டேவிட் ஏய்மிசு: பிரித்தானிய அரசியல்வாதி

சர் டேவிட் ஏய்மிசு (Sir David Anthony Andrew Amess; /ˈeɪmɪs/; 26 மார்ச் 1952 – 15 அக்டோபர் 2021) பிரித்தானிய அரசியல்வாதி ஆவார்.

இவர் 1997 முதல் 2021 இல் கொலை செய்யப்படும் வரை பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

டேவிட் ஏய்மிசு
David Amess
டேவிட் ஏய்மிசு: பிரித்தானிய அரசியல்வாதி
நாடாளுமன்ற உறுப்பினர்
for சௌத்தெண்டு மேற்கு
பதவியில்
1 மே 1997 – 15 அக்டோபர் 2021
முன்னையவர்பவுல் சானன்
நாடாளுமன்ற உறுப்பினர்
for பாசில்டன்
பதவியில்
9 சூன் 1983 – 8 ஏப்ரல் 1997
முன்னையவர்ஆர்வி புரொக்டர்
பின்னவர்அஞ்செலா சிமித்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
டேவிட் அந்தனி ஆண்ட்ரூ ஏய்மிஸ்

(1952-03-26)26 மார்ச்சு 1952
பிளைசுட்டோ, எசெக்சு, இங்கிலாந்து
இறப்பு15 அக்டோபர் 2021(2021-10-15) (அகவை 69)
லேய், எசெக்சு, இங்கிலாந்து
காரணம் of deathகத்திக்குத்து
அரசியல் கட்சிபழமைவாதக் கட்சி
துணைவர்யூலியா ஆர்னல்டு (தி. 1983)
பிள்ளைகள்5
முன்னாள் கல்லூரிபோர்னிமவுத் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
விருதுகள்சேர் (2015)
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இங்கிலாந்து, எசெக்சு நகரில் பிறந்து வளர்ந்தவர் ஏய்மிசு. பொருளியலில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற இவர் சிறிது காலம் ஆசிரியராகவும், ஆட்சேர்ப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். 1982 இல் இலண்டன் ரெட்பிர்ட்சு உள்ளூராட்சித் தொகுதியின் உறுப்பினராக பழமைவாதக் கட்சியில் இருந்து தெரிவானார். பின்னர் 1983 இல் பாசில்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். 1997 இல் சௌத்தென்டு மேற்குத் தொகுதியில் இருந்து உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார்.

அரசாங்கத்தில், மைக்கேல் போர்ட்டிலோவின் நாடாளுமன்ற தனிப்பட்ட செயலாளராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் இவர் ஒரு பின்வரிசை உறுப்பினராக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார். பல தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில் பணியாற்றினார். இடமகல் கருப்பை அகப்படலத்தினால் பாதிக்கப்பட்டோர், விலங்கு நலம் ஆகியவற்றில் இவர் தனது ஆதரவைத் தெரிவித்தார். நரி வேட்டை மீதான தடையை ஆதரித்தார்.

இவரது அரசியல் கருத்துக்கள் சமூகப் பழமைவாத மற்றும் மரண தண்டனை மற்றும் பிரெக்சிட்டு போன்றவற்றிற்கான ஆதரவை உள்ளடக்கியது. அவர் கத்தோலிக்கராக இருந்து, கருக்கலைப்பை எதிர்த்தார்.

படுகொலை

2021 அக்டோபர் 15 அன்று, அவரது தொகுதியில் உள்ள மெதடித்த தேவாலயம் ஒன்றில் தனது தொகுதி மக்களுடன் கலந்துரையாடுவதற்காக சென்ற பொது, அங்கு அவர் இனந்தெரியாத ஒருவனால் கத்தியால் பல முறை குத்தப்பட்டார். அங்கேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது படுகொலை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். கொலையாளியை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உதவி:IPA/Englishஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்ஐக்கிய இராச்சியம்கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரெட் (2002 திரைப்படம்)வண்ணம் (யாப்பு)காம சூத்திரம்வேலூர்க் கோட்டைமுத்தரையர்தற்கொலை முறைகள்தரணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சங்கம் (முச்சங்கம்)அகநானூறுஆபிரகாம் லிங்கன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வராகிகளஞ்சியம்மாசாணியம்மன் கோயில்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்மஞ்சள் காமாலைசீனாவிஜயநகரப் பேரரசுகுப்தப் பேரரசுபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)கேதா மாவட்டம்மயில்ஜன கண மனதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)கொடைக்கானல்மத கஜ ராஜாஆல்கள்ளழகர் கோயில், மதுரைநயினார் நாகேந்திரன்வைணவ சமயம்விசயகாந்துவில்லியம் சேக்சுபியர்இலட்சத்தீவுகள்திருநாவுக்கரசு நாயனார்தமன்னா பாட்டியாபகவத் கீதைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புசோளம்நாயன்மார் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)வடிவேலு (நடிகர்)ஒற்றைத் தலைவலிஅறுபடைவீடுகள்கணையம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)இஸ்ரேல்தற்குறிப்பேற்ற அணிவைதேகி காத்திருந்தாள்வாணிதாசன்வெப்பநிலைகருக்காலம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்யூடியூப்வில்லுப்பாட்டுரோசுமேரிசைவத் திருமுறைகள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சிறுநீரகம்சாதிமூவேந்தர்கார்த்திக் (தமிழ் நடிகர்)டேனியக் கோட்டைஏலாதிவாசுகி (பாம்பு)தேர்மட்பாண்டம்மகரம்ஜல் சக்தி அமைச்சகம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்ஐக்கிய நாடுகள் அவை🡆 More