கபாலா

கபாலா (abala) என்பது அசர்பைஜான் குடியரசில் உள்ள ஒரு நகரமும்,கபாலா மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

நகராட்சி கபாலா நகரத்தையும், கோஸ்நாட் கிராமத்தையும் உள்ளடக்கியுள்ளது . இந்த நகரம் முன்னர், குட்காஷென் என்று அழைக்கப்பட்டது. ஆனால் அசர்பைஜான் குடியரசின் சுதந்திரத்திற்குப் பிறகு, காக்கேசிய அல்பேனியாவின் தொல்பொருள் தளத்திற்கு சுமார் 20 கிமீ தென்மேற்கில் அமைந்துள்ள முன்னாள் தலைநகரான கபாலாவின் நினைவாக இந்த நகரம் மறுபெயரிடப்பட்டது.

கபாலா
நகரம் & நகராட்சி
மேலே இருந்து: ஆற்றோர விடுதி; இடது: கபாலா கோட்டையின் இடிபாடுகள், வலது: இமாம் பாபா கல்லறையில் ஒரு இடைக்கால பள்ளிவாசல்; இடது: இஸ்மாயில் குடா குட்காஷென்லியின் சிலை, வலது: கபாலா சர்வதேச இசை விழா; கீழே: கபாலாந்து கேளிக்கைப் பூங்கா
மேலே இருந்து: ஆற்றோர விடுதி;
இடது: கபாலா கோட்டையின் இடிபாடுகள், வலது: இமாம் பாபா கல்லறையில் ஒரு இடைக்கால பள்ளிவாசல்;
இடது: இஸ்மாயில் குடா குட்காஷென்லியின் சிலை, வலது: கபாலா சர்வதேச இசை விழா;
கீழே: கபாலாந்து கேளிக்கைப் பூங்கா
ஆள்கூறுகள்: 40°58′53″N 47°50′45″E / 40.98139°N 47.84583°E / 40.98139; 47.84583
நாடுகபாலா Azerbaijan
நிர்வாகப் பிரிவுகபாலா
Established1537
பரப்பளவு
 • மொத்தம்1,548 km2 (598 sq mi)
ஏற்றம்783 m (2,569 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,808
நேர வலயம்AZT (ஒசநே+4)
தொலைபேசி குறியீடு+994 160
இணையதளம்www.qebele-ih.gov.az

வரலாறு

பழங்காலம்

கபாலா காக்கேசிய அல்பேனியாவின் பண்டைய தலைநகரமாகும். கிமு 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நகரம் காக்கேசிய அல்பேனியாவின் தலைநகராக செயல்பட்டதாக தொல்பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது வரை பண்டைய நகரத்தின் இடிபாடுகளும், காக்கேசிய அல்பேனியாவின் பிரதான வாயிலும் உள்ளன. கிமு 4 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலும், 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் கபாலா வளர்ந்த வர்த்தகம் மற்றும் கைவினைப்பொருட்களைக் கொண்ட முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது என்பதை சுகுர் கிராமத்திற்கு அருகே நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. பண்டைய நகரத்தின் இடிபாடுகள் பிராந்திய மையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன. இது கராச்சே மற்றும் ஜோர்லுச்சே ஆறுகளுக்கு இடையிலான பிரதேசத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. கபாலா 2,500 ஆண்டுகள் பழமையான பட்டுப் பாதையின் நடுவில் அமைந்திருந்தது. இளைய பிளினி "கபாலகா" என்றும், கிரேக்க புவியியலாளர் தொலமி "கபாலா" என்றும், அரபு வரலாற்றாசிரியர் அஹ்மத் இப்னு யஹ்யா அல்-பாலாதுரி "கஜார்" என்றும் இதை குறிப்பிட்டுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில், அசர்பைஜானின் வரலாற்றாசிரியர் அப்பாஸ்குலு பக்கிகனோவ் கபாலா அல்லது கப்பாலா என்று தனது குலிஸ்தானி ஐரெம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு சகாப்தம்

கபாலா 
அசர்பைஜானில் அல்பேனிய தலைநகர் கபாலாவின் வாயில்களின் இடிபாடுகள்
கபாலா 
கபாலாவின் இயற்கைக் காட்சி

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், கபாலா அதன் வரலாற்றில் காணப்படாத அளவில் மறுசீரமைப்பு செய்வதற்கான ஒரு பணியைத் தொடங்கியது. சோவியத் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அதன் கரையில் ஒரு பச்சை புள்வெளிகள் வளர்க்கப்பட்டன; கபாலாவின் அடிவாரத்தை நிரப்புவதன் மூலம் மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில் பூங்காக்களும், தோட்டங்களும் கட்டப்பட்டன. பொது சுத்தம், பராமரிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு ஆகியவற்றில் மேம்பாடுகள் செய்யப்பட்டன. இந்த சேவைகள் இப்போது மேற்கு ஐரோப்பிய தரத்தில் உள்ளன. காசுப்பியன் கடலின் கரையில் வடக்கு அச்சில் நகரம் மாறும் மற்றும் முழு வேகத்தில் வளர்ந்து வருகிறது.

2010களிளும், 2013இலிம் துருக்கிய சபையின் உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகள் இங்கு நடந்தது. அசர்பைஜான் மற்றும் பிராந்தியத்தின் வரலாற்றில் அதன் நீண்டகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2013 ஆம் ஆண்டில், இந்த நகரம் பொதுநலவாய நாடுகளின் கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரம்

கபாலாவின் பொருளாதாரம் ஓரளவு விவசாயத்தையும், ஓரளவு சுற்றுலாவையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சில உற்பத்தித் தொழில்கள், முக்கியமாக உணவுப் பாதுகாப்பு, புகையிலை, பட்டுப்புழு கூட்டை உலர்த்துதல் போன்றவை. நகரின் முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் பொறியியல், கட்டுமானம், காய்ச்சுதல் மற்றும் வடிகட்டுதல் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. "பெல்ட்மேன்" கின்னரப்பெட்டிதொழிற்சாலையும் உள்ளது. அதன் தயாரிப்பாளர் ஹான்ஸ் லெஃபெரிங்க் - ஜொஹான் பெல்ட்மேனின் பேரன், 1901 ஆம் ஆண்டில், நெதர்லாந்து இராச்சியத்தில் இதேபோன்ற வணிகத்தை நிறுவினார். சாறு தொழிற்சாலை, கொட்டை தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் மாவட்டத்தில் இயங்குகின்றன.

படத் தொகுப்பு

மேலும் காண்க

  • ஷாகி
  • லங்கரன்
  • நக்கிவன்
  • மிங்கசேவிர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கபாலா வரலாறுகபாலா பொருளாதாரம்கபாலா படத் தொகுப்புகபாலா மேலும் காண்ககபாலா மேற்கோள்கள்கபாலா வெளி இணைப்புகள்கபாலாஅசர்பைஜான்காக்கேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்மருதமலைநீதி இலக்கியம்தேசிக விநாயகம் பிள்ளைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கபிலர்கபிலர் (சங்ககாலம்)கண்ணாடி விரியன்ஞானபீட விருதுசீரகம்திணை விளக்கம்பாம்புவாணிதாசன்கார்ல் மார்க்சுஆங்கிலம்அய்யா வைகுண்டர்சின்னம்மைதமிழ்த்தாய் வாழ்த்துமுடியரசன்விடுதலை பகுதி 1முத்துலட்சுமி ரெட்டிஇரைச்சல்இலிங்கம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சொல்செக் மொழிஅழகர் கோவில்அக்கினி நட்சத்திரம்பகத் பாசில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பரணி (இலக்கியம்)பனைநாடகம்திருவள்ளுவர்பொன்னுக்கு வீங்கிதிராவிசு கெட்இன்ஸ்ட்டாகிராம்சிதம்பரம் நடராசர் கோயில்ராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்கல்லணைகார்லசு புச்திமோன்தெருக்கூத்துசிவாஜி (பேரரசர்)தமிழில் சிற்றிலக்கியங்கள்தமிழிசை சௌந்தரராஜன்விழுமியம்இரட்சணிய யாத்திரிகம்கருப்பசாமிஅம்மனின் பெயர்களின் பட்டியல்அகநானூறுகாம சூத்திரம்அன்னை தெரேசாபௌத்தம்போயர்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்தியாமனித உரிமைதமிழக வரலாறுஅழகிய தமிழ்மகன்குலசேகர ஆழ்வார்விஜயநகரப் பேரரசுதமிழ் தேசம் (திரைப்படம்)மருதம் (திணை)புறப்பொருள்சங்ககாலத் தமிழக நாணயவியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வே. செந்தில்பாலாஜிவியாழன் (கோள்)இராவணன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பஞ்சாங்கம்பதினெண்மேற்கணக்குதமிழர் பண்பாடுபள்ளிக்கூடம்படையப்பா🡆 More