுபாணாற்றுப்படைபெரியாழ்வார்ஆய்த எழுத்துஇந்து சமயம்கண்ணகிஏலகிரி மலைசென்னையில் போக்குவரத்துவேற்றுமையுருபுசிலம்பம்முல்லைப்பாட்டுவிண்டோசு எக்சு. பி.உத்தரகோசமங்கைஇனியவை நாற்பதுதமிழ் மன்னர்களின் பட்டியல்எஸ். ஜானகிவெந்தயம்ஆங்கிலம்கருக்கலைப்புராஜா ராணி (1956 திரைப்படம்)ஒற்றைத் தலைவலிதிருவரங்கக் கலம்பகம்கோயம்புத்தூர்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புநீர்ப்பறவை (திரைப்படம்)ஜோதிகாதிவ்யா துரைசாமிகாடுவெட்டி குருஉப்புச் சத்தியாகிரகம்அரவான்சிவபுராணம்பதினெண்மேற்கணக்குசிவன்கினோவாசிறுநீரகம்மு. மேத்தாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிவவாக்கியர்வரலாறுஅரண்மனை (திரைப்படம்)இந்தியப் பிரதமர்அகரவரிசைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தூது (பாட்டியல்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மு. கருணாநிதிமறவர் (இனக் குழுமம்)நிணநீர்க்கணுமுத்துலட்சுமி ரெட்டிசெங்குந்தர்அக்கினி நட்சத்திரம்திராவிடர்தடம் (திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்முதல் மரியாதைதிருவிளையாடல் புராணம்ஜன கண மனஉடன்கட்டை ஏறல்பகிர்வுகணையம்சோழர்அறுசுவைகேரளம்பிள்ளைத்தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கள்ளர் (இனக் குழுமம்)பாளையத்து அம்மன்🡆 More