வோல்ட்டு

வோல்ட்டு என்பது மின்னழுத்தத்தை அளக்கப் பயன்படும் ஒரு மின் அலகு.

இதன் குறியீடு (V). ஓர் (Ω) ஓம் (மின்னியல்) மின்தடையுள்ள ஒன்றில் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் பாயத் தேவையான மின்னழுத்தம் என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு கூலம் மின்மம் (மின்னேற்பு), நகர்ந்து ஒரு ஜூல் அளவு வேலை (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு வாட் அளவு மின்திறன் செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ வோல்ட்டா அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் மின்கலங்கள் ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.

வோல்ட்டு (Volt)
வோல்ட்டு
NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று
பொது தகவல்
அலகு முறைமைSI derived unit
அலகு பயன்படும் இடம்மின்னழுத்த வித்தியாசம், மின்னியக்கு விசை
குறியீடுV
பெயரிடப்பட்டதுஅலெஸ்ஸான்ட்ரோ வோல்டா
சர்வதேச அடிப்படை அலகுகளில்:1 V = 1 kg·m2·s-3·A-1

பரவலாக அறியப்படும் சில வோல்ட்டுகள்

வோல்ட்டு 
1.5 வோல்ட்டு C-வகை மின் கலம்

சில பழக்கமான வோல்ட்டு அழுத்தம் தரும் மின்வாய்கள்:

  • நரம்பு அணுவில் வினை தூண்டும் மின்னழுத்தம்: 40 மில்லி வோல்ட்டு (ஒரு மில்லி வோல்ட்டு = 1/1000 வோல்ட்டு)
  • மீண்டும் மின்னேற்பு ஊட்டவல்ல ஆல்க்கலைன் வகை ஒற்றை மின்கலங்கள்: 1.2 வோல்ட்டு
  • மீண்டும் மின்னேற்பு ஊட்ட இயலா ஒற்றை உருளை மின்கலம்: பல வகைகளும் (AAA, AA, C, D): 1.5 வோல்ட்டு
  • லித்தியம் பாலிமர் வகை மீள் மின்னேற்பு ஊட்ட வல்ல மின்கலம்: : 3.7 வோல்ட்டு
  • தானுந்து (கார்) மின் கலம்: 12 வோல்ட்டு
  • வீட்டு மின்சாரம்: அமெரிக்கா, கனடா 120 வோல்ட்டு, ஆஸ்திரேலியா 240 வோல்ட்டு, ஐரோப்பா, இந்தியா 220-230 வோல்ட்டு.
  • மின்சாரத்தை பகிர்ந்தளிக்கவும் நெடுந்தொலைவு கடத்துவதற்கும் பயன் படுத்தப்படும் உயர் மின்னழுத்தம்: 110 கிலோ வோல்ட்டு .
  • மின்னல்: மின்னழுத்தம் அதிகமாக வேறுபடும், ஆனால் பெரும்பாலும் சுமார் 100 மெகா வோல்ட்டு ( 1 மெகா = 106) இருக்கும் .

வோல்ட்டு அலகை துல்லியமாய் வரையறை செய்தல்

வோல்ட்டு 
மின் அளக்கும் அழகு

மின்னழுத்தத்தைத் மிகத் துல்லியமாக வரையறை செய்ய ஜோசப்சன் விளைவு என்னும் குவாண்ட்டம் நுண் இயற்பியலின் அடிப்படையில் வரையறை செய்துள்ளார்கள். இந்த ஜோசப்ப்சன் விளைவு (Josephson Effect) என்பது இரு மின் மீ்கடத்திகளின் (superconductors) இடையே ஒரு மிக மெல்லிய வன்கடத்தி (கடத்தாப்பொருள்) இருந்தால், அவ் வன்கடத்தியை ஊடுருவிப் பாயும் புழைமின்னோட்டம் (tunneling current) பற்றியதாகும். வோல்ட்டு அலகைத் துல்லியமாக நிறுவ அமெரிக்காவிலுள்ள NIST என்னும் நிறுவனம் ஜோசப்சன் விளைவு நிகழும் ஒரு நுண் ஒருங்கிணைப்புச் சுற்றுச் சில்லு செய்துள்ளது. NIST (National Institute of Standards and Technology) என்னும் நிறுவனம் தரம் நிறுவவும், தேறவும், அவைகளுக்குமான தொழில் நுட்பங்களை ஆயவும் நிறுவியதாகும்.

மேற்கோள்கள்

Tags:

ஆம்பியர்ஓம் (மின்னியல்)கூலம்ஜூல்மின்கலம்மின்தடைமின்திறன்மின்னழுத்தம்மின்னோட்டம்மின்மம்வாட்வேலைவோல்ட்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கன்னியாகுமரி மாவட்டம்தமிழர் விளையாட்டுகள்ஊராட்சி ஒன்றியம்முள்ளம்பன்றிசங்க காலப் புலவர்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)முதுமலை தேசியப் பூங்காசிவாஜி கணேசன்வெற்றிக் கொடி கட்டுஇல்லுமினாட்டிதமிழ்விடு தூதுவட்டாட்சியர்சிவனின் 108 திருநாமங்கள்மதுரை நாயக்கர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சட் யிபிடிஇலட்சம்கங்கைகொண்ட சோழபுரம்உவமையணிதனுசு (சோதிடம்)தமிழ் இலக்கணம்பகத் பாசில்செவ்வாய் (கோள்)பள்ளிக்கூடம்இன்னா நாற்பதுதமிழர் பண்பாடுமாசிபத்திரிசேரன் (திரைப்பட இயக்குநர்)சிலம்பம்தமிழ்திராவிட முன்னேற்றக் கழகம்விபுலாநந்தர்திராவிடர்வேலுப்பிள்ளை பிரபாகரன்திருக்குறள்நிணநீர்க் குழியம்ஆறுமுக நாவலர்ம. பொ. சிவஞானம்ஸ்ரீமொழிகுடும்பம்பெண் தமிழ்ப் பெயர்கள்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ரோசுமேரிதமிழ்ஒளிமாதவிடாய்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்திருவண்ணாமலைகருத்துஅளபெடைமதுரைக் காஞ்சிமூவேந்தர்கூகுள்ராஜா ராணி (1956 திரைப்படம்)குழந்தை பிறப்புசங்கம் (முச்சங்கம்)அறுபது ஆண்டுகள்பெண்களுக்கு எதிரான வன்முறைஎலுமிச்சைபஞ்சபூதத் தலங்கள்கார்ல் மார்க்சுஆய்வுகோவிட்-19 பெருந்தொற்றுகள்ளர் (இனக் குழுமம்)முடிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அண்ணாமலை குப்புசாமிஇராசாராம் மோகன் ராய்தமிழக வெற்றிக் கழகம்இந்திய தேசிய சின்னங்கள்மயக்க மருந்துசிவனின் தமிழ்ப் பெயர்கள்வௌவால்மதீச பத்திரனகலிப்பாவைதேகி காத்திருந்தாள்🡆 More