சுவான்டே பாபோ

சுவான்டே பாபோ (Svante Pääbo)( ; பிறப்பு 20 ஏப்பிரல் 1955) மாந்தவளர்ச்சி மரபியல் துறையில் ஓர் ஆய்வாளர் பெற்ற சுவீடன் நாட்டு மரபியல் வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.

தொல்லுயிரி மரபியல் நிறுவனர்களில் ஒருவரான இவர் நியண்டர்தால் மனித மரபணு குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். 1997-ல் செருமனியின் லைப்சிக்கில் உள்ள மேக்சு பிளாங்க் மாந்தவியல் கூர்ப்பு (படிவளர்ச்சி) நிறுவனத்தின் மரபியல் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் சப்பானில் உள்ள ஒகினாவா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராகவும் உள்ளார்.

சுவான்டே பாபோ
Svante Pääbo
சுவான்டே பாபோ
பாபோ, சூலை 2016-ல் இலண்டன் அரச கழகத்தில்
பிறப்பு20 ஏப்ரல் 1955 (1955-04-20) (அகவை 69)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
துறை
பணியிடங்கள்
  • மேக்சு பிளாங்க் மானுடவியல் பரிணாம நிறுவனம்
  • ஒக்கினவா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்உப்சாலா பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுஅடினோ வைரசின் ஈ19 புரதம் நோயெதிர்ப்பாற்றாலை எவ்வாறு மாற்றியமைக்கின்றது (1986)
அறியப்படுவதுதொல்லுயிரி மரபியல்
விருதுகள்காண்க விருதுகளும் கௌரவங்களும்
துணைவர்
லிண்டா விஜிலண்ட் (தி. 2008)
பிள்ளைகள்2
இணையதளம்
www.eva.mpg.de/genetics/staff/paabo/

2022-ல், இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு "அழிந்துபோன முன்மாந்த மரபணுக்கள் மாந்தவினத்தின் கூர்ப்பு (படிவளர்ச்சி)" பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை

பாபோ ஸ்டாக்ஹோமில் பிறந்தார். இவரது தாயார், எசுத்தோனிய வேதியியலாளர் கரின் பாபோவுடன் வளர்ந்தார். இவரது தந்தை உயிரிய வேதியியலாளர் சுனே பெர்க்குத்திரோம், 1982-ல் பெங்ட் ஐ. சாமுவேல்சன் மற்றும் ஜான் ஆர். வேன் ஆகியோருடன் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டவர் ஆவார். பாபோவின் சகோதரர் ருரிக் ரீன்ஸ்டீர்னா ஆவார்.

அடினோவைரஸின் ஈ19 புரதம் நோயெதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஆராய்ந்து 1986-ல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

ஆராய்ச்சி

சுவான்டே பாபோ 
2014 நோபல் மாநாட்டில் பாபோ

தொல்லுயிரி மரபியல் பிரிவினை நிறுவியவர்களில் ஒருவராக பாபோ அறியப்படுகிறார். 1997ஆம் ஆண்டில், நியானடெர்டல் பள்ளத்தாக்கில் உள்ள பெல்டோபர் கிரோட்டோவில் காணப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து உருவான நியண்டர்தால் மனித இழைமணி டி. என். ஏ. (எம். டி. என். ஏ.)வினை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதாக பாபோ சகாக்கள் தெரிவித்தனர்.

ஆகத்து 2002-ல், பாபோவின் துறையானது "மொழி மரபணு", பாக்சு பீ2 பற்றிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இக்கண்டுபிடிப்புகள் மொழி குறைபாடுகள் உள்ள சில நபர்களில் குறைபாடு பாக்சு பீ2 மரபணு குறைபாட்டினால் ஏற்படுவதாகத் தெரிவித்தது.

2006ஆம் ஆண்டில், நியண்டர்டால்களின் முழு மரபணுவையும் புனரமைக்கும் திட்டத்தை பாபோ அறிவித்தார். 2007ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இவரது பெயர் பட்டியலிடப்பட்டது.

பிப்ரவரி 2009-ல், சிகாகோவில் உள்ள அறிவியல் மேம்பாட்டிற்கான அமெரிக்க சங்க (AAAS) வருடாந்திர கூட்டத்தில், மேக்சு பிளாங்க் மானுடவியல் பரிணாம நிறுவன நியண்டர்டால் மரபணுவின் முதல் வரைவின் தொகுப்பு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. 454 உயிர் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து 3 பில்லியனுக்கும் அதிகமான டி. என். ஏ. அடிப்படை இணைகள் வரிசைப்படுத்தப்பட்டன. பாபோ தலைமையிலான இந்தத் திட்டம், நவீன மனிதர்களின் சமீபத்திய பரிணாம வரலாற்றில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

மார்ச் 2010-ல், பாபோ மற்றும் சக பணியாளர்கள் சைபீரியாவில் உள்ள தெனிசோவா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்பின் டி. என். ஏ. பகுப்பாய்வு பற்றிய அறிக்கையை வெளியிட்டனர். தெனிசோவா கோமினின் என்ற சிற்றினம் இன்னும் அங்கீகரிக்கப்படாத கோமோ பேரினத்தைச் சேர்ந்த அழிந்துபோன சிற்றின எலும்பு என்று தெரிவிக்கப்பட்டது. தெனிசோவனின் கண்டுபிடிப்பு டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் முன்னர் அறியப்படாத கோமினின் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

மே 2010-ல், பாபோவும் அவரது சகாக்களும் நியண்டர்தால் மனித மரபணுவின் வரைவு வரிசையை அறிவியல் எனும் பன்னாட்டு ஆய்விதழில் வெளியிட்டனர். இவரும் இவரது குழுவும் நியண்டர்தால்களுக்கும் யூரேசிய (ஆனால் துணை-சஹாரா ஆப்பிரிக்க அல்ல) மனிதர்களுக்கும் இடையில் இனப்பெருக்கம் இருக்கலாம் என்று முடிவு செய்தனர். தொன்மை மற்றும் உடற்கூறியல்-நவீன மனிதர்களுக்கு இடையேயான கலப்புக் கோட்பாட்டிற்கு அறிவியல் சமூகத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது. இருப்பினும் சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவைப் பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர். நவீன மனித மற்றும் நியாண்டர்தால் மனித மரபணுக்களின் இந்த கலவையானது தெற்கு ஐரோப்பாவில் சுமார் 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில், இவர் நியண்டர்தால் மனிதன்: தொலைந்து போன மரபணு தொகுப்பினைத் தேடி என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில், பாபோ தனது நினைவுக் குறிப்பு மற்றும் பிரபலமான அறிவியலின் கலவையான வடிவத்தில், மனித பரிணாமம் குறித்த தனது எண்ணங்களுடன் நியண்டர்தால் மரபணுவை வரைபடமாக்குவதற்கான ஆராய்ச்சி முயற்சியின் வெற்றியினை தெரிவித்திருந்தார்.

2020-ல், பாபோ பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கும் தேவைகளின் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் கோவிட்-19 நோய்க்கான பாதிப்பு ஆகியவை டி. என். ஏ. பகுப்பாய்வு மூலம் மரபணு பகுதி 3-இல் உள்ள மரபணு மாறுபாடுகளில் வெளிப்படுகிறது என்று தீர்மானித்தது. இந்த நோயானது ஐரோப்பிய நியண்டர்தால் மனித பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் மிகவும் கடுமையான வடிவத்தை உருவாக்கும் அபாயத்தை இந்த அமைப்பு சுமத்துகிறது என்றும் தீர்மானித்தார். பாபோவின் இக்கண்டுபிடிப்புகள் மற்றும் பிளாங்க் நிறுவனம் மற்றும் கரோலின்ஸ்கா மையம் முன்னோடி ஆய்வு நிறுவனங்களாக இந்நிறுவன ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டன.

2021-ன் தகவலின் படி, பாபோவின் எச்-குறியீடு 162 ஆகும் எனக் கூகுள் இசுகாலரும் 127 என இசுகோபசும் தெரிவிக்கின்றன.

விருதுகளும் கௌரவங்களும்

1992ஆம் ஆண்டில், ஜெர்மன் ஆராய்ச்சியில் வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவமான ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் காட்பிரைட் வில்கெல்ம் லீப்னிசு பரிசைப் பெற்றார். 2000ஆம் ஆண்டில் அரச சுவீடன் அறிவியல் அகாதமியின் உறுப்பினராக பாபோ தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில், இவர் மருத்துவத்திற்கான மதிப்புமிக்க லூயிஸ்-ஜீன்டெட் பரிசைப் பெற்றார். 2008-ல், அறிவியல் மற்றும் கலைகளுக்கான ஆர்டர் பர் லெ மெரைட்டின் உறுப்பினர்களில் பாபோ சேர்க்கப்பட்டார். இதே ஆண்டில் அமெரிக்கச் சாதனையாளர் அகாதமியின் தங்கத் தட்டு விருதைப் பெற்றார். அக்டோபர் 2009-ல், எதிர்காலத்திற்கான அறக்கட்டளை, 1984ஆம் ஆண்டு தொடங்கி 2,400 ஆண்டுகள் பழமையான மம்மியுடன் பண்டைய டி. என். ஏவை தனிமைப்படுத்தி வரிசைப்படுத்தியதற்காக பாபோவுக்கு 2009 கிசுட்லர் பரிசினை அறிவித்தது. சூன் 2010-ல், ஐரோப்பிய உயிர்வேதியியல் சங்கங்களின் கூட்டமைப்பு உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் சிறந்த சாதனைகளுக்காக தியோடர் புச்சர் பதக்கத்தை இவருக்கு வழங்கியது. 2013ஆம் ஆண்டில், பரிணாம மரபியலில் சிறந்த ஆராய்ச்சிக்காக மரபியலில் குரூபர் பரிசைப் பெற்றார். சூன் 2015-ல், என். யு. ஐ. கால்வேயில் இவருக்கு மதிப்புறு முனைவர் (ஹானரிஸ் காசா) பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2016-ல் அரச சமூகத்தின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2017-ல், டான் டேவிட் பரிசு வழங்கப்பட்டது. 2018-ல் இவர் அறிவியல் ஆராய்ச்சி பிரிவில் இளவரசி அசுடூரியாசு விருதுகளையும், 2020-ல் சப்பான் பரிசு, 2021-ல் மாசுரி பரிசு மற்றும் 2022-ல் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினையும் பெற்றார்.

வாழ்க்கை

பாபோவின் 2014ஆம் ஆண்டு புத்தகமான நியாண்டர்தால் மேன்: இன் சர்ச் ஆஃப் லாஸ்ட் ஜீனோம்ஸில், வெளிப்படையாகத் தான் இருபாலீர்ப்பு கொண்டவர் என்று கூறினார். இவர் முதனியியல் ஆய்வாளர் லிண்டா விஜிலன்ட்டைச் சந்திக்கும் வரை எதிர்பாலிர்பற்ற ஆண் என்று கருதினார். இவர்கள் பல ஆவணங்களை இணைந்து எழுதியுள்ளனர். இவர்கள் லைப்சிக்கில் ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சுவான்டே பாபோ கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கைசுவான்டே பாபோ ஆராய்ச்சிசுவான்டே பாபோ வாழ்க்கைசுவான்டே பாபோ மேலும் பார்க்கவும்சுவான்டே பாபோ மேற்கோள்கள்சுவான்டே பாபோ வெளி இணைப்புகள்சுவான்டே பாபோநோபல் பரிசுமரபியல்யப்பான்லைப்சிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய புவிசார் குறியீடுமுத்தரையர்விளக்கெண்ணெய்உயிர்மெய் எழுத்துகள்திருமந்திரம்பத்து தலநெடுஞ்சாலை (திரைப்படம்)பணவீக்கம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்காளமேகம்பதினெண்மேற்கணக்குஜன கண மனகுமரகுருபரர்வெ. இராமலிங்கம் பிள்ளைஐம்பூதங்கள்மஞ்சள் காமாலைமலையாளம்செங்குந்தர்குகேஷ்சூரியக் குடும்பம்சூரரைப் போற்று (திரைப்படம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசேக்கிழார்குறுந்தொகைஎங்கேயும் காதல்திருநாவுக்கரசு நாயனார்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தூது (பாட்டியல்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்போக்கிரி (திரைப்படம்)தமிழ்பெருஞ்சீரகம்உ. வே. சாமிநாதையர்ஸ்ரீலீலாபள்ளர்கம்பராமாயணம்இயேசு காவியம்ஆப்பிள்திராவிட மொழிக் குடும்பம்மக்களவை (இந்தியா)விராட் கோலிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கல்விக்கோட்பாடுமத கஜ ராஜாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமுன்மார்பு குத்தல்அபிராமி பட்டர்மூவேந்தர்பெயர்ச்சொல்நவரத்தினங்கள்பெரியாழ்வார்இமயமலைசீனிவாச இராமானுசன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இங்கிலாந்துசெக் மொழிகூத்தாண்டவர் திருவிழாவராகிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காற்றுகண்ணகிகருமுட்டை வெளிப்பாடுஉளவியல்தமிழ்விடு தூதுசதுப்புநிலம்சூல்பை நீர்க்கட்டிகௌதம புத்தர்புற்றுநோய்உடன்கட்டை ஏறல்மு. வரதராசன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021எஸ். ஜானகிமணிமேகலை (காப்பியம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)கீழடி அகழாய்வு மையம்மண் பானை🡆 More