கலிங்க நாடு

கலிங்க நாடு அல்லது கலிங்கம் (ⓘ) என்பது தற்கால ஒரிஸ்சா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால இந்திய அரசுகளில் ஒன்றாகும்.

மகாமேகவாகனப் பேரரசு கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் காரவேலன் ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்".

கலிங்கம்
କଳିଙ୍ଗ
கி மு மூன்றாம் நூற்றாண்டு–கி மு மூன்றாம் நூற்றாண்டு
கலிங்கா நாட்டின் எல்லைகள்
கலிங்க நாடு புகழ் பெற்றிருக்கும் போது அதன் எல்லைகள்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
வரலாறு 
• தொடக்கம்
கி மு மூன்றாம் நூற்றாண்டு
• முடிவு
கி மு மூன்றாம் நூற்றாண்டு
தற்போதைய பகுதிகள்கலிங்க நாடு இந்தியா
கலிங்க நாடு
ஜெகன்நாதர் கோயில், புரி, கலிங்க நாடு

வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.

தொலை தூர இடங்களாகிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலும், இந்தோனீசியத் தீவுகளிலும் கலிங்கத்தவர் குடியேறியிருந்தனர்.

கலிங்க நாட்டிற்கு தந்தபுரம் மற்றும் இராஜபுரம் என இரண்டு தலைநகரங்கள் இருந்ததை மகாபாரதம் குறித்துள்ளது.

குரு நாட்டின் இளவரசன் துரியோதனனின் மனைவி பானுமதி, கலிங்க நாட்டின் மன்னர் சித்திராங்கதனின் மகளாவார். குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக போரிட்டனர்.

அங்க நாடு (கிழக்கு பிகார்), வங்க நாடு (தெற்கு வங்காளம்), பௌண்டர நாடு (மேற்கு வங்காளம்) மற்றும் சுக்மா நாடு மற்றும் (வடமேற்கு வங்காளதேசம்) ஆகிய நாட்டு மன்னர்களுக்கு, கலிங்க நாட்டு அரச மரபினர்களே பொதுவான முன்னோர்கள் ஆவார்.

மகாபாரத குறிப்புகள்

வரலாற்று ஆவணங்களின் குறிப்புப்படி கலிங்கப் பிரதேசத்தின் பரப்புகள்

பரத கண்டத்தின் பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் மகாபாரதம் குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் கிராதர்கள் நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது.

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் கௌரவர் அணி சார்பாக போரிட்டனர். போரில் வீமனால் கலிங்கர்கள் கொல்லப்பட்டனர்.

கலிங்கப் போர்

மௌரியப் பேரரசின்  அசோகருக்கும் கலிங்க நாட்டுக்கும் இடையில் நடந்த போரில், அசோகர் வெற்றி பெற்ற பின்னர் பௌத்த சமயத்தைத் தழுவி அகிம்சை வழியில் நாட்டை ஆண்டார்.

கலிங்க நாட்டில் சிவ வழிபாடு

கலிங்க நாட்டவரகள் புலி வடிவத்தில் சிவனை வியாக்கிரேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17)

பிற குறிப்புகள்

  • கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை குரு நாட்டின் மன்னர் புரு மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95)
  • தேவர்களின் படைத்தலைவரான காத்திகேயனின் கூட்டாளிகளில் கலிங்க நாட்டவர்களும் அடங்குவர். (9: 45)

இதனையும் காண்க

மேற்கோள்கள்


Tags:

கலிங்க நாடு மகாபாரத குறிப்புகள்கலிங்க நாடு கலிங்கப் போர்கலிங்க நாடு கலிங்க நாட்டில் சிவ வழிபாடுகலிங்க நாடு இதனையும் காண்ககலிங்க நாடு மேற்கோள்கள்கலிங்க நாடுஆந்திராஇந்தியாஒரிஸ்சாகாரவேலன்படிமம்:Ta-கலிங்கம்.oggமகாமேகவாகன வம்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தன்வினை / பிறவினை வாக்கியங்கள்லீலாவதிகளப்பிரர்தொழிலாளர் தினம்பாசிப் பயறும. கோ. இராமச்சந்திரன்இங்கிலீஷ் பிரீமியர் லீக்ஐக்கிய நாடுகள் அவைஆற்றுப்படைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஓமியோபதிகட்டபொம்மன்சங்க காலம்இலட்சத்தீவுகள்வேளாளர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பழனி முருகன் கோவில்திருமால்மங்கலதேவி கண்ணகி கோவில்பொன்னுக்கு வீங்கிசித்திரம் பேசுதடி 2பெயர்ச்சொல்சிவவாக்கியர்பிரதமைபிள்ளையார்விளம்பரம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஒத்துழையாமை இயக்கம்மண் பானைநவக்கிரகம்தேவயானி (நடிகை)புற்றுநோய்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தமிழ்ப் புத்தாண்டுமுதலாம் இராஜராஜ சோழன்இரவீந்திரநாத் தாகூர்பொதுவுடைமைஅனுமன்பவன் கல்யாண்புனித ஜார்ஜ் கோட்டையுகம்பி. காளியம்மாள்பயில்வான் ரங்கநாதன்இந்தியப் பிரதமர்பித்தப்பைஅறுபது ஆண்டுகள்வேலு நாச்சியார்கள்ளர் (இனக் குழுமம்)பர்வத மலைசார்பெழுத்துபத்து தலபழமொழி நானூறுஇந்தியாவில் இட ஒதுக்கீடுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வழக்கு (இலக்கணம்)தமிழ் எழுத்து முறைதொடை (யாப்பிலக்கணம்)கல்லணைதிணையும் காலமும்தங்கம்சுவாதி (பஞ்சாங்கம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்முல்லைக்கலிபிரியங்கா காந்திமுத்துராஜாசீறாப் புராணம்நுரையீரல் அழற்சிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்விடுதலை பகுதி 1நைட்ரசன்திரிகடுகம்தமிழ் படம் 2 (திரைப்படம்)மயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சுடலை மாடன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வெப்பம் குளிர் மழைஸ்டீவன் ஹாக்கிங்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்🡆 More