கொச்சி

கொச்சி (Kochi) (வார்ப்புரு:IPA-ml) இதனை கொச்சின் (Cochin) என்றும் அழைப்பர்.

(/ˈkɪn/ KOH-chin), தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த கொச்சி நகரம், கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி மிக்க பெருநகரம் ஆகும். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 94.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 6,77,381 ஆகும். கொச்சி நகரம் பெருநகர கொச்சி வளர்ச்சிப் பகுதியின் ஒரு பகுதியாகும்.

கொச்சி
கொச்சின்
பெருநகரம்
கொச்சி
அடைபெயர்(கள்): அரபுக் கடலின் இராணி
கொச்சி is located in கேரளம்
கொச்சி
கொச்சி
கொச்சி is located in இந்தியா
கொச்சி
கொச்சி
ஆள்கூறுகள்: 9°55′52″N 76°16′02″E / 9.9312°N 76.2673°E / 9.9312; 76.2673[1]
நாடுகொச்சி இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்எறணாகுளம்
நிறுவிய நாள்1 ஏப்ரல் 1958
அரசு
 • நிர்வாகம்கொச்சி மாநகராட்சி
பரப்பளவு
 • பெருநகரம்94.88 km2 (36.63 sq mi)
 • Metro440 km2 (170 sq mi)
ஏற்றம்26.02 m (85.37 ft)
மக்கள்தொகை (2011)
 • பெருநகரம்677,381
 • அடர்த்தி7,100/km2 (18,000/sq mi)
 • பெருநகர்2,119,724
இனங்கள்Cochinite
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்682xxx, 683xxx
தொலைபேசி குறியீடு+91484xxxxxxx
வாகனப் பதிவுKL-7, KL-39, KL-41, KL-42, KL-43, KL-63
உயர்நீதிமன்றம்கேரளா உயர் நீதிமன்றம்
கடற்கரை48 கிலோமீட்டர்கள் (30 mi)
பாலின விகிதம்1028 /
எழுத்தறிவு98.5%
மனித மேம்பாட்டுச் சுட்டெண் Very High
வளர்ச்சி முகமைபெருநகர கொச்சி வளர்ச்சி முகமை
தட்பவெப்பம்இந்தியாவின் தட்பவெப்ப நிலை(கோப்பென்)
மழைப் பொழிவு3,228.3 மில்லிமீட்டர்கள் (127.10 அங்)
இணையதளம்cochinmunicipalcorporation.kerala.gov.in

கொச்சி மாநகராட்சி 1967-இல் நிறுவப்பட்டது.

கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, ஐரோப்பிய நாடுகளுக்கு கொச்சி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் கொச்சியை அரபுக் கடலின் இராணி என அழைப்பர்.

கிபி 1503-இல் கொச்சியை போர்த்துகேயர்கள் (1503–1663) கைப்பற்றினர். பின்னர் டச்சுக்காரர்கள் (1663–1795) கொச்சி நகரத்தைக் கைப்பற்றினர். 1795-இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினர், கொச்சி இராச்சியத்தை கைப்பற்றி, தங்களது அதிகாரத்திற்குட்பட்ட சுதேச சமஸ்தானமாக ஆக்கினர்.

கேரளாவின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி முனையமாக கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது. இந்தியாவின் ஆறு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கொச்சி விளங்குகிறது. இந்தியாவின் பன்னாட்டுத் துறைமுகங்களில் கொச்சி துறைமுகம் ஒன்றாகும்.

கேரளாவின் பெரும் நிதி மற்றும் வணிக மையமாக கொச்சி நகரம் விளங்குகிறது. and industrial

கேரளா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி நகரம் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்தியக் கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் உள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் தென் மண்டல அலுவலகம் கொச்சியில் இயங்குகிறது. கொச்சியில் இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தின் கிளை உள்ளது. கொச்சியில் கொச்சி பங்குச் சந்தை, பன்னாட்டு மிளகு வணிக மையம், தென்னை வளர்ச்சிக் கழகம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், திருவாங்கூர் உரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலை, இந்துஸ்தான் இயந்திரக் உபகரணங்கள் (HMT), அப்போல்லா டயர்ஸ், பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனங்கள், கொச்சி கப்பல் கட்டும் தளம், போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு கொச்சி உயர் நீதிமன்றம் உள்ளதுடன், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளதுடன், சீர்மிகு நகரம் என்ற தகுதியும் கொச்சி நகரம் பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் கொச்சி தேசியச் சட்டப் பள்ளிகள் உள்ளது.

பெயர் வரலாறு

கொச்சி முதன் முதலில் மலபாரில் உள்ள பொன்னானி வட்டடத்தில் உள்ள கிராமத்தினையொட்டி பெரும்படப்பு நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 1341ல் துறைமுகம் உருவானபோது இதன் பெயர் கொச்சி என்றழைக்கப்படலாயிற்று.

கொச்சி யூதர்கள் தங்களது வழிபாட்டுத் தலத்தில் கொச்சியை கொகின் ("Kogin" (எபிரேயம்: קוגין‎) என்றே தங்களது முத்திரையில் குறித்துள்ளனர்..

கொச்சி என்ற சொல்லிற்கு மலையாள மொழியில் கொச்சு ஆழி ( kochu azhi) என்பதற்கு சிறிய கடற்காயல் எனப்பொருளாகும். மேலும் மலையாள மொழியில் கச்சி என்பதற்கு துறைமுகம் என்று பொருளாகும்.

15-ஆம் நூற்றாண்டின் இத்தாலிய கடலோடி நிக்கோலோ கோண்டி மற்றும் 17-ஆம் நூற்றாண்டின் பிரா போலின் என்ற கடலோடிகள், ஆற்று நீர் கடற்காயல்களில் கலந்து பின் கடலில் கலப்பதால், இந்நகரத்தை கொச்சி (Kochchi) என்று அழைத்தனர். போர்த்துகேயர்களும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்நகரத்தை கொச்சின் என்று அழைத்தனர். பின்னர் கேரளா அரசினர் 1996-இல் கொச்சின் என்பதை கொச்சி என்று பெயர் மாற்றம் செய்தனர்.

1635-இல் கொச்சி நகரம்
கொச்சி யூதர்களின் வழிபாட்டுத் தலம்
1503-இல் கட்டப்பட்ட புனித பிரான்சிஸ் தேவாலயம்,

வரலாறு

கிபி 12-ஆம் நூற்றாண்டில் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்டது. கிபி 1500-இல் போர்த்துகேயர்கள் கொச்சியில் வணிக மையத்தை நிறுவினர்.

போர்த்துகேய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொச்சியில் கோட்டை கட்டிக்கொண்டு, 1503 முதல் 1663 கொச்சியை ஆண்டனர். புலம்பெயர்ந்த கொச்சி யூதர்கள், புனித தாமஸ் கிறித்தவர்கள் மற்றும் சிரியாக் கிறித்துவர்கள் புலம்பெயர்ந்து கொச்சியில் வாழ்ந்தனர். கொச்சியில் வாஸ்கோ ட காமா]வின் கல்லறை கொச்சியில் இருந்தது. பின்னர் 1539-இல் போர்த்துகல்லுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

போர்த்துகேயர்களிடமிருந்து இடச்சுக்காரர்கள் கொச்சி நகரத்தையும், கோட்டையையும் கைப்பற்றி, கோட்டைக்கு இம்மானுவேல் கோட்டை எனப்பெயரிட்டனர். அதே நேரத்தில் கொச்சி இராச்சிய அரச குடும்பத்தினர், தங்களது வசிப்படத்தை திருச்சூருக்கு மாற்றிக் கொண்டனர்.

1664-இல் இடாச்சுக்காரர்கள் கொச்சி நகராட்சி மன்றத்தை நிறுவினர். 1773-இல் மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் ஐதர் அலி தனது ஆட்சிப் பகுதியை மலபார் பிரதேசம் வரை விரிவுபடுத்தினார். இதனால் கொச்சி இராச்சியத்தினர் ஐதர் அலிக்கு திறை]] செலுத்த வேண்டியதாயிற்று.

1814-இல் ஐக்கிய இராச்சியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இடாச்சுக்காரர்கள் கொச்சியை பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியிடம ஒப்படைத்தனர். 1883-இல் ஆங்கிலேயர்கள் மீண்டும் கொச்சிக் கோட்டையில் நகராட்சி மன்றத்தை நிறுவினர். 1870-கொச்சி இராச்சியத்தின் தலைமையிடம் கொச்சி புறநகரத்தில் உள்ள திருப்பூணித்துறைக்கு மாற்றப்பட்டது.

1910-இல் எர்ணாகுளம், கொச்சி இராச்சியத்தின் நிர்வாகத் தலைமையிடமானது.

1925-இல் கொச்சி சட்டமன்றம் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்கள் கொச்சியில் பெரும் துறைமுகத்தை நிறுவினர்.

1947-இல் இந்தியா விடுதலையின் போது, கொச்சி இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது. 1949-இல் கொச்சி இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியப் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டது. 1949 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னர் திருவிதாங்கூர் - கொச்சி இராச்சியத்திற்கு தலைமை வகித்தார். பின்னர் திருவிதாங்கூர் - கொச்சிப் பகுதிகள் இணைந்து பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக மலபார் மாவட்டமாக விளங்கியது.

1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழிவாரியாக மாநிலங்களை பிரிவினை செய்த போது, மலையாள மொழி பேசிய மலபார் பிரதேசம், கொச்சி இராச்சியப் பகுதிகள் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியப் பகுதிகளைக் கொண்டு கேரளா மாநிலம் நிறுவப்பட்டது.

1 நவம்பர் 1967-இல் கொச்சி மாநகராட்சி நிறுவப்பட்டது.

பழைய கொச்சி இராச்சியத்தின் பெரும் பகுதிகளைக் கொண்டு 1 ஏப்ரல் 1958-இல் எர்ணாகுளம் மாவட்டம் நிறுவப்பட்டது.

புவியியல் மற்றும் தட்பவெப்பம்

புவியியல்

இந்தியாவின் தென்மேற்கு மலபார் கடற்கரையில் அமைந்த கொச்சி நகரத்திற்கு மேற்கில் அரபுக் கடல் உள்ளது. கொச்சி நகரம் 9°58′N 76°13′E / 9.967°N 76.217°E / 9.967; 76.217 பாகையில் உள்ளது. கொச்சி மாநகராட்சியின் பரப்பளவு 94.88 km2 (36.63 sq mi) ஆகும்.

தற்போதைய கொச்சி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் எர்ணாகுளம், கொச்சிக் கோட்டை, எடப்பள்ளி, கலாம்சேரி, திருப்புனித்துறை மற்றும் கக்கநாட்டுப் பகுதிகள் உள்ளது.

கொச்சியின் நீர் ஆதாரங்களாக பெரியாறு மற்றும் மூவாட்டுப்புழா ஆறுகள் உள்ளது.

தட்பவெப்பம்

கோடக் காலத்திய குறைந்த வெப்பம் 23 மற்றும் 31 °C (73 மற்றும் 88 °F) ஆகவும்; உயர்ந்த வெப்பம் 36.5 °C (97.7 °F) ஆகவும் உள்ளது.

சூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பொழிகிறது.

ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2,978.0 mm (117.24 அங்) ஆகவுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், கொச்சி (1971–2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.4
(97.5)
35.7
(96.3)
36.0
(96.8)
36.5
(97.7)
35.2
(95.4)
34.2
(93.6)
33.1
(91.6)
32.5
(90.5)
34.2
(93.6)
34.6
(94.3)
35.6
(96.1)
34.8
(94.6)
36.5
(97.7)
உயர் சராசரி °C (°F) 31.7
(89.1)
31.9
(89.4)
32.5
(90.5)
32.9
(91.2)
32.3
(90.1)
30.1
(86.2)
29.3
(84.7)
29.3
(84.7)
30.0
(86)
30.6
(87.1)
31.2
(88.2)
31.8
(89.2)
31.1
(88)
தாழ் சராசரி °C (°F) 22.6
(72.7)
24.0
(75.2)
25.3
(77.5)
25.9
(78.6)
25.7
(78.3)
24.1
(75.4)
23.7
(74.7)
23.9
(75)
24.2
(75.6)
24.1
(75.4)
24.0
(75.2)
23.1
(73.6)
24.2
(75.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.5
(61.7)
16.3
(61.3)
21.6
(70.9)
21.3
(70.3)
21.1
(70)
20.4
(68.7)
17.6
(63.7)
20.6
(69.1)
21.1
(70)
19.2
(66.6)
19.2
(66.6)
17.7
(63.9)
16.3
(61.3)
பொழிவு mm (inches) 23.3
(0.917)
25.9
(1.02)
30.8
(1.213)
94.8
(3.732)
282.8
(11.134)
705.8
(27.787)
593.6
(23.37)
403.1
(15.87)
279.6
(11.008)
320.3
(12.61)
174.9
(6.886)
43.2
(1.701)
2,978.0
(117.244)
சராசரி மழை நாட்கள் 1.0 1.2 2.3 6.2 10.7 23.2 22.3 20.0 13.8 14.3 7.8 1.9 124.7
ஆதாரம்: India Meteorological Department (record high and low up to 2010)

நிர்வாகம்

கொச்சி மாநகராட்சி மன்றம் நகரத்தின் தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறது.

கொச்சி மாநகராட்சி அலுவலர்கள்
மேயர்
துணை மேயர்
காவல் ஆணையாளர் இந்தியக் காவல் பணி
கொச்சி மாநகராட்சி

கொச்சி மாநகராட்சிக்கு 74 வார்டு உறுப்பினர்களும், மேயர் மற்றும் துணை மேயர் உள்ளனர்.

அரசியல்

எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் கொச்சி நகரம் அமைந்துள்ளது. கொச்சி மாநகராட்சி மற்றும் விரிவாக்கப் பகுதிகளான கொச்சி, எர்ணாகுளம், திருப்புனித்துறை, திருக்காரகாரா மற்றும் கலாம்சேரி சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து கேரளா சட்டமன்றத்திற்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பொருளாதாரம்

கேரளாவில் கொச்சி நகரம், நிதி மற்றும் வணிகத் துறையில் தலைமையிடமாக உள்ளது. இந்தியப் பங்குச் சந்தை மற்றும் செபியின் கிளைகள் கொச்சியில் உள்ளது. கொச்சி துறைமுகம், பன்னாட்டு வணிக மற்றும் நிதி நிறுவனங்கள், ஆழ்கடல் மீன் பிடித்தொழில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி 41.74% பங்கு வகிக்கிறது.

எர்ணாகுளம் மாவட்டத்தின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் கொச்சி நகரம் 37% பங்கு வகிக்கிறது. மற்றும் மாவட்ட வணிகம், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் வளர்ச்சியில் 20% பங்கு வகிக்கிறது.

கொச்சியின் முக்கியப் பெருந்தொழில்கள் கப்பல் கட்டுதல், வீட்டு மனை கட்டுமானத் தொழில், கடல்சார் உணவுகள் பதப்படுத்துதல் மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகும். மேலும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் பெரும்பணம் ஈட்டுகிறது.

வெளிநாட்டு வாழ் மலையாளிகளின் வெளிநாட்டுப் பணம் இம்மாவட்டத்தின் முக்கிய வருவாயின் ஒரு பகுதியாக உள்ளது.

போக்குவரத்து

A panoramic view of Vyttila Mobility Hub

வானூர்தி நிலையங்கள்

கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்,கொச்சி நகரத்திலிருந்து 28 கிமி தொலைவில் உள்ள நெடும்பச்சேரியில் உள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் இயக்கப்படுகிறது.

சாலைப் போக்குவரத்து

வடக்கு-தெற்கே செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு-மேற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கொச்சி நகரத்தினை மாநிலத்தின் பிறநகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் பேருந்துகள் இணைக்கிறது.

இருப்புப் பாதை

6 நடைமேடைகள் கொண்ட எறணாகுளச் சந்திப்பு வழியாக தொடருந்துகள் மூலம் மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் கொச்சி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில்கள்

அதி விரைவுப் போக்குவரத்திற்கு கொச்சி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

கொச்சியில் சமயங்கள்
சமயங்கள்
இந்து சமயம்
47%
கிறித்துவம்
35%
இசுலாம்
17%
பிறர்
1%

கொச்சி நகத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 7139 பேர் வாழ்கின்றனர். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொச்சி மாநகர மக்கள்தொகை 21,17,990 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1028 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 97.5% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 47%, கிறித்தவர்கள் 35%, இசுலாமியர்கள் 17% உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கொச்சி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kochi, Kerala
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கொச்சி பெயர் வரலாறுகொச்சி வரலாறுகொச்சி புவியியல் மற்றும் தட்பவெப்பம்கொச்சி நிர்வாகம்கொச்சி பொருளாதாரம்கொச்சி போக்குவரத்துகொச்சி மக்கள் தொகை பரம்பல்கொச்சி மேற்கோள்கள்கொச்சி வெளி இணைப்புகள்கொச்சிஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishஎர்ணாகுளம் மாவட்டம்கேரளாதென்னிந்தியாமக்கள்தொகைமலபார் கடற்கரைமலபார் பிரதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெயம் ரவிமுத்தரையர்குறவஞ்சிநீர்வே. செந்தில்பாலாஜிஆளி (செடி)சுபாஷ் சந்திர போஸ்நிணநீர்க் குழியம்இரட்சணிய யாத்திரிகம்மொழிபெயர்ப்புஆங்கிலம்சாகித்திய அகாதமி விருதுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மங்காத்தா (திரைப்படம்)கணையம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இனியவை நாற்பதுவரலாற்றுவரைவியல்சச்சின் (திரைப்படம்)கூகுள்காம சூத்திரம்இலக்கியம்பழனி முருகன் கோவில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தேஜஸ்வி சூர்யாதிராவிட மொழிக் குடும்பம்ஈரோடு தமிழன்பன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்யூடியூப்முகலாயப் பேரரசுஉவமையணிபனிக்குட நீர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வல்லினம் மிகும் இடங்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)வெப்பநிலைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திரவ நைட்ரஜன்தற்கொலை முறைகள்இந்தியக் குடியரசுத் தலைவர்எஸ். ஜானகிபொதுவுடைமைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இன்னா நாற்பதுபெரும்பாணாற்றுப்படைஆந்திரப் பிரதேசம்தாஜ் மகால்ஜிமெயில்மரகத நாணயம் (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்விஜயநகரப் பேரரசுகாதல் தேசம்பொருநராற்றுப்படைதமிழக மக்களவைத் தொகுதிகள்கொடைக்கானல்மாநிலங்களவைகோயில்அகத்திணைகுருதி வகைஎட்டுத்தொகை தொகுப்புமார்க்கோனிமழைநீர் சேகரிப்புஇடிமழைபத்துப்பாட்டுமு. க. ஸ்டாலின்இந்திய ரிசர்வ் வங்கிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமீனம்கருத்துவேலுப்பிள்ளை பிரபாகரன்பள்ளுவேலு நாச்சியார்மஞ்சும்மல் பாய்ஸ்திராவிசு கெட்மாமல்லபுரம்தமிழ் இலக்கணம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பெயர்🡆 More