கார்டனா: மெய்நிகர் உதவியாளர்

கார்டனா (Cortana) என்பது ஒரு மெய்நிகர் உதவியாளர் ஆகும்.

இது மைக்ரோசாப்ட்டால் விண்டோஸ் 10, விண்டோஸ் 10 திறன்பேசி மற்றும் விண்டோஸ் தொலைபேசி 8.1 . மைக்ரோசாப்ட் பேண்ட், சர்பேஸ், ஹெட்போன்கள், எக்ஸ்பாக்ஸ் ஒன், ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மிக்சட் ரியாலிட்டி, மற்றும் அமேசான் அலெக்சா ஆகிய சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும்

கார்டானா மூலம் நினைவூட்டல்களை அமைக்கலாம், விசைப்பலகை உள்ளீடு இல்லாமல் மனித குரல்களை அடையாளம் காணலாம் மற்றும் பிங் தேடுபொறியிலிருந்து தகவல் மற்றும் வலைத்தள முடிவுகளைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் .

கார்டனா தற்போது ஆங்கிலம், போர்த்துகீசியம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ், சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆகிய பதிப்புகளில் கிடைக்கிறது, இது மென்பொருள் தளம் மற்றும் அது பயன்படுத்தும் பகுதியைப் பொறுத்து இது மாறுபடலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2020 ஜனவரி 31 ஆம் தேதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இருந்து கார்டானா நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தால் மைக்ரோசாப்டின் அனைத்து சந்தைகளும் பாதிக்கப்படாது எனக் கருதப்படுகிறது.

வரலாறு

கார்டானா முதன்முறையாக சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மைக்ரோசாப்ட் கட்டமைப்பு மேம்பாட்டாளர் மாநாட்டில் (ஏப்ரல் 2–4, 2014) விளக்கப்பட்டது. விண்டோஸ் தொலைபேசி மற்றும் விண்டோசுக்கான எதிர்கால இயக்குதள முறைமைகளின் முக்கிய அங்கமாக இது நிறுவப்பட்டது.

பிற தளங்களுக்கு விரிவாக்கம்

விண்டோஸ் தொலைபேசிகளின் இயக்க முறைமையினை பெருமளவில் இணைப்பதன் ஒரு பகுதியாக மேசைத்தள விண்டோசு 10 மற்றும் தொலைபேசி சாதனங்களுக்கான கார்டனாவை மைக்ரோசாப்ட் சனவரி 2015 இல் அறிவித்தது.

மே 26, 2015 அன்று, மைக்ரோசாப்ட் கார்டானா மற்ற தொலைபேசி தளங்களிலும் கிடைக்கும் என்று அறிவித்தது. 2015 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பதிப்பினை வெளியிட்டது. ஆனால் அதற்கு முன்னதேகவே அதற்கான ஏ பி கே பதிப்பு திருட்டுத் தனமாக வெளியானது. அதே ஆண்டில் டிசம்பர் மாதம் ஐஓஎஸ் பதிப்பிற்கான கார்டனாவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

2015 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட், கார்டனா எக்ஸ்பாக்ஸ் ஒன் கருவிக்கு கிடைக்கும் என்று அறிவித்தது.

எண்களால்

கார்டானாவை அணுகக்கூடிய நபர்களின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 800 மில்லியனாக இருந்தது. மேலும் கார்டனா தொடங்கப்பட்டதிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கையானது 18 பில்லியன் ஆகும்.

பிற சேவைகளில் கோர்டானா

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 உடன் வெளியான மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற பல தயாரிப்புகளில் இந்த நிறுவனம் கார்டனாவை ஒருங்கிணைத்துள்ளது. உலகளாவிய கூட்டாளர்கள் மாநாடு 2015 இல் மைக்ரோசாப்ட் கிக்ஜாம் போன்ற வரவிருக்கும் தயாரிப்புகளுடன் கார்டனா ஒருங்கிணைப்பிற்கான விளக்கத்தினை வழங்கியது.

பிராந்தியங்கள் மற்றும் மொழிகள்

கார்டானாவின் இங்கிலாந்து பதிப்பு பிரித்தானிய உச்சரிப்புடன் பேசுகிறது . மேலும் பிரித்தானிய உரையாடல் (சேட்) வாக்கியங்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சியாவோ நா என அழைக்கப்படும் சீன பதிப்பு மாண்டரின் மொழியைப் பேசுகிறது மற்றும் முகம் மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட ஒரு ஐகானைக் கொண்டுள்ளது, இது மற்ற பிராந்தியங்களில் பயன்படுத்தப்படவில்லை.

2016 ஆம் ஆண்டின் கணக்கின்படி விண்டோஸ் சாதனங்களில் கார்டானாவின் ஆங்கில பதிப்பு அமெரிக்கா கனடா (பிரெஞ்சு / ஆங்கிலம்), ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் இலண்டன் (பிரித்தானிய ஆங்கிலம்) ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. கார்டானாவின் பிற மொழி பதிப்புகள் பிரான்ஸ் (பிரஞ்சு), சீனா (எளிமைப்படுத்தப்பட்ட சீன), ஜப்பான் (ஜப்பானிய), ஜெர்மனி (ஜெர்மன்), இத்தாலி (இத்தாலியன்), பிரேசில் (போர்த்துகீசியம்), மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் (ஸ்பானிஷ்) ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன.

கார்டனாவின் இலண்டன் பதிப்பிற்கு ஆங்கிலோ-பிரெஞ்சு நடிகை, பாடகி / பாடலாசிரியர் மற்றும் குரல் கலைஞரான ஜின்னி வாட்சன் குரல் கொடுத்துள்ளார்.

சான்றுகள்

Tags:

கார்டனா வரலாறுகார்டனா பிற சேவைகளில் கோர்டானாகார்டனா பிராந்தியங்கள் மற்றும் மொழிகள்கார்டனா சான்றுகள்கார்டனாஆண்ட்ராய்டு இயங்குதளம்எக்ஸ் பாக்ஸ் ஒன்ஐஓஎஸ்மைக்ரோசாப்ட்விண்டோசு 10

🔥 Trending searches on Wiki தமிழ்:

விநாயகர் அகவல்குண்டலகேசிகுற்றியலுகரம்கள்ளுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமதீனாகருப்பைஊராட்சி ஒன்றியம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)திருப்பூர் மக்களவைத் தொகுதிவைரமுத்துதமிழக வெற்றிக் கழகம்ஜெ. ஜெயலலிதாஈரோடு மக்களவைத் தொகுதிமுல்லைப்பாட்டுஐராவதேசுவரர் கோயில்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நாளந்தா பல்கலைக்கழகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்எடப்பாடி க. பழனிசாமிநவரத்தினங்கள்பெரியபுராணம்ஓ. பன்னீர்செல்வம்உட்கட்டமைப்புதொல்காப்பியம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசுப்பிரமணிய பாரதிஅரபு மொழிஅபுல் கலாம் ஆசாத்கரூர் மக்களவைத் தொகுதிசன்ரைசர்ஸ் ஐதராபாத்ரஜினி முருகன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குமரி அனந்தன்காச நோய்இலங்கையோவான் (திருத்தூதர்)பணவீக்கம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பெண்ணியம்சென்னை சூப்பர் கிங்ஸ்காப்பியம்வரிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)மீரா சோப்ராமகாபாரதம்முலாம் பழம்பரிவர்த்தனை (திரைப்படம்)பச்சைக்கிளி முத்துச்சரம்எம். கே. விஷ்ணு பிரசாத்இசுலாம்கார்லசு புச்திமோன்ஒற்றைத் தலைவலிசரண்யா துராடி சுந்தர்ராஜ்அறுபடைவீடுகள்நவதானியம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஇந்திய ரூபாய்முகம்மது நபிசவ்வாது மலைஎயிட்சுஎஸ். ஜானகிஅன்னை தெரேசாதிருவண்ணாமலைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மதுரைக் காஞ்சிமஞ்சள் காமாலைசங்க காலம்மோசேவேதநாயகம் பிள்ளைதமிழ் மாதங்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்புநீலகிரி மாவட்டம்108 வைணவத் திருத்தலங்கள்🡆 More