சுமாத்திரா காண்டாமிருகம்: ஒரு பாலூட்டி இனம்

சுமாத்திரா காண்டாமிருகம் (Sumatran rhinoceros) ஆசிய இரண்டு கொம்பு காண்டாமிருகம் மற்றும் மயிரடர்ந்த காண்டாமிருகம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சுமாத்திரா காண்டாமிருகம்
சுமாத்திரா காண்டாமிருகம்: ஒரு பாலூட்டி இனம்
இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தில் உள்ள காண்டாமிருக சரணாலயத்தில் இருக்கும் ஒரு சுமத்திரா காண்டாமிருகம்
CITES Appendix I (CITES)
Sumatran rhino rangeதாமான் நெகாராTabin Wildlife ReserveGunung Leuser National ParkKerinci Seblat National ParkBukit Barisan Selatan National ParkWay Kambas National Park
Sumatran rhino range
சுமாத்திரா காண்டாமிருகம் இருந்த இடங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் இடங்களைப் பார்க்கக் கடும் சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டிருக்கும் பகுதியை அழுத்துங்கள்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Dicerorhinus

Gloger, 1841
இருசொற் பெயரீடு
Dicerorhinus sumatrensis
மாதிரி இனம்
sumatrensis
Fischer, 1814)
துணையினம்
  • D. s. harrissoni Groves, 1965
  • D. s. sumatrensis Fischer, 1814
  • D. s. lasiotis Buckland, 1872

ரெய்னோசெரடியி குடும்பத்திலேய மிகவும் அரிதான உறுப்பினர் எனலாம்(தற்போது கடுமையான ஆபத்தான அழியும் நிலையில் உள்ள விலங்கு). தற்போது நடைமுறையில் டைசோரனஸ் பேரினத்தில் உள்ள ஒரே உயிரினம் இவ்விலங்கே ஆகும்.

சுமாத்திரா காண்டாமிருகம்: ஒரு பாலூட்டி இனம்

சுமாத்திரா காண்டாமிருகமே இவ்வுலகில் மிகச்சிறிய காண்டாமிருகம் ஆகும். இதன் பாதம் முதல் தோள் வரையிலுள்ள உயரம் மட்டுமே 112செ.மீ முதல் 145செ.மீ ஆகும். இவ்விலங்கின் தலை மற்றும் உடம்பின் நீளம் 2.36மீ-3.18மீ மற்றும் வாலின் நீளம் 35-70செ.மீ ஆகும். சுமாத்திராகாண்டாமிருகத்தின் இதுவரை கணக்கெடுக்கப்பட்ட அதிக எடை 500கிலோ முதல் 1000கிலோ வரை. இவ்விலங்கின் மேற்மயிர் படலமானது சிவப்பு மற்றும் பழுப்பு நிறக்கலவையில் இருக்கும். இதன் கொம்புகள் சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் காண்டாமிருகங்களுக்கு பெண் காண்டாமிருங்களை விட நீண்ட கொம்புகள் இருக்கும். சுமாத்திரா காண்டாமிருகங்கள் அடர்ந்த இரண்டு தோல் மடிப்புகளைக் கொண்டுள்ளது. இம்மிருகங்களின் கழுத்துப் பகுதியில் மட்டும் சிறிய மற்றும் அடர்த்திக் குறைவான தோல் மடிப்பைக் கொண்டுள்ளது. இதன் தோல் மட்டும் 10மி.மீ -16மி.மீ அடர்த்தியானது. காடுகளில் வாழும் விலங்குகளுக்கு மட்டும் தோலிலடியிலான கொழுப்பு இருக்காது. இவற்றின் முடி மிருகத்திற்கு மிருகம் வேறுபடும். மற்றும் ஒரு துண்டு போன்ற நீளமான முடி அமைப்பு இதன் காதுகளின் மேல் உள்ளது. அனைத்து காண்டாமிருகங்களைப் போலவே இவற்றிற்கும் கண்பார்வை மிகவும் குறைவு. இவற்றால் சரிவாக உள்ள பகுதிகளில் சுலபமாக நடக்க முடியும்.

சுமாத்திரா காண்டாமிருகம்: ஒரு பாலூட்டி இனம்

சுமாத்திரா காண்டாமிருகங்களின் முன்னோர்கள் மழைக்காடுகளிலும் சதுப்புநிலங்களிலும் பனி மூட்டமாய் காணப்படும் காடுகளிலும் வாழ்ந்தன. இவை இந்தியா, பூட்டான், பங்களாதேஸ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்விலங்குகள் பொதுவாக தனிமையிலேயே வாழும். இனப்பெருக்கத்துக்காகவும் குட்டிகளை வளர்பதற்காகவும் மட்டும் ஒன்றாக வாழும். பழங்களும் சிறுக்கிளைகளுமே இதன் உணவு. இவை இதன் குரலுக்காகவும் பிரபலமாய் பார்க்கப்படுகிறது. புலிகளும் காட்டுநாய்கள்தான் இவற்றின் வேட்டையாடிகள் ஆகும். ஆண் மிருகங்களின் சராகசரி எல்லைப்பரப்பு 500கி.மீ ஆகும்.இவைகள் தினமும் 50கிலோ எடையுள்ள உணவை உட்கொள்ளும். இவை சுமார் 30 வகையான செடிகளை உண்ணுகிறது. இவற்றின் உடலுறவு முறை கறுப்பு காண்டாமிருகத்தின் உடலுறவு முறையை ஒத்ததாக இருக்கும். இவ்விலங்கின் அழிவிற்கு காரணமே "எண்ணெய்த் தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயிகள், மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகள், நோய்கள் மற்றும் சட்டவிரோதமாக விலங்குகளைக் கடத்துதல்" போன்றன ஆகும். தற்போது இவை மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆசிய கண்டத்தில் இருக்கும் வேறு சில நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

உப்புச் சத்தியாகிரகம்எண்டிரைகிளிசரைடுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வெ. இறையன்புஇரட்சணிய யாத்திரிகம்காளமேகம்சமந்தா ருத் பிரபும. கோ. இராமச்சந்திரன்ரோசுமேரிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மூலிகைகள் பட்டியல்கடையெழு வள்ளல்கள்கணினிகாம சூத்திரம்முடக்கு வாதம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ரயத்துவாரி நிலவரி முறைமொழிபெயர்ப்புமதராசபட்டினம் (திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிதமிழர் நெசவுக்கலைநற்றிணைஇந்தியன் (1996 திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்கொடுக்காய்ப்புளிமதீச பத்திரனசிறுதானியம்வானிலையானைகாதல் கோட்டைவிளக்கெண்ணெய்இந்திய நாடாளுமன்றம்காடழிப்புசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்குஷி (திரைப்படம்)பர்வத மலைநவதானியம்திராவிட இயக்கம்கள்ளழகர் கோயில், மதுரைதெலுங்கு மொழிஇன்ஸ்ட்டாகிராம்தமிழர் கப்பற்கலைஅரவான்நெசவுத் தொழில்நுட்பம்சோல்பரி அரசியல் யாப்புஇந்தியத் தலைமை நீதிபதிஇயற்கை வளம்சுகன்யா (நடிகை)திராவிடர்நாயன்மார்பரிதிமாற் கலைஞர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மருது பாண்டியர்தமிழ்நாடு அமைச்சரவைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தங்கராசு நடராசன்அகரவரிசைஇந்திய அரசியலமைப்புஈரோடு தமிழன்பன்வடிவேலு (நடிகர்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பாலை (திணை)நெடுநல்வாடைவராகிகல்விஇந்தியன் பிரீமியர் லீக்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅருணகிரிநாதர்பிரியா பவானி சங்கர்திருநாள் (திரைப்படம்)கண்ணாடி விரியன்யானையின் தமிழ்ப்பெயர்கள்சிவபுராணம்மாசாணியம்மன் கோயில்🡆 More