திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில்

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.

இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில்
திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:9°16′58″N 78°49′28″E / 9.282700°N 78.824400°E / 9.282700; 78.824400
பெயர்
புராண பெயர்(கள்):திருப்புல்லணை
பெயர்:திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்புல்லாணி
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிஜெகநாதர்
உற்சவர்:கல்யாண ஜெகந்நாதர்
தாயார்:கல்யாணவல்லி, பத்மாசனி
தல விருட்சம்:அரசமரம்
தீர்த்தம்:ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:ஸ்ரீபட்டாபிராமர் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீபவித்திரோற்சவம், ஸ்ரீஆதிஜெகநாதர் பிரம்மோற்சவம், திருக்கல்யாணம், 9ம் நாள் விஜயதசமி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு
தொலைபேசி எண்:+91-4567- 254 527; +91-94866 94035

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°16'57.7"N, 78°49'27.8"E (அதாவது, 9.282700°N, 78.824400°E) ஆகும்.

தல வரலாறு

  • புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு இராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க, மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால், அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே, கரையில் மூன்று நாட்கள் இராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார். இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.

கும்பாபிஷேகம்

2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற திருக்கோயில்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஆதிஜெகநாதப்பெருமாள், பத்மாசனி சன்னதிகளும், ஆண்டாள், தர்ப்ப சையனராமர், சந்தானகிருஷ்னர், பட்டாபிஷேகராமர் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு, கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி, சித்திரை மாதம் திருக்கல்யாணம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 9ம் நாள் விஜயதசமி திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி, சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் அமைவிடம்திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் தல வரலாறுதிருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் கோயில் அமைப்புதிருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் பூசைகள்திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் மேற்கோள்கள்திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் வெளி இணைப்புகள்திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில்108 திவ்ய தேசங்கள்இராமநாதபுரம் மாவட்டம்தமிழ்நாடுதிருப்புல்லாணிபெருமாள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மழைஇந்தியப் பிரதமர்கள்ளுஹரி (இயக்குநர்)விஷ்ணுபுறப்பொருள் வெண்பாமாலைதரணிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பூனைகாளமேகம்ஆழ்வார்கள்பிரேமலுசுற்றுச்சூழல் மாசுபாடுதிருமணம்இதயம்மஞ்சும்மல் பாய்ஸ்ஐந்திணைகளும் உரிப்பொருளும்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்புறநானூறுமணிமுத்தாறு (ஆறு)அந்தாதிசீரடி சாயி பாபாஇந்தியக் குடியரசுத் தலைவர்வேதாத்திரி மகரிசிதூது (பாட்டியல்)பத்து தலவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்69 (பாலியல் நிலை)எண்சரண்யா பொன்வண்ணன்பிள்ளையார்உளவியல்ஆய்வுசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்திரவ நைட்ரஜன்திருத்தணி முருகன் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஐக்கிய நாடுகள் அவைஇனியவை நாற்பதுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்திருமங்கையாழ்வார்சீனாபதினெண் கீழ்க்கணக்குமாதேசுவரன் மலைடிரைகிளிசரைடுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்இராவணன்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சுடலை மாடன்கண்ணாடி விரியன்நரேந்திர மோதிசத்திமுத்தப் புலவர்செக் மொழிஐம்பெருங் காப்பியங்கள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தமிழ்நாடுநவதானியம்பரிவர்த்தனை (திரைப்படம்)தேர்தல்கணினிசனீஸ்வரன்இங்கிலாந்துஅம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழர் பண்பாடுஇந்தியத் தேர்தல் ஆணையம்சைவ சமயம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கினோவாசமுத்திரக்கனிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சிலப்பதிகாரம்திருநாவுக்கரசு நாயனார்மாசாணியம்மன் கோயில்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)🡆 More