பெர்மாவின் கடைசித் தேற்றம்

எண் கோட்பாட்டில், an + bn = cn (n > 2) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய நேர்ம முழுவெண்கள் a, b, c எதுவும் கிடையாது என்பதே பெர்மாவின் கடைசித் தேற்றம் (Fermat's Last Theorem) கூறும் கூற்றாகும்.

n = 1, n = 2 எனும்போது இச்சமன்பட்டிற்கு எண்ணற்ற தீர்வுகள் உள்ளன என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட உண்மையாகும். பழைய புத்தகங்களில் பெர்மாவின் கடைசி அனுமானம் (Fermat's conjecture) எனவும் இத்தேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெர்மாவின் கடைசித் தேற்றம்
டையோபண்டசின் அரித்மெட்டிகா நூலின் 1670 ஆம் பதிப்பில் பெர்மாவின் கடைசித் தேற்றக் குறிப்பு(Observatio Domini Petri de Fermat).

1637 ஆம் ஆண்டு அரித்மெட்டிகா என்ற நூலின் பிரதியொன்றின் பக்கத்தில் இத்தேற்றம் பியேர் டி பெர்மாவால் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான நிறுவல் தன்னிடம் உள்ளதாகவும் ஆனால் அது மிகப்பெரியது என்பதால் அந்த இடத்தில் எழுதப்பட முடியாது என்றும் அங்கு குறிப்பிட்டிருந்தார். பல கணிதவியலாளர்களின் 358 ஆண்டுகளின் முயற்சிக்குப்பின் இத்தேற்றம் 1994 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ வைல்சால் முதன்முறையாக சரியான முறையில் நிறுவப்பட்டு 1995 இல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த நிறுவலுக்கு முன்னர் பெர்மாவின் தேற்றம் கணித வரலாற்றிலேயே ”மிகவும் கஷ்டமான கணக்கு” என கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றிருந்தது.

கண்ணோட்டம்

பித்தகோரசின் தேற்றமான , x2 + y2 = z2, என்ற சமன்பாட்டிற்கு நேர்ம முழு எண்களில் எண்ணற்ற தீர்வுகள் உள்ளன. இத்தீர்வுகள் பித்தகோரசு மும்மைகளென அழைக்கப்படுகின்றன. 1637 ஆம் ஆண்டில் an + bn = cn என்ற சமன்பாட்டிற்கு n > 2 எனும்போது தீர்வுகளே கிடையாது என 1637 ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தில் பெர்மா குறிப்பிட்டிருந்தார். அதற்கானத் தீர்வு தம்மிடம் உள்ளதென அவர் கூறியபோதும் அவர் அந்த தீர்வினை எங்கும் அளிக்கவுமில்லை, அவரது நிறுவல் எனக் கருதப்படும் எந்தவொன்றும் காணப்படவும் இல்லை. அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னரே அவரது இந்த அனுமானம் கண்டறியப்பட்டது. அனுமானம் கண்டறியப்பட்டு மூன்றரை நூற்றாண்டுகளாக நிறுவப்பட முடியாத நிலையிலேயே இருந்தது. கணித வரலாற்றில் நிறுவ முடியாத ஒரு முக்கியமான கூற்றாகத் தொடர்ந்தது. இதனை நிறுவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எண் கோட்பாட்டு நல்ல முன்னேற்றம் அடைந்தது.

தொடர் முயற்சிகளும் தீர்வும்

n = 4 எனும்போது பெர்மாவால் நிறுவப்பட்டு விட்டதால் n இன் பகா எண் அடுக்குகளுக்கு நிறுவல் கண்டறியப்பட்டால் போதும் என்ற நிலை எழுந்தது. இரு நூற்றாண்டுகளாக (1637–1839) இக்கூற்று 3, 5, 7 ஆகிய மூன்று பகாஎண்களுக்கு மட்டுமே நிறுவப்பட்டது. பல கணிதவியலாளர்களின் முயற்சிகளைத் தொடர்ந்து இறுதியாக ஆங்கிலேய கணிதவியலாளர் ஆண்ட்ரூ வைல்சு இக்கூற்றுக்கான நிறுவலைக் கண்டுபிடித்தார். 1995 ஆம் ஆண்டு அது முறையாக வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

பெர்மாவின் கடைசித் தேற்றம் கண்ணோட்டம்பெர்மாவின் கடைசித் தேற்றம் மேற்கோள்கள்பெர்மாவின் கடைசித் தேற்றம் அடிக்குறிப்புகள்பெர்மாவின் கடைசித் தேற்றம் வெளி இணைப்புகள்பெர்மாவின் கடைசித் தேற்றம்எண் கோட்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்டார் (திரைப்படம்)உரிப்பொருள் (இலக்கணம்)உமறுப் புலவர்ஆண்டாள்ரா. பி. சேதுப்பிள்ளைமரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)சிலப்பதிகாரம்ஆதவன் தீட்சண்யாபாரிமூலம் (நோய்)தமிழர் நிலத்திணைகள்அட்சய திருதியைகாற்றுசிவபுராணம்மேற்குத் தொடர்ச்சி மலைகம்பராமாயணம்ஆசாரக்கோவைசூரியக் குடும்பம்பஞ்சாங்கம்வேலைக்காரி (திரைப்படம்)இந்து சமயம்திவ்யா துரைசாமிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்அகத்தியர்சூர்யா (நடிகர்)கண்ணாடி விரியன்மகரம்கள்ளுஆசியாகுருதி வகைகுமரகுருபரர்தனிப்பாடல் திரட்டுவாட்சப்மேழம் (இராசி)செக் மொழிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வேற்றுமைத்தொகைமூவேந்தர்சஞ்சு சாம்சன்சீவக சிந்தாமணிதமிழ் நாடக வரலாறுநெடுநல்வாடைபறவைகாளமேகம்பால் (இலக்கணம்)உருவக அணிபூலித்தேவன்தமிழில் சிற்றிலக்கியங்கள்ஆந்திரப் பிரதேசம்ஷபானா ஷாஜஹான்தைப்பொங்கல்சேரர்தமிழ் இலக்கணம்கிராம ஊராட்சிபிரஜ்வல் ரேவண்ணாஆசிரியர்சாக்கிரட்டீசும. பொ. சிவஞானம்மியா காலிஃபாஔவையார் (சங்ககாலப் புலவர்)பூரான்திராவிட இயக்கம்விந்துகருக்காலம்தளை (யாப்பிலக்கணம்)நாயக்கர்முதலாம் இராஜராஜ சோழன்சின்னத்தாயிசுரதாசைவ சமயம்ஏக்கர்அரண்மனை (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மரபுத்தொடர்ஆனைக்கொய்யாஇலங்கை தேசிய காங்கிரஸ்மருதம் (திணை)அளபெடை🡆 More