வங்காளதேச விடுதலைப் போர்

வங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.

இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.

வங்காளதேச விடுதலைப் போர்
வங்காளதேச விடுதலைப் போர்
1971இல் டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடைகிறார்.
நாள் 26 மார்ச் 197116 டிசம்பர் 1971
இடம் வங்காளதேசம்
இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் வெற்றி

• வங்காளதேசத்தின் விடுதலை

நிலப்பகுதி
மாற்றங்கள்
கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் ஆனது
பிரிவினர்
வங்காளதேசம் முக்தி வாகினி
இந்தியா இந்தியா
பாக்கித்தான் பாகிஸ்தான்
தளபதிகள், தலைவர்கள்
வங்காளதேசம் தளபதி எம். ஏ. ஜி. ஒஸ்மானி
இந்தியா தளபதி ஜெகத் சிங் அரோரா
இந்தியா சாம் பகதுர்
பாக்கித்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி
பாக்கித்தான் தளபதி டிக்கா கான்
பலம்
இந்தியா: 250,000
முக்தி பாஹினி: 100,000
பாகிஸ்தான் இராணுவம்: ~ 100,000[மேற்கோள் தேவை]

துணைப்படை: ~25,000

இழப்புகள்
இந்தியா: 1,426 பலி
3,611 காயம் (அரசு ஆவணம்)
1,525 பலி
4,061 காயம்


முக்தி பாஹினி: ??? பலி

பாகிஸ்தான் ~8,000 பலி[மேற்கோள் தேவை]
~10,000 காயம்[மேற்கோள் தேவை]
91,000 போர் கைதி
(56,694 படையினர்
12,192 துணைப்படை
மீதம் குடிமுறை சார்ந்தவர்)


பொது மக்களில் உயிரிழந்தோர்: மதிப்பீட்டின் படி 26,000 முதல் 3,000,000 வரை

வரலாறு

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர். 1970இல் கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் போலா சூறாவளி வங்காளதேசத்தை தாக்கி 300, 000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்குப் பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பல நிகழ்வுகள் காரணமாக கிழக்குப் பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் முக்தி பாஹினி என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.

தொடக்கம்

1971இல் மார்ச் 26ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை விளம்பல் வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.

நிகழ்வுகள்

இப்போர் நடைபெறும்பொழுது இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது செங்கிஸ் கான் நடவடிக்கை அதாவது தாக்குதல் மேற்கொண்டது. இந்திரா காந்தி போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கள் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.

இப்போரில் பல மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 மில்லியன் வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.

மேற்கோள்கள்

Tags:

வங்காளதேச விடுதலைப் போர் வரலாறுவங்காளதேச விடுதலைப் போர் தொடக்கம்வங்காளதேச விடுதலைப் போர் நிகழ்வுகள்வங்காளதேச விடுதலைப் போர் மேற்கோள்கள்வங்காளதேச விடுதலைப் போர்1971இந்தியாகிழக்கு பாகிஸ்தான்முக்தி வாகினிமேற்கு பாக்கித்தான்வங்காளதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சினேகாதமிழக மக்களவைத் தொகுதிகள்அகத்தியர்மகேந்திரசிங் தோனிபழமொழி நானூறுநேர்பாலீர்ப்பு பெண்கொடைக்கானல்ஐம்பெருங் காப்பியங்கள்புறப்பொருள் வெண்பாமாலைசெண்டிமீட்டர்நெடுநல்வாடைபறவைதாஜ் மகால்படையப்பாகுண்டூர் காரம்மனித வள மேலாண்மைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாண்டியர்கருச்சிதைவுமதீச பத்திரனதங்க மகன் (1983 திரைப்படம்)தொலைக்காட்சிபணவீக்கம்புற்றுநோய்திருமுருகாற்றுப்படையாழ்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)எல் நீனோ-தெற்கத்திய அலைவுபோக்குவரத்துதிருவிழாவேதம்மத கஜ ராஜாராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இதயம்முள்ளம்பன்றிம. பொ. சிவஞானம்பெண்தூது (பாட்டியல்)பிள்ளையார்உடுமலை நாராயணகவிஅரவான்ஜெயம் ரவிகஞ்சாகண்ணனின் 108 பெயர் பட்டியல்நுரையீரல்புதுமைப்பித்தன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சங்க காலம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ரா. பி. சேதுப்பிள்ளைபெண் தமிழ்ப் பெயர்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்முதற் பக்கம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பி. காளியம்மாள்தமிழ்த்தாய் வாழ்த்துசுடலை மாடன்சிந்துவெளி நாகரிகம்சூரியக் குடும்பம்விண்டோசு எக்சு. பி.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மாமல்லபுரம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கருப்பசாமிஔவையார் (சங்ககாலப் புலவர்)புவியிடங்காட்டிசெயற்கை நுண்ணறிவுதிருமால்மாணிக்கவாசகர்விண்ணைத்தாண்டி வருவாயாபத்து தலஅவுரி (தாவரம்)மதராசபட்டினம் (திரைப்படம்)இசைஉணவுபெண்ணியம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்🡆 More