டேவிடு யூம் (David Hume) (பிறப்பு: மே 7, 1711; இறப்பு: ஆகத்து 25, 1776) எசுக்காத்துலாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், வரலாற்றாசிரியர், பொருளாதார அறிஞர், எழுத்தாளர் ஆவார்.
அவரது மெய்யியல் பாணி "புலனறிவு மெய்யியல்" (philosophical empiricism) மற்றும் "ஐயுறு மெய்யியல்" (philosophical skepticism) என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக யூம் கருதப்படுகிறார். மேலும், எசுக்காத்துலாந்து அறிவொளி இயக்க வழிகாட்டியாகவும் அவர் போற்றப்படுகிறார். பிரித்தானிய புலனறிவு மெய்யியல் என்னும் சிந்தனை வகையாளராக, டேவிடு யூம், ஜான் லாக், ஜோர்ஜ் பார்க்லி, மற்றும் சில மெய்யியலார்களோடு இணைத்துக் குறிப்பிடப்படுவதுண்டு.
டேவிடு யூம் | |
---|---|
டேவிடு யூம் | |
பிறப்பு | எடின்பரோ, எசுக்காத்துலாந்து | 7 மே 1711
இறப்பு | 25 ஆகத்து 1776 எடின்பரோ, எசுக்காத்துலாந்து | (அகவை 65)
படித்த கல்வி நிறுவனங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் |
காலம் | 18ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | எசுக்காத்துலாந்து அறிவொளிக் காலம்; இயற்கை மெய்யியல்; ஐயுறு மெய்யியல்; புலனறிவு மெய்யியல்; பயன் மெய்யியல்; செவ்வியத் தாராளவியல் |
முக்கிய ஆர்வங்கள் | அறிமுறை மெய்யியல்; மீவியற்பியல்; உள மெய்யியல்; அறவியல்; ஆட்சி மெய்யியல்; அழகியல்; சமய மெய்யியல்; செவ்வியப் பொருளாதாரம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | காரிய-காரண வாதம்; ஏறுமுக வாதம்; கருத்து இசைவுமுறை வாதம்; இருப்பது-இருக்கவேண்டியது பற்றிய சிக்கல்; பயன்பாட்டு வாதம்; மானிட அறிவியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
This article uses material from the Wikipedia தமிழ் article டேவிடு யூம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.