கலாசு மக்கள்

'கலாசு(Kalasha), கலாசா, வைகாலி அல்லது வய் என்றும் அழைக்கப்படும் இவர்கள், பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு தார்திக் இந்தோ ஆரிய மக்கள் பூர்வ குடிகள் ஆவர்.

இவர்கள் இந்தோ-ஆரிய கிளையின் தார்திக் குடும்பத்தைச் சேர்ந்த கலாசா மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் பாக்கித்தான் மக்களிடையே தனித்துவமாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் பாக்கித்தானின் மிகச்சிறிய இனவழிப்புக் குழுவாகவும் கருதப்படுகின்றன. இவர்களை பல கடவுள்கள் நம்பிக்கையை கடைபிடிப்பவர்களாக ஒரு சில வரலாற்றாசிரியர்கள் வகைப்படுத்துகின்றனர். கல்வியாளர்கள் இதை "பண்டைய இந்து மதத்தின் ஒரு வடிவம்" என்றும் வகைப்படுத்துகின்றனர்.

கலாசா
கலாசு மக்கள்
ஒரு கலாசா பெண்கள்
மொத்த மக்கள்தொகை
சுமார் 4,100–30,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சித்ரால் மாவட்டம், பாக்கித்தான்
மொழி(கள்)
கலாசா, கோவார் மொழி, சித்ராலி, உருது
சமயங்கள்
பண்டைய இந்து மதத்தின் ஒரு வடிவம் பலகடவுள் நம்பிக்கை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நூரிஸ்தானியர்கள், பிற இந்தோ ஆரிய மக்கள்
கலாசு மக்கள்
திருவிழா நாளில் கலாசா மக்கள் நடனமாடுகிறார்கள்

கலாசு ஆசியாவின் பழங்குடி மக்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் சித்ரால் பள்ளத்தாக்குக்கு வேறொரு இடத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்கலாம். இவர்களின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் காவியங்களில் இவர்கள் "சியாம்" என்று அழைக்கப்படுகின்றனர். சில கலாசா மரபுகள் பல்வேறு கலாசு மக்களை புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகளாகக் கருதுகின்றன. அவர்கள் காந்தாரி மக்களின் சந்ததியினர் என்றும் சிலர் கருதுகின்றனர். மரபணு மற்றத்தின் பகுப்பாய்வின் அடிப்படையில், இவர்கள் வடக்கு ஐரோவாசியா பகுதிகளில் குடியேறியவர்களின் சந்ததியினராக இருக்கலாம். இவர்கள் சிலர் மேற்கு ஆசியாவிலிருந்து தெற்காசியாவிற்கு ஆரம்பத்தில் குடியேறியவர்களாக இருக்கின்றனர்.

ஆப்கானித்தானின் அருகிலுள்ள நூரிஸ்தானின் (வரலாற்று ரீதியாக காபிரிஸ்தான் என அழைக்கப்படுகிறாது) அண்டை நாடான நூரிஸ்தானிய மக்கள் ஒரு காலத்தில் அதே கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர். மேலும் சில வேறுபாடுகளுடன் இருந்தாலும் கலாசா மக்களால் பின்பற்றப்பட்ட அதே நம்பிக்கையைப் பின்பற்றினர். வரலாற்று ரீதியாக பதிவுசெய்யப்பட்ட இசுலாமிய படையெடுப்புகள் 11 ஆம் நூற்றாண்டில் கசானவித்துகளால் இருந்தன. அதே சமயம் 1339 ஆம் ஆண்டில் தைமூரின் படையெடுப்பின் போது அவை முதன்முதலில் சான்றளிக்கப்பட்டன. நூரிஸ்தான் 1895-96ல் வலுக்கட்டாயமாக இசுலாமிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சில சான்றுகள் மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தனர் எனத் தெரிகிறது. சித்ராலின் கலாசா தங்களது தனித்தனி கலாச்சார மரபுகளை பராமரித்து வருகின்றனர்.

கலாச்சாரம்

கலாசு மக்களின் கலாச்சாரம் தனித்துவமானது. வடமேற்கு பாக்கித்தானில் இவர்களைச் சுற்றியுள்ள பல சமகால இசுலாமிய இனக்குழுக்களிடமிருந்து பல வழிகளில் வேறுபடுகிறது. இவர்கள் பல கடவுட் கொள்கை மற்றும் இயற்கை இவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் ஆன்மீக பாத்திரத்தை வகிக்கிறது. இவர்களின் மத பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, தியாகங்கள் செய்யப்படுகின்றன. அவர்களின் மூன்று பள்ளத்தாக்குகளின் ஏராளமான வளங்களுக்கு நன்றி செலுத்துவதற்காக திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வாவில் அமைந்துள்ள கலாசா மக்கள் பம்புரேட், ரம்பூர் , மற்றும் பிரீர் என்ற மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மலை பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். இதில் பிரீர் பள்ளத்தாக் மிகவும் பாரம்பரியமானது.  

கலாசா புராணங்களும் நாட்டுப்புறங்களும் பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்திய துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில் உள்ள இந்து மரபுகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளன. கலாசு அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தின் காரணமாக மானுடவியலாளர்களைக் கவர்ந்துள்ளனர்.

மொழி

கலாசா-முன் என்றும் அழைக்கப்படும் கலாசா மொழி, இந்திய-ஆரிய மொழிகளின் தார்டிக் குழுவில் உறுப்பினராக உள்ளது. கோவார் மொழி இதன் நெருங்கிய அண்டை மொழியாகும். கலாசா முன்னர் தெற்கு சித்ராலில் ஒரு பெரிய பகுதியில் பேசப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அது பெரும்பாலும் மேற்கு பக்க பள்ளத்தாக்குகளுடன் கோவருக்கு நிலத்தை இழந்துவிட்டது.

மதமாற்றம்

கலாசு மக்கள் 
ஒரு கலாசா பெண்

கலாசாவின் இன பண்புகளை வரையறுப்பது குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஏராளமானவர்கள் இருந்தனர் என்றாலும், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் கடந்த நூற்றாண்டில் அதன் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டிருக்கிறார்கள். கலாசாவின் தலைவரான சைபுல்லா ஜான், “எந்த கலாசும் இசுலாமிற்கு மாறினால், அவர்கள் இனி நம்மிடையே வாழ முடியாது. நாங்கள் எங்கள் அடையாளத்தை வலுவாக வைத்திருக்கிறோம் " என்கிறார். சுமார் மூவாயிரம் பேர் இசுலாத்திற்கு மாறியுள்ளனர் அல்லது மதம் மாறியவர்களின் சந்ததியினராக இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் இன்னும் கலாசா கிராமங்களின் அருகிலேயே வசித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் மொழியையும் அவர்களின் பண்டைய கலாச்சாரத்தின் பல அம்சங்களையும் பராமரிக்கின்றனர். இப்போது, இசுலாமிற்கு மாறியவர்கள், மொத்த கலாசா பேசும் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

பெண்களின் நிலை

கலாசா பெண்கள் வழக்கமாக நீண்ட கருப்பு ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். பெரும்பாலும் சோகி ஓட்டினால் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்த காரணத்திற்காக, அவர்கள் சித்ராலில் "கருப்பு காபிர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். ஆண்கள் பாக்கித்தானிய சல்வார் கமீஸை ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் குழந்தைகள் நான்கு வயதிற்குப் பிறகு வயது வந்தோருக்கான சிறிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள்.

சுற்றியுள்ள பாக்கித்தானிய கலாச்சாரத்திற்கு மாறாக, கலாசா பொதுவாக ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பார்ப்பதில்லை அல்லது பாலினங்களுக்கிடையேயான தொடர்பைக் கண்டு கோபப்படுவதில்லை. இருப்பினும், மாதவிடாயில் இருக்கும் பெண்களும், கருவுற்ற பெண்களும் ள் தங்கள் "தூய்மையை" மீண்டும் பெறும் வரை, கிராம மாதவிடாய் கட்டிடமான "பசலேனி"யில் வாழ அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் பசலேனியில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு "தூய்மையை" மீட்டெடுக்கும் ஒரு சடங்கு உள்ளது. இது ஒரு பெண் தன் கணவனிடம் திரும்புவதற்கு முன்பு செய்யப்பட வேண்டும். கணவர் இந்த சடங்கில் தீவிரமாக பங்கேற்கிறார்.

பெண்கள் நான்கு அல்லது ஐந்து வயதிலிருந்து ஆரம்பித்து பதினான்கு அல்லது பதினைந்து வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஒரு பெண் கணவனை மாற்ற விரும்பினால், அவரின் தற்போதைய கணவர் தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது குறித்து தனது வருங்கால கணவருக்கு ஒரு கடிதம் எழுதுவார். ஏனென்றால், புதிய கணவர் அவளை விரும்பினால் அந்தப் பணத்தை இரட்டிப்பாக செலுத்த வேண்டும். உதாரணமாக, தற்போதைய கணவர் அவருக்காக ஒரு பசுவைக் கொடுத்தால், புதிய கணவர் அசல் கணவருக்கு இரண்டு பசுக்களை கொடுக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் இரகசியமாக ஓடிப்போவதின் மூலமும் திருமணம் அடிக்கடி நிகழ்கிறது. ஏற்கனவே வேறொரு ஆணுடன் திருமணம் செய்துகொண்ட பெண்களையும் உள்ளடக்கியது. உண்மையில், மனைவி-ஓடிப்போதல் முக்கிய விழாக்களுடன் சேர்ந்து "சிறந்த பழக்கவழக்கங்களில்" ஒன்றாக கருதப்படுகிறது. புதிய கணவர் முன்னாள் கணவருக்கு செலுத்திய இரட்டை மணமகள் விலையை, மத்தியஸ்தர்களால் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை, மனைவி-ஓடிப்போதல் சில அரிய சந்தர்ப்பங்களில் குலங்களுக்கிடையில் ஒரு சிறு மோதலுக்கு வழிவகுக்கும்.

பகாரி மக்களின் வரலாற்று மத நடைமுறைகள் கலாசு மக்களைப் போலவே இருக்கின்றன. அதில் அவர்கள் "இறைச்சி சாப்பிட்டார்கள், மது அருந்தினார்கள், கூடுதலாக, பகாரி மக்கள் கலாசாவை ஒத்த ஒரு பிரிவு அமைப்பை உருவாக்கும் பரம்பரை விதிகளும் இருந்தன".

பண்டிகைகள்

கலாசு மக்கள் 
நான்கு நாள் திருவிழாவான சிலம் ஜோசியைக் கொண்டாடும், கலாசு மக்கள்.
கலாசு மக்கள் 
சிலம் ஜோசி திருவிழாக் கொண்டாட்டங்கள்

கலாசாவில், மே மாதத்தின் நடுவில் "சிலம் ஜோசி", இலையுதிர்காலத்தில் "உச்சாவ்" மற்றும் மழைக்காலத்தில் "கௌமாசு" ஆகிய மூன்று முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஆயர்களின் கடவுளான சோரிசனுக்கு குளிர்காலத்தில் மந்தைகளை பாதுகாப்பதற்காக குளிர்கால விழாவில் நன்றி செலுத்துகின்றனர். அதே நேரத்தில் கோசிடாய் புல் திருவிழா வரை அவ்வாறு செய்யப்படுகிறது. வசந்த காலத்தில் ஜோசி திருவிழாவில் நன்றி கூறுகின்ற்னர். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கொண்டாடப்படுகிறது. ஜோசியின் முதல் நாள் "பால் நாள்", இதில் கலாசா பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்னர் சேமிக்கப்பட்ட பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது.  

மதம்

கலாசு மக்கள் 
பாரம்பரிய உடையில் ஒரு கலாசா பெண்

கலாசா மக்கள் இசுலாத்தை பின்பற்றுபவர்களுக்கும், பாரம்பரியமான கலாசு மதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும் இடையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளனர். சில வரலாற்றாளர்கள் இவர்களை பலகடவுள்களை வணங்குபவர்களாக முத்திரை குத்துகிறார்கள், ஆனால் மற்றவர்கள் " பண்டைய இந்து மதத்தின் ஒரு வடிவம்" என்கின்றனர்.

சமசுகிருத மொழியியலாளர் மைக்கேல் விட்செலின் கூற்றுப்படி, பாரம்பரிய கலாசு மதம் "புராணங்கள், சடங்கு, சமூகம் மற்றும் இரிக்கு வேதத்தின் பல அம்சங்களை எதிரொலிக்கிறது" எனத் தெரிகிறது. கலாசா கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை அமைப்பு அவர்களைச் சுற்றியுள்ள பல்வேறு இனத்தவர்களிடமிருந்து வேறுபடுகின்றன. ஆனால் வடகிழக்கு ஆப்கானித்தானில் அண்டை நாடான நூரிஸ்தானியர்கள் இசுலாத்திற்கு கட்டாயமாக மாற்றப்படுவதற்கு முன்பு அவர்கள் கடைப்பிடித்ததைப் போலவே இருக்கின்றன.

பல்வேறு எழுத்தாளர்கள் இவர்கள் கடைப்பிடித்த நம்பிக்கையை வெவ்வேறு வழிகளில் விவரித்திருக்கிறார்கள். இரோசெச்டர் பல்கலைக்கழகச் சமூக மானுடவியலாளரும் பேராசிரியருமான பார்பரா ஏ. வெஸ்ட், ஆசிய மற்றும் ஓசியானியா மக்களின் கலைக்களஞ்சியம் என்ற உரையில் கலாசா மாநிலங்களைப் பொறுத்தவரை, அவர்களின் "மதம் பல கடவுள்களையும் ஆவிகளையும் அங்கீகரிக்கும் இந்து மதத்தின் ஒரு வடிவம்" என்றும் அது "அவர்களுக்கு வழங்கப்பட்டது" இந்தோ-ஆரிய மொழி ... கலசாவின் மதம், அலெக்சாண்டர் மற்றும் அவரது படைகளின் மதத்தை விட, அவர்களின் இந்திய அண்டை நாடுகளின் இந்து மதத்துடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கிறது " என்கிறார். பத்திரிகையாளர் புரூட் பெகான் இந்த முன்னோக்குகள் அனைத்தையும் இணைத்து, இவர்கள் பின்பற்றிய மதத்தை "பழைய பேகன் மற்றும் ஆனிமிச நம்பிக்கைகள் நிறைந்த பண்டைய இந்து மதத்தின் ஒரு வடிவம்" என்று விவரிக்கிறார். எம். விட்செல் இவர்க்ளால் பின்பற்றப்பட்ட பண்டைய இந்து மதத்தின் வடிவத்தில் வேதத்திற்கு முந்தைய மற்றும் வேத தாக்கங்களை விவரிக்கிறார்.

இடம், காலநிலை மற்றும் புவியியல்

பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வாவில் அமைந்துள்ள கலாசா மக்கள் பம்புரேட், ரம்பூர் , மற்றும் பிரீர் என்ற மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மலை பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர்: இந்த பள்ளத்தாக்குகள் குனார் நதியை நோக்கி செல்கின்றன. சில சித்ராலுக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் முடிகிறது.

மேற்கோள்கள்

நூலியல்

வெளி இணைப்புகள்

Tags:

கலாசு மக்கள் கலாச்சாரம்கலாசு மக்கள் பெண்களின் நிலைகலாசு மக்கள் மதம்கலாசு மக்கள் இடம், காலநிலை மற்றும் புவியியல்கலாசு மக்கள் மேற்கோள்கள்கலாசு மக்கள் நூலியல்கலாசு மக்கள் வெளி இணைப்புகள்கலாசு மக்கள்இந்திய-ஆரிய மொழிகள்இந்தோ ஆரிய மக்கள்கலாசா மொழிகைபர் பக்துன்வா மாகாணம்சித்ரால் மாவட்டம்பாக்கித்தான்பூர்வ குடிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இரட்டைமலை சீனிவாசன்கட்டுவிரியன்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்யாதவர்தூது (பாட்டியல்)சீரகம்இராவணன்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஉமறுப் புலவர்சூழலியல்சிறுபாணாற்றுப்படைகுடும்ப அட்டைமணிமேகலை (காப்பியம்)பஞ்சாங்கம்கொடைக்கானல்இந்திய மக்களவைத் தொகுதிகள்புல்வெளிகல்லணைஉணவுநாட்டார் வழக்காற்றியல்இரட்சணிய யாத்திரிகம்ஆனைக்கொய்யாமயங்கொலிச் சொற்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திவரலாறுமுத்துராமலிங்கத் தேவர்கம்பர்பௌத்தம்தமன்னா பாட்டியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சைவ சமயம்ஸ்ரீலீலாதமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்கிராம்புசிவாஜி (பேரரசர்)திருநெல்வேலிதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்அன்னை தெரேசாதேம்பாவணிசூரரைப் போற்று (திரைப்படம்)மார்கழி நோன்புமும்பை இந்தியன்ஸ்விக்ரம்மூலிகைகள் பட்டியல்இலங்கைப் பொருளாதார நெருக்கடி (2019–தற்போது)குண்டூர் காரம்பஞ்சபூதத் தலங்கள்கடன்உணவுப் பாதுகாப்புமருது பாண்டியர்அக்பர்ஆய்த எழுத்துஇந்திய வரலாறுபீப்பாய்பசுமைப் புரட்சிமோனைவே. செந்தில்பாலாஜிகண்ணனின் 108 பெயர் பட்டியல்முருகன்அண்ணாமலை குப்புசாமிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஒற்றைத் தலைவலிகில்லி (திரைப்படம்)வாட்சப்ஸ்டார் (திரைப்படம்)திருமலை நாயக்கர்கண்ணகிபாண்டியர்தமிழ் மன்னர்களின் பட்டியல்இந்திய விடுதலை இயக்கம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வினையெச்சம்பெண்காரைக்கால் அம்மையார்இளங்கலை வணிகவியல்முதல் மரியாதைதிருவருட்பா🡆 More