பாப் டிலான்

பாப் டிலான் (Bob Dylan, இயற்பெயர்: இராபர்ட் ஆலென் சிமர்மேன், பிறப்பு: மே 24, 1941) ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் கவிஞர் ஆவார்.

ஐந்து தசாப்தங்களாய் வெகுஜன இசையில் ஒரு பிரபலமாக அவர் திகழ்ந்து வருகிறார். "ப்ளோயிங் இன் தி விண்ட்” மற்றும் “தி டைம்ஸ் தே ஆர் எ- சேஞ்சிங்” போன்ற ஏராளமான பாடல்கள் மனித உரிமைகள் மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கீதங்களாக ஆயின. அவரது ஆரம்ப பாடல் வரிகளில் பல்வேறு வகையான அரசியல், சமூக மற்றும் தத்துவ தாக்கங்களும் இலக்கிய தாக்கங்களும் இருந்தன. அவை நிலவி வந்த பாப் இசை மரபுகளை உடைத்தெறிந்ததோடு அப்போது வளர்ச்சி கண்டு வந்த எதிர்கலாச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாய் அமைந்தது. பல்வேறு இசைவகைகளுக்கு வலுச் சேர்க்கவும் விருப்பத்திற்குகந்ததாக்கவும் செயல்பட்டிருக்கும் டிலான் அமெரிக்க பாடல்களில் – ஏராளமான மரபுகளை ஆராய்ந்திருக்கிறார். நாட்டுப்புற இசை துவங்கி தோத்திர இசை, ராக் அண்ட் ரோல் மற்றும் ராகபில்லி வரை கையாண்டிருக்கிறார்.

பாப் டிலான்
பாப் டிலான்
நியூ ஆர்லியன்ஸ் ஜாஸ் மற்றும் பாரம்பரிய இசைவிழா, ஏப்ரல் 28, 2006
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ராபர்ட் ஆலன் சிமர்மேன்
பிற பெயர்கள்எல்ஸ்டன் கன், டெட்ஹாம் போர்டர்ஹவுஸ், பிளைண்ட் பாய் கிரண்ட், எல்மர் ஜான்சன், செர்ஜி பெட்ரோவ், ஜாக் பிராஸ்ட், ஜாக் ஃபேட், ராபர்ட் மில்க்வுட் தாமஸ்
பிறப்புமே 24, 1941 (1941-05-24) (அகவை 82)
துலுத், மினசோடா,
அமெரிக்கா
இசை வடிவங்கள்ராக், நாட்டுப்புற இசை, நாட்டுப்புற ராக், ப்ளுஸ், கிராமிய இசை, தோத்திர இசை
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கிதார், பாஸ், ஹார்மோனிகா, கீபோர்டு, பியானோ
இசைத்துறையில்1959–இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்கொலம்பியா, அசைலம்
இணையதளம்bobdylan.com

கிதார், பியானோ மற்றும் ஹார்மோனிகா கொண்டு டிலான் இசை நிகழ்த்துகிறார். மாறும் இசைக் கலைஞர்கள் வரிசையின் உதவியுடன், நெவர் எண்டிங் டூர் என்று அழைக்கப்படும் சுற்றுப்பயணத்தில் 1980களின் பிற்பகுதி முதல் தொடர்ந்து இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு இசைத்தட்டு கலைஞராகவும் நிகழ்ச்சி செய்பவராகவும் அவரது சாதனைகள் தான் அவரது தொழில்வாழ்க்கைக்கு மையமாய் அமைந்துள்ளது என்றாலும் அவரது மிகப்பெரும் பங்களிப்பாய் பொதுவாக அவரது பாடல் வரிகளே கருதப்படுகின்றன.

தனது வாழ்நாளில் கிராமி, கோல்டன் குளோப் மற்றும் அகாதமி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். ராக் அண்ட் ரோல் புகழ் மனிதர் அவை, நாஷ்விலி பாடலாசிரியர் புகழ் மனிதர் அவை மற்றும் பாடலாசிரியர்கள் புகழ் மனிதர் அவை ஆகியவற்றில் இவருக்கு இடம் கிட்டியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் இவர் பிறந்த இடமான மினஸோடாவில் உள்ள டுலுத்தில் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாய் பாப் டிலான் பாதை ஒன்று திறக்கப்பட்டது. அசாதாரணமான கவித்திறம் கொண்ட பாடல் வரிகள் மூலம் அமெரிக்காவின் வெகுஜன இசை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியதற்காக 2008 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது தேர்வுக்குழு இவருக்கு சிறப்பு நினைவு கவுரவத்தை வழங்கியது. 2016 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

டிலான் தனது மிக சமீபத்திய இசைக்கூட இசைத்தொகுப்பான கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட் இசைத்தொகுப்பை அக்டோபர் 13, 2009 அன்று வெளியிட்டார். இதில் பாரம்பரியமான கிறிஸ்துமஸ் பாடல்களான ”ஹீயர் கம்ஸ் சாந்தா கிளாஸ்” மற்றும் “ஹார்க்! தி ஹெரால்டு ஏஞ்சல்ஸ் ஸிங்” உள்பட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த இசைத்தொகுப்பு விற்பனையில் இருந்தான டிலானின் ராயல்டி தொகை முழுவதும் அமெரிக்காவில் ஃபீடிங் அமெரிக்கா, இங்கிலாந்தில் க்ரைஸிஸ், மற்றும் வேர்ல்டு ஃபுட் புரோகிராம் ஆகிய தொண்டு அமைப்புகளுக்கு போய்ச் சேரும்.

வாழ்க்கையும் தொழிலும்

மூலங்கள் மற்றும் இசை தொடக்கங்கள்

ராபர்ட் ஆலன் ஸிமர்மேன் (எபிரேயம் பெயர் ஷப்தாய் ஸிஸெல் பென் அவ்ரஹாம்) மே 24, 1941 இல் துலுத், மினஸோடாவில் செயிண்ட் மேரி மருத்துவமனையில் பிறந்தார். ஹிபிங், மினஸோடாவில் லேக் சுப்பீரியருக்கு மேற்கே மெஸாபி அயர்ன் ரேஞ்ச் பகுதியில் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை வழி தாத்தா ஸிக்மேன் மற்றும் பாட்டி அனா ஸிமர்மேன் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒடிஸா (இப்போது உக்ரைன்) பகுதியில் இருந்து 1905 ஆம் ஆண்டு யூதவிரோதப் படுகொலைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்தனர். இவரது தாய் வழி தாத்தா பாட்டியான பெஞ்சமின் மற்றும் லிபா எடெல்ஸ்டீன், 1902 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வந்த லித்வேனிய யூதர்களாவர். தனது தந்தைவழி பாட்டியின் ஆரம்ப பெயர் கிர்க்ஸ் என்றும் அவரது குடும்பம் இஸ்தான்புல்லில் இருந்து வந்தது என்றும் டிலான் தனது கிரானிக்கள்ஸ்: தொகுதி ஒன்று சுயசரிதையில் எழுதுகிறார்.

டிலான் தாய்தந்தையரான அப்ராம் ஸிமர்மேன் மற்றும் பீட்ரைஸ் “பீட்டி” ஸ்டோன் தம்பதியர், அந்த பகுதியின் யூத சமுதாயத்தின் ஒரு அங்கமாய் இருந்தனர். ராபர்ட் ஸிமர்மேன் ஆறு வயது வரை டுலுத்தில் வாழ்ந்தார். அவரது தந்தைக்கு போலியோ தாக்கியபோது அவர்கள் அவரது தாயாரின் பிறந்தகமான ஹிபிங்கிற்கு திரும்பினர். அங்கு தான் ஸிமர்மேன் தனது இளமைக்காலத்தின் எஞ்சிய காலத்தைக் கழித்தார். தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை வானொலி கேட்பதில் தான் ராபர் ஸிமர்மேன் செலவிட்டார். உயர்நிலைப் பள்ளியில் அவர் பல்வேறு இசைக்குழுக்களை உருவாக்கினார். தி ஷேடோ பிளாஸ்டர்ஸ் குறைந்த காலமே இருந்தது. ஆனால் அவரது அடுத்த முயற்சியான தி கோல்டன் கார்ட்ஸ் நீடித்த காலம் இருந்து பிரபல பாடல்களுக்கு மாற்றுக்குரல் பாடல்கள் இசைத்தது. அவர்களது உயர்நிலைப் பள்ளியில் திறமை கண்டறியும் நிகழ்ச்சியில் இவர்களது அதிர்வு மிக அதிகமாய் இருந்ததை அடுத்து பள்ளி முதல்வர் மைக்கை அணைத்து விட்டார். 1959 ஆம் ஆண்டில் வின்டர் டான்ஸ் பார்ட்டி சுற்றுப்பயணத்தில் படி ஹாலியை இவர் கண்டார். அவருடன் கண்ணுக்கு கண் நோக்கிய நிகழ்வை பின்னர் அவர் நினைவுகூர்ந்தார். 1959 ஆம் ஆண்டில் தனது பள்ளி ஆண்டுப்புத்தகத்தில், ராபர்ட் ஸிமர்மேன் தனது லட்சியமாக “லிட்டில் ரிச்சர்டில் சேருவது” என எழுதி வைத்திருந்தார். அதே வருடத்தில், எல்ஸ்டன் கன் (சிக்) என்கிற பெயரில், பாபி வீ உடன் இரண்டு கச்சேரிகளில் அவர் பங்கேற்றார். பியானோ இசைப்பது மற்றும் கைதட்டல் ஒலிகளை வழங்குவது ஆகியவற்றை இவர் ஆற்றினார்.

ஸிமர்மேன் செப்டம்பர் 1959 இல் மினபோலிஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து மினஸோடா பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்டார். ஆரம்பத்தில் ராக் அண்ட் ரோலில் இருந்த அவரது கவனம் பின்னர் அமெரிக்க நாட்டுப்புற இசை மீது திரும்பியது. 1985 ஆம் ஆண்டில் நாட்டுப்புற இசை தன் மீது செலுத்திய ஈர்ப்பு குறித்து டிலான் கூறினார்: “ராக் அண்ட் ரோல் விஷயத்தில் நிறைய மனதைத் தொடும் சொற்றொடர்கள் இருந்தன; இசைத் துடிப்பு சந்தம் இருந்தது; அதுமட்டுமே போதுமானதன்று என்பது ஒருபுறம்.....பாடல்கள் செறிவானதாய் இருக்கவில்லை அல்லது வாழ்க்கையை ஒரு யதார்த்தமான வழியில் பிரதிபலிப்பதாக இல்லை. நான் நாட்டுப்புற இசையில் இறங்கும்போதே, அது ஒரு தீவிரமான விடயம் என்பதை அறிந்து வைத்திருந்தேன். பாடல்களில் கூடுதலான விரக்தியும், கூடுதலான சோகமும், கூடுதலான வெற்றியும், அமானுட, ஆழ்மன உணர்வுகளின் கூடுதலான நம்பிக்கையும் நிரம்பியிருக்கும்." வளாகத்தில் இருந்து சில கட்டிடங்கள் தள்ளி அமைந்திருந்த காபி விடுதியான 10 ஓ’கிளாக் ஸ்காலரில் அவர் விரைவில் பாடல் பாடத் துவங்கினார். அத்துடன் உள்ளூர் டிங்கிடவுன் நாட்டுப்புற இசை வட்டாரத்தில் இவர் மிகவும் செயலூக்கத்துடன் பங்குபெற்றார்.

தனது டிங்கிடவுன் காலத்தில், ஸிமர்மேன் தன்னை “பாப் டிலான்” என்று அறிமுகப்படுத்திக் கொள்ளத் துவங்கினார். 2004 பேட்டி ஒன்றில் டிலான் விளக்கினார்: “நீங்கள் தவறான பெயர்களுடன் தவறான பெற்றோருடன் பிறக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதாவது, அது இயல்பு தான். உங்களை நீங்கள் எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படி அழைத்துக் கொள்கிறீர்கள். இது சுதந்திரமானவர்களின் பூமி."

1960கள்

நியூயார்க்கில் குடியேறல் மற்றும் இசைத்தட்டு ஒப்பந்தம்

கல்லூரியில் சேர்ந்த முதல்வருட நிறைவிலேயே டிலான் கல்லூரிப் படிப்பை நிறுத்தி விட்டார். 1961 ஜனவரியில் இவர் நியூயார்க் நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விருப்பத்துடன், க்ரேஸ்டோன் பார்க் மனநல மருத்துவமனையில் ஹண்டிங்டன் நோயால் தீவிர பாதிப்புற்று சிகிச்சை பெற்றுவரும் தனது இசை முன்னோடியான வுடி குத்ரியைச் சென்று பார்ப்பதற்கும் இவருக்கு விருப்பமாய் இருந்தது. குத்ரி டிலானுக்கு ஒரு பிரமிப்பூட்டும் கலைஞராய் இருந்தார் என்பதால் அவரது ஆரம்ப இசைகளில் குத்ரியின் மிகப்பெரிய தாக்கம் இருந்தது. குத்ரி தன் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து டிலான் பின்னர் இவ்வாறு எழுதினார்: "அவர் தான் அமெரிக்க ஆன்மாவின் உண்மையான குரல். அவரை பார்த்தபோது குத்ரியின் மாபெரும் சீடனாக நான் மாறப் போவதாய் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்." குத்ரியை மருத்துவமனையில் சந்தித்ததுடன், குத்ரியின் உதவியாளரான ராம்ப்ளின்’ ஜேக் எலியட்டையும் டிலான் நண்பராக்கிக் கொண்டார். குத்ரியின் திறன்களில் பலவும் உண்மையில் எலியட் மூலம் தான் வெளிக் கொண்டுவரப்பட்டது. கிரானிக்கிள்ஸில் (2004) எலியட்டுக்கு டிலான் மரியாதைக்குரிய அஞ்சலி அளித்தார்.

பிப்ரவரி 1961 முதல், கிரீன்விச் வில்லேஜ் பகுதியைச் சுற்றியிருந்த பல்வேறு கிளப்களிலும் டிலான் இசை நிகழ்த்தினார். செப்டம்பர் மாதத்தில் கெர்டெ’யின் ஃபோல்க் சிட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சி குறித்து நியூயார்க் டைம்ஸில் ராபர்ட் ஷெல்டன் பாராட்டி விமர்சனம் எழுதிய போது, அவருக்கு இறுதியில் மக்கள் கவனம் கிட்டியது. அதே மாதத்தில் ஃபோல்க் இசைப் பாடகர் கரோலின் ஹெஸ்டர் தன்பெயரிலேயே கொண்டு வந்த மூன்றாவது இசைத்தொகுப்பில் டிலான் ஹார்மோனிகா இசைத்தார். இது அந்த இசைத்தொகுப்பினைத் தயாரித்த ஜான் ஹமோண்டின் கவனத்திற்கு இவரது திறமைகளைக் கொண்டு வந்தது. ஹேமண்ட் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் இசைத்தட்டு நிறுவனத்திற்கு டிலானை அக்டோபரில் ஒப்பந்தம் செய்தார். தனது முதல் கொலம்பியா இசைத்தொகுப்பான பாப் டிலான் (1962) இசைத்தொகுப்பில், இவரது வழக்கமான நாட்டுப்புற இசை, ப்ளூஸ் மற்றும் ஸ்தோத்திர இசை விஷயங்களும் அவற்றுடன் இரண்டு மூலத் தொகுப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்த இசைத்தொகுப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதலாவது ஆண்டில் வெறும் 5,000 பிரதிகள் மட்டுமே விற்று, லாபநட்டம் இல்லாத ஒரு விற்பனையாய் இருந்தது. கொலம்பியா ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் சிலர் இப்பாடகர் “ஹமோண்டின் முட்டாள்தனம்” என்று குறிப்பிட்டனர். அவருடனான ஒப்பந்தத்தை கைவிடுமாறும் ஆலோசனையளித்தனர். ஹமோண்ட் டிலானை வலிமையாய் ஆதரித்தார். அத்துடன் ஜானி கேஷும் டிலானது சக்திவாய்ந்த கூட்டாளியாய் இருந்தார். கொலம்பியாவுக்காக பணிபுரிந்த சமயத்தில், பிராட்சைட் மேகசின் என்னும் ஒரு நாடோடி இசைப் பத்திரிகை மற்றும் இசைத்தட்டு பெயருக்காக பிளைண்ட் பாய் கிரண்ட் என்கிற புனைப்பெயரின் கீழ் பல்வேறு பாடல்களையும் டிலான் பதிவு செய்தார்.

பாப் டிலான் 
மனித உரிமைகள் “மார்ச் ஆன் வாஷிங்டன்” சமயத்தில் ஜோன் பேயஸ் உடன், 28 ஆகஸ்டு 1963

1962 ஆகஸ்டில் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை டிலான் தொழில்வாழ்க்கையில் செய்தார். தனது பெயரை சட்டப்பூர்வமாய் பாப் டிலான் என்று மாற்றிக் கொண்டு ஆல்பர்ட் கிராஸ்மேன் உடன் ஒரு நிர்வாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1970 வரையில் டிலானின் மேலாளராய் இருந்த கிராஸ்மேன், சில சமயங்களில் மோதல்போக்கு கொண்ட மனிதராகவும், தனது பிரதான வாடிக்கையாளர் விஷயத்தில் யாரையும் அண்டவிடாது எச்சரிக்கையாய் அணுகும் மனோபாவம் உடையவராகவும் வெளிப்பட்டார். அதனையடுத்து கிராஸ்மேன் குறித்து கூறும்போது டிலான் இவ்வாறு கூறினார்: “அவர் ஒரு கர்னல் டாம் பார்க்கர் மாதிரி....அவர் வருகிறார் என்பதை தூரத்தில் வரும்போதே நீங்கள் கண்டு கொண்டு விட முடியும்.” கிராஸ்மேனுக்கும் ஜான் ஹேமண்டுக்கும் இடையிலான உரசல்களால் டிலானின் இரண்டாம் இசைத்தொகுப்பு தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து ஹமோண்ட் மாற்றப்பட்டு இளம் ஆப்பிரிக்க அமெரிக்கரான டாம் வில்சன் அமர்த்தப்பட்டார்.

டிசம்பர் 1962 முதல் ஜனவரி 1963 வரையான காலத்தில், தனது முதல் இங்கிலாந்து பயணத்தை டிலான் மேற்கொண்டார். பிபிசி தொலைக்காட்சிக்கு தான் இயக்கிக் கொண்டிருந்த தி மேட்ஹவுஸ் ஆன் கேஸில் ஸ்ட்ரீட் நாடகத்தில் தோன்ற தொலைக்காட்சி இயக்குநரான பிலிப் சவிலி இவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். நாடகத்தின் நிறைவில், டிலான் ப்ளோயிங்’ இன் தி விண்ட் பாடலைப் பாடினார். இது இப்பாடலின் முதல் பெரிய பொது தோற்றங்களில் ஒன்றாகும். லண்டனில் இருந்த சமயத்தில், லெஸ் கஸின்ஸ், தி பிண்டர் ஆஃப் வேக்ஃபீல்டு, மற்றும் புஞ்சிஸ் உட்பட பல்வேறு லண்டன் நாடோடிப் பாடல் கிளப்களில் டிலான் பாடினார். மார்டின் கார்தி உள்ளிட பல இங்கிலாந்து இசைக்கலைஞர்களிடம் இருந்து புதிய பாடல்களையும் அவர் கற்றுக் கொண்டார்.

டிலானின் இரண்டாவது இசைத்தொகுப்பான தி ஃப்ரீவீலிங்’ பாப் டிலான் மே 1963 வாக்கில் வெளியாகும் சமயத்தில், அவர் தனது பெயரை ஒரு பாடகராகவும் பாடலாசிரியராகவும் பதிவு செய்யத் துவங்கியிருந்தார். இந்த இசைத்தொகுப்பின் பல பாடல்கள் கிளர்ச்சி பாடல்களாய் முத்திரையிடப்பட்டன. குத்ரியை முன்மாதிரியாகக் கொண்டது ஒரு பகுதியும், பிராந்திய பாடல்கள் மீதான பீடே ஸீகெரின் தாகமும் இத்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. உதாரணமாக, “ஆக்ஸ்போர்டு டவுன்” மிசிசிபி பல்கலைக்கழகத்தில் முதல் கறுப்பு மாணவராக பதிவு செய்கையில் ஜேம்ஸ் மெரெடித் எதிர்கொண்ட சோதனைகளை பகடி நடையில் விவரிப்பதாய் இருந்தது.

பாப் டிலான் 
1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாப் டிலான்

அந்த சமயத்தில் அவரது பிரபல பாடலாக இருந்த, ”ப்ளோயிங்’ இன் தி விண்ட்” தனது இனிமையின் ஒரு பகுதியை பாரம்பரிய அடிமைப் பாடலான “நோ மோர் ஆக்‌ஷன் பிளாக்”கில் இருந்து பெற்றிருந்தது. அதே சமயத்தில் அதன் வரிகள் நிலவும் அரசியல் மற்றும் சமூக நிலைமையின் மீது கேள்வி எழுப்பியது. இந்த பாடல் பரவலாய் பதிவானதோடு பீட்டர், பால் மற்றும் மேரிக்கு ஒரு சர்வதேச வெற்றியாக மாறி, இது பல கலைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாய் மாறி அவர்களும் டிலானின் பாடல்கள் மூலம் வெற்றிகள் கொடுத்தனர். "எ ஹார்டு ரெய்ன்’ஸ் எ-கோனா ஃபால்” பாடல் “லார்டு ரண்டால்” என்னும் நாட்டுப்புற பலாடின் மெட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். அணுப் பேரழிவு குறித்த மறைமுகமான குறிப்புகளுடனான இந்த பாடல், இவர் பாடத் துவங்கிய ஒரு சில வாரங்களில் கியூபா ஏவுகணை நெருக்கடி தோன்றியதை அடுத்து இன்னும் சரியான நேரத்திலமைந்ததாய் தோன்றியது. விழிப்பு சிந்தனையை படிம பாடல் வரிகளுடன் சேர்த்து பாரம்பரிய நாட்டுப்புற இசை வடிவத்தில் வழங்கிய வகையில், ”ப்ளோயிங்’ இன் தி விண்ட்”போலவே, ”எ ஹார்டு ரெய்ன்’ஸ் எ-கோனா ஃபால்” பாடலும் நவீன பாடல் உருவாக்கத்தில் ஒரு முக்கியமான புதிய திசையைக் குறிப்பதாய் அமைந்தது.

டிலானின் கருத்துப் பாடல்கள் அவரது ஆரம்ப மரியாதையை உறுதிப்படுத்திய அதே சமயத்தில், ஃப்ரீவீலிங்கில் காதல் பாடல்கள் மற்றும் நகைச்சுவை கலந்த மாயஉலகத்தைப் பேசும் ப்ளூஸ் பாடல்களும் இடம்பிடித்தன. டிலானின் ஆளுமையில் நகைச்சுவை பெரும் பகுதியாக இருந்தது. இசைத்தொகுப்பின் விரிவு எல்லை கேட்டவர்களில் பலரையும் கவர்ந்தது. தி பீட்டில்ஸ் குழுவினரும் இதில் கவரப்பட்டனர். ஜோர்ஜ் ஹாரிஸன் கூறினார்:”பாடல் வரிகளின் உள்ளடக்கமும் அதன் தொனியும் நம்ப முடியாத அளவு அற்புதமானதாகவும் முதன்முறையானதாகவும் இருந்தது." டிலான் பாடலின் கரடுமுரடான தன்மை ஆரம்பத்தில் கேட்கும் சிலருக்கு இனிமையானதாய் இருக்கவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இது கவரத்தக்கதாய் இருந்தது. டிலான் தன் மீதும் தனது கணவர் மீதும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் இவ்வாறு தெரிவித்தார்: “இந்த கரடுமுரடான, இளமையான, பயிற்றுவிக்கப்படாததைப் போல் தோன்றுகிற ஒரு கரகரப்புடன் பாடலை முதன்முதலாய் நாங்கள் கேட்டபோது, எங்களுக்கு அதிர்வளிப்பதாய் கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது.” அவரது மிகப் பிரபல ஆரம்ப பாடல்களில் பலவும் ஜோன் பேஸ் போன்ற மற்ற பாடகர்களின் மென்மை கூட்டப்பட்ட பதிப்புகள் மூலம் மக்களைச் சென்றடைந்தன. ஜோன் பேஸ் டிலானின் வழக்குரைஞர் ஆகவும் அவரது காதலியாகவும் ஆனார். டிலானின் ஆரம்ப பாடல்கள் பலவற்றை பதிவு செய்தது மற்றும் தனது சொந்த கச்சேரிகளின் சமயத்தில் அவரை மேடைக்கு அழைத்தது ஆகியவற்றின் மூலம் டிலானை தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் பெறச் செய்ததில் பேஸ்க்கு பெரும்பங்கு உண்டு.

1960களின் ஆரம்பம் மற்றும் மத்திய காலத்தில் டிலானின் பாடல்களைப் பதிவு செய்து வெற்றிகள் கொடுத்த மற்ற பாடகர்களில் தி பைர்ட்ஸ், சோனி அண்ட் செர், தி ஹாலிஸ், பீட்டர், பால் மற்றும் மேரி, மேன்ஃபிரட் மேன், மற்றும் தி டர்டில்ஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களில் அநேகமானோர் இந்த பாடல்களுக்கு பாப் உணர்வையும் சந்தத்தையும் கொடுக்க முற்பட்டனர். டிலானும் பேஸும் இவற்றை பெரும்பாலும் சிதறிய நாட்டுப்புறப் பாடல் துண்டுகளாகவே வழங்கினர். மாற்றுக்குரல் பதிப்புகள் மிகவும் சர்வவியாபகமாகியது. சிபிஎஸ் “டிலானைப் போல் டிலானை யாரும் பாடுவதில்லை” என்கிற குறிப்புடன் அவருக்கு விளம்பரமளிக்கத் துவங்கியது.

ஃப்ரீவீலிங் அமர்வுகளின் போதான உதவி இசைக்குழுவுடன் பதிவு செய்யப்பட்ட “மிக்ஸ்டு அப் கன்ஃப்யூஷன்” ஒரு தனிப்பாடலாக வெளியிடப் பெற்று பின் விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இசைத்தொகுப்பில் பெரும்பாலும் தனி இசையொலிப் பாடல்களாய் இருந்ததற்கு மாறாய், இந்த தனிப்பாடல் ஒரு ராகபில்லி இசை கொண்டு சோதனை செய்த வகையாய் அமைந்திருந்தது. இதனை கேமரூன் க்ரோவ், “எல்விஸ் பிரெஸ்லி மற்றும் சன் ரெக்கார்ட்ஸ் நோக்கி மனம் அலைபாயும் ஒரு நாட்டுப்புறக் கலைஞரின் ஒரு கண்கவர் தோற்றம்” என்று வர்ணித்தார்.

கிளர்ச்சி மற்றும் அனதர் சைட்

மே 1963 இல், தி எட் சலிவான் நிகழ்ச்சி யில் இருந்து டிலான் வெளியேறியபோது அவரது அரசியல் பெயர் உயர்ந்தது. ஒத்திகை சமயத்தில், டிலான் பாட இருக்கும் “டாகிங்’ ஜான் பிர்ச் பரனாய்டு ப்ளூஸ்” பாடல் ஜான் பிர்ச் சொசைட்டிக்கு அவதூறாகத் தோன்றக் கூடிய சாத்தியம் இருப்பதாக சிபிஎஸ் தொலைக்காட்சியின் “நிகழ்ச்சி நடைமுறைகளின் தலைவர்” டிலானுக்குத் தெரிவித்தார். இந்த தணிக்கைக்கு இணங்கிப் போவதைக் காட்டிலும் நிகழ்ச்சியில் பங்கு பெறாமலிருப்பது உகந்தது என டிலான் பங்குபெற மறுத்து விட்டார்.

இந்த சமயத்திற்குள், டிலான் மற்றும் பேஸ் இருவருமே மனித உரிமை இயக்கத்தில் முக்கியமானவர்களாய் ஆகியிருந்தனர். ஆகஸ்டு 28, 1963 அன்று மார்ச் ஆன் வாஷிங்டனில் இருவரும் இணைந்து பாடினர். டிலானின் மூன்றாவது இசைத்தொகுப்பான தி டைம்ஸ் தே ஆர் எ-சேஞ்சிங்’ இன்னும் கூடுதல் அரசியல்ரீதியான மற்றும் கொந்தளிக்கிற டிலானை பிரதிபலித்தது. பாடல்கள் பெரும்பாலும் சமகால உண்மைச் சம்பவங்களை தங்களின் கருப்பொருளாகக் கொண்டிருந்தன. ”ஒன்லி எ பான் இன் தெயர் கேம்” மனித உரிமைகள் தொழிலாளர் மெட்கர் எவர்ஸின் கொலை குறித்துப் பேசியது; “தி லோன்ஸம் டெத் ஆஃப் ஹேட்டி கரோல்” வில்லியம் ஸாண்ட்ஸிங்கர் என்னும் இளம் வெள்ளை பொதுவுடைமைவாதியிடம் சிக்கி உயிரிழந்த விடுதியின் மது அருந்தக ஊழியரான ஹேட்டி கரோலின் மரணத்தைப் பேசியது. பொதுவான கருப்பொருள் விடயமாக, ”பலாட் ஆஃப் ஹோலிஸ் பிரவுன்” மற்றும் “நார்த் கண்ட்ரி ப்ளூஸ்” விவசாய மற்றும் சுரங்கத் தொழிலாளர் சமுதாயங்களின் சீர்குலைவால் சூழப்பட்ட விரக்தி குறித்துப் பேசியது. இந்த அரசியல் விடயங்களோடு “பூட்ஸ் ஆஃப் ஸ்பேனிஷ் லெதர்” மற்றும் “ஒன் டூ மெனி மார்னிங்ஸ்”ஆகிய இரண்டு சொந்த காதல் பாடல்களும் வந்தன.

1963 இறுதிக்குள்ளாக, நாட்டுப்புற இசை மற்றும் கிளர்ச்சி இயக்கங்களால் தான் கையாளப்படுவதாயும் கட்டுப்படுத்தப்படுவதாய் டிலான் உணர்ந்தார். ஜான் எப். கென்னடி படுகொலையானதற்குப் பிறகு கொஞ்ச காலத்தில் தேசிய அவசரநிலை மனித உரிமைகள் குழு வழங்கிய “டோம் பெயின் விருதினை” பெற்றுக் கொண்டு இவர் பேசியபோது, இந்த பதட்டங்கள் வெளிப்பட்டன. கோபமுற்றிருந்த டிலான் குழுவின் பாத்திரத்தை வெளிப்படையாய் விமர்சித்தார். உறுப்பினர்கள் எல்லாம் பெருசுகளாகி விட்டதாக கூறிய அவர் கென்னடியைக் கொன்றதாக கூறப்படும் லீ ஹார்வி ஓஸ்வால்டில் தன்னில் (ஒவ்வொரு மனிதனிலும்) கொஞ்சத்தை காண்பதாகக் கூறினார்.

பாப் டிலான் 
பாபி டிலான், கல்லூரி ஆண்டுப் புத்தகம் பட்டியலிடுவதன் படி: செயிண்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம், அப்ஸ்டேட் நியூயார்க், நவம்பர் 1963

1964 ஜூன் மாலையில் ஒரு தனிப்பாடலாக பதிவு செய்யப்பட்ட “அனதர் சைட் ஆஃப் பாப் டிலான் ” தனது முன்னோடிகளை விட சற்று உற்சாக மனோநிலையில் செய்யப்பட்டதாய் இருந்தது. “ஐ ஷேல் பீ ஃப்ரீ#10” மற்றும் “மோட்டார்சைக்கோ நைட்மேர்” ஆகிய பாடல்களில் கற்பனையுலக நகைச்சுவை மிகுந்த டிலான் மறுஎழுச்சி கண்டார். “ஸ்பேனிஷ் ஹார்லெம் இன்சிடண்ட்” மற்றும் “டூ ரமோனா” ஆகியவை உணர்ச்சி மிகுந்த காதல் பாடல்களாய் அமைந்தன. “பிளாக் க்ரோ ப்ளூஸ்” மற்றும் “ஐ டோண்ட் பிலீவ் யூ (ஷீ ஆக்ட்ஸ் லைக் வீ நெவர் ஹேவ் மெட்)”ஆகியவை ராக் அண்ட் ரோல் விரைவில் டிலானின் இசையில் ஆதிக்கம் செலுத்தலாம் எனக் கட்டியம் கூறின. ”இட் எய்ன்’ட் மீ பேபி” மேலே பார்க்க புறக்கணிக்கப்பட்ட காதல் குறித்த பாடலாய் தோன்றினாலும், இது தனது பிரபலம் தன்மீது திணிக்கும் பொறுப்பை நிராகரிக்கும் உணர்வாக கூறப்படுகிறது. அவரது புதிய திசை இரண்டு நீளமான பாடல்களால் அடையாளப்படுத்தப்பட்டது. முதலாவது பாடல் படிமவாதமுற்ற “சைம்ஸ் ஆஃப் ஃப்ரீடம்”. இது அடர்த்தியான உருவக இயற்கையழகின் பின்னணியில் சமூக கருத்துகளை கூறுவதாய் அமைந்திருந்தது. பின்னாளில் “மாறும் பிம்பங்களின் சங்கிலிகள்” என்று ஆலன் கின்ஸ்பெர்க் வர்ணித்ததான ஒரு நடையில் இருந்தது - மற்றும் “மை பேக் பேஜஸ்” இவரது சொந்த முந்தைய பாடல்களின் எளிமையையும் கடுமையான தீவிர மனோநிலையையும் விமர்சிப்பதாக இருந்தது.

1964 மற்றும் 1965களின் பின் பாதியில், நாட்டுப்புற இசையில் சமகால பாடலாசிரியர்களில் முன்னணியில் இருந்தவர் என்பதில் இருந்து நாட்டுப்புற-ராக் பாப்-இசை நட்சத்திரமாய் டிலான் மாறியிருந்ததை அடுத்து, அவரது தோற்றமும் இசை பாணியும் துரிதமாய் .மாறி விட்டன. அவரது கரடுமுரடான ஜீன்ஸ் மற்றும் முரட்டு சட்டைகள் மாறி கர்னபி ஸ்ட்ரீட் ஆடைகள், சன்கிளாஸ்கள் பகல் அல்லது இரவாயினும், மற்றும் பாயிண்ட்லி “பீடில் பூட்ஸ்” வந்தன. தன்னை பேட்டி காண்பவர்களுடன் கற்பனையான விதத்தில் டிலான் மல்லுக்கட்டில் இறங்குவதும் அதிகரித்தது. லெஸ் கிரேன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் தோன்றுகின்ற சமயத்தில், இவர் உருவாக்க இருக்கும் ஒரு படம் குறித்து கேட்ட போது, அது ஒரு கௌபாய் திகில் திரைப்படம் என கிரேனிடம் டிலான் கூறினார். கௌபாயாக அவர் நடிக்கிறாரா எனக் கேட்டபோது, டிலான் கூறினார்: “இல்லை, நான் என் அம்மாவாக நடிக்கிறேன்."

மின்சார இசை

1965 மார்ச்சில் வெளிவந்த டிலானின் பிரிங்கிங் இட் ஆல் பேக் ஹோம் இசைத்தொகுப்பில் மின் சாதனங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட அவரது முதல் பதிவுகள் இருந்தன. முதலாவது தனிப்பாடலான “சப்டெரனியன் ஹோம்ஸிக் ப்ளூஸ்” சக் பெரியின் “டூ மச் மங்கி பிசினஸ்”க்கு நன்றிக்கடன்பட்டிருந்தது. டிலானின் 1965 இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்த டி.ஏ.பெனிபேகரின் சினிமா வெரிடெவின் (cinéma vérité) ஆரம்ப இசை நன்றிக் காணொளியான டோண்ட் லுக் பேக் உடன் வழங்கப்பட்டது. அதன் சுதந்திர தொடர்பு பாடல்வரிகள் பீட் கவிதையின் வெறித்தனமான சக்திக்கு திரும்பியிருந்ததோடு ராப் மற்றும் ஹிப்-ஹாப்புக்கு முன்னோடியாகவும் அமைந்தது.

இதற்கு மாறாக, இசைத்தொகுப்பின் பி பக்கத்தில் நான்கு நீளமான பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதில் டிலான் இசையொலியுடனான கிதார் மற்றும் ஹார்மோனிகாவுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். “மிஸ்டர் டம்போர்னி மேன்” டிலானின் மிக அறியப்பட்ட பாடல்களில் ஒன்றாய் விரைவில் ஆனது. அத்துடன் அப்பாடல் அமெரிக்கா இங்கிலாந்து இருநாட்டின் பாடல்வரிசைகளிலும் முதலிடத்தை எட்டிப் பிடித்தது. “இட்ஸ் ஆல் ஓவர் நவ் பேபி ப்ளூ” மற்றும் “இட்ஸ் ஆல்ரைட் மா (ஐ’ம் ஒன்லி ப்ளீடிங்)”ஆகியவை டிலானின் மிக முக்கிய தொகுப்புகளில் இரண்டாய் பாராட்டப் பெற்றன.

1965 ஆம் ஆண்டு கோடையில், நியூபோர்ட் நாட்டுப்புற இசை விழா தலைமை நிகழ்ச்சியாக, டிலான் தனது உயர்நிலைப் பள்ளி நாட்களுக்குப் பிந்தைய முதல் மின் சாதனக் கச்சேரியை நிகழ்த்தினார். தெரிவு செய்த குழுவில் பெரும்பாலும் பால் பட்டர்பீல்டு ப்ளூஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். மைக் ப்ளூம்ஃபீல்டு, சாம் லே, மற்றும் ஜெரோம் அர்னால்டு, இவர்களுடன் அல் கூபர் மற்றும் பேரி கோல்ட்பெர்க் ஆகியோர் இந்த குழுவில் இருந்தனர். நியூபோர்ட்டில் டிலான் 1963 மற்றும் 1964களில் தோன்றியிருந்தார். ஆனால் 1965 ஆம் ஆண்டில் உற்சாக முழக்கமும் கேலி சைகைகளும் கலவையாய் கிட்டியதை அடுத்து, மூன்று பாடல்கள் மட்டும் முடித்து விட்டு மேடையை விட்டு அகன்று விட்டார். இந்த முதுபெரும் கலைஞரே கூறியிருந்ததன் படி, டிலான் மின்சார கிதார் உடன் தோன்றியதை சற்றும் எதிர்பாராத அவரது நாடோடிப் பாடல் ரசிகர்கள் கோபமுற்று கேலி செய்தனர் என்று கூறப்படுகிறது. ஒலியின் தரம் மிகவும் மோசமாய் இருந்தது மற்றும் மேடையமைப்பு ஆச்சரியமூட்டும் அளவுக்கு சிறியதாய் இருந்ததில் ரசிகர்கள் கோபமுற்று இவ்வாறு செய்தனர் என்பதான இன்னொரு கூற்றும் உண்டு.

டிலானின் 1965 நியூபோர்ட் நிகழ்ச்சி நாட்டுப்புற இசை ஸ்தாபனங்களிடையே கோபமான எதிர்வினையைத் தூண்டியது. சிங் அவுட்! டில் இவான் மக்கோல் எழுதினார்: “நமது பாரம்பரிய பாடல்களும் பலாட்களும் அற்புதமான திறமை படைத்த கலைஞர்கள் காலம்காலமாய் உருவாக்கப்பட்டிருந்த பாரம்பரியங்களுக்குள் வேலை செய்து உருவாக்குபவை..... ஆனால் பாபி டிலான்? ஒரு சராசரி திறமை கொண்ட இளைஞர் தான். மேம்போக்கான பாப் இசையில் வளர்க்கப்பட்ட திறனாய்வற்ற ரசிகர்கள் மட்டும் தான் இத்தகைய பத்தாம்-தர அர்த்தமற்ற பாடலுக்கு மயங்க முடியும்.” நியூபோர்ட்டின் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி முடிந்த நான்கே நாட்களின் பின், ஜூலை 20 அன்று, நியூயார்க் இசைப் பதிவகத்தில் “பாஸிடிவ்லி 4த் ஸ்ட்ரீட்” பாடல்பதிவுக்கு டிலான் திரும்பினார். இந்த பாடல்வரிகள் பழிவாங்கல் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வின் பிம்பங்களை கொண்டிருந்தது, நாட்டுப்புற இசை சமுதாயத்தில் தனது முந்தைய நண்பர்கள், அதாவது வெஸ்ட் 4வது தெருப் பக்கமான கிளப்களில் அவர் அறிந்திருந்த முன்னாள் நண்பர்கள் குறித்த அவரது கருத்தாக பரவலாய் பொருள்கொள்ளப்பட்டது.

ஹைவே 61 ரீவிசிட்டட் மற்றும் பிளாண்டெ ஆன் பிளாண்டெ

ஜூலை 1965 இல், டிலான் “லைக் எ ரோலிங் ஸ்டோன்” தனிப்பாடலை வெளியிட்டார். இது அமெரிக்க பாடல் வரிசையில் இரண்டாம் இடத்தையும் இங்கிலாந்து பாடல் வரிசையில் நான்காம் இடத்தையும் பெற்றது. ஆறு நிமிடங்களுக்கு அதிகமானதொரு நீளத்தில் அமைந்த இப்பாடல், ஒரு பாப் பாடல் வழங்கக் கூடிய மாறும் மனோநிலைகள் கொண்டிருந்ததாய் போற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், “அனைத்து காலத்திற்குமான RS 500 மாபெரும் பாடல்கள்” வரிசையில் ரோலிங் ஸ்டோன் இதழ் இப்பாடலுக்கு முதலிடம் அளித்தது. இந்த பாடல் டிலானின் அடுத்த இசைத்தொகுப்பான ஹைவே 61 ரீவிசிட்டட் இசைத்தொகுப்பில் துவக்கமாய் அமைந்தது. மினஸோடாவில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் இசைத் தளத்திற்கு டிலானைக் கொண்டு வந்த பாதையை கூறும் வகையில் இந்த பெயரினை இசைத்தொகுப்பு பெற்றது.

இந்த இசைத்தட்டிற்கு ஆதரவாய், டிலான் இரண்டு அமெரிக்க கச்சேரிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு இசைக்குழுவை ஒருங்கிணைப்பதில் இறங்கினார். மைக் ப்ளூம்ஃபீல்டு பட்டர்ஃபீல்டு குழுவை விட்டு விலகி வர விரும்பவில்லை. எனவே டிலான் தனது இசைமனை பணியாளர்களில் இருந்து அல் கூபர் மற்றும் ஹார்வி ப்ரூக்ஸ் ஆகியோரை எடுத்து அந்த சமயத்தில் ரோனி ஹாகினின் பின்புலக் குழுவான தி ஹாக்ஸ் குழுவின் ஒரு பகுதியாக அதிகமாய் அறியப்பட்ட மது அருந்தக-இசைக்குழு பிரபலங்களான ராபி ராபர்ட்சன் மற்றும் லெவன் ஹெல்ம் உடன் கலந்தார். ஆகஸ்டு 28 அன்று ஃபாரஸ்ட் ஹில்ஸ் டென்னிஸ் ஸ்டேடியத்தில், அப்போதும் டிலானின் மின்சார ஒலியால் எரிச்சலுற்றிருந்த ரசிகர்கள் இக்குழுவை வெறுப்பேற்றினர். ஹாலிவுட் பவுலில் செப்டம்பர் 3 அன்று நடந்த நிகழ்ச்சியில் இக்குழுவுக்கான வரவேற்பு கூடுதல் சாதகமானதாய் அமைந்தது.

டிலான் மற்றும் ஹாக்ஸ் சுற்றுப்பயணத்தில் கூடுதல் சாதகமான ரசிகர்களை சந்தித்தனர் என்றாலும், அவர்களது இசைமனை முயற்சிகள் தடுமாறின. தயாரிப்பாளர் பாப் ஜான்சன் 1966 பெப்ரவரியில் நாஷ்விலே இசைப்பதிவிற்கு டிலானை ஊக்குவித்தார். அத்துடன் அவரைச் சுற்றி மிகத் திறம்படைத்த கலைஞர்களை அமர்த்தினார். டிலானின் வற்புறுத்தலில், இந்த அமர்வுகளில் கலந்து கொள்ள ராபர்ட்சன் மற்றும் கூபர் நியூயார்க் நகரத்தில் இருந்து வந்து பங்கேற்றனர். நாஷ்விலே அமர்வுகள் இரட்டை இசைத்தொகுப்பான பிளாண்டெ ஆன் பிளாண்டெ யை (1966) உருவாக்கின.” “இரண்டு கலாச்சாரங்களை எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு பெரும் வெடிப்பு கொண்டு இணைப்பது” என்று அல் கூபர் இந்த இசைத்தொகுப்பை விவரிக்கையில் கூறினார்.

1965 நவம்பர் 22 அன்று, முன்னாள் மாடலான 25 வயது சாரா லவுண்ட்ஸை டிலான் ரகசிய திருமணம் செய்தார். டிலானின் நண்பர்கள் (ரம்ப்ளிங்’ ஜேக் எலியட் உட்பட) சிலர் கூறுகையில், இந்த சம்பவம் முடிந்த உடன் தாங்கள் பேசிய சமயத்தில் கூட தனக்கு திருமணமானதை டிலான் மறுத்து விட்டிருந்ததாக கூறினர். செய்தியாளர் நோரா எஃப்ரான் தான் நியூயார்க் போஸ்டில் 1966 பெப்ரவரியில் “உஷ்! பாப் டிலானுக்கு திருமணமாகி விட்டது” என்ற தலைப்புடன் வந்த செய்தி ஒன்றில் இந்த செய்தியை முதன்முதலாய் ஊரறியச் செய்தார்.

டிலான் 1966 இளவேனில் காலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவுக்கு ஒரு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் பாதியில் டிலான் தனிநபராய் இசையொலி கிதார் மற்றும் ஹார்மோனிகா உடன் இசைநிகழ்த்தினார். இரண்டாவது பாதியில், ஹாக்ஸ் பின்புலத்துடன், உயர்ந்த அதிர்வுகளுடனான மின்சார இசையை நிகழ்த்தினார். இந்த பேதம் பல ரசிகர்களை கோபமூட்டியது. அவர்கள் கேலி செய்ததோடு கைதட்டலையும் குறைத்தனர். இந்த சுற்றுப்பயணம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஃப்ரீ டிரேட் ஹாலில் நடந்த பிரபலமான டிலான்-ரசிகர்கள் மோதலுடன் முடிந்தது. (இந்த கச்சேரியின் இசைப்பதிவு, பாப் டிலான் லைவ் 1966 , இறுதியாய் 1998 இல் வெளியானது.) அந்த மாலையின் இறுதிக் கட்டத்தில், டிலானின் மின்சார இசையில் கோபமுற்றிருந்த ரசிகர்களில் ஒருவரான ஜான் கார்டுவெல் கத்தினார்: “யூதாஸ்!” இதற்கு டிலான் பதிலடி கொடுத்தார், ”நான் உன்னை நம்பவில்லை.... நீ ஒரு பொய்யன்!”. தனது குழுவினரை நோக்கி திரும்பிய டிலான் “இன்னும் சத்தமாய் இசையுங்கள்!” என்று கூற, அந்த இரவின் ”லைக் எ ரோலிங் ஸ்டோன்” இறுதிப்பாடலை உச்சஸ்தாயியில் அவர்கள் இசைத்தனர்.

மோட்டார்சைக்கிள் விபத்து மற்றும் ஏகாந்தம்

ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, டிலான் நியூயார்க் திரும்பினார். ஆனாலும் அவர் மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்தது. ஏபிசி தொலைக்காட்சி தாங்கள் ஒளிபரப்புவதற்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு முன்தொகை வழங்கியிருந்தது. இவரது புத்தக வெளியீட்டாளரான மெக்மில்லன் நிறுவனம், தரந்துலா கவிதை/நாவலின் எழுத்துப் பிரதியை முடிக்க கேட்டுக் கொண்டிருந்தது. மேலாளர் ஆல்பர்ட் கிராஸ்மேன் அந்த கோடைக்கும் இலையுதிர் காலத்திற்குமான விரிவான சுற்றுப்பயண அட்டவணையை ஏற்கனவே தயார்படுத்தியிருந்தார்.

ஜூலை 29, 1966 அன்று, டிலான் நியூயார்க், வுட்ஸ்டாக்கில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு ரோட்டில் தனது 500 சிசி ட்ரையம்ப் டைகர் 100 மோட்டார்சைக்கிள் கொண்டு மோதி தரையில் விழுந்து விட்டார். காயங்களின் அளவு குறித்து முழுதுமாய் வெளியாகவில்லை என்றாலும், கழுத்துப் பகுதியில் பல எலும்புகள் நொறுங்கி விட்டதாக டிலான் தெரிவித்தார். இந்த சம்பவத்தை சுற்றிய மர்மம் இன்னும் இருக்கிறது, ஏனெனில் சம்பவ இடத்திற்கு எந்த ஆம்புலன்சும் அழைக்கப்படவில்லை என்பதோடு டிலான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. விபத்து ஏற்படும் வரை தனது தொழில்வாழ்க்கையும் சொந்த வாழ்க்கையும் எங்கே போய்க் கொண்டிருந்தது என்பது தனக்கு கவலை அளித்ததாக டிலான் பின்னர் தெரிவித்தார்: “அந்த மோட்டார்சைக்கிள் விபத்து நிகழ்ந்து.... உணர்வு வந்து நான் எழுந்து பார்த்தபோது, இந்த பூரான்களுக்கு தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு உறைத்தது. அதனை நான் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை. அதோடு, நான் பார்த்து கொள்ள வேண்டிய ஒரு குடும்பம் இருந்தது, குழந்தைகள் இருந்தார்கள்.” இந்த விபத்து தன்னைச் சுற்றி எழுந்திருந்த அழுத்தத்தில் இருந்து டிலான் தப்பிப்பதற்கு அவருக்கு அவசியமான வாய்ப்பை வழங்கியிருந்தது என்று பல வாழ்க்கைக்குறிப்பு ஆசிரியர்களும் நம்புகின்றனர். இந்த விபத்தினையடுத்து, பொதுமக்கள் வெளிச்சத்தில் இருந்து டிலான் ஒதுங்கிக் கொண்டார். ஒரு சில தேர்ந்தெடுத்த தோற்றங்கள் தவிர எட்டு ஆண்டுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் எதனையும் மேற்கொள்ளவில்லை.

இசைப் படைப்புகளைத் தொடரும் அளவுக்கு டிலான் உடல்நலம் தேறியதும், டோண்ட் லுக் பேக் கிற்கான அபூர்வமாக வெளிச்சம் பெற்ற ஒரு தொடர்ச்சியான ஈட் தி டாகுமெண்ட் இசைத்தொகுப்பிற்கான 1966 சுற்றுப்பயணத்தின் படத் துண்டுகளை தொகுக்கத் துவங்கினார். தோராயமான ஒரு தொகுப்பு ஏபிசி டெலிவிஷனுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்ட போது, பிரதான பார்வையாளர்களுக்கு இது புரியாது என்று சொல்லி அது உடனே நிராகரிக்கப்பட்டு விட்டது. 1967 ஆம் ஆண்டில் ஹாக்ஸ் குழுவினருடன் தனது வீட்டிலும் மற்றும் “ப்க் பிங்க்” என்று அழைக்கப்படுகிற ஹாக்ஸின் அருகிலிருக்கும் வீட்டிலும் இசைப் பதிவு செய்யத் துவங்கினார். ஆரம்பத்தில் மற்ற கலைஞர்களுக்கு பதிவுக்கான விளக்கங்கள் போல் தொகுக்கப்பட்டிருந்த இந்த பாடல்கள் ஜூலி டிரிஸ்கோல் (”திஸ் வீல்’ஸ் ஆன் ஃபயர்”), தி பைர்ட்ஸ் (”யூ எய்ன்’ட் கோயிங்’ நோவேர்”, “நத்திங் வாஸ் டெலிவர்டு”), மற்றும் மன்ஃபிரட் மேன் க்வின் தி எஸ்கிமோ (”தி மைட்டி க்வின்”) ஆகியோருக்கு வெற்றி தரும் தனிப்பாடல்களை வழங்கின. இவற்றிலிருந்தான தெரிவுகளை 1975 ஆம் ஆண்டில் தி பேஸ்மெண்ட் டேப்ஸ் என்கிற பெயரில் கொலம்பியா தாமதமாய் வெளியிட்டது. காலப் போக்கில், டிலான் மற்றும் அவரது குழுவினர் 1967களில் பதிவு செய்த பாடல்களில் இன்னும் பலவும் பல்வேறு உதிரிப் பதிவுகளில் தோன்றின. இதன் உச்சமாக 107 பாடல்கள் மற்றும் மாற்று வகைகள் அடங்கிய தி ஜெனூன் பேஸ்மெண்ட் டேப்ஸ் என்கிற ஐந்து குறுந்தகடுகள் கொண்ட உதிரித் தொகுப்பு ஒன்று வெளியானது. வருகின்ற மாதங்களில், ஹாக்ஸ் குழுவினர் தாங்கள் வுட்ஸ்டாக்கின் தரைத்தளத்தில் தாங்கள் முதன்முதலில் பணியாற்றிய பாடல்களைக் கொண்டு மியூசிக் ஃப்ரம் பிக் பிங்க் என்கிறதொரு இசைத்தொகுப்பை பதிவு செய்தனர். அத்துடன் தங்களையும் தி பாண்ட் என்பதாய் பெயர் மாற்றிக் கொண்டனர். இதன்மூலம் அவர்களுக்கு ஒரு தனியான நீண்ட மற்றும் வெற்றிகரமான இசைப்பதிவு மற்றும் நிகழ்ச்சி நடத்தும் வாழ்க்கை கிட்டியது.

அக்டோபர் மற்றும் 1967 நவம்பரில், டிலான் நாஷ்விலிக்குத் திரும்பினார். 19 மாத இடைவெளிக்குப் பிறகு இசைப்பதிவு மனைக்குத் திரும்பிய அவருக்கு, பாஸில் சார்லி மெக்காய், டிரம்ஸில் கென்னி பட்ரி, ஸ்டீல் கிதாரில் பீடெ ட்ரேக் ஆகியோர் மட்டுமே உடனிருந்தனர். இதன் விளைவாய் சுருக்கமான பாடல்களின் ஜான் வெஸ்லி ஹார்டிங் என்னும் இசைப்பதிவு வந்தது. சிதறலான அமைப்பு மற்றும் கருவியிசையும், அதனுடன் சேர்த்து ஜூடியோ-கிறிஸ்தவ பாரம்பரியத்தை தீவிரமாய் எடுத்துக் கொண்ட பாடல்வரிகளும் சேர்ந்து, டிலானின் சொந்த படைப்பில் இருந்து மட்டுமல்லாது 1960களின் இசைக் கலாச்சாரத்தின் மொத்த மனோபாவத்திலுமே இருந்தான ஒரு விலகலை அடையாளப்படுத்தியது. இஸையா புத்தகத்தில் (21:5–9) இருந்து தருவிக்கப்பட்ட பாடல்வரிகளுடனான “ஆல் அலாங் தி வாட்ச் டவர்” இதில் அடங்கியிருந்தது. இந்த பாடல் பின்னர் ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த பதிப்பை டிலானே பின்னாளில் வரையறையுற்றதாக ஒப்புதலளித்தார். வுடி குத்ரி அக்டோபர் 3, 1967 அன்று மரணமடைந்தார். இருபது மாத காலத்தில் தனது முதல் நேரலை நிகழ்ச்சியாக கார்னெகி ஹாலில் ஜனவரி 20, 1968 அன்று நடந்த குத்ரி நினைவு கச்சேரியில் டிலான் தோன்றினார்.

டிலானின் அடுத்த வெளியீடான நாஷ்விலி ஸ்கைலைன் (1969) ஏறக்குறைய ஒரு பிரதான வகை கிராமிய இசை இசைத்தட்டாக இருந்தது. நாஷ்வில்லி இசைக்கலைஞர்கள் ஆதரவுடனான வாத்திய இசை, உண்மையில் மிட்நைட் கவ்பாய் இசைத்தடத்திற்காக எழுதப்பட்டு ஆனால் இறுதித் தொகுப்பின் சமயத்தில் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாது போனதால் தவற விட்டிருந்த வெற்றிபெற்ற தனிப்பாடலான ”லே லேடி லே”ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன. 1969 மே மாதத்தில், ஜானி கேஷின் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல் அத்தியாயத்தில் டிலான் தோன்றினார். “கேர்ள் ஃப்ரம் தி நார்த் கண்ட்ரி”, “ஐ த்ரூ இட் ஆல் அவே” மற்றும் “லிவிங் தி ப்ளூஸ்” ஆகிய பாடல்களில் கேஷ் உடன் அவர் ஜோடி சேர்ந்து பாடினார். வுட்ஸ்டாக் விழாவில் கலந்து கொள்ள ஏற்பட்ட அழுத்தத்தை நிராகரித்த டிலான், ஐ(ஸி)ல் ஆஃப் வைட் ராக் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்டு 31, 1969 அன்று இங்கிலாந்துக்கு பயணம் செய்தார்.

1970கள்

1970களின் ஆரம்பத்தில், டிலானின் படைப்புகள் எல்லாம் மாறுபட்ட மற்றும் கணிக்க முடியாத தரத்தைக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் புகார் கூறினர். ரோலிங் ஸ்டோன் இதழுக்கு எழுதுபவரும் டிலான் விசுவாசியுமான கிரெய்ல் மார்கஸ் ”இது என்ன அசிங்கம்” என்று பயங்கரமாய் வினவினார். 1970 ஆம் ஆண்டின் ஸெல்ஃப் போர்ட்ரெயிட் கேட்டு விட்டு தான் அவர் இத்தகைய கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார். சில மூலப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பான ஸெல்ஃப் போர்ட்ரெயிட் பொதுவாக பரிதாபமான வரவேற்பையே பெற்றது. அதே வருடத்தின் பின்பகுதியில், டிலான் நியூ மார்னிங் வெளியிட்டார். இதனை இவர் மீண்டும் தன்னுடைய தனித்திறனுக்கு திரும்பியதன் அடையாளம் என சிலர் குறிப்பிட்டனர். நவம்பர் 1968 இல், டிலான் “ஐ’ட் ஹேவ் யூ எனிடைம்” இல் ஜோர்ஜ் ஹாரிஸன் உடன் இணைந்து எழுதியிருந்தார். ஹாரிஸனின் 1971 கன்சர்ட் ஃபார் பங்களாதேஷ் கச்சேரியில் டிலான் திடீரென்று தோன்றியது நிறைய ஊடக கவனத்தை ஈர்த்தது.

1971 மார்ச் 16 மற்றும் 19 தேதிகளுக்கு இடையே, நியூயார்க்கின் கிரீன்விச் வில்லேஜ் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய இசைமனையான “ப்ளூ ராக் ஸ்டுடியோஸில் டிலான் மூன்று நாட்கள் முன்பதிவு செய்தார். இந்த அமர்வுகளில் “வாட்சிங் தி ரிவர் ஃப்ளோ” என்னும் ஒரு தனிப்பாடலும் “வென் ஐ பெயிண்ட் மை மாஸ்டர்பீஸ்” பாடலின் ஒரு புதிய பதிவும் பிறந்தன. நவம்பர் 4, 1971 அன்று, டிலான் ”ஜார்ஜ் ஜேக்சன்” பாடலை பதிவு செய்தார். இதனை அவர் ஒரு வாரம் கழித்து வெளியிட்டார். அந்த கோடையில் சான் க்வெண்டின் சிறைச்சாலையில் கறுஞ் சிறுத்தை ஜார்ஜ் ஜேக்சன் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கும் இந்த தனிப்பாடல் கிளர்ச்சி பாடல் வகைக்கு டிலான் திரும்பியதன் அடையாளமாக பலர் கருதினர்.

1972 ஆம் ஆண்டில், சாம் பெக்கின்பாவின் பாட் கரெட் அண்ட் பில்லி தி கிட் படத்திற்காக டிலான் ஒப்பந்தமானார். படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையும் வழங்கிய டிலான், “அலியஸ்” என்கிற பாத்திரத்திலும் நடித்தார். பில்லியின் கும்பலில் வரலாற்று அடிப்படை கொண்ட ஒரு உறுப்பினராக இந்த பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த படம் வசூல்ரீதியாய் வெற்றி பெறாது போனாலும், “நாக்கிங்’ ஆன் ஹெவன்’ஸ் டோர்” பாடல் டிலானின் திறனை நிரூபணம் செய்தது.

சுற்றுப்பயணத்திற்குத் திரும்புதல்

பாப் டிலான் 
பாப் டிலான் மற்றும் தி பாண்ட் குழு சிகாகோவில் பயணம் செய்கிறது, 1974

கொலம்பியா ரெக்கார்ட்ஸ் உடனான ஒப்பந்தம் முடிந்ததும் டேவிட் கெஃபெனின் அசைலம் ரெக்கார்ட்ஸ் என்னும் ஒரு புதிய இசைத்தட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டு 1973 ஆம் ஆண்டை டிலான் துவக்கினார். பிளானட் வேவ்ஸ் என்னும் தனது அடுத்த இசைத்தொகுப்பில், தி பேண்ட் குழுவை பின்புல ஆதரவுக் குழுவாய் பயன்படுத்தினார். ஒரு பெரும் சுற்றுப்பயணத்திற்கான ஒத்திகையும் பார்த்துக் கொண்டிருந்தார். இவரது பாடல்களில் மிகவும் பிரபலமுற்றவற்றில் ஒன்றாக மாறிய “ஃபாரெவர் யங்” பாடலின் இரண்டு பதிப்புகள் இந்த இசைத்தொகுப்பில் இருந்தன. கிறிஸ்டோபர் ரிக்ஸ் இந்த பாடலின் குழுக்குரலை ஜான் கீத்ஸின் “ஓடே ஆன் எ க்ரெஸியன் அர்ன்” உடன் தொடர்புபடுத்தினார். இதில் “ஃபார் எவர் பேண்டிங், அண்ட் ஃபார் எவர் யங்” என்னும் வரி இடம்பெற்றிருக்கும். டிலானே கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்: “எனது பையன்களில் ஒருவனை நினைத்துக் கொண்டு அதேசமயம் அதிகம் உணர்ச்சிவசப்பட விரும்பாத நிலையில் இதனை எழுதினேன்.” இந்த பாடல் தன்னைக் குறித்தது என்று ஜேகப் டிலான் நம்பியதாக வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹோவார்டு ஸௌனெஸ் குறிப்பிடுகிறார்.

அதேசமயத்தில் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் டிலான் என்னும் இசைமனைப் பதிப்புகளின் (ஏறக்குறைய மாற்றுக்குரல் பாடல்கள் மட்டும் தான்) ஒரு ஏடாகூடமான தொகுப்பை வெளியிட்டது. டிலான் போட்டி இசைத்தட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டதற்கு செய்யப்பட்ட ஒரு அற்பமான மறுமொழியாகத் தான் இது பரவலாய் கருதப்பட்டது. 1974 ஜனவரி மாதத்தில் டிலான் மற்றும் தி பாண்ட் குழுவினர் ஒரு உயர்வகை வட அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இறங்கினர். சுற்றுப்பயணத்தின் நேரலை பிரதி இசைத்தொகுப்பான, பிஃபோர் தி பிளட் , அசைலம் ரெக்கார்ட்ஸில் இருந்து வெளியிடப்பட்டது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு, டிலானும் அவரது மனைவியும் வெளிப்படையாக விலகத் துவங்கினர். உறவுகள் மற்றும் விரிசல்கள் குறித்த பாடல்களுடனான ஒரு சிறிய சிவப்பு குறிப்பேடு ஒன்றை நிரப்பி, பிளட் ஆன் தி டிராக்ஸ் என்ற தலைப்பிலான ஒரு புதிய இசைத்தொகுப்பை 1974 செப்டம்பரில் துரிதமாய் பதிவு செய்தார். ஆயினும் இசைத்தொகுப்பு வெளியீட்டை டிலான் தாமதித்தார். அத்துடன் தனது சகோதரர் டேவிட் ஸிமர்மேனின் தயாரிப்பு உதவியுடன் மினபோலிஸில் இருக்கும் சவுண்ட் 80௦ இசைமனையில் பாதிப் பாடல்களை மீண்டும் மறுபதிவு செய்தார். இந்த சமயத்தில், கொலம்பியா ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு டிலான் மீண்டும் திரும்பினார். அந்நிறுவனம் இறுதியில் அசைலம் இசைத்தொகுப்புகளை மறுவிநியோகம் செய்தது.

1975 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிளட் ஆன் தி ட்ராக்ஸ் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஏதோ பயிற்சி இசை போல் தோற்றமளிப்பதாய் விமர்சகர் நிக் கெண்ட் விவரித்தார்.” ”வழக்கமான தொய்வுகளுடன் இந்த இசைத்தட்டு உருவாக்கப்பட்டிருப்பதாய்” ரோலிங் ஸ்டோனில் திறனாய்வாளர் ஜோன் லாண்டௌ எழுதினார். ஆயினும் வருடங்கள் கடந்த பின் இதனை டிலானின் மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றாய் விமர்சகர்கள் கண்டனர். சலோன்.காம் வலைவாசலில் பில் வைமேன் எழுதினார்: ”ப்ளட் ஆன் தி ட்ராக்ஸ் தான் அவரது ஒரே பிழையற்ற இசைத்தொகுப்பு; அவரது மிகச் சிறந்த உருவாக்கம்; பாடல்கள் ஒவ்வொன்றும் மிக ஒழுங்குற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். 60களின் மத்தியில் அவர் செய்த அதீதங்களுக்கும் விபத்து காலத்திற்கு பிந்தைய வருடங்களில் சுய விழிப்புடன் செய்த எளிமையான தொகுப்புகளுக்கும் இடையில் நன்கு சமநிலையுற்றதாகவும் இருக்கிறது.” ”இதுவரை காந்த நாடாச்சுருளில் பதிவு செய்யப்பட்ட படைப்புகளில் ஒரு காதல் கதையை நுனி முதல் வேர் வரை மிகவும் உண்மையாக நேர்மையாக இது பதிவு செய்திருப்பதாக” நாவலாசிரியர் ரிக் மூடி தெரிவித்தார்.

பாப் டிலான் 
1975 ஆம் வருடத்தில் ரோலிங் தண்டர் ரெவ்யூ நிகழ்ச்சியில், பாப் டிலான் ஆலன் கின்ஸ்பெர்க் உடன். எல்ஸா டோர்ஃப்மேன் எடுத்த புகைப்படம்.

அந்த கோடையில் 12 வருடங்களில் தனது முதல் வெற்றிகரமான “கலக” பாடலை டிலான் எழுதினார். நியூஜெர்ஸி, பாடெர்சன் பகுதியில் நடந்த ஒரு மூன்று கொலைகளின் சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் ரூபின் “ஹரிகேன்” கார்டரின் நலம் விரும்பி இப்பாடல் அமைக்கப்பட்டது. சிறையில் கார்டரை சென்று பார்த்த பின் “ஹரிகேன்” பாடலை டிலான் எழுதினார். கார்டர் அப்பாவி என்கிற வகையில் அந்த விளக்கம் இருந்தது. 8:32 நிமிட நீளம் இருந்தாலும், இந்த பாடல் ஒரு தனிப்பாடலாக வெளியிடப் பெற்று, அமெரிக்காவின் பில்போர்டு வரிசையில் 33வது இடத்திற்கு உயர்ந்தது. அத்துடன் தி ரோலிங் தண்டர் ரெவ்யூ என்னும் டிலானின் அடுத்த சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு 1975 தேதியிலும் அப்பாடல் இசைக்கப்பட்டது. இந்த சுற்றுப்பயணம் மாறுபட்ட பொழுதுபோக்கு மாலையாக அமைந்தது. டி-போன் பர்னெட், ராம்ப்ளிங் ஜேக் எலியட், ஜோனி மிட்செல் உள்ளிட சுமார் நூறு நிகழ்ச்சிக் கலைஞர்களும் ஆதரவாளர்களும் இதில் பங்கேற்றனர். டேவிட் மேன்ஸ்ஃபீல்டு, ரோஜர் மெக்கின், மிக் ரோன்சன், ஜோன் பேயஸ், மற்றும் வயலினிஸ்ட் ஸ்கார்லெட் ரிவெரா ஆகியோரும் இதில் அடங்குவர். ஸ்கார்லெட் ரிவெரா தனது வயலின் உறை தோளில் தொங்க நடந்து போய்க் கொண்டிருந்த சமயத்தில் அவரை டிலான் கண்டறிந்தார். குழுவுடன் சேர்ந்து ஆலன் கின்ஸ்பெர்கும் பயணம் செய்து டிலான் படத்திற்கான மேடைக் காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தார். இப்படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பத்தில் சாம் ஷெப்பர்டு பணியமர்த்தப்பட்டார். ஆனால் பின்னர் இந்த பயணத்தில் முறைசாரா வரிசைப்படுத்துநராக மட்டும் பங்கேற்றுத் திரும்பினார்.

1975 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 1976 ஆம் ஆரம்ப பகுதி வரை இந்த சுற்றுப்பயணம் வந்த நிலையில், டிஸைர் இசைத்தொகுப்பு வெளியீடும் இதனையொட்டி நிகழ்ந்தது. இதில் டிலானின் பல புதிய பாடல்கள் ஏறக்குறைய ஒரு பயணக் கட்டுரையை ஒத்த விவரிப்பு பாணியில் இடம்பெற்றிருக்கும். இது அவரது புதிய கூட்டாளியான நாடகாசிரியர் ஜாக்வஸ் லெவியின் பாதிப்பை எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது. மேம்பட்ட வரவேற்பைப் பெற்ற மிகவும் அறியப்பட்ட எந்த கச்சேரி இசைத்தொகுப்பும் 2002 ஆம் ஆண்டில் லைவ் 1975 வரை வெளியிடப்படவில்லை.

ரெவ்யூ உடனான 1975 இலையுதிர் கால சுற்றுப்பயணம் ஏறக்குறைய நான்கு மணி நேரப் படமான ரெனால்டோ அண்ட் கிளாரா வுக்கான பின்புலத்தை வழங்கியது. இது பரவலான மேம்பட்ட விவரிப்பாக இருந்ததோடு கச்சேரி படத் துண்டுகள் மற்றும் நினைவுகளைக் கலந்திருந்தது. 1978 ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம், பொதுவாக சராசரியான விமர்சனத்தையும், சிலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. அத்துடன் திரையரங்குகளிலும் அதிக நாள் ஓடவில்லை. அதே வருடத்தின் பின்பாதியில் பரவலான வெளியீட்டிற்கென டிலான் கச்சேரி நிகழ்ச்சிகள் அதிகமாய்க் கொண்ட இரண்டு மணி நேர தொகுப்பை அனுமதித்தார்.

1976 நவம்பரில், தி பாண்ட் இசைக்குழுவின் “விடைபெறும்” கச்சேரியில் டிலான் தோன்றினார். ஜோனி மிட்செல், மட்டி வாட்டர்ஸ், வான் மோரிஸன் மற்றும் நீல் யங் ஆகியோர் இதில் கலந்து கொண்ட பிற விருந்தினர்கள். தி லாஸ்ட் வால்ட்ஸ் என்னும், மார்ட்டின் ஸ்கார்ஸெஸெயால் பாராட்டப் பெற்ற இந்த நிகழ்ச்சியின் சினிமாவுக்கான காலவரிசை 1978 ஆம் ஆண்டில் வெளியானது. 1976 ஆம் ஆண்டில், எரிக் கிளாப்டனின் நோ ரீஸன் டு க்ரை க்காக டிலானும் “சைன் லாங்வேஜ்” பாடலை எழுதி இணைந்து பாடினார்.

டிலானின் 1978 இசைத்தொகுப்பான ஸ்ட்ரீட்-லீகல் தான் பாடல்வரிகள்ரீதியாக அவரது மிகவும் சிக்கலான ஒருங்கமைந்த இசைத்தொகுப்பாய்த் திகழ்கிறது. இது ஒரு பெரிய பாப்-ராக் இசைக்குழுவுடன் முழுமையான பெண் பின்புலக் குரல்களுடன் பதிவு செய்யப்பட்டதாகும். ஆயினும், ஒலிக் கலவை குறைபாடை இது சந்தித்தது (இதற்கு அவரது இசைமனைப் பதிவு நடைமுறைகள் காரணமாய் கூறப்பட்டது). அதன் பல கருவி இசைகளும் இக்குறைபாட்டில் மூழ்கிப் போனது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்திற்கு பிறகு மறுசீர்பட்ட குறுந்தகடு வெளியிடப்பட்டது.

மறுபிறப்பு காலகட்டம்

1970களின் பிற்பகுதியில், டிலான் மறுபிறப்பு கிருத்தவராய் மாறினார். அத்துடன் கிருத்துவ ஸ்தோத்திர இசை இசைத்தொகுப்புகள் இரண்டையும் வெளியிட்டார். ஸ்லோ ட்ரெய்ன் கமிங் பழம்பெரும் R&B தயாரிப்பாளரான ஜெர்ரி வெக்ஸ்லெரால் தயாரிக்கப்பட்டது. பாடல் பதிவின் போது தனக்கு மத ஈடுபாட்டைக் கூட்ட டிலான் முயற்சி செய்ததை வெக்ஸ்லர் நினைவுகூருகிறார். அதற்கு அவர் அளித்த பதில்:”பாப், உங்களுடன் இருப்பது அறுபத்தி இரண்டு வயதான ஒரு யூத நாத்திகர். அதனால் இசைத்தொகுப்பு வேலையை மட்டும் பார்ப்போம்.” ”காட்ட செர்வ் சம்படி” பாடலுக்கு “சிறந்த ஆண் குரல் பாடகருக்கான” கிராமி விருதினை இந்த இசைத்தொகுப்பு டிலானுக்கு வென்று தந்தது. இரண்டாவது திருச்சபை இசைத்தொகுப்பான சேவ்டு (1980) கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் ரோலிங் ஸ்டோனில் குர்ட் லோடர் இசைரீதியாக முந்தைய இசைத்தொகுப்பைக் காட்டிலும் இது ரொம்பவும் மேம்பட்டதாக இருப்பதாக தெரிவித்தார். 1979 இலையுதிர் காலம் முதல் 1980 இளவேனில் காலம் முதலான சுற்றுப்பயணத்தின் போது, டிலான் தனது பழைய மதச்சார்பற்ற பாடல்கள் எதனையும் பாடவில்லை.}} கிருத்துவத்தை டிலான் தழுவிக் கொண்டிருந்தது அவரது விசிறிகளில் சிலருக்கும் சக இசைக்கலைஞர்கள் சிலருக்கும் பிடிக்கவில்லை. தான் கொல்லப்படுவதற்கு கொஞ்ச காலம் முன்னதாக, டிலானின் “காட்ட செர்வ் சம்படி”க்கு மறுமொழியாய் தனது “செர்வ் யுவர்செல்ஃபை” ஜான் லெனான் பதிவு செய்தார். 1981 வாக்கில் டிலானின் கிருத்துவ நம்பிக்கை மிகவும் வெளிப்பட்டதாய் ஆகியிருந்ததொரு சமயத்தில், நியூயார்க் டைம்ஸில் ஸ்டீபன் ஹோல்டன் எழுதினார்: “வயதோ (அவரது வயது இப்போது 40) அல்லது மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட அவரது கிருத்துவ மறுபிறப்போ, அவரது அடிப்படையான கலக மனோநிலையை மாற்றி விடவில்லை.”

1980கள்

பாப் டிலான் 
ஸ்பெயினின் பார்சிலோனாவில் டிலான் 1984

1980 இலையுதிர் காலத்தில், “எ மியூசிக்கல் ரிட்ராஸ்பெக்டிவ்” என்று அழைக்கப்பட்ட தொடர்ச்சியான கச்சேரிகளில் தனது சுற்றுப்பயணத்தை டிலான் கொஞ்ச காலம் தொடர்ந்தார். அதில் 1960களில் பிரபலமுற்ற தனது பாடல்கள் பலவற்றையும் கையிருப்பில் சேர்த்துக் கொண்டார். அதற்கடுத்த வசந்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஷாட் ஆஃப் லவ் , இரண்டு வருடத்திற்கும் அதிகமானதொரு காலத்தில் டிலானின் முதல் மதச்சார்பற்ற தொகுப்புகளை கொண்டிருந்தது. அத்துடன் வெளிப்படையான கிறிஸ்தவ பாடல்களும் கலந்திருந்தன. “எவ்ரி க்ரெய்ன் ஆஃப் ஸேண்ட்” சில விமர்சகர்களுக்கு வில்லியம் பிளேக்கின் வரிகளை நினைவூட்டுவதாய் அமைந்தது.

1980களில், டிலானின் படைப்புகளின் தரம் மாறுபட்டதாய் இருந்தது. 1983 ஆம் ஆண்டின் இன்ஃபிடல்ஸ் நல்ல மரியாதை பெற்றது. 1988 இன் டவுன் இன் தி க்ரூவ் விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்பட்டது. மைக்கேல் கிரே போன்ற விமர்சகர்கள் இசைமனையில் அசாதாரண அலட்சியம் காட்டுவது மற்றும் தனது சிறந்த பாடல்களை வெளியிடத் தவறுவது ஆகிய இரண்டுக்காகவும் டிலானின் 1980களின் இசைத்தொகுப்புகளை விமர்சித்தனர். உதாரணமாக, இன்ஃபிடல்ஸ் பதிவு அமர்வுகளில் உருவான பல குறிப்பிடத்தக்க பாடல்களை டிலான் இசைத்தொகுப்பில் இருந்து நீக்கியிருந்தார். இவற்றுள் மிக மரியாதை பெற்றவையாக “ப்ளைண்ட் வில்லி மெக்டெல்”(டெட் ப்ளூஸ் பாடகர் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றின் எழுச்சிக்கான ஒரு அஞ்சலி), “ஃபுட் ஆஃப் ப்ரைட்” மற்றும் “லார்ட் புரொடெக்ட் மை சைல்ட்”ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த பாடல்கள் பின்னர் தி பூட்லெக் சீரிஸ் தொகுதி 1-3 (அபூர்வமானது & வெளியிடாதது) 1961-1991 தொகுப்பில் வெளியிடப்பட்டன.

ஜூலை 1984 மற்றும் மார்ச் 1985க்கு இடையே, டிலான் எம்பயர் பர்லெஸ்க் என்னும் தனது அடுத்த இசைமனை இசைத்தொகுப்பை பதிவு செய்தார். ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மற்றும் சிண்டி லாபருக்கு வெற்றிப் பாடல்களை மறுகலவை செய்த ஆர்தர் பேகர் இந்த இசைத்தொகுப்பிற்கு வடிவமைக்கவும் கலவை செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டார். டிலானின் இசைத்தொகுப்பு சற்று “சமகால தொனியில் இருக்கும் வண்ணம்” இருப்பதற்காகத் தான் தன்னை பணியமர்த்தியதாய் உணர்ந்ததாக பேகர் தெரிவித்தார்.

“வீ ஆர் தி வேர்ல்டு” என்னும் யுஎஸ்ஏ ஃபார் ஆப்பிரிக்கா பஞ்ச நிவாரண நிதிதிரட்டுவதற்கான தனிப்பாடலை டிலான் அமெரிக்காவில் பாடினார். ஜூலை 13, 1985 அன்று, பிலடெல்பியாவின் JFK ஸ்டேடியத்தில் நடந்த லைவ் எய்ட் கச்சேரியின் உச்சகட்டத்தில் அவர் தோன்றினார். கெய்த் ரிச்சர்ட்ஸ் மற்றும் ரோனி உட் புடைசூழ, கிராமப்புற ஏழ்மை குறித்த தனது “ஹோலிஸ் பிரவுன்” ஆரம்பநிலை பதிப்பை டிலான் நிகழ்த்தினார். அதன் பின் பார்த்துக் கொண்டிருந்த உலகெங்கிலுமான பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “இதில் இருந்து கொஞ்ச பணம், ஒரு மில்லியன் அல்லது இரண்டு மில்லியனாக இருக்கலாம்.....அதனை எடுத்து இங்கிருக்கும் விவசாயப் பண்ணைகள், அல்லது விவசாயிகள் வங்கிகளுக்குக் கடன்பட்டிருக்கும் அடமானங்களுக்கு செலுத்தப் பயன்படுத்தலாம் என்று நம்புகிறேன்.” அவருடைய கருத்துகள் பொருத்தமற்றவையாக பரவலாய் விமர்சிக்கப்பட்டது என்றாலும் கடனில் இருந்த அமெரிக்க விவசாயிகளுக்கு நலன் பயக்கும் வகையில் ஃபார்ம் எய்ட் என்கிற தொடர்ச்சியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வில்லி நெல்சனுக்கு இது ஊக்கமூட்டுவதாய் அமைந்தது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரலில், குர்திஸ் ப்ளோ’வின் “ஸ்ட்ரீட் ராக்” வரிகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் ராப் இசை உலகில் டிலான் காலடி எடுத்து வைத்தார். இது ப்ளோ’வின் இசைத்தொகுப்பான கிங்டம் ப்ளோ வில் இடம்பெற்றது. இந்த கூட்டுமுயற்சியை சிந்தித்த பாடகர்-பாடலாசிரியர்-தயாரிப்பாளராய் இருக்கும் வேய்ன் கே.கேர்ஃபீல்டு, மற்றும் இப்போது அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியில் தலைமை குரல் பயிற்சியாளராய் இருப்பவரும் முன்னாளில் டிலானின் பின்புலக் குழு பாடகருமான டெப்ரா பைர்ட் ஆகியோர் தான் டிலானின் இசைக்கு ஏற்பாடு செய்த பெருமைக்கு உரியவர்களாய் கருதப்படுகின்றனர். 1986 ஜூலையில், டிலான் நாக்ட் அவுட் லோடட் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் மூன்று மாற்றுக்குரல் பாடல்கள் (லிட்டில் ஜூனியர் பார்க்கர், கிறிஸ் கிறிஸ்டோபர்சன் எழுதியவை மற்றும் பாரம்பரிய ஸ்தோத்திர பாடல் “ப்ரீசியஸ் மெமரிஸ்”), பிற எழுத்தாளர்களுடன் (டாம் பெட்டி, சாம் ஷெப்பர்டு மற்றும் கரோல் பேயர் ஸேகர்) இணைந்து எழுதிய மூன்று பாடல்கள், மற்றும் டிலானின் இரண்டு தனிப்பாடல் தொகுப்புகள் இடம்பெற்றன. இந்த இசைத்தொகுப்பு பிரதானமாக எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. ரோலிங் ஸ்டோன் இந்த இசைத்தொகுப்பை “மனச்சோர்வளிக்கும் விடயம்” என்று எழுதியது. அத்துடன் ஃப்ரீவீலிங்’க்குக்குப் பிறகு (1963) தலைமை 50 இடங்களில் இடம்பிடிக்கத் தவறிய முதல் டிலான் இசைத்தொகுப்பாகவும் இது ஆனது. அதன்பின், சாம் ஷெப்பர்டு உடன் இணைந்து டிலான் எழுதிய ‘ப்ரவுன்ஸ்வில்லி கேர்ள்’ என்னும் 11 நிமிட காவியத்தை ஒரு மேதாவிப் படைப்பாக சில விமர்சகர்கள் பாராட்டி வந்துள்ளனர். 1986 மற்றும் 1987 ஆம் வருடங்களில், டாம் பெட்டி மற்றும் தி ஹார்ட்பிரேக்கர்ஸ் உடன் சேர்ந்து டிலான் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு இரவிலும் பெட்டியுடன் பல பாடல்களில் குரலைப் பகிர்ந்து கொள்வார். தி கிரேட்ஃபுல் டெட் குழுவுடனும் 1987 ஆம் ஆண்டில் டிலான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதிலிருந்து தான் டிலான் & தி டெட் நேரலை இசைத்தொகுப்பு பிறந்தது. இந்த இசைத்தொகுப்பு சில எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆல்மியூசிக் கூறியது: “பாப் டிலான் அல்லது தி கிரேட்ஃபுல் டெட் குழுவினரின் மிக மோசமான இசைத்தொகுப்பு என்று கூறுவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளன.” இந்த இசைக்குழு மாற்ற ஏற்பாடுகள் முயற்சிக்கு பின், ஜூன் 7, 1988 அன்று தி நெவர் எண்டிங் டூர் என்று பின்னர் அழைக்கப்பட்டதொரு சுற்றுப்பயணத்தை டிலான் துவக்கினார். கிதார் கலைஞர் ஜி.ஈ.ஸ்மித் உள்ளிட்ட வெகு குறைந்த பின்புலக் குழுவுடன் இந்த இசைப்பயணத்தை அவர் நிகழ்த்தினார். இந்த சிறிய ஆனால் தொடர்ந்த வளர்ச்சியுற்று வந்த குழுவுடன் தான் அடுத்த 20 வருடங்களுக்கு டிலான் தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார்.

பாப் டிலான் 
டொரொண்டோவில் டிலான் ஏப்ரல் 18, 1980 புகைப்படம்: ழான்-லுக் அவுர்லின்

1987 ஆம் ஆண்டில், ரிச்சர்டு மர்குவாண்டின் ஹார்ட்ஸ் ஆஃப் ஃபயர் படத்தில் பில்லி பார்க்கர் என்னும் பாத்திரத்தை டிலான் ஏற்றிருந்தார். ராக் நட்சத்திரமாக இருந்து கோழிப்பண்ணை விவசாயியாக மாறும் இப்பாத்திரத்தின் இளம் வயது காதலி (ஃபியோனா) ஒரு பாப் பிரபலத்திற்காக (ரூபர்ட் எவெரெட் நடித்தார்) இவரை விட்டு பிரிகிறார். “நைட் ஆஃப்டர் நைட்”, மற்றும் “ஐ ஹேடு எ ட்ரீம் எபவுட் யூ, பேபி” ஆகிய இரண்டு மூலப் பாடல்கள் மற்றும் ஜான் ஹியாட்டின் “தி யூஸ்வல்” பாடலுக்கான மாற்றுக்குரல் பதிப்பு ஆகியவற்றையும் டிலான் பங்களித்தார். இந்த படம் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் தோல்வியைத் தழுவியது.

ராக் அண்ட் ரோல் பெருமைக்குரிய அவையில் டிலான் 1988 ஜனவரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். சேர்ப்பு விழாவில் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் அறிவித்தார்: “எல்விஸ் உங்களது உடலுக்கு விடுதலை அளித்ததைப் போல பாப் உங்கள் மனதுக்கு விடுதலை அளித்தார். இசை என்பது இயல்பாக உடல்தொடர்புற்று இருப்பதால் அதற்காக அது அறிவுஜீவித்தனத்திற்கு எதிரானது அல்ல என்பதை அவர் நமக்கு நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.” அதன்பின் டிலான் டௌன் இன் தி க்ரூவ் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இது அவரது முந்தைய இசைமனை இசைத்தொகுப்பைக் காட்டிலும் இன்னும் மோசமாய் விற்பனையானது. ஆயினும், “சில்வியோ”ஒரு தனிப்பாடலாக சற்று வெற்றி கண்டது. அதே இளவேனிலின் பிற்பகுதியில், டிலான் டிராவலிங் வில்பரிஸ்யின் இணை ஸ்தாபகராகவும் உறுப்பினராகவும் ஆனார். ஜார்ஜ் ஹாரிசன், ஜெஃப் லைன், ராய் ஓர்பிஸன், மற்றும் டாம் பெட்டி ஆகியோர் அதில் இருந்தனர். டிராவலிங் வில்பரிஸ் வால். 1 பல பிளாட்டின அந்தஸ்தை பெற்று மீண்டும் இசைத்தொகுப்பு வரிசைப் பட்டியல்களுக்குத் திரும்பியது. ஓர்பிஸன் 1988 டிசம்பரில் இறந்து போனார் என்றாலும், எஞ்சிய நால்வரும் இணைந்து 1990 மே மாதத்தில் ஒரு இரண்டாவது இசைத்தொகுப்பைப் பதிவு செய்தனர். இதனை யாரும் எதிர்பாராத வகையில் டிராவலிங் வில்பரிஸ் வால்.3 என்கிற தலைப்பில் அவர்கள் வெளியிட்டனர்.

டேனியல் லனோய்ஸ் தயாரித்த ஓ மெர்சி உடன் டிலான் இந்த தசாப்தத்தை ஒரு உயர்ந்த மட்டத்தில் முடித்தார். இந்த இசைத்தொகுப்பு “சவாலானதாகவும் இருந்தது திருப்தியளிப்பதாகவும் இருந்தது”என்று ரோலிங் ஸ்டோன் இதழ் கூறியது. ஒரு தொலைந்த காதல் குறித்த இசைத்தொகுப்பான “மோஸ்ட் ஆஃப் தி டைம்” பாடல் பின்னர் ஹை ஃபிடெலிட்டி படத்தில் பிரதானமாக இடம்பிடித்தது. அதேசமயத்தில் “வாட் வாஸ் இட் யூ வாண்டட்?” மத இலக்கணப் புத்தகமாகவும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் குறித்த ஒரு வறண்ட கருத்தாகவும் இரண்டு வகையிலும் பொருள் புரிந்து கொள்ளப்பட்டது. “ரிங் தெம் பெல்ஸ்” பாடலின் மத பிம்பம் மத நம்பிக்கையின் மறுபிரமாணமாக சில விமர்சகர்களுக்குத் தோன்றியது.

1990கள்

டிலானின் 1990கள் அண்டர் தி ரெட் ஸ்கை (1990) உடன் துவங்கியது. இது கருத்துமிகுந்த ஓ மெர்ஸி யில் இருந்தான ஒரு திருப்பம் ஆகும். இந்த இசைத்தொகுப்பு பல வெளிப்பட்ட எளிமையுடன் இருந்த பாடல்களைக் கொண்டிருந்தது. இதில் ”அண்டர் தி ரெட் ஸ்கை” மற்றும் “விக்கிள் விக்கிள்” ஆகியவை அடங்கும். இந்த இசைத்தொகுப்பின் வாத்தியக் கலைஞர்களில் ஜார்ஜ் ஹாரிஸன், கன்ஸ் அன்’ ரோஸஸின் ஸ்லாஷ், டேவிட் கிராஸ்பி, ப்ரூஸ் ஹார்ன்ஸ்பை, ஸ்டீவி ரே வாகன், மற்றும் எல்டன் ஜான் ஆகியோர் அடங்குவர். இத்தகைய வலிமையானதொரு அணி இருந்தும், இந்த இசைத்தட்டு மோசமான விமர்சனங்களை பெற்றதோடு விற்பனையும் சரியாக இல்லை.

1991 ஆம் ஆண்டில், கிராமி ஆயுள்கால சாதனை விருதை வழங்கி இசைத்தட்டு துறை டிலானைக் கவுரவித்தது. இந்த நேரத்தில் சதாம் உசேனுக்கு எதிரான வளைகுடாப் போரும் துவங்கியது. டிலான் தனது “மாஸ்டர்ஸ் ஆஃப் வார்” பாடலை உருவாக்கினார். பாடலுக்குப் பின் டிலான் ஒரு சிறு உரையும் நிகழ்த்தினார். இது பார்வையாளர்களில் சிலரைத் திடுக்கிடச் செய்தது.

அடுத்த சில ஆண்டுகள் டிலான் தனது வேர்களை நோக்கித் திரும்புவதைக் காண்பதாய் அமைந்தது. பழைய நாட்டுப்புற இசை மற்றும் ப்ளூஸ் பாடல்களைக் கொண்ட இரண்டு இசைத்தொகுப்புகள் வெளியாயின: குட் அஸ் ஐ பீன் டூ யூ (1992) மற்றும் வேர்ல்டு கோன் ராங் (1993) ஆகியவை. பல விமர்சகர்களும் ரசிகர்களும் “லோன் பில்கிரிம்” பாடலின் அமைதியான அழகு குறித்து சிலாகித்துப் பேசினர், இந்த பாடல் 19 ஆம் நூற்றாண்டின் ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டு டிலான் ஒரு அரிய மரியாதையுடன் பாடியதாகும். இந்த வேர்நோக்கிய மனோநிலைக்கு விதிவிலக்காய் டிலான் 1991 ஆம் ஆண்டில் மைக்கேல் போல்டான் உடன் பாடல் எழுதுவதில் கூட்டு சேர்ந்தது அமைந்தது; இந்த கூட்டில் விளைந்த “ஸ்டீல் பார்ஸ்” போல்டானின் டைம், லவ் & டெண்டர்னெஸ் இசைத்தொகுப்பில் வெளியானது. 1994 நவம்பரில், எம்டிவி அன்பிளக்டு நிகழ்ச்சிக்காக இரண்டு நேரலை நிகழ்ச்சிகளை டிலான் பதிவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய பாடல்களின் ஒரு தொகுப்பை தான் பாட விரும்பியதாகவும், ஆனால் மாபெரும் வெற்றிப் பாடல்கள் தொகுப்பையே பாட வேண்டும் என்று சோனி நிர்வாகிகள் வலியுறுத்தி விஞ்சி விட்டனர் என்பதாய் அவர் தெரிவித்தார். இதிலிருந்து உருவான “எம்டிவி அன்பிளக்டு ” இசைத்தொகுப்பில் போர் மற்றும் மூர்க்ககுணம் இரண்டின் அழிவுகுணங்களையும் விவரிக்கும் 1963 ஆம் ஆண்டின் வெளிவராத பாடலான “ஜான் பிரவுன்” இடம்பெற்றிருந்தது.

பாப் டிலான் 
1996 இல் ஸ்டாக்ஹோம் கச்சேரியில் டிலான் நிகழ்ச்சி செய்கிறார்

பாடல்களின் ஒரு தொகுப்பு இவரது மினஸோடா பண்ணையில் பனிபெய்து கொண்டிருந்த சமயத்தில் எழுதியது என கூறப்பட்டு வந்த நிலையில், 1997 ஜனவரியில் மியாமியில் உள்ள க்ரைடீரியா ஸ்டுடியோஸில் டேனியல் லனோய்ஸ் உடன் பதிவு நேரத்தை டிலான் முன்பதிவு செய்து கொண்டார். இதனையடுத்து வந்த இசைப்பதிவு அமர்வுகள் பதட்டம் விளைவிப்பனவாய் அமைந்திருந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன. அந்த இளவேனிலின் பிற்பகுதியில், இசைத்தொகுப்பு வெளியாகும் முன்னதாக, ஹிஸ்டோபிளாஸ்மோஸிஸினால் வரும் பெரிகார்டிடிஸ் எனும் உயிருக்கு ஆபத்தானதொரு இதயத் தொற்றின் காரணமாக டிலான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திட்டமிடப்பட்டிருந்த அவரது ஐரோப்பிய சுற்றுப்பயணம் ரத்தானது. ஆனால் டிலான் துரிதமாக தேறினார். மருத்துவமனையை விட்டு செல்லும்போது அவர், ”விரைவில் எல்விஸை சந்திக்கப் போவதாகத் தான் தான் நினைத்ததாக”க் கூறினார். கோடைமத்தியில் அவர் மீண்டும் களம் இறங்கி விட்டார். அத்துடன் இலையுதிர் கால ஆரம்பத்தில், இத்தாலியின் போலோக்னாவில் வேர்ல்டு யூகரிஸ்டிக் கான்ஃபெரன்ஸில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் முன்னதாக அவர் இசை நிகழ்த்தினார். டிலானின் “ப்ளோயிங்’ இன் தி விண்ட்” வரிகளின் அடிப்படையில் அமைந்த மதச் சடங்கின் மூலம் 200,000 வருகையாளர்களை போப் ஆசிர்வதித்தார்.

செப்டம்பரில் லனோய்ஸ் தயாரித்த புதிய இசைத்தொகுப்பு டைம் அவுட் ஆஃப் மைண்ட் வெளியானது. காதல் மற்றும் அதன் யோசனைகள் குறித்த கடுமையான மதிப்பீட்டால், ஏழு ஆண்டுகளில் டிலானின் முதன்முறைப் பாடல்களின் முதல் தொகுப்பாய் அமைந்த இது, மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. ரோலிங் ஸ்டோன் எழுதியது: “மரணிக்கும் தன்மை கடுமையாய் இறங்குகிறது, தூக்குகயிறு தொங்குகையில் நகைச்சுவை தோன்றுகிறது.” இந்த சிக்கலான பாடல்களின் தொகுப்பு அவருக்கு முதன்முதல் தனியான “ஆண்டின் சிறந்த ஆல்ப” கிராமி விருதை வென்று தந்தது (1972 இல் வென்ற தி கன்சர்ட் ஆஃப் பங்களாதேஷ் நிகழ்ச்சியில் பாடிய ஏராளமான கலைஞர்களில் இவரும் ஒருவர்). “மேக் யூ ஃபீல் மை லவ்” காதல் பாடல் கார்த் ப்ரூக்ஸ்க்கு முதலிட நாட்டுப்புற வெற்றிப் பாடலாய் ஆனது.

1997 டிசம்பரில், வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் கென்னடி மைய மரியாதையை டிலானுக்கு வழங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அவரைப் பற்றி இவ்வாறு கூறினார்: “எனது தலைமுறையில் வேறு எந்த படைப்புக் கலைஞரையும் விட மக்கள் மீது அதிகமான தாக்கத்தை உருவாக்கிய கலைஞராய் அவர் இருந்தார் என்று கூறலாம். அவருடைய குரலும் சரி பாடல்வரிகளும் சரி காதுகளுக்கு மிக இனிமையாய் இருந்தன என்று கூற முடியாது. ஆனால் தனது வாழ்க்கை முழுவதும் டிலான் வெறுமனே மகிழ்ச்சியூட்டுவதை மட்டுமே நோக்கமாய்க் கொண்டிருந்தவரில்லை. அமைதியைக் குலைப்பவராகவும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்குத் தொந்தரவாகவும் அவர் இருந்திருக்கிறார்.”

2000கள்

டிலான் புதிய ஆயிரமாண்டு துவக்கத்தை தனது முதல் ஆஸ்கர் விருதுடன் துவக்கினார்; ஒண்டர் பாய்ஸ் படத்திற்காக எழுதப்பட்ட அவரது “திங்ஸ் ஹேவ் சேஞ்ச்டு” பாடல் கோல்டன் குளோப் விருதையும் அகாதமி விருதையும் 2001 மார்ச் மாதத்தில் வென்றது. இந்த ஆஸ்கர் அவருடன் நிகழ்ச்சிகளுக்கு பயணிக்கிறது.

“லவ் அண்ட் தெஃப்ட்” செப்டம்பர் 11, 2001 அன்று வெளியானது. தனது சுற்றுப்பயண இசைக்குழுவைக் கொண்டு இதனைப் பதிவு செய்த டிலான், ஜேக் ஃப்ராஸ் என்கிற புனைப்பெயரில் தானே இந்த இசைத்தொகுப்பைத் தயாரித்தார். இந்த இசைத்தொகுப்பு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பல கிராமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப் பெற்றது.

2003 ஆம் ஆண்டில் தனது “மறு பிறப்பு” காலகட்ட திருச்சபைப் பாடல்களை டிலான் மீண்டும் மறுபிரவேசம் செய்தார். அதே வருடத்தில், மாஸ்க்டு & அனானிமஸ் திரைப்படமும் வெளியிடப் பெற்றது. இதில் தொலைக்காட்சி தயாரிப்பாளரான லேரி சார்லஸ் உடன் டிலான் கூட்டு சேர்ந்து நடிப்பில் பங்குபெற்றிருந்தார். ஜெஃப் பிரிட்ஜஸ், பெனிலோப் க்ருஸ் மற்றும் ஜான் குட்மேன் ஆகியோர் உள்ளிட்ட நன்கறிந்த பிரபல நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்களையும் துருவப்படுத்தியது: பலர் இதனை “குழப்பமான படைப்பு” என்று நிராகரித்தனர்; சிலர் இதனை செறிவு மிகுந்த கலைப்படைப்பு என்றனர்.

பாப் டிலான் 
போலோக்னாவில் நிகழ்ச்சி செய்கிறார். நவம்பர் 2005

2004 அக்டோபரில், டிலான் தனது கிரானிக்கள்ஸ் சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் எதிர்பார்ப்புகளைக் குழப்புவதாய் அமைந்தது. டிலான் மூன்று அத்தியாயங்களை நியூயார்க் நகரத்தில் 1961 - 1962 காலத்தில் செலவிட்ட சமயத்திற்கு அர்ப்பணித்திருந்தார். அவரது புகழ் உச்ச காலத்தில் இருந்து 60களின் மத்திய காலப் பகுதி வரையான காலத்தை ஏறக்குறைய அவர் புறக்கணித்திருந்தார். நியூ மார்னிங் (1970) மற்றும் ஓ மெர்ஸி (1989) இசைத்தொகுப்புகளுக்கும் அவர் அத்தியாயங்களை அர்ப்பணித்திருந்தார். இந்த புத்தகம் நியூயார்க் டைம்ஸின் கற்பனைசாரா படைப்புகள் பட்டியலில் 2004 டிசம்பரில் இரண்டாம் இடத்தை எட்டியதோடு தேசிய புத்தக விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

மார்டின் ஸ்கார்ஸெஸெ பாராட்டிய திரைப்பட சரிதையான நோ டைரக்‌ஷன் ஹோம் 2005 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்டது. இந்த ஆவணப்படம் டிலான் நியூயார்க்கில் 1961 ஆம் ஆண்டில் வந்தது முதல் 1966 ஆம் ஆண்டில் அவருக்கு நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்து வரையான காலகட்டத்தை படம்பிடித்திருக்கிறது. இதில் சுஸ் ரொடோலோ, லியாம் கிளான்ஸி, ஜோன் பேயஸ், ஆலன் கின்ஸ்பெர்க், பீடெ ஸீகெர், மேவிஸ் ஸ்டேபிள்ஸ் ஆகியோருடனான நேர்காணல்கள் மற்றும் டிலான் தானே அளித்த பேட்டி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த படம் 2006 ஏப்ரலில் ஒரு பீபாடி விருதினையும் 2007 ஜனவரியில் ஒரு கொலம்பியா-டுபாண்ட் விருதினையும் வென்றது. உடன்வரும் இசைத்தடத்தில் டிலானின் ஆரம்ப வாழ்க்கையில் இருந்தான வெளிவராத பாடல்கள் இடம்பிடித்திருந்தன.

மாடர்ன் டைம்ஸ் (2006–08)

பாப் டிலான் 
டிலான், தி ஸ்பெக்ட்ரம், 2007

மே 3, 2006 அன்று டிலான் இசைவட்டு ஒலிபரப்பாளராய் அரங்கேற்றம் கண்டார். தீம் டைம் ரேடியோ ஹவர் என்கிற ஒரு வாராந்திர வானொலி நிகழ்ச்சியை அவர் நடத்தினார். இதில் ஒரு தேர்ந்தெடுத்த கருத்தைச் சுற்றிய தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் இடம்பெறும். 1930கள் முதல் இன்றைய காலம் வரையான செவ்வியல் மற்றும் தெளிவற்ற இசைத்தட்டுகளை டிலான் ஒலிபரப்பியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பாராட்டப் பெற்றது. அந்த அளவுக்கு டிலான் கதை சொல்வது தனது கிண்டலான நகைச்சுவை உணர்வுடன் தேர்ந்தெடுத்த குறிப்புகளைச் சொல்வது, அத்துடன் தனது இசைத் தெரிவுகளில் கருத்துரீதியான அழகைக் கொணர்வது என சிறப்பாய் செயல்பட்டார். இசையாசிரியரான பீட்டர் குரால்னிக் தெரிவித்தார்: “இந்த நிகழ்ச்சியின் மூலம் டிலான், எல்லைகள் இல்லாத ஒரு இசை உலகத்திற்குள் உலவுகிறார்." 2009 ஏப்ரல் மாதத்தில், டிலான் தனது வானொலி வரிசையின் 100வது நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்; “குட்பை” என்பது தான் கருப்பொருளாய் இருந்தது. இதில் இசைக்கப்பட்ட இறுதி இசைத்தட்டு வுடி குத்ரியின் “ஸோ லாங், இட்ஸ் பீன் குட் டு க்நோ யஹ்” என்பதாகும். டிலானின் வானொலி ஒலிபரப்பு காலம் முடிவு பெற்றிருக்கலாம் என்பதான ஊகத்திற்கு இது இட்டுச் சென்றது.

ஆகஸ்டு 29, 2006 அன்று, டிலான் தனது மாடர்ன் டைம்ஸ் இசைத்தொகுப்பை வெளியிட்டார். நவீன கால ஒலிப் பதிவுகளின் தரத்தை விமர்சித்த டிலான் தனது புதிய பாடல்கள் “அவற்றை இசைமனையில் பதிவு செய்த சமயத்தில் பத்து மடங்கு மேம்பட்டு ஒலித்ததாய்” ரோலிங் ஸ்டோன் பேட்டியில் தெரிவித்தார். டிலானின் குரல் சற்று கரகரப்பாய் இருந்தது என்றாலும் (தி கார்டியனுக்கு எழுதும் ஒரு விமர்சகர் இந்த இசைத்தொகுப்பில் அவர் பாடியிருந்ததை “மரண முனகல்” போல் இருந்ததாக குணாதிசயப்படுத்தினார்) பல விமர்சகர்களும் இந்த இசைத்தொகுப்பை புகழ்ந்தனர். பலரும் இதனை டைம் அவுட் ஆஃப் மைண்ட் மற்றும் “லவ் அண்ட் தெஃப்ட்” ஆகியவற்றைத் தழுவிய ஒரு வெற்றிகரமான வரிசையின் இறுதித் தவணை என்பதாய் வர்ணித்தனர். மாடர்ன் டைம்ஸ் அமெரிக்க இசைத்தொகுப்பு வரிசையில் முதலிடத்தில் நுழைந்தது. இதன்மூலம் 1976 ஆம் ஆண்டின் டிஸைர் இசைத்தொகுப்புக்குப் பிறகு இந்த இடத்தை எட்டும் டிலானின் முதல் இசைத்தொகுப்பாக இது ஆனது.

மூன்று கிராமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மாடர்ன் டைம்ஸ் சிறந்த சமகால நாட்டுப்புற/அமெரிக்கானா இசைத்தொகுப்பிற்கான விருதை வென்றது. அத்துடன் “சம்டே பேபி”க்காக பாபி டிலானுக்கு சிறந்த தனிநபர் ராக் குரல் திறனுக்கான விருது கிட்டியது. ரோலிங் ஸ்டோன் இதழும், இங்கிலாந்தில் உள்ள அன்கட் டும் மாடர்ன் டைம்ஸை 2006 ஆம் ஆண்டின் ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பாய் தேர்வு செய்தன. மாடர்ன் டைம்ஸ் வெளியான அதே நாளில் டிலானினி அனைத்து இசைத்தொகுப்புகளையும் அடக்கியிருந்ததான ஒரு எண்மருவித் தொகுப்பும் வெளியானது. மொத்தம் 773 பாடல்கள் இடம்பெற்ற இத்தொகுப்பில் 42 அபூர்வமான வெளியாகாத பாடல்களும் இருந்தன.

2007 ஆகஸ்டு மாதத்தில், ஐ’ம் நாட் தேர் என்னும் விருது வென்ற திரைப்படம் வெளியானது. டாட் ஹேய்ன்ஸ் எழுதி இயக்கிய இந்த திரைப்படம், “பாப் டிலானின் இசையால் ஊக்கம் பெற்றது” என்ற அடிக்குறிப்பைக் கொண்டிருந்தது. டிலானது வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த படம் ஆறு வேறுபட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தியது, கிறிஸ்டியன் பலே, கதே ப்ளான்செட், மார்கஸ் கார்ல் ஃபிராங்ளின், ரிச்சர்ட் கெரெ, ஹீத் லெட்ஜர் மற்றும் பென் விஷா இப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். டிலானின் முன்னர் வெளியாகாத 1967 இசைப்பதிவு முதன்முறையாக இப்படத்தின் மூல இசைத்தடத்தில் வெளியானது; அனைத்து பிற பாடல்களும் டிலான் பாடல்களின் மாற்றுக்குரல் பாடல்களாகும். எடி வெடர், ஸ்டீபன் மால்க்மஸ், ஜெஃப் ட்வீடி, வில்லீ நெல்சன், கேட் பவர், ரிச்சி ஹேவன்ஸ், மற்றும் டாம் வெர்லேய்ன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பாடிய இவை இந்த படத்திற்காக சிறப்பாக பதிவு செய்யப்பட்டன.

பாப் டிலான் 
டொரொண்டோவில் உள்ள ஏர் கனடா மையத்தில் டிலான் நிகழ்ச்சி செய்கிறார், நவம்பர் 7, 2006

அக்டோபர் 1, 2007 அன்று, கொலம்பியா ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் மூன்று குறுந்தகடுகள் கொண்ட சுயபரிசோதனை இசைத்தொகுப்பான டிலான் வெளியானது. இதில் டிலான் 07 சின்னத்தின் கீழான அவரது ஒட்டுமொத்த தொழில் வாழ்க்கை வரிசைப்படுத்தப்பட்டு இருந்தது.

டிலான் 07 விளம்பரம் நவீனப்பட்டிருந்தது டிலானின் வர்த்தக மதிப்பு 1990கள் காலத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு உயர்ந்திருந்ததை நினைவூட்டுவதாய் இருந்தது. முதலாவது சான்று 2004 ஆம் ஆண்டில் காணக்கிட்டியது. விக்டோரியா’ஸ் சீக்ரெட் உள்ளாடைக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் டிலான் தோன்றினார். மூன்று வருடங்கள் கழித்து, அக்டோபர் 2007 ஆம் ஆண்டில், 2008 கேடிலாக் எஸ்கலேடுக்காக அதன்பின், 2009 ஆம் ஆண்டில், தனது வாழ்வின் மிகப்பெரிய விளம்பர ஒப்பந்தமாக பெப்சி விளம்பரத்தில் ராப் இசைக் கலைஞர் வில்.ஐ.எம் உடன் தோன்றினார். இந்த விளம்பரம் சூப்பர் பவுல் XLIII ஒளிபரப்பின் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளம்பரம் சாதனை அளவாய் 98 மில்லியன் பார்வையாளர்களிடையே ஒளிபரப்பானது. ”ஃபாரெவர் யங்” பாடலின் ஆரம்ப வரிகளை டிலான் பாடித் துவங்குவார். இதனைத் தொடர்ந்து வில்.ஐ.எம். பாடலின் மூன்றாவது மற்றும் இறுதி பத்திகளின் ஹிப் ஹாப் வகையை செய்வார்.

டிலானின் ஓவியங்கள் மீதான புத்தகமான ட்ரான் பிளாங்க் (1994) ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, தி ட்ரான் பிளாங்க் சீரிஸ் என்ற பெயரில் அவரது கலைப் படைப்புகளின் கண்காட்சி 2007 அக்டோபரில் ஜெர்மனியில் திறக்கப்பட்டது. டிலானின் ஓவியங்கள் மீதான முதல் பொது ஓவியக் கண்காட்சியாகும் இது. கண்காட்சியின் வெளியீட்டில் பாப் டிலான்: தி ட்ரான் பிளாங் சீரிஸ் புத்தகத்தின் வெளியீடும் அரங்கேற்றம் கண்டது. இதில் அந்த வரிசையின் 170 மறுஉருவாக்கங்கள் அடங்கியிருந்தன.

2008 அக்டோபரில், டிலானின் பூட்லெக் சீரிஸ் 8 ஆம் தொகுதியை கொலம்பியா வெளியிட்டது. இரண்டு குறுந்தகடு தொகுப்பு மற்றும் மூன்று குறுந்தகடு பதிப்பு ஆகிய இரண்டு வகையாக 150 பக்க கடின அட்டை புத்தகத்துடன் வெளியிட்டது. ஓ மெர்ஸி முதல் மாடர்ன் டைம்ஸ் வரையான தேர்ந்தெடுத்த இசைமனை இசைத்தொகுப்புகளில் இருந்தான நேரலை நிகழ்ச்சிகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் டேவிட் ப்ரோம்பெர்க் மற்றும் ரால்ஃப் ஸ்டான்லி உடனான இசைத்தட பங்களிப்புகள் மற்றும் கூட்டுப்படைப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தன. இசைத்தொகுப்பின் விலை அமைப்பு - இரண்டு குறுந்தகடு தொகுப்பு 18.99 டாலருக்கும் மூன்று குறுந்தகடு பதிப்பு 129.99 டாலருக்கும் விற்பனை விலை நிர்ணயமானது - சில ரசிகர்களும் வர்ணனையாளர்களும் “ஆளைக் காலி செய்யும் விலை” என்பதாய் புகார் கூற இட்டுச் சென்றது. இந்த வெளியீடு விமர்சகர்களால் பரவலாய் பாராட்டப் பெற்றது. '

டுகெதர் த்ரூ லைஃப் மற்றும் கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட் (2009)

பாப் டிலான் தனது டுகெதர் த்ரூ லைஃப் இசைத்தொகுப்பை ஏப்ரல் 28, 2009 அன்று வெளியிட்டார். பிரெஞ்சு பட இயக்குநர் ஆலிவர் டஹான் தனது புதிய வீதிப் படமான மை ஓன் லவ் சாங் படத்திற்காக ஒரு பாடலை உருவாக்க கோரியபோது, ஆரம்பத்தில் “லைஃப் இஸ் ஹார்டு” என்கிற ஒரே ஒரு தனிப்பாடலைப் பதிவு செய்யும் நோக்கத்தோடு தான் துவங்கியதாகவும், பின் அந்த “இசைத்தட்டு தனது சொந்த திசையை எடுத்துக் கொண்டு விட்டது” என்றும் இசை செய்தியாளரான பில் ஃப்லேனகனுடனான உரையாடலின் போது டிலான் தெரிவித்தார். இது டிலானின் இணையதளத்தில் வெளியானது. இசைத்தொகுப்பின் பத்து பாடல்களில் ஒன்பது பாடல்கள் பாப் டிலான் மற்றும் ராபர்ட் ஹண்டர் இணைந்து எழுதியதாக பெயர் காட்டப்படுகிறது.

இந்த இசைத்தொகுப்பு பெரிய அளவில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் டிலானின் ஏராளமான படைப்புகளில் இது ஒரு சிறு சேர்க்கை தான் என்று பல விமர்சகர்கள் கூறினர். ரோலிங் ஸ்டோன் இதழில் டேவிட் ஃப்ரிக் எழுதினார்: “லவ் அண்ட் தெஃப்ட் அல்லது மாடர்ன் டைம்ஸ் ஆகியவற்றின் உடனடியான செவ்வியல் ஒளி இந்த இசைத்தொகுப்பில் இல்லாதிருக்கலாம். ஆனாலும் இது அங்கங்கு ஏராளமான இடங்களில் நெஞ்சைத் தைப்பதாய் இருக்கிறது.” டிலானது விமர்சகரான ஆண்டி கில் தி இண்டிபெண்டன்ட் டைம்ஸில் எழுதினார்: “இந்த இசைத்தட்டில் டிலான் ஓரளவு ஓய்வான எண்ண ஓட்டத்தில் அவ்வப்போது வந்து போகும் உணர்வுகளை பதிவு செய்யும் திறன் பெற்றிருக்கிறார். அதனால், இந்த இசைத்தொகுப்பு பல மைல்கல்லான தடங்களை கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும், வருடம் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கத்தக்க மிக இயல்பாக அனுபவிக்கத்தக்க இசைத்தொகுப்புகளில் ஒன்றாய் இது இருக்கிறது.

இந்த இசைத்தொகுப்பு வெளியான முதல் வாரத்தில், அமெரிக்காவில் பில்போர்டு 200 வரிசையில் முதலிடத்தை எட்டிப் பிடித்தது. இதனையடுத்து இந்த வரிசையில் முதலிடத்தில் அறிமுகமாகும் வயது முதிர்ந்த கலைஞராக (68 வயது) பாப் டிலான் பெருமை பெற்றார். இங்கிலாந்தின் இசைத்தொகுப்பு வரிசையிலும் இது முதலிடத்தை எட்டியது. நியூ மார்னிங் இசைத்தொகுப்புக்கு 39 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் டிலானின் இசைத்தொகுப்பு வரிசை முதலிடத்தை எட்டியதென்றால் அந்த இசைத்தொகுப்பு இதுவே.

அக்டோபர் 13, 2009 அன்று, டிலான் கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட் என்னும் கிறிஸ்துமஸ் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் “லிட்டில் ட்ரம்மர் பாய்”, “விண்டர் ஒண்டர்லேண்ட்” மற்றும் “ஹியர் கம்ஸ் சாண்டா க்ளாஸ்” ஆகிய நிர்ணயமான கிறிஸ்துமஸ் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த இசைத்தொகுப்பு பொதுவாக சாதகமான விமர்சனங்களைப் பெற்றது. ” இதனை விடவும் உணர்ச்சிவசப்பட்டவராக அல்லது நேர்மையானவராக டிலான் இருந்திருக்க முடியாது என்று குண்டர்ஸென் கூறினார்.

ஸ்ட்ரீட் நியூஸ் செர்வீஸில் வெளியான பேட்டி ஒன்றில், பாடல்களை டிலான் ஏன் நேருக்குநேர் பாணியில் பாடினார் என செய்தியாளர் பில் ஃப்ளேனகன் கேட்டபோது, அதற்கு டிலான் இவ்வாறு பதிலளித்தார்: “அதனை வேறு எந்த வகையிலும் பாடியிருக்க முடியாது. நாட்டுப்புற இசைப் பாடல்களைப் போலவே இந்த பாடல்கள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாய் அமைந்தவை."

நெவர் எண்டிங் டூர்

பாப் டிலான் 
ரோஸ்கில்டே பெஸ்டிவலில் பாப் டிலான் (வலது பக்கம் கீபோர்டுகளுடன் இருப்பவர்), 2006

நெவர் எண்டிங் டூர் ஜூன் 7, 1988 அன்று துவங்கியது. 1990கள் மற்றும் 2000களின் மொத்த காலத்திலும் ஒரு வருடத்திற்கு சுமார் 100 நாட்கள் டிலான் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார் - 1960களில் தங்கள் இசை வாழ்க்கையைத் துவங்கிய பல கலைஞர்களுக்கும் இது ரொம்பவே பெரிய அட்டவணையாகும். 2008 இறுதிக்குள்ளாக, டிலானும் அவரது குழுவும் 2100க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர். டிலானின் இசை நிகழ்ச்சிகள் கணிக்க முடியாதபடி இருக்கும். அவரது ஏற்பாடுகளையும் குரல் அணுகுமுறையையும் ஒவ்வொரு இரவும் மாற்றிக் கொண்டே இருப்பார். இது அவரது ரசிகர்களில் சிலருக்கு அதிருப்தியும் அளிப்பதுண்டு. டிலானின் நிகழ்ச்சிகள் குறித்த திறனாய்வுரீதியான கருத்து பிளவுபட்டே உள்ளது. தனது செறிவான கருத்தாழமிக்க பாடல்களை வெற்றிகரமாக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வழியை டிலான் கண்டறிந்திருப்பதாக ரிச்சர்டு வில்லியம்ஸ் மற்றும் ஆண்டி கில் ஆகிய விமர்சகர்கள் வாதிடுகின்றனர். மற்றவர்களோ, “மாபெரும் பாடல் வரிகளை இவர் மென்று, கடித்து, துப்பி மொத்தத்தில் புரிந்து கொள்ளவியலாமல் பண்ணி விடுகிறார்” என்று இவரது குரல் பாணியை விமர்சிப்பதோடு, ரசிகர்களுடன் கலப்பதில் அவருக்கு ஆர்வமின்றி இருப்பதையும் விமர்சனம் செய்கின்றனர்.

2010 துவக்கத்தில், டிலான் மார்ச் மற்றும் ஏப்ரலில் ஆசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. ஜப்பான் சுற்றுப்பயணம், மற்றும் பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், தைவான் மற்றும் தென் கொரியா ஆகிய இடங்களிலான கச்சேரிகளை இந்த அட்டவணை அடக்கியிருக்கும்.

சொந்த வாழ்க்கை

குடும்பம்

டிலான் சாரா லௌண்ட்ஸை நவம்பர் 22, 1965 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் முதல் குழந்தை ஜெஸி பைரன் டிலான் ஜனவரி 6, 1966 அன்று பிறந்தது. அதன்பின் அவர்களுக்கு அனா லீ; சாமுவேல் இஸாக் ஆப்ரஹாம், மற்றும் ஜேகப் லூக் ஆகிய இன்னும் மூன்று குழந்தைகள் பிறந்தன. சாராவின் முந்தைய திருமணம் மூலமான மரியா லவுண்ட்ஸ் என்னும் பெண்பிள்ளையையும் டிலான் தத்தெடுத்தார். அக்டோபர் 21, 1961 அன்று பிறந்த இவர் இப்போது இசைக்கலைஞர் பீட்டர் ஹிமல்மேனை திருமணம் முடித்துள்ளார். 1990களில் இவரது மகன் ஜேகப் டிலான் தி வால்ஃபிளவர்ஸ் என்னும் இசைக்குழுவின் தலைமைப் பாடகராக பிரபலமுற்றார். ஜெஸி டிலான் திரைப்பட இயக்குநராகவும் வெற்றிகரமான தொழிலதிபராயும் இருக்கிறார். பாப் மற்றும் சாரா டிலான் ஜூன் 29, 1977 அன்று விவாகரத்து செய்து கொண்டனர்.

1986 ஜூன் மாதத்தில், டிலான் தனது வெகுநாள் பின்புலப் பாடகரான கரோலின் டென்னிஸை (பல சமயங்களில் தொழில்முறையாக கரோல் டென்னிஸ் என அறியப்படுகிறார்) திருமணம் செய்தார். அவர்களது பெண் குழந்தையான டிஸைரி கேப்ரியல் டென்னிஸ்-டிலான் ஜனவரி 31, 1986 அன்று பிறந்தார். இந்த ஜோடி 1992 அக்டோபர் மாதத்தில் விவாகரத்து செய்தது. ஹோவார்டு சௌனெஸ் எழுதிய டௌன் தி ஹைவே: தி லைஃப் ஆஃப் பாப் டிலான் என்னும் டிலான் வாழ்க்கை வரலாறு 2001 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் வரை இவர்களது திருமணம் மற்றும் குழந்தை எல்லாம் நெருங்கியவர்களுக்குள் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகசியமாகவே இருந்தது.

மத நம்பிக்கைகள்

ஹிபிங்கில் வளர்ந்த நிலையில், டிலானும் அவரது பெற்றோரும் அந்த பகுதியின் சிறிய ஆனால் நெருக்கமாய் பின்னப்பட்ட யூத சமுதாயத்தின் ஒரு பாகமாக இருந்தனர். ஆயினும், 1970களின் பிற்பகுதி மற்றும் 80களின் ஆரம்ப பகுதிகளில், பாப் டிலான் வெளிப்படையாக கிறிஸ்தவத்திற்கு மாறினார். 1979 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, கலிபோர்னியாவின் ரெஸிடாவில் உள்ள வினியார்டு ஸ்கூல் ஆஃப் டிசிபிள்சிப்பில் விவிலிய படிப்பு வகுப்புகளில் டிலான் பங்குபெற்றார்.

1984வாக்கில், டிலான் திட்டமிட்டு தன்னை “மறுபிறப்பு” முத்திரையில் இருந்து விலக்கிக் கொண்டார். ரோலிங் ஸ்டோன் இதழின் குர்ட் லோடரிடம் பேசுகையில் அவர் கூறினார்: “நான் மீண்டும் பிறந்ததாய் ஒரு போதும் நான் கூறியதில்லை.அது ஊடக வார்த்தை. நான் ஒரு அறிவொணாவாதியாக இருந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. எப்போதுமே ஒரு உச்ச சக்தி உண்டு என்றும், இது உண்மை உலகம் அல்ல, வருவதற்கான ஒரு உலகம் இருக்கிறது என்றும் நான் எப்போதுமே சிந்தித்து வந்திருக்கிறேன்.”

கிறிஸ்தவ இசைத்தொகுப்புகளின் தொடர்ச்சிக்குப்பின், டிலானின் மதநம்பிக்கை ஆய்வுக்குரிய ஒரு பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செப்டம்பர் 28, 1997 அன்று வெளியான பேட்டி ஒன்றில், செய்தியாளர் ஜோன் பரெலெஸ் கூறுகையில், “எந்த ஸ்தாபகமான மதத்தையும் இப்போது தான் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதாய் டிலான் கூறுகிறார்” என்றார்.

கடந்த 20 வருடங்களில் சபாத் லுபாவிட்ச் இயக்கத்தின் ஒரு ஆதரவாளராய் டிலான் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார். இதனையடுத்து, பல்வேறு சபாத் கூட்டங்களில் விடுமுறை நாள் சேவைகளிலும் டிலான் ஒரு சில முறைகள் “தலைகாட்டியிருக்கிறார்”.

டிலான் தனது ஸ்தோத்திர இசைத்தொகுப்புகளில் இருந்தான பாடல்களை தொடர்ந்து கச்சேரிகளில் பாடி வந்திருக்கிறார். அவ்வப்போது பாரம்பரிய மதப் பாடல்களையும் பாடுவார். தனது மத நம்பிக்கை குறித்து அவ்வப்போது கருத்துகளையும் அவர் கூறி வந்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டில் 60 மினிட்ஸ் பேட்டியில் எட் பிராட்லி உடன் பேசும்போது, “பொய் சொல்லும்போது நீங்கள் ஒன்று உங்களுக்காய் இரண்டாவதாய் கடவுளுக்காய் என இரண்டு முறை யோசிக்க வேண்டும்” என்றார்.

2009 அக்டோபர் மாதத்தில், டிலான் கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இந்த இசைத்தொகுப்பில் கிறிஸ்தவ பாடல்கள் இடம்பெற்றிருந்தன. “ஓ கம் ஆல் யே ஃபெய்த்புல்” மற்றும் “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லேகம்” ஆகிய பாரம்பரிய பாடல்களும் இதில் இடம்பெற்றிருந்தன. இந்த இசைத்தொகுப்பு விற்பனையில் இருந்தான டிலானின் ராயல்டி பணம் அமெரிக்காவில் ஃபீடிங் அமெரிக்கா, இங்கிலாந்தில் க்ரைஸிஸ், மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய தொண்டு அமைப்புகளுக்கு உதவியது.

பாரம்பரியம்

இசைரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக பாப் டிலான் விவரிக்கப்பட்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டில் ரோலிங் ஸ்டோன் இதழின் “எல்லா காலத்திற்குமான மிகப்பெரும் கலைஞர்கள்” பட்டியலில் இவருக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த தனிநபர் கலைஞர் இவர் தான். டிலான் வாழ்க்கைவரலாற்றை எழுதிய ஹோவார்டு ஸௌனெஸ் அதனை விடவும் உயர்ந்த இடத்தில் அவரை இருத்தினார். “கலையில் நுட்பமான திறனுற்ற பிரம்மாண்டமான மனிதர்கள் இருக்கின்றனர் - மோசார்ட், பிகாசோ, ஃபிராங்க் லாயிட் ரைட், ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ் போன்றோர். டிலான் இந்த கலைஞர்களின் வரிசையில் இடம்பெறும் தகுதியுற்றவராய் இருக்கிறார்."

ஆரம்பத்தில் வுடி குத்ரியின் பாடல்கள் மற்றும் ராப்ர்ட் ஜான்சனின் பாடல்வகையில் தனது பாணியை அமைத்துக் கொண்டிருந்த டிலான், 60களின் ஆரம்ப காலத்து நாட்டுப்புற இசைக்கு “செவ்வியல் இலக்கியம் மற்றும் கவிதையின் அறிவுஜீவித்தனத்தை”அளித்து அவற்றில் நவீனப்பட்ட பாடல்வரி நுட்பங்களை அதிகமாய் சேர்த்தார். பால் சைமன் கூறுகையில் டிலானின் ஆரம்ப தொகுப்புகள் நாட்டுப்புற பாடல் வகைகளை ஏறக்குறைய வென்றிருந்ததாக கூறினார்:”[டிலானது] ஆரம்ப பாடல்கள் மிகுந்த செறிவுடன் இருக்கும். ‘ப்ளோயிங்’ இன் தி விண்ட்’ ஒரு வலிமையான மெல்லிசையைக் கொண்டிருக்கும். நாட்டுப்புற பின்னணியிடையே அவர் தன்னை மிகவும் விரிவுபடுத்திக் கொண்டார். கொஞ்ச காலத்திற்கு தன் பாடல்களில் புகுத்திக் கொண்டார்.”

மைக் மார்குஸியின் வார்த்தைகளில்: 1964 ஆம் ஆண்டின் பிந்தைய காலத்திற்கும் 1966 கோடை காலத்திற்கும் இடையில், டிலான் தனித்துவமாய் தோன்றக் கூடியதொரு படைப்பு அங்கத்தை உருவாக்கினார். அதிர்ச்சிப்படுத்துவதற்கும் ஆறுதல்படுத்துவதற்குமான சக்தியை இந்த இசைத்தொகுப்புகளின் அழகு தக்க வைத்துக் கொண்டிருக்கிறது."

டிலானின் வரி நுட்பத்தின் ஒரு பாரம்பரியமாக அவரது பாடல்வரிகளுக்கு இலக்கிய விமர்சகர்கள் அதிகமாய் கவனம் செலுத்துவதைக் குறிப்பிடலாம். டிலானின் படைப்பு குறித்து ஒரு 500 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் கிறிஸ்டோபர் ரிக்ஸ் அவரை எலியட், கீத்ஸ் மற்றும் டென்னிசனின் வரிசையில் இருத்தினார். அத்துடன் டிலான் இத்தகைய கடும் வேலைவாங்கும் ஆய்வறிக்கைக்கு தகுதியானவர் தான் என்றும் தெரிவித்தார். முன்னாள் பிரித்தானிய கவிஞரான ஆண்ட்ரூ மோஷன் பாப் டிலானின் பாடல் வரிகள் பள்ளிகளில் படிக்கப் பெற வேண்டும் என்று வாதிட்டார். 1996 ஆம் ஆண்டு முதல், டிலானுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்குவதற்கு சுவீடன் அகாதமியில் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சில வழிகளில் டிலானின் குரல் அவரது பாடல்வரிகளைப் போலவே திடுக்கிடச் செய்வதாய் இருந்தது. நியூயார்க் டைம்ஸ் விமர்சகர் ராபர்ட் ஷெல்டன் டிலானின் ஆரம்ப கால குரல் குறித்து விவரிக்கையில், “கரகரப்பான டேவ் வான் ரோங்கினது குரல் போன்று சரளையில் தீட்டியது போல் இருக்கும்.” சாம் குக்கிடம் இளம் பாபி வோமேக் தனக்கு டிலானின் குரல் பாணி பிடிபடவில்லை என்று கூறுகையில், அதற்கு குக், “இப்போதிருந்து அந்த குரல் எத்தகைய இனிமையாய் இருக்கிறது என்று பார்க்கக் கூடாது. இந்த குரல் உண்மையைச் சொல்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டு அதனைப் பார்க்க வேண்டும்” என்று விளக்கமளித்தார். ரோலிங் ஸ்டோன் இதழ் தங்களது 2008 “அனைத்து காலத்திற்குமான 100 மாபெரும் பாடகர்கள்” பட்டியலில் டிலானுக்கு ஏழாவது இடம் அளித்தது. போனோ இது குறித்து கருத்து கூறினார்: “தனது பாடல் கலையில் டிலான் ஏராளமான ஆளுமைகளை முயன்று பார்த்திருக்கிறார். ஏனென்றால் அந்த வழியில் தான் அவர் சொல்ல வரும் விஷயத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.”

டிலானின் பாதிப்பு பல்வேறு இசைவகைகளிலும் உணரத்தக்கதாய் இருக்கிறது. எட்னா குண்டர்ஸென் யுஎஸ்ஏ டுடே யில் கூறினார்: “டிலானின் இசை டிஎன்ஏ 1962 முதல் ஏறக்குறைய பாப்பின் ஒவ்வொரு சிறிய திருப்பத்தையும் அறிவித்து வந்திருக்கிறது.” பல இசைக்கலைஞர்களும் டிலானின் பாதிப்பு குறித்து சாட்சியமளித்துள்ளனர். உதாரணமாக, டிலானைப் பாராட்டிக் கூறும் ஜோ ஸ்ட்ரம்மர் அவர் “பாடல்வரி, மெட்டு, அர்த்த செறிவு, ஆன்மா, ராக் இசையின் ஆழம் இவற்றுக்கான ஒரு வார்ப்புருவை உருவாக்கித் தந்ததாக” குறிப்பிடுகிறார். டிலானின் முக்கியத்துவத்திற்கு ஒப்புதலளித்த மற்ற பெரிய இசைக் கலைஞர்களாக ஜான் லெனான், பால் மெக்கார்ட்னி, நீல் யங், ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், டேவிட் போவி, ப்ரையன் ஃபெரி, ஸைட் பரெட், நிக் கேவ், பாட்டி ஸ்மித், ஜானி மிட்செல், கேட் ஸ்டீவன்ஸ், மற்றும் டாம் வெயிட்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அதிருப்தியாளர்களும் உண்டு. பாப் கலாச்சாரத்திற்குள் ஒரு புதிய அர்த்தச்செறிவை அளிப்பதற்கு டிலான் பரவலாய் பாராட்டப் பெறுவது குறித்து, விமர்சகர் நிக் கோன் ஆட்சேபம் தெரிவித்தார்: “டிலானின் லட்சியத்தை என்னால் ஒரு துறவியினுடையதாக, இளம் வயது இறைத்தூதருடையதாக, இன்னும் அவர் போற்றப்படும் பல்வேறு விதங்களிலுமாக காண முடியவில்லை. சுய விளம்பரத்துக்கான பெரிய வரத்துடனான ஒரு சிறு திறமைசாலி என்கிற வகையில் தான் அவரை நான் பார்க்கிறேன்.” இதேபோல், ராக் நட்சத்திரத்தின் ஆளுமையை டிலான் மாற்றி விட்டதாக ஆஸ்திரேலிய விமர்சகர் ஜேக் மார்க்ஸ் தெரிவித்தார்: “டிலான் தான் முரட்டுத்தனமான, போலி மூளையுடன் தோற்றமளிப்பதான விதத்தை கண்டுபிடித்தார் என்பதையோ, அதுமுதல் அது தான் ராக் இசையில் ஆதிக்கம் செலுத்தும் பாணியாக இருக்கிறது, மிக் ஜேகர் முதல் எமினெம் வரை டிலானின் கையேட்டில் இருந்து தான் தங்களைக் கற்பித்துக் கொள்கிறார்கள் என்பதையோ யாரும் மறுக்க முடியாது.”

1960களில் டிலானின் பாரம்பரியம் என்பது வெகுஜன இசையில் அறிவுஜீவித்தன லட்சியங்களைக் கொண்டு வருவதாக இருந்தது. அப்படித் தான் டிலானும் முன்னெடுத்தார் என்றால், இன்றோ அவர் ஆரம்பத்தில் எழுச்சியுற்ற நாட்டுப்புறக் கலாச்சாரத்தை மாபெரும் வகையில் விரிவுபடுத்திய ஒருவராகத் தான் விவரிக்கப்படுகிறார். தி வில்லேஜ் வாய்ஸில் ஜெ. ஹோபெர்மேன் எழுதியது போல, “எல்விஸ் பிறக்காமலே இருந்திருந்தால் கூட, வேறு யாரோ ஒருவர் நிச்சயமாக ராக் அண்ட் ரோல் இசையை இந்த உலகத்திற்கு நிச்சயமாக கொண்டு வந்திருப்பார். ஆனால் பாப் டிலான் விஷயத்தில் அவ்வாறு கூற முடியாது. ”

குறிப்புகள்

வெளி இணைப்புகள்



Tags:

பாப் டிலான் வாழ்க்கையும் தொழிலும்பாப் டிலான் நெவர் எண்டிங் டூர்பாப் டிலான் சொந்த வாழ்க்கைபாப் டிலான் பாரம்பரியம்பாப் டிலான் குறிப்புகள்பாப் டிலான் வெளி இணைப்புகள்பாப் டிலான்நாட்டுப்புற இசைமனித உரிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் 108 திருநாமங்கள்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகாளமேகம்தேசிக விநாயகம் பிள்ளைஆகு பெயர்அன்னை தெரேசாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஆறுமுக நாவலர்நாயன்மார்லியோனல் மெசிபழனி பாபாதினகரன் (இந்தியா)கலித்தொகைநம்மாழ்வார் (ஆழ்வார்)விருதுநகர் மக்களவைத் தொகுதிஉஹத் யுத்தம்தேனீதமிழ்ஒளிமதீனாகுலுக்கல் பரிசுச் சீட்டுமுதலாம் இராஜராஜ சோழன்ஜவகர்லால் நேருசிங்கப்பூர்குறிஞ்சிப் பாட்டுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழ்த்தாய் வாழ்த்துதங்கம் தென்னரசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்குருதிப்புனல் (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)நபிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்இரச்சின் இரவீந்திராஇடைச்சொல்வினைச்சொல்மயில்அயோத்தி இராமர் கோயில்தீரன் சின்னமலைசுலைமான் நபிசூரிஈகைமாணிக்கம் தாகூர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)மகாபாரதம்திருக்குர்ஆன்108 வைணவத் திருத்தலங்கள்நாடாளுமன்ற உறுப்பினர்பாரதிய ஜனதா கட்சிமு. வரதராசன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சீறாப் புராணம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபாண்டவர் பூமி (திரைப்படம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)பரிவர்த்தனை (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்காமராசர்முத்தரையர்விசயகாந்துஆய்த எழுத்துவே. செந்தில்பாலாஜிமூன்றாம் பானிபட் போர்தட்டம்மைமுதற் பக்கம்சூரரைப் போற்று (திரைப்படம்)கொன்றை வேந்தன்வாதுமைக் கொட்டைகாடுவெட்டி குருஓ. பன்னீர்செல்வம்நீக்ரோகருத்தரிப்புசேரர்விநாயகர் அகவல்சுந்தரமூர்த்தி நாயனார்கண்ணகிஅகநானூறுகிராம ஊராட்சி🡆 More