லிட்டர்: சர்வதேச நியம முகத்தலளவை

லிட்டர் அல்லது லீற்றர் (litre அல்லது liter) என்பது கனவளவு அல்லது கொள்ளளவின் அலகாகும்.

இது "லி", L அல்லது l என்று குறிக்கப்படும். இது மெட்ரிக் முறை அலகாகும். லிட்டர் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் "litron" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. லிட்டர் ஒரு எஸ்.ஐ. (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் அனைத்துலக முறை அலகுகள் (SI) மீ³ ஆகும். ஒரு லிட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும்.

Litre
pic
ஒரு லிட்டர் என்பது 10 cm பக்கங்கள் உள்ள ஒரு கனசதுரத்தின் கொள்ளளவு ஆகும்.
பொது தகவல்
அலகு முறைமைசர்வதேச தர வறுவித்த அலகு
அலகு பயன்படும் இடம்கன பரிமாணம்
குறியீடுl or L
In SI base units:1 L = 10-3 m3

வரலாறு

முதன் முதலில் 1795-இல் பிரான்ஸ் நாட்டிலேயே லிட்டர் எனும் அளவு முறை நடைமுறக்கு கொண்டுவரப்பட்டது.ஒரு லிட்டர் என்றால் ஒரு கிலோ எடைக்கு சமமான நீர்ம பொருளாகும்.அதன்பின் 1879-இல் சிஐபிமஎம் லிட்டர் அளவுக்கான கோட்பாட்டையும்,l என்ற அலகையும் வெளியிட்டது.

1901 ஆம் ஆண்டில் நடந்த, மூன்றாவது CGPM மாநாட்டில், 1 லிட்டர் நீரின் அளவுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட்டது.நதன்படி ஒரு வளிமண்டல அழுத்தத்தில் , 3.98 °C வெப்பநிலையில் இருக்கும் 1 கிலோ தூய நீரே லிட்டர் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 1.000 028 dm3 க்கு சமமான நீர்மப் பொருள் லிட்டர் எனச் செய்தனர்.

இதன் பின் 1964-இல், 12 CGPM மாநாட்டில், லிட்டர் மீண்டும் மாற்றப்பட்டது ஒரு கன டெசிமீட்டர் ஒரு லிட்டர் என்றானது.

வரைவிலக்கணம்

1 லி ≡ 0.001 மீ³ அல்லது 1 டெமீ³ (dm³) அ+து: 1000 லி = 1 மீ3

லிட்டருடன் எழுதப் பயன்படும் SI முன்னொட்டுகள்

பெருக்கல் பெயர் குறியீடுகள் சமமான கனவளவு பெருக்கல் பெயர் குறியீடுகள் சமமான கனவளவு
100 L லிட்டர் l L dm³ கன டெசிமீட்டர்    
101 L டெக்காலிட்டர் dal daL   10−1 L டெசிலிட்டர் dl dL  
102 L ஹெக்டோலிட்டர் hl hL   10−2 L சென்டிலிட்டர் cl cL  
103 L கிலோலிட்டர் kl kL கன மீட்டர் 10−3 L மில்லிலிட்டர் ml mL cm³ கன சதமமீட்டர்;
கன சென்ட்டி மீட்டர் (cc)
106 L மெகாலிட்டர் Ml ML dam³ கன டெக்காமீட்டர் 10−6 L மைக்ரோலிட்டர் µl µL mm³ கன மில்லிமீட்டர்
109 L கிகாலிட்டர் Gl GL hm³ கன ஹெக்டோமீட்டர் 10−9 L நானோலிட்டர் nl nL 106 µm³ 1 மில்லியன் கன மைக்ரோமீட்டர்
1012 L டெராலிட்டர் Tl TL km³ கன கிலோமீட்டர் 10−12 L பைக்கோலிட்டர் pl pL 103 µm³ 1 ஆயிரம் கான மைக்ரோமீட்டர்கள்
1015 L பெட்டாலிட்டர் Pl PL 103 km³ 1 ஆயிரம் கன கிலோமீட்டர்கள் 10−15 L பெம்டோலிட்டர் fl fL µm³ கன மைக்ரோமீட்டர்கள்
1018 L எக்சாலிட்டர் El EL 106 km³ 1 மில்லியன் கன கிலோமீட்டர்கள் 10−18 L ஆட்டோலீட்டர் al aL 106 nm³ 1 மில்லியன் கன நானோமீட்டர்கள்
1021 L செட்டாலிட்டர் Zl ZL Mm³ கன மெகாமீட்டர் 10−21 L செப்டோலிட்டர் zl zL 103 nm³ 1 ஆயிரம் கன நானோமீட்டர்கள்
1024 L யோட்டோலிட்டர் Yl YL 103 Mm³ 1 ஆயிரம் கன மெகாமீட்டர்கள் 10−24 L யோக்டோலிட்டர் yl yL nm³ கன நானோமீட்டர்

மில்லிலிட்டர்

மில்லிலிட்டர் என்பது ஒரு கன சென்ட்டிமீட்டர் அல்லது ஒரு லீட்டர் கொள்ளளவில் ஈடாகப் பங்கிட்ட ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். இவ்வலகு முக்கியமாக மருத்துவத்திலும் சமையல் அலகுகளிலும் பாவிக்கப்படுகிறது. இதன் குறியீடு "மிலி" (mL).

மெட்ரிக் அல்லாத மாற்றீடுகள்

மெட்ரிக் அல்லாத அலகில் லிட்டர்   மெட்ரிக் அல்லாத அலகுகள் லிட்டரில்
1 L ≈ 0.87987699 Imperial quart             1 Imperial quart ≡ 1.1365225 லிட்டர்          
1 L ≈ 1.056688 US fluid quart   1 US fluid quart ≡ 0.946352946 லிட்டர்  
1 L ≈ 1.75975326 Imperial பைந்து   1 Imperial pint ≡ 0.56826125 லிட்டர்  
1 L ≈ 2.11337641 US fluid pints   1 US fluid pint ≡ 0.473176473 லிட்டர்  
1 L ≈ 0.2641720523 US liquid கலன்   1 US liquid gallon ≡ 3.785411784 லிட்டர்கள்  
1 L ≈ 0.21997 Imperial gallon   1 Imperial gallon ≡ 4.54609 லிட்டர்கள்  
1 L ≈ 0.0353146667 கன அடி   1 கன அடி ≡ 28.316846592 லீட்டர்கள்  
1 L ≈ 61.0237441 கன அங்குலம்   1 cubic inch ≡ 0.01638706 லிட்டர்கள்  

அலகு

முதன் முதலில் l ம்ட்டுமே லிட்டரின் அலகாக இருந்துவந்தது.ஏனெனில் நபரின் பெயரை முன்னிட்டு அலகுகள் வந்தால் மட்டுமே தலைப்பெழுத்துகளாக வரும் நடைமுறை இருந்தது.அமெரிக்காவில் உள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் L- லிட்டர்ன் அலகாக நிர்நயிக்க பரிந்துறை செய்தது. இம்முறை கனாடா , ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் நடைமுறையில் இருந்தது.ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் l ம்ட்டுமே லிட்டரின் அலகாக இருந்துவந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

லிட்டர் வரலாறுலிட்டர் வரைவிலக்கணம்லிட்டர் லிட்டருடன் எழுதப் பயன்படும் SI முன்னொட்டுகள்லிட்டர் மில்லிலிட்டர் மெட்ரிக் அல்லாத மாற்றீடுகள்லிட்டர் அலகுலிட்டர் மேற்கோள்கள்லிட்டர் வெளி இணைப்புகள்லிட்டர்அனைத்துலக முறை அலகுகள்அலகு (அளவையியல்)கனவளவுபிரெஞ்சு மொழிமீட்டர்மெட்ரிக் முறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைதமிழில் சிற்றிலக்கியங்கள்முடக்கு வாதம்வாதுமைக் கொட்டைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கௌதம புத்தர்முக்கூடற் பள்ளுதற்கொலை முறைகள்காசோலைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நோய்மறைமலை அடிகள்ஆண் தமிழ்ப் பெயர்கள்இரட்டைமலை சீனிவாசன்விநாயகர் அகவல்கடையெழு வள்ளல்கள்விஜய் வர்மாபழமொழி நானூறுதாவரம்விளையாட்டுவிடுதலை பகுதி 1விருத்தாச்சலம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வேதாத்திரி மகரிசிதமிழர் பண்பாடுவானிலைபரதநாட்டியம்பீனிக்ஸ் (பறவை)முக்குலத்தோர்முத்துலட்சுமி ரெட்டிதமிழ் எழுத்து முறைகலிங்கத்துப்பரணிமனித வள மேலாண்மைகிராம சபைக் கூட்டம்கருப்பை நார்த்திசுக் கட்டிசங்ககால மலர்கள்மாமல்லபுரம்தொல்லியல்குணங்குடி மஸ்தான் சாகிபுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சீனாதமிழர் கட்டிடக்கலைநவதானியம்இராமர்பொன்னுக்கு வீங்கிகாளை (திரைப்படம்)தீபிகா பள்ளிக்கல்பொது ஊழிநீர்சேலம்சடுகுடுஇந்தியாகலம்பகம் (இலக்கியம்)திருட்டுப்பயலே 2தமிழ்நாடுகணையம்சுந்தர காண்டம்பாரதிய ஜனதா கட்சிசீரடி சாயி பாபாசிலப்பதிகாரம்திருமலை நாயக்கர்வினோஜ் பி. செல்வம்வியாழன் (கோள்)அயோத்தி இராமர் கோயில்கழுகுஇந்தியப் பிரதமர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்குழந்தை பிறப்புதிருக்குறள்பூக்கள் பட்டியல்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தாய்ப்பாலூட்டல்தொழிலாளர் தினம்தமிழ்த் தேசியம்தமிழர் அளவை முறைகள்தமிழ் இலக்கணம்சீறாப் புராணம்மாற்கு (நற்செய்தியாளர்)🡆 More