கிருஷ்ண வம்சி: தெலுங்கு திரைப்பட இயக்குனர்

பசுபுலேட்டி கிருஷ்ண வம்சி (Pasupuleti Krishna Vamsi) ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடன இயக்குனருமாவார்.

இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

கிருஷ்ண வம்சி
பிறப்புபசுபலேட்டி வெங்கட பங்காருராஜு
28 சூலை 1962 (1962-07-28) (அகவை 61)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைப்படத் தயாரிபாளர்
திரைக்கதை எழுத்தாளர்
நடன இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்பசுபலேட்டி இரித்விக் கிருஷ்ணா

தொழில்

1995இல் வெளியான "குலாபி" என்ற துப்பறியும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் ஜே. டி. சக்ரவர்த்தி நடித்திருந்தார். வம்சி இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மூன்று நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். குலாபி படத்தில் இயக்குநராக அறிமுகமானதற்கு முன்பு ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1996ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான நின்னி பெல்லாடுதா என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர் இவர் தனது தயாரிப்பு நிறுவனமான ஆந்திர டாக்கீஸின் கீழ் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குற்றவியல் படமான சிந்தூரம் என்பதை இயக்கினார். இரண்டு படங்களும் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருதை வென்றன. 2002ஆம் ஆண்டில், இவர், 1998இல் தெலுங்கு மொழியில் தான் இயக்கி வெளியான அந்தப்புரம் என்ற அதிரடித் திரைப்படத்தை சக்தி: தி பவர் என்ற பெயரில் பாலிவுட்டில் இயக்கினார்.

இவர், பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரியின் ரசிகர் என்று அறியப்படுகிறது. தான் இயக்கியிருந்த பல படங்களில் அவரது பாடல்களை இடம் பெறசெய்தார் . அவர் பாடல் எழுதிய படங்களில் நின்னி பெல்லாடுதா, குலாபி, சிந்தூரம், சந்திரலேகா, முராரி, கட்கம், சக்ரம், மகாத்மா, பைசா ஆகியவை அடங்கும் .

சொந்த வாழ்க்கை

கிருஷ்ண வம்சி தென்னிந்திய நடிகை ரம்யா கிருஷ்ணனை மணந்தார். ரம்யா கிருஷ்ணன் திருமணத்திற்கு முன் ஸ்ரீ ஆஞ்சநேயம் (சிறப்புத் தோற்றம்) மற்றும் சந்திரலேகா ஆகிய இவரது இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கிருஷ்ண வம்சி தொழில்கிருஷ்ண வம்சி சொந்த வாழ்க்கைகிருஷ்ண வம்சி மேற்கோள்கள்கிருஷ்ண வம்சி வெளி இணைப்புகள்கிருஷ்ண வம்சிஇந்தியத் திரைப்படத்துறைதெலுங்குத் திரைப்படத்துறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இட்லர்வேற்றுமையுருபுநயன்தாராமாமல்லபுரம்பறையர்காப்பியம்குதிரைபுற்றுநோய்மின்னஞ்சல்பழனி பாபாபிரான்சிஸ்கன் சபைசீரகம்முலாம் பழம்மாணிக்கம் தாகூர்தேவாரம்ஆடு ஜீவிதம்காவிரி ஆறுநாயன்மார் பட்டியல்நற்கருணைமுத்துராஜாசீறாப் புராணம்அணி இலக்கணம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திய நாடாளுமன்றம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுந்தர காண்டம்ஆனந்தம் விளையாடும் வீடுஆண்டு வட்டம் அட்டவணைஓம்தயாநிதி மாறன்தேனி மக்களவைத் தொகுதிஈகைதிருவிளையாடல் புராணம்கர்நாடகப் போர்கள்மருது பாண்டியர்பரதநாட்டியம்கல்விவாதுமைக் கொட்டைவேலு நாச்சியார்இந்தியக் குடியரசுத் தலைவர்செஞ்சிக் கோட்டைஅகோரிகள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுதென் சென்னை மக்களவைத் தொகுதிபெரியாழ்வார்அறிவியல் தமிழ்வே. தங்கபாண்டியன்உணவுபக்கவாதம்விவேகானந்தர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவெந்தயம்ஜெ. ஜெயலலிதாமலையாளம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகருக்காலம்தீநுண்மிதிருட்டுப்பயலே 2காம சூத்திரம்குற்றியலுகரம்மனித உரிமைவிண்டோசு எக்சு. பி.சுற்றுச்சூழல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வட்டாட்சியர்முத்துலட்சுமி ரெட்டிடி. எம். கிருஷ்ணாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்சேக்கிழார்வைப்புத்தொகை (தேர்தல்)கேழ்வரகுராதிகா சரத்குமார்வைகோ🡆 More