மின்னழுத்தம்

மின்னழுத்தம் (voltage) என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம்.

ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோட்டையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு மேலே உள்ள நீரின் அழுத்தம் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும் நிலவீர்ப்பு அல்லது புவியீர்ப்பு விசை இருப்பதால் தான். இதே போல மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருட்களைச் சுற்றி மின் விசை தரும் மின்புலம் உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த மின்னழுத்தம் எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைந்த மின்னழுத்தமுடைய பொருளுடன் இணையும் போது மின்னோட்டமும் உண்டாகும். மின் விளக்கு எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது.

மின்னழுத்தம்
மின்னழுத்தம்
பொதுவான குறியீடு(கள்): V , V
U , U
SI அலகு: வோல்ட்டு
மின்னழுத்தம்
உயர் மின்னழுத்த அபாயக்குறியீடு

மின்னழுத்தை வோல்ட்டு என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 ஓம் கொண்ட தடையத்தின் இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 ஆம்பியர் அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னோட்டம், தடை என்பவற்றினிடையே உள்ள தொடர்பை சார்ச்சு சைமன் ஓம் என்பாரின் ஓமின் விதியால் அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (மின்தடை) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி, V = மின்னழுத்தம் R = மின்தடை I = மின்னோட்டம் என்றால்,

  • V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.

மின்னை அளக்கும் அலகு

மின்னழுத்தம் 
மின் அளக்கும் அலகு

இங்கே மின்னழுத்தம் (V), மின்னோட்டம் (I), மின் தடை (R) என்பவற்றை எப்படி எளிதாகக் கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது.

  • இந்த முக்கோணமான படத்தின் மேலே (V) என்ற குறியீடு உள்ளது இது மின்னழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை நாம் கண்டறிய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னோட்டத்தையும் (I) மின் தடையையும் (R) (IxR=V) பெருக்க வேன்டும் அப்போது மின்னழுத்தத்தின் அளவு தெரியும்.
  • அது போன்று மின்னோட்டத்தை (I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்தடையால்(R) (V/R=I) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும்.
  • இப்போது மின் தடையை (R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்னோட்டத்தினால் (I) (V/I=R) வகுக்கும் போது மின் தடையின் அளவு தெரியும்.

மின்னழுத்தம் - விளக்கம்

ஈறிலாத் தொலைவு

காற்று அல்லது வெற்றிடத்தில் ஒரு புள்ளி மின்னூட்டம் (q) வைக்கப்படும் போது அதனருகில் ஒரு புள்ளியில் அம்மின்னோட்டத்தினால் ஏற்படும் மின்புலத்தைக் கருதுவோம். மின்னூட்டத்திலிருந்து அப்புள்ளி இருக்கும் தொலைவைப் பொறுத்து மின்புலச் செறிவு (E) மாறுபடும். தொலைவு அதிகரிக்கும் போது மின்புலச் செறிவு குறைந்து, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் சுழியாகக் குறைந்து விடும். அத்தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு புள்ளியை நாம் ஈறிலாத் தொலைவிலுள்ள புள்ளியாகக் கருதுவோம். ஈரிலாத் தொலைவு எனப்படுவதன் வரையறை யாதெனில் அந்த புள்ளி மின் துளியின் மின் உணர்வு உணரப்படாத எந்த ஒரு புள்ளியையும் கொள்ளலாம்.

வேலை

ஈறிலாத் தொலைவிலிருந்து ஓரலகு நேர் மின்னோட்டம் (+ 1 கூலூம்) ஒன்றை, புள்ளி நேர் மின்னோட்டத்தின் புலத்திலுள்ள ஒரு புள்ளிக்குக் கொணரும் போது, அப்புலத்தினால் ஏற்படும் விலக்கு விசைக்கு எதிராகக் குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும். அவ்வேளை அது அந்த மின்னோட்டத்தில் ஆற்றலாகச் சேமித்து வைக்கப்படுகின்றது. எனவே, ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்துவரச் செய்யப்படும் வேலையே அப்புள்ளியில் புள்ளி மின்னூட்டம் q இன் மின்னழுத்தம் என வரையறுக்கப்படுகிறது.

வோல்ட் மின்னழுத்தம்

ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்து வரும்போது செய்யப்படும் வேலை அப்புள்ளியில் மின்னழுத்தம் ஆகும்.

வெளி இணைப்புகள்

Tags:

மின்னழுத்தம் மின்னை அளக்கும் அலகுமின்னழுத்தம் - விளக்கம்மின்னழுத்தம் வெளி இணைப்புகள்மின்னழுத்தம்நீர்புவியீர்ப்புமின் தன்மைமின் விசைமின் விளக்குமின்னோட்டம்மின்புலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ஒளிசுற்றுச்சூழல் மாசுபாடுபணவீக்கம்தீரன் சின்னமலைநீதிக் கட்சிபரதநாட்டியம்மார்க்கோனிசடுகுடுகாரைக்கால் அம்மையார்அரச மரம்மழைதமிழச்சி தங்கப்பாண்டியன்சட் யிபிடிவிண்ணைத்தாண்டி வருவாயாகலாநிதி மாறன்தமிழ்விடு தூதுதமிழ்த் தேசியம்சினைப்பை நோய்க்குறிதிருக்குர்ஆன்முடியரசன்பாரதிதாசன்ஸ்ரீலீலாஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தொல். திருமாவளவன்சினேகாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்அவுன்சுஅரண்மனை (திரைப்படம்)காவிரி ஆறுகேள்விசன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்தியப் பிரதமர்பெண்கம்பராமாயணம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தினகரன் (இந்தியா)முத்துராமலிங்கத் தேவர்அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழர் நிலத்திணைகள்சுரைக்காய்விலங்குமலைபடுகடாம்வேற்றுமையுருபுஆந்திரப் பிரதேசம்தாவரம்உரைநடைஜி. யு. போப்சென்னை சூப்பர் கிங்ஸ்மண் பானைவிநாயகர் அகவல்ஐங்குறுநூறு - மருதம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வெண்குருதியணுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)இணையம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மண்ணீரல்ஜோதிகாஏலகிரி மலைபகவத் கீதைபறம்பு மலைஇந்திய தேசிய காங்கிரசுஇல்லுமினாட்டிமுல்லைக்கலிதொலைக்காட்சிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மருதம் (திணை)கல்லணைதிருப்பதிதமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பாம்புமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கொல்லி மலைவெந்தயம்🡆 More