அ. கன்னியாகுமாரி

அவசரளா கன்னியாகுமாரி தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமாரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது.

அ. கன்னியாகுமாரி
வயலின் இசைக்கலைஞர் கன்னியாகுமாரி

ஆரம்பகால வாழ்க்கை

இவரின் சொந்த ஊர், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகரம் எனும் நகரமாகும். பெற்றோர்: அவசரள இராமரத்னம், ஜெயலக்ஷ்மி. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாகிய இவதுரி விஜேச்வர ராவ், எம். சந்திரசேகரன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி ஆகியோரிடம் கன்யாகுமாரி இசையினைக் கற்றார்.

தொழில் வாழ்க்கை

கன்னியாகுமரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வருகிறார். தான் தனியாக வாசிக்கும்போதும், மற்ற வயலின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசிக்கும்போதும் புதுமைகள் பலவற்றை புகுத்தி இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார் கன்யாகுமாரி. வாத்திய லஹரி எனும் பெயரில் வயலின், வீணை, நாதசுவரம் எனும் 3 இசைக் கருவிகள் பங்குகொள்ளும் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.

பெற்ற சிறப்புகள்

  • இவரை முதல்தர கலைஞராக அகில இந்திய வானொலி அங்கீகாரம் செய்தது.
  • லிம்கா சாதனைப் புத்தகம் 2004, இவரை சிறந்த சாதனையாளராக தெரிவு செய்தது.
  • கன்யாகுமாரியின் வயலினிசை, கன்னியாகுமரி தெய்வத்தின் ‘எப்போதும் மின்னும் வைர மூக்குத்தி’ போன்றிருப்பதாக பிரபல இசை விமர்சகர் சுப்புடு பாராட்டியிருந்தார்.

பயிற்றுவித்தல்

கன்யாகுமாரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். பயிற்றுவிப்பு காணொளிக் குறுந்தகடுகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்

  • கலைமாமணி, வழங்கியது: தமிழ்நாடு அரசு
  • உகாதி புரஸ்கார், வழங்கியது: ஆந்திர மாநில அரசு
  • மேரிலன்ட் மாகாணத்தின் (ஐக்கிய அமெரிக்கா) மதிப்புறு குடியுரிமை
  • டி டி கே விருது, வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
  • ஆசுதான விதூசி, வழங்கியது: சிருங்கேரி சாரதா பீடம்
  • ஆசுதான விதூசி, வழங்கியது: அகோபில மடம்
  • ஆசுதான விதூசி, வழங்கியது: அவதூட பீடம்
  • சப்தகிரி சங்கீத வித்வான்மணி, வழங்கியது: ஸ்ரீ தியாகராஜ விழாக் குழு, திருப்பதி
  • தனுர்வீணா பிரவீணா பட்டம், வழங்கியவர்: எம். எஸ். சுப்புலட்சுமி
  • சங்கீத கலா நிபுணா பட்டம், 2002 ; வழங்கியது: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்
  • சங்கீத நாடக அகாதமி விருது, 2003
  • விஸ்வ கலா பாரதி பட்டம், 2013; வழங்கியது: பாரத் கலாச்சார்
  • சங்கீத சூடாமணி விருது, 2012 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ணகான சபா, சென்னை
  • பத்மசிறீ விருது, 2015
  • சங்கீத கலாநிதி விருது, (2016)
  • இசைப்பேரறிஞர் விருது, (2019)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அ. கன்னியாகுமாரி ஆரம்பகால வாழ்க்கைஅ. கன்னியாகுமாரி தொழில் வாழ்க்கைஅ. கன்னியாகுமாரி பெற்ற சிறப்புகள்அ. கன்னியாகுமாரி பயிற்றுவித்தல்அ. கன்னியாகுமாரி பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்அ. கன்னியாகுமாரி மேற்கோள்கள்அ. கன்னியாகுமாரி வெளியிணைப்புகள்அ. கன்னியாகுமாரிவயலின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏலாதிஆடுதங்கர் பச்சான்வேலு நாச்சியார்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கோயம்புத்தூர் மாவட்டம்அமலாக்க இயக்குனரகம்மு. கருணாநிதிசஞ்சு சாம்சன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தேர்தல்இரச்சின் இரவீந்திராதிராவிட முன்னேற்றக் கழகம்கட்டுரைபரிதிமாற் கலைஞர்மார்ச்சு 28கிறித்தோபர் கொலம்பசுதேனி மக்களவைத் தொகுதிஸ்ரீதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகேழ்வரகுஉஹத் யுத்தம்ஜவகர்லால் நேருஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கான்கோர்டுஆனந்தம் விளையாடும் வீடுசித்தர்கள் பட்டியல்சிலுவைப் பாதைவங்காளதேசம்திருமுருகாற்றுப்படைசிவபெருமானின் பெயர் பட்டியல்இஸ்ரேல்பகவத் கீதைபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஇந்திய அரசியலமைப்புவிண்ணைத்தாண்டி வருவாயாதிருநாவுக்கரசு நாயனார்மரபுச்சொற்கள்நிணநீர்க்கணுஅயோத்தி தாசர்கண்டம்பிள்ளையார்கல்லீரல்கடலூர் மக்களவைத் தொகுதிஐஞ்சிறு காப்பியங்கள்கொடைக்கானல்வைப்புத்தொகை (தேர்தல்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மரியாள் (இயேசுவின் தாய்)பிரேமலுநன்னீர்துரைமுருகன்பூரான்நாடாளுமன்றம்காடைக்கண்ணிஅருணகிரிநாதர்கருப்பைஇராமலிங்க அடிகள்மனித உரிமைதி டோர்ஸ்பசுபதி பாண்டியன்நவக்கிரகம்முத்தொள்ளாயிரம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஎஸ். ஜெகத்ரட்சகன்கிராம ஊராட்சிஅபூபக்கர்உரைநடைபோக்குவரத்துதமிழ்கொங்கு வேளாளர்முதலாம் இராஜராஜ சோழன்மதயானைக் கூட்டம்தமிழர் நெசவுக்கலைகாற்று வெளியிடைஉணவுதமிழர் விளையாட்டுகள்இனியவை நாற்பது🡆 More