ஜான் வெயின்

மாரியோன் மிட்செல் மொரிசன் (Marion Mitchell Morrison, மே 26, 1907 – சூன் 11, 1979), இயற்பெயர் மாரியோன் ராபர்ட் மொரிசன், பரவலாக தமது திரைப்படப் பெயரான ஜான் வெயின் (John Wayne) என அறியப்பட்ட இவர் ஓர் புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்) மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

1969 ஆம் ஆண்டில் வெளியான ட்ரூ கிரிஃப்ட் திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்றார். முப்பது ஆண்டுகளாக இவரின் திரைப்படங்கள் வியாபார ரீதியாக நல்ல வசூலைப் பெற்றுத் தந்தது.

ஜான் வெயின்
ஜான் வெயின்
வேக் ஆஃப் த ரெட் விட்ச் படத்தில் வெயின் (1948)
இயற் பெயர் மாரியோன் ராபர்ட் மொரிசன்
பிறப்பு (1907-05-26)மே 26, 1907
அயோவா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
இறப்பு சூன் 11, 1979(1979-06-11) (அகவை 72)
லாஸ் ஏஞ்சல்ஸ்,கலிபோர்னியா, U.S.
வேறு பெயர் மாரியோன் மிட்செல் மொரிசன்; ட்யூக்; ட்யூக் மொரிசன்
தொழில் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1926–1976
துணைவர் ஜோசபின் அலிசியா சேன்ஸ்(1933–1945)
எஸ்பிரென்சா பௌர்(1946–1954)
பிலார் பாலட்(1954–1979)
இணையத்தளம் http://www.johnwayne.com

இவர் அயோவா, மடிசன் மாகாணத்திலுள்ள வின்டரெஸ்ட் எனும் நகரத்தில் பிறந்தார். தெற்கு கலிபோர்னியாவில் வாழ்ந்தார். 1925 இல் கிளெண்டல் உயர் வகுப்பில் தலைவராக இருந்தார். உடல்சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான கால்பந்து (சாக்கர்) உதவித் தொகை பெறும் வாய்ப்பை இழந்தார். :63–64 பின் இவர் உள்ளூர் திரைப்பட படமனையில் பணியில் சேர்ந்தார். துவக்கத்தில் இவர் பாக்ஸ் திரைப்பட நிறுவனத்தின் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். 1930 ஆம் ஆண்டில் ரவுல் வால்ஸ் இயக்கிய தெ பிக் ட்ரைல் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பின் குறைந்த பட்ச நிதியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் (பி திரைப்படம்) 1930 ஆம் ஆண்டு முழுவதும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் தோன்றினார். இதில் பெரும்பாலானவைகள் நவீன வகையினைச் சார்ந்தவை ஆகும்.

வெயினின் திரைவாழ்க்கை 1939 ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி பெறத் துவங்கியது. அந்த ஆண்டில் ஜான் ஃபோர்ட் இயக்கிய ஸ்டேஜ்கோச் திரைப்படம் அவரை ஒரு நட்சத்திர நடிகராக மாற்றியது. 1948 இல் ரெட் ரிவர், 1956 இல் தெ சர்ச்செர்ஸ், 1952 இல் தெ கொயட் மேன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம்பரவலாக அறியப்படுகிறார். இவரின் இறுதித் திரைப்படம் 1976 இல் வெளியான தெ சூட்டிஸ்ட் ஆகும். இதில் புற்று நோய் தாக்கப்பட்ட ஒரு முதியவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் பல ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி ஏப்ரல் 9, 1979 இல் நடைபெற்ற அகாதமி விருது வழங்கும் விழா ஆகும்.

அமெரிக்க திரைப்படக் கழகம் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 100 கலைஞர்களில் பதின்மூன்றாவதாக இவரைக் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் ஹாரிஸ் வாக்கெடுப்பில் அமெரிக்காவின் மக்கள் விரும்பும் திரைக்கலைஞர்களில் மூன்றாவதாகவும் மறைந்த ஒரே கலைஞராகவும் உள்ளார்.

அரசியலில் அமெரிக்க இருத்தலியத்தை ஆதரித்த ஜான் வெயின் 1950களில் பொதுவுடமைக்கு எதிரான கொள்கைகள் கொண்டிருந்தார். இவர் 1979 ஆம் ஆண்டில் வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

ஜான் வெயின் 
விண்டெரெஸ்ட்[தொடர்பிழந்த இணைப்பு], அயோவாவில் உள்ள வெயினின் இல்லம். இங்குதான் வெயின் பிறந்தார்

வெய்ன் மே 26, 1907 இல் வெண்டெரெஸ்ட், அயோவாவாவில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மரியான் ராபர்ட் மோரிசன் ஆகும். வின்டெரெஸ்ட் மடிசோனியம் எனும் உள்ளூர் இதழானது மே 30, 1907 நாளைய பதிப்பின் 4 ஆவது பக்கத்தில் வெயின் பிறக்கையில் 6 கிலோ எடை இருந்தார் எனத் தெரிவித்திருந்தது. இவரின் பெற்றோர் வெயினின் மத்தியப் பெயரான ராபர்ட் என்பதனை மிட்செல் என மாற்றினர். ஏனெனில் அந்தப் பெயரை அவரின் தம்பிக்கு அந்தப் வைத்தனர்.:8–9 வெயினின் தந்தை கிளைட் லியோனர்ட் மோரிசன் , அமெரிக்க உள்நாட்டுப் போரின் ஆரறிவாளர் மரியன் மிட்செல் மோரிசனின் மகன் ஆவார்.

வெயினின் குடும்பம் கலிபோர்னியாவிலுள்ள பாம்டேலுக்கு குடியேறினார். பின் 1916 இல் கிளென்டேலுக்கு சென்றனர்.அங்குதான் இவரின் தந்தை மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். வெயின் அங்குள்ள கிளெண்டன் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பள்ளியின் கால்பந்து (சாக்கர்) அணியில் இருந்தார். மேலும் பள்ளி இதழின் விளையாட்டுப் பிரிவின் தலைவராக இருந்தார்.

திரைப்பட வாழ்க்கை

ஜான் வெயினின் திருப்புமுனைக் கதாபாத்திரம் இயக்குனர் ஜான் ஃபோர்டின் கிளாசிக்கான ஸ்டேஜ்கோச்சில் (1939) வந்தது. ஹாரிஸ் என்னும் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் மிக பிரபலமான நடிகர் யார் என்ற வாக்கு எடுப்பில் ஆண்டு தோறும் இடம் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமை இவருக்கு உண்டு அது மட்டும் இன்றி இறப்புக்கு பின்னும் அந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகர் இவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது .வேயின் இந்த பட்டியலில் முதல் பத்து. இடத்தில் இவர் தொடர்ச்சியாக 1994ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகள் வந்தார் .இறப்புக்கு பிறகும் 15 வருடம் இந்த இடத்தை தக்க வைத்தவர் இவர் .1926 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை இவர் 170 படங்களில் மிக சிறப்பாக நடித்து அமெரிக்காவின் மிக பெரிய திரை நட்சத்திரமாக உருவெடுத்தார். 1939 ஆம் ஆண்டு இவர் நடித்த கோச் வண்டி (stagecoach) என்ற திரைப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது .இந்த திரைபடத்தின் மூலம் தான் இவர் மிக பெரிய நடிகர் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப் பட்டார். 1940ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் கடல்பயணத்தில் அமைவது போன்ற படங்களில் பெரிதும் நடித்தார். 1960ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் படதயாரிப்பில் தீவரமாக இறங்கி இருந்தார் .படங்களை தயாரிப்பதிலும் இயக்குவதிலும் பெரும் ஆர்வம் கொண்டு செயல்பட துவங்கினார் .இவர் தயாரித்த பல படங்கள் இரண்டாம் உலகப் போரை பற்றியும் கவ்பாய் பாணியில் அமைந்த மேற்கத்திய படங்களாகவும் அவை அமைந்தன வேயின் 1926ஆம் ஆண்டு முதல் 1934ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகள் தந்து படங்களிலும் தான் நடித்த படங்களிலும் கால்பந்தாட்டம் பற்றி எதாவது ஒரு செய்தி, ஒரு கதாபத்திரம் அல்லது இவரே கால்பாந்தாட்டக்காரர் ஆக நடித்து இருப்பார்

1926ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு படத்தில் கால்பந்தாட்ட வீரர் ஆக நடித்து இருப்பார். 1929 ஆம் அண்டி வெளிவந்த ஒரு கருப்பு கைகடிகாரம் எனும் திரைப்படத்தில் முதலாம் உலக போரின் போது இந்தியாவில் இருக்கும் ஒரு பிரித்தானிய ராணுவம் பற்றிய ஒரு சிறந்த படமாகும் . 1930ஆம் ஆண்டு வெளிவந்த பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ற படம் இவர் நடித்த முதல் நிர்மூழ்கி கப்பல் பற்றிய கதை கொண்ட படம் 1931ஆம் ஆண்டு இவர் நடித்த ஆண்களை உருவாக்குபவர் என்ற படத்தில் இவர் கால்பந்து விளையாட்டு பற்றி நடித்த படங்களில் இதுவும் ஒன்று . 1937ஆம் ஆண்டு இவர் நடித்த படமான கலிபோர்னியா பயணம் என்ற படத்தில் ஒரு பள்ளியின் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து பின்பு மிக பெரிய சரகுவண்டியின் தலைவர் ஆக ஆகி விடுவார். இவர் நடித்த படங்களில் சில ஒரு ரீல் மற்றும் இரண்டு ரீல் கொண்டதாக இருந்தது இவர் தயாரிப்பாளராக மாறியபின் 1947ஆம் ஆண்டு தனது முதல் படத்தை தயார் செய்தார். இவர் ஒரு சில ஆவணப்படங்களையும் எடுத்தார். 1973ஆம் ஆண்டு இவர் நடித்த தொடர்வண்டி கொள்ளையர்கள் என்ற திரைப்படம் இவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது 1976ஆம் ஆண்டு இவர் நடித்த வெளிவந்த தி ஷூடிஸ்ட் இவர் நடித்த கடைசி திரைப்படமாகும் இந்த படத்தை இயக்கியவர் டான் சிகள். வியட்நாம் போரை ஆதரித்து இவர் நடித்த தி கிரீன் பெரேத்ஸ் என்ற படத்தை இயக்கியவர்களில் இவருமொருவர் ஆவர். இந்த படம் ராபின் மூரே என்பவரின் புதினத்தை தழுவி எடுக்க பட்டது ஆகும்.

பெற்ற விருதுகள்

அகாடமி விருது

வெயின் மூன்று முறை அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யபட்டார் .இரண்டு முறை சிறந்த கதாநாயகனுக்காக பரிந்து உரைக்கப்பட்டார். ஒரு முறை சிறந்த தயாரிப்பாளர்காக பரிந்து உரைக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் நடித்த ட்ரூ கிஃப்ட் என்ற படத்திற்காக இவருக்கு இது அளிக்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருது

1970 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டன் குளோப் விருது இவர் நடித்த true grit என்ற படத்திற்காக இவருக்கு இது அளிக்க பட்டது.

வெண்கல பந்து விருது

1973ஆம் ஆண்டு இவருக்கு வெண்கல பந்து விருது வழங்க பட்டது

அரசியல் வாழ்வு

தன் வாழ்க்கை முழுவதும் அவர் ஒரு பழமைவாத குடியரசு கட்சியின் ஆதரவாளராக இருந்து வந்தார் 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆதரவாக வாக்கு அளித்தார் .1960ஆம் ஆண்டு நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் ரிச்சர்ட் நிக்சனுக்கு ஆதரவு அளித்தார் ஆனால் அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற ஜான் எப் கென்னெடி பற்றி ஒரு தன் கருத்தை இவ்வாறு வெளி இட்டார் "நான் கென்னெடிக்கு வாக்கு அளிக்கவில்லை ஆனால் அவர் எனது ஜனாதிபதி. அவர் நற்செயல்கள் பல செய்வர் என்று நான் எதிர்பார்க்கிறேன்". அவர் படங்களின் மூலம் குடியரசு கட்சிக்கு ஆதரவாக பல கருத்துகளை தெரிவித்தார் .வியட்நாம் போரின் போது அப்போரை ஆதரிக்கும் வகையில் இவர் தன்னுடைய படமான தி கிரீன் பெரேத்ஸ் 1968ஆம் ஆண்டு வெளி இடப்பட்டது .

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜான் வெயின் ஆரம்ப வாழ்க்கைஜான் வெயின் திரைப்பட வாழ்க்கைஜான் வெயின் பெற்ற விருதுகள்ஜான் வெயின் அரசியல் வாழ்வுஜான் வெயின் மேற்கோள்கள்ஜான் வெயின் வெளி இணைப்புகள்ஜான் வெயின்190719691979அகாதமி விருதுஅமெரிக்க ஐக்கிய நாடுஇயக்குநர் (திரைப்படம்)சூன் 11தயாரிப்பாளர் (திரைப்படம்)திரைப்படம்நடிகர்மே 26

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்டம்கவிதைமுத்தரையர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்இரசினிகாந்துஅவுன்சுஜெயம் ரவிஔவையார்மரகத நாணயம் (திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுயூடியூப்அருணகிரிநாதர்நந்திக் கலம்பகம்கண்ணகிபுதுமைப்பித்தன்வேற்றுமைத்தொகைஐம்பூதங்கள்பத்து தலமெய்யெழுத்துமட்பாண்டம்மருது பாண்டியர்இலட்சம்சேரன் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சித்ரா பௌர்ணமிவிராட் கோலிசச்சின் டெண்டுல்கர்மு. மேத்தாவிண்டோசு எக்சு. பி.பாம்புசிந்துவெளி நாகரிகம்வெ. இறையன்புமலையாளம்சிவனின் 108 திருநாமங்கள்தைப்பொங்கல்தமிழர் பருவ காலங்கள்இந்திய நாடாளுமன்றம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பெண்களின் உரிமைகள்சேக்கிழார்தமிழ்விடு தூதுசுடலை மாடன்தேசிக விநாயகம் பிள்ளைஎயிட்சுமழைநீர் சேகரிப்புஇளையராஜாமுன்னின்பம்சீனாபரதநாட்டியம்முதலாம் உலகப் போர்பரிபாடல்அறுபடைவீடுகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சிவன்யாவரும் நலம்தட்டம்மைமரவள்ளிஸ்ரீலீலாமுத்தொள்ளாயிரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பாலை (திணை)கருத்தரிப்புபோக்கிரி (திரைப்படம்)விசாகம் (பஞ்சாங்கம்)வெந்து தணிந்தது காடுகபிலர்காமராசர்இந்தியாவில் இட ஒதுக்கீடுநற்கருணைஎலுமிச்சைஅப்துல் ரகுமான்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இடைச்சொல்திராவிட முன்னேற்றக் கழகம்ஜவகர்லால் நேருதமிழர் கப்பற்கலைசயாம் மரண இரயில்பாதைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கண்ணாடி விரியன்🡆 More