மாநகராட்சி

மாநகராட்சி (municipal corporation) ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும்.

இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.

இத்தகைய பெயரிடல் ஐக்கிய இராச்சியத்தில் தோன்றினாலும், இலண்டன் மாநகராட்சியைத் தவிர்த்து, அங்கு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் முந்தைய பிரித்தானிய காலனிகளிலும் இந்தியாவிலும் இந்தக் கருத்து கொள்கையளவில் மாநகர உள்ளாட்சி நிர்வாகத்தின் மையமாக உள்ளது.

இந்தியா

மாநகராட்சி 
திருச்சி மாநகராட்சிக் கட்டிடம்

இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநில அரசுகளால் ஆய்வு செய்யப்பட்டு தனி சட்டம் மூலம் மாநகராட்சி நிலை பெறுகின்றன. இதன்மூலம் இந்த மாநகராட்சிகள் நேரடியாக மாநில அரசுடன் தொடர்பு கொள்கின்றன. இந்தியாவின் மிகப்பெரும் மாநகராட்சியாக மும்பை விளங்குகிறது. அடுத்த நிலைகளில் முறையே தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகியன உள்ளன.

மாநகராட்சி 
Chennai Corporation headquarters

மாநகரம் பல வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகராட்சி அங்கத்தினர்கள் தங்களுக்குள் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை மேலாண்மை செய்ய இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த மாநகராட்சி ஆணையர் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை மேற்பார்வையிடுவதுடன் மாநகராட்சி எடுக்கும் முடிவுகளை செயலாற்றும் பொறுப்பை உடையவராகிறார். ஆண்டின் நிதிநிலை அறிக்கையையும் தயாரிக்கிறார்.

ஓர் நகரின் மாநகராட்சி சாலைகள் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், பிறப்பு/இறப்பு பதிவு, கழிவுகள் அகற்றல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளது. மேலும் சில மாநகராட்சிகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி சேவைகளை வழங்குகின்றன.பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களையும் பராமரிக்கின்றன. இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, ஆக்ட்ராய் என்னும் நுழைவு வரி (பல மாநகராட்சிகளில் கைவிடப்பட்டு வருகிறது) மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டணங்கள் மூலமும் பெறப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாபெருநகர் பகுதிமாநகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாள் (திரைப்படம்)மத கஜ ராஜார. பிரக்ஞானந்தாநெல்சனீஸ்வரன்ஹரி (இயக்குநர்)69 (பாலியல் நிலை)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)முகுந்த் வரதராஜன்சேக்கிழார்தமிழ் இலக்கியப் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பூப்புனித நீராட்டு விழாஇல்லுமினாட்டிகுண்டலகேசிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கழுகுஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ் தேசம் (திரைப்படம்)பனிக்குட நீர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கணையம்மதுரைக் காஞ்சிகுற்றாலக் குறவஞ்சிசோழர்கருமுட்டை வெளிப்பாடுஆசாரக்கோவைஇந்திரா காந்திதனுசு (சோதிடம்)காரைக்கால் அம்மையார்யாதவர்அனைத்துலக நாட்கள்கார்லசு புச்திமோன்பெயரெச்சம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கம்பர்நாளந்தா பல்கலைக்கழகம்இயற்கைகம்பராமாயணம்கருத்துமங்கலதேவி கண்ணகி கோவில்வட்டாட்சியர்இன்னா நாற்பதுவெந்து தணிந்தது காடுபழமுதிர்சோலை முருகன் கோயில்மூகாம்பிகை கோயில்பாரிவிராட் கோலிமியா காலிஃபாதிருவிழாஜெயகாந்தன்குற்றியலுகரம்பெரியாழ்வார்வெள்ளி (கோள்)திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்சீறாப் புராணம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவில்லிபாரதம்புறாகருப்பைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சப்தகன்னியர்அண்ணாமலையார் கோயில்பள்ளுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அருணகிரிநாதர்பட்டினப் பாலைமயக்கம் என்னசுனில் நரைன்பாளையத்து அம்மன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கலிங்கத்துப்பரணிமுன்னின்பம்மு. கருணாநிதி🡆 More