கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும்

கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும் கனடாவின் புவியியல் பகுதியில் கனடாவின் அரசியலமைப்பின் கீழமை துணைநிலை தேசிய அரசுகளாகும்.

1867ஆம் ஆண்டில் கனடியக் கூட்டமைப்பில் பிரித்தானிய வட அமெரிக்காவின் மூன்று மாகாணங்கள்—நியூ பிரன்சுவிக், நோவா ஸ்கோசியா மற்றும் கனடா மாகாணம் — இருந்தன. (கனடா மாகாணம் கூட்டமைப்பு உருவானபோது ஒன்றாரியோ, கியூபெக் என பிரிக்கப்பட்டன) வரலாற்றில் கனடாவின் பன்னாட்டு எல்லைகள் பல மாறுதல்களுக்கு உட்பட்டன. நான்கு மாகாணங்களுடன் துவங்கிய நாடு இன்று பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்புலங்களையும் உட்கொண்டுள்ளது. இந்த பத்து மாகாணங்களாவன: ஆல்பர்ட்டா, பிரிட்டிசு கொலம்பியா, மானிட்டோபா, நியூ பிரன்சுவிக், நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், நோவா ஸ்கோசியா, ஒன்றாரியோ, இளவரசர் எட்வர்ட் தீவு, கியூபெக், சஸ்காச்சுவான். வடமேற்கு நிலப்பகுதிகள், நூனவுட், யூக்கான் மூன்று ஆட்புலங்களாகும். இந்த பத்து மாகாணங்களும் ஆட்புலங்களும் இணைந்து கனடாவை பரப்பளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது-மீப்பெரும் நாடாக ஆக்கியுள்ளது.

கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும்
கனடிய அரச படைத்துறை கல்லூரியின் எயோ மண்டபத்து "ஓ கனடா we stand on guard for thee" வண்ணக் கண்ணாடியில் கனடிய மாகாணங்கள் மற்றும் ஆட்புலங்களின் மேலங்கிச் சின்னங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (1965)

பல மாகாணங்களும் முன்னாள் பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளாக இருந்தவை; கியூபெக் பிரான்சியக் குடியேற்றப் பகுதியாக இருந்தது. மற்ற பகுதிகள் கனடாவின் வளர்ச்சியின்போது சேர்க்கப்பட்டவை.

மாகாணங்களுக்கும் ஆட்புலங்களுக்குமான முதன்மை வேறுபாடு, மாகாணங்களுக்கான அதிகாரம் அரசியலமைப்புச் சட்டம், 1867இன் (முன்னதாக பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867) கீழ் வழங்கப்பட்டவை. ஆட்புல அரசுகளுக்கான அதிகாரம் கனடிய நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டவை. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள் கனடிய அரசுக்கும் (கூட்டமைப்பு அரசு) மாகாண அரசுகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரத்தை மாகாணத்திலிருந்து மத்திய அரசுக்கு மாற்றவோ அல்லது மத்திய அரசின் அதிகாரத்தை மாகாண அரசுக்கு மாற்றவோ அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் ஆட்புலங்களுக்கான அதிகார மாற்றங்களை கனடிய நாடாளுமன்றமோ கனடிய அரசோ மேற்கொள்ள முடியும்.

கனடாவின் மாகாணங்களும் ஆட்புலங்களும்

கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும் விக்டோரியாவைட்ஹார்ஸ்எட்மன்டன்யெலோனைஃப்ரெஜைனாவினிப்பெக்இக்காலுயிட்தொராண்டோஒட்டாவாகியூபெக் நகரம்ஃபிரெடெரிக்டன்சார்லட்டவுன்ஹாலிஃபாக்ஸ்செயின்ட் ஜான்சுவடமேற்கு நிலப்பகுதிகள்சஸ்காச்சுவான்நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்நியூ பிரன்சுவிக்விக்டோரியாயூக்கான்பிரிட்டிசு கொலம்பியாவைட்ஹார்ஸ்ஆல்பர்ட்டாஎட்மன்டன்ரெஜைனாயெலோனைஃப்நூனவுட்வினிப்பெக்மானிட்டோபாஒன்றாரியோஇக்காலுயிட்ஒட்டாவாகியூபெக்தொராண்டோகியூபெக் நகரம்ஃபிரெடெரிக்டன்சார்லட்டவுன்நோவா ஸ்கோசியாஹாலிஃபாக்ஸ்இளவரசர் எட்வர்ட் தீவுசெயின்ட் ஜான்சு
சொடுக்கக்கூடிய கனடாவின் நிலப்படம்; இதில் பத்து மாகாணங்களும் மூன்று ஆட்புலங்களும் அவற்றின் தலைநகரங்களும் காட்டப்பட்டுள்ளன.

பட்டியல்

மாகாணங்கள் மற்றும் ஆட்புலங்களின் பெயர்கள், அவைகளின் வழமையான அஃகுப்பெயர்கள், அவற்றின் தலைநகரங்கள் (அரசு இயங்கும் நகரம்) மற்றும் மாநகரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. கனடாவின் தேசியத் தலைநகரம் ஒட்டாவா ஆகும்.

மாகாணத்தின் பெயர் அஃகுப்பெயர் தலைநகரம் பெரிய நகரம் (தலைநகராக இல்லாவிடத்து )
ஆல்பர்ட்டா AB எட்மன்டன் கால்கரி
பிரிட்டிசு கொலம்பியா BC விக்டோரியா வான்கூவர்
மானிட்டோபா MB வினிப்பெக்
நியூ பிரன்சுவிக் NB ஃபிரெடெரிக்டன் Moncton
நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் NL செயின்ட். ஜான்ஸ்
நோவா ஸ்கோசியா NS ஹாலிஃபாக்ஸ்
ஒன்றாரியோ ON தொராண்டோ
இளவரசர் எட்வர்ட் தீவு PE சார்லட்டவுன்
கியூபெக் QC கியூபெக் நகரம் மொண்ட்ரியால்
சஸ்காச்சுவான் SK ரெஜைனா சாஸ்கடூன்
ஆட்புலப் பெயர் அஃகுப்பெயர் தலைநகரம் பெரிய நகரம் (தலைநகராக இல்லாவிடத்து)
யூக்கான் YT வைட்ஹார்ஸ்
நூனவுட் NU இக்காலுயிட்
வடமேற்கு நிலப்பகுதிகள் NT யெலோனைஃப்

மாகாண சட்டமன்றக் கட்டிடங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும் கனடாவின் மாகாணங்களும் ஆட்புலங்களும்கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும் வெளி இணைப்புகள்கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும்ஆல்பர்ட்டாஇளவரசர் எட்வர்ட் தீவுஒன்றாரியோகனடாகனடாவின் அரசியலமைப்புகியூபெக்சஸ்காச்சுவான்நியூ பிரன்சுவிக்நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்நூனவுட்நோவா ஸ்கோசியாபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்பிரிட்டிசு கொலம்பியாமானிட்டோபாயூக்கான்வடமேற்கு நிலப்பகுதிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுபடைவீடுகள்படையப்பாசித்ரா பௌர்ணமிநக்கீரர், சங்கப்புலவர்ஆண்டுவே. செந்தில்பாலாஜிசமணம்நவரத்தினங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மாசாணியம்மன் கோயில்கூகுள்இராமாயணம்திவ்யா துரைசாமிதிருச்சிராப்பள்ளிசெவ்வாய் (கோள்)தேசிக விநாயகம் பிள்ளைஆழ்வார்கள்தாவரம்தமிழர் அளவை முறைகள்நீ வருவாய் எனமீனா (நடிகை)பட்டா (நில உரிமை)கொன்றை வேந்தன்மஞ்சள் காமாலைசென்னைபெ. சுந்தரம் பிள்ளைபஞ்சபூதத் தலங்கள்இரட்டைக்கிளவிபீப்பாய்இயற்கைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மதராசபட்டினம் (திரைப்படம்)காதல் கொண்டேன்கட்டுவிரியன்சித்த மருத்துவம்தமிழ் மாதங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மொழிபெயர்ப்புஇளையராஜாசங்கம் (முச்சங்கம்)குற்றாலக் குறவஞ்சிஅக்கினி நட்சத்திரம்லிங்டின்வடிவேலு (நடிகர்)தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)இந்திய இரயில்வேசாகித்திய அகாதமி விருதுகபிலர்அன்புமணி ராமதாஸ்அகத்தியம்கொல்லி மலைசேமிப்புநற்றிணைதேவிகாகாயத்ரி மந்திரம்வேலு நாச்சியார்இந்தியக் குடியரசுத் தலைவர்மூகாம்பிகை கோயில்சீனாமாசிபத்திரிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பல்லவர்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅயோத்தி இராமர் கோயில்உ. வே. சாமிநாதையர்சிறுபஞ்சமூலம்பித்தப்பைஅளபெடைசென்னை சூப்பர் கிங்ஸ்விண்ணைத்தாண்டி வருவாயாஆறுமுக நாவலர்கார்ல் மார்க்சுகலிங்கத்துப்பரணிதேர்தல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு🡆 More