ஓல்கா தோக்கர்சுக்கு: போலந்திய எழுத்தாளர்

ஓல்கா தோக்கர்சுக்கு (Olga Nawoja Tokarczuk, போலிய: Olga Nawoja Tokarczuk, பிறப்பு: 29 சனவரி 1962) ஒரு போலந்திய எழுத்தாளர்.

பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார். இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புக்கர் பரிசை ஓடுதளங்கள் என்ற படைப்புக்காக வென்றார். 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றார்.

ஓல்கா தோக்கர்சுக்
Olga Tokarczuk
ஓல்கா தோக்கர்சுக்கு: வாழ்க்கைப் பின்புலம், நூல்கள், மேற்கோள்கள்
2018 இல் தோக்கர்சுக்
பிறப்பு29 சனவரி 1962 (1962-01-29) (அகவை 62)
சுலெச்சோவ், போலந்து
தேசியம்போலந்தியர்
கல்விவார்சா பல்கலைக்கழகம் (BA)
பணிஎழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், உளவியலாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஓடுதளங்கள்
யாக்கோபின் நூல்கள்
தொடக்கவூழியும் மற்றைய காலங்களும்
விருதுகள்நைக்கி விருது (2008, 2015)
விலேனிக்கா பரிசு (2013)
புரூக்கர் பரிசு (2015)
மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (2018)
சான் மிக்கால்சுக்கி பரிசு (2018)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2018)

ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக "நூல் மக்களின் செலவு (பயணம்)" என்ற கதையை எழுதினார். இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுள்ளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதை 1996 இல் எழுதிய தொடக்கவூழியும் பிற காலங்களும் என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.

வாழ்க்கைப் பின்புலம்

தோக்கர்சுக்கு போலந்தில் சிலோன கோரா அருகே உள்ள சுலேச்சோவ் என்னும் ஊரில் 1962 இல் பிறந்தார். தன் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கும் முன் வார்சா பல்கலைக்கழகத்தில் உளத்தியலாளராகப் பயிற்சி பெற்றார். தான் படிக்கும் காலத்தில் சரியான பழக்க வழக்கங்களைக் கற்றிராத பதின்ம அகவையாளர்களுக்கான புகலிடத்தில் இலவச உதவியாளராக இருந்து உதவியுள்ளார். தான் 1985 இல் பட்டம் பெற்ற பின்னர் முதலில் உவுரோக்கிளாவ் என்னும் ஊருக்கும் பின்னர் வல்பிருசிச்சு என்னும் ஊருக்கும் சென்று உளவியல் நோய் தீர்ப்பவராகப் பணியாற்றினார். இவர் தன்னை காரல் யுங்கு என்னும் புகழ்பெற்ற உளத்தியலாளரின் கருத்துவழி மாணவராகக் கருதினார். தன் இலக்கிய படைப்புகளில் காரல் யுங்கை உள்ளுக்கம் தருபவராகக் கூறுகின்றார். 1998 முதல் கிராயனோவ் என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே "உரூத்தா" என்னும் பெயரில் ஒரு தனியார் பதிப்பகம் வைத்து நடத்தினார். இவர் "இடதுசாரி" அரசியல் கருத்துகளும் கொள்கைகளும் உடையவர்.

நூல்கள்

இவர் எழுதிய நூல்கள்:

  • 1989: Miasta w lustrach, Kłodzko: Okolice. ("கண்ணாடி நிழலில் நகரங்கள்")
  • 1993: Podróż ludzi księgi. Warszawa: Przedświt. ("நூல் மக்களின் செலவு (பயணம்)")
  • 1995: E. E. Warszawa: PIW.
  • 1996: Prawiek i inne czasy. Warszawa: W.A.B. ("தொடக்கவூழியும் மற்ற காலங்களும்")
  • 1997: Szafa. Lublin: UMCS. ("ஆடையகம்")
  • 1998: Dom dzienny, dom nocny. Wałbrzych: Ruta. (பகலின் வீடு, இரவின் வீடு)
  • 2000: Opowieści wigilijne. Wałbrzych: Ruta/Czarne ("கிறித்துமசுக் கதைகள்")
  • 2000: Lalka i perła. Kraków: Wydawnictwo Literackie. ("பொம்மையும் முத்தும்")
  • 2001: Gra na wielu bębenkach. Wałbrzych: Ruta. ("பல முழவுகளைக் கொட்டுதல்")
  • 2004: Ostatnie historie. Kraków: Wydawnictwo Literackie. ("கடைசிக் கதைகள்").
  • 2006: Anna w grobowcach świata. Kraków: Znak. ("உலகின் கல்லறைகளில் அன்னா").
  • 2007: Bieguni. Kraków: Wydawnictwo Literackie. ("ஓடுதளங்கள்).
  • 2009: Prowadź swój pług przez kości umarłych. Kraków: Wydawnictwo Literackie. ("இறந்தவர் எலும்புகளின் மீது ஓட்டு உன் ஏரை")
  • 2012: Moment niedźwiedzia. ("The Moment of the Bear").
  • 2014: Księgi Jakubowe. Kraków: Wydawnictwo Literackie. ("யாக்கோபின் கதைகள்").
  • 2018: Opowiadania Bizarne. Kraków: Wydawnictwo Literackie. (பித்தான கதைகள்).

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஓல்கா தோக்கர்சுக்கு வாழ்க்கைப் பின்புலம்ஓல்கா தோக்கர்சுக்கு நூல்கள்ஓல்கா தோக்கர்சுக்கு மேற்கோள்கள்ஓல்கா தோக்கர்சுக்கு வெளியிணைப்புகள்ஓல்கா தோக்கர்சுக்குஇலக்கியத்திற்கான நோபல் பரிசுபோலந்துபோலிய மொழிமான் புக்கர் பன்னாட்டுப் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேனீடி. என். ஏ.மலையாளம்முடியரசன்பழமொழி நானூறுஆடு ஜீவிதம்பிரீதி (யோகம்)மூன்றாம் பானிபட் போர்எடப்பாடி க. பழனிசாமிஇந்திய நாடாளுமன்றம்திதி, பஞ்சாங்கம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்அரிப்புத் தோலழற்சிவேற்றுமையுருபுதொல். திருமாவளவன்அண்ணாமலையார் கோயில்எங்கேயும் காதல்அமேசான்.காம்தேர்தல்குடியுரிமைதிருநெல்வேலிகுண்டூர் காரம்குற்றியலுகரம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தேர்தல் பத்திரம் (இந்தியா)வாணிதாசன்நாலடியார்நாடாளுமன்றம்மக்களாட்சிவட்டார வளர்ச்சி அலுவலகம்சனீஸ்வரன்பதிற்றுப்பத்துமுக்கூடற் பள்ளுகுலுக்கல் பரிசுச் சீட்டுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஏழாம் அறிவு (திரைப்படம்)சோழர்தமிழில் சிற்றிலக்கியங்கள்பாசிப் பயறுசுபாஷ் சந்திர போஸ்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அருந்ததியர்போயர்விடுதலை பகுதி 1மகேந்திரசிங் தோனியாதவர்அரண்மனை (திரைப்படம்)நோட்டா (இந்தியா)நவரத்தினங்கள்தமிழ் எழுத்து முறைவீரப்பன்தொல்லியல்மயக்கம் என்னகுமரிக்கண்டம்எட்டுத்தொகை தொகுப்புபரிபாடல்சார்பெழுத்துமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்இந்திய நிதி ஆணையம்மதுரைஅழகர் கோவில்ஹிஜ்ரத்திராவிசு கெட்தமிழர் நெசவுக்கலைதேம்பாவணிஅம்பேத்கர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிள்ளைத்தமிழ்மீனா (நடிகை)ரோசுமேரிசூரரைப் போற்று (திரைப்படம்)திரு. வி. கலியாணசுந்தரனார்சைவத் திருமுறைகள்அரசியல்உயிர்மெய் எழுத்துகள்பச்சைக்கிளி முத்துச்சரம்வே. செந்தில்பாலாஜிமண் பானை🡆 More