ஒக்குசாய்: சப்பானிய கலைஞர் (1760-1849)

கட்சுசிக்கா ஒக்குசாய் (Katsushika Hokusai) என்பவர் அக்டோபர் 31, 1760– முதல் மே 10, 1849 வரை வாழ்ந்த எடோ காலத்தைச் சேர்ந்த ஒரு சப்பானிய ஓவியர் ஆவார்.

ஒக்குசாய் என்ற பெயரில் இவர் உக்கியோ-இ வகை ஓவியர், அச்சோவியர் என்று .பரவலாக அறியப்படுகிறார் . செச்சு டொயோவின் ஓவியங்களாலும், பிறவகை சீன ஓவிய பாணிகளாலும் பாதிக்கப்பட் ஒரு ஓவியராக கருதப்படுகிறார் . சப்பானில் சீன ஓவியங்களில் வல்லுனராக விளங்கிய இவர் சப்பானிலுள்ள எடோவில் (இன்றைய டோக்கியோ) பிறந்தார். பியூசி மலையின் முப்பத்தாறு காட்சிகள் என்னும் மர அச்சு ஓவியத் தொடரின் ஆக்குனராக ஒக்குசாயை பலரும் அறிவர். அனைத்துலக அளவில் புகழ்பெற்ற கனாகவாவின் பெரிய அலை பியூசி மலையின் முப்பத்தாறு காட்சிகள் தொடரில் உள்ளடங்கிய ஒரு ஓவியமாகும்.

ஒக்குசாய்
北斎
ஒக்குசாய்: இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும், வாழ்வின் உச்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள்
1839ல் வரைந்த தன்னுருவப் படமொன்றில் கட்சுசிக்கா ஒக்குசாய்.
தேசியம்சப்பானியர்
அறியப்படுவதுஓவியம், உக்கியோ-இ மரக்குற்றி அச்சோவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பெரிய அலை

உள்ளூர் சுற்றுப் பயண வளர்ச்சியினால் ஏற்பட்ட தேவையை நிறைவேற்றுவதற்காகவும், பியூசி மலையில் அவருக்கு இருந்த தனிப்பட்ட விருப்புக் காரணமாகவுமே ஒக்குசாய் இந்த முப்பத்தாறு காட்சிகளையும் வரைந்தார். இந்த ஓவியத் தொடரின் ஒரு பகுதியான குறிப்பாக பெரிய அலை, மெல்லிய காற்று, தெளிவான காலை ஆகிய ஓவியங்களே ஒக்குசாய்க்கு சப்பானிலும், வெளிநாடுகளிலும் பெரும்புகழைத் தேடிக் கொடுத்தன. உண்மையில் சப்பானிலும் வெளிநாடுகளிலும் ஒக்குசாயின் பெயரில் ஒரு ஓவியம் வரையப்படுமானால் அது ஒக்குசாயின் முப்பத்தாறு காட்சிகளின் நினைவுச்சின்ன அச்சு தொடராக மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவுக்கு வரலாம் என்று சரித்திர ஆசிரியரான ரிச்சார்ட் லேன் கூறுகிறார். இதற்கு முந்தைய ஒக்குசாயின் ஆக்கங்களும் முக்கியமானவையே ஆயினும், மேற்சொன்ன முப்பத்தாறு ஓவியங்களுக்குப் பின்னரே இவரது பிற ஓவியங்களும் கவனிப்புப் பெற்றன .

இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும்

ஒக்குசாய்: இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும், வாழ்வின் உச்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள் 
பியூசி மலையின் 36 காட்சிகள் தொடரில் ஒக்குசாய் வரைந்த கனகவாவின் பெரிய அலை என்னும் புகழ் பெற்ற அச்சோவியம்
ஒக்குசாய்: இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும், வாழ்வின் உச்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள் 
ஒக்குசாயின் எளிமையாக்கப்பட்ட வரைதல் தொடர்பான பாடங்கள்
ஒக்குசாய்: இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும், வாழ்வின் உச்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள் 
ஒக்குசாய் மங்காவில் குளிப்பவர்களின் படங்கள்
ஒக்குசாய்: இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும், வாழ்வின் உச்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள் 
1817 ஆம் ஆண்டின் கிரேட் தர்மா ஓவியத்தின் ஒக்குசாயின் சமகால அச்சு

ஒக்குசாயின் பிறந்த நாள் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் ஒக்குசாய், ஓரெக்கி காலப்பகுதியின் பத்தாவது ஆண்டில், ஒன்பதாம் மாதம் (1760 அக்டோபர்-நவம்பர்) 23 ஆவது நாள், சப்பானின் ஏடோவின் கட்சுசிக்கா மாவட்டத்தில் ஒரு கைப்பணியாளர் குடும்பத்தில் பிறந்தார் எனப் பெரும்பாலும் கூறப்படுகிறது. ஒக்குசாயின் குழந்தை பருவ பெயர் டோக்கியோரோ ஆகும். இராணுவ சர்வாதிகாரி சோகனுக்காக கண்ணாடிகளை உருவாக்கிய கண்ணாடி தயாரிப்பாளர் நாககிமா இசே ஒக்குசாயின் தந்தையார் என்பதாக நம்பப்படுகிறது. ஒக்குசாயின் தந்தை ஒருபோதும் ஒக்குசாயை தன்னுடைய வாரிசாக அங்கீகரிக்கவில்லை. அதனால் அவரது தாயார் ஒரு காமக்கிழத்தியாக இருக்கலாம். தன்னுடைய ஆறாவது வயதிலிருந்தே ஒக்குசாய் ஓவியங்கள் வரையத் தொடங்கினார். இத்திறமை ஒருவேளை, கண்ணாடிகளின் மேல் கண்ணாடி வடிவமைப்புகளில் ஓவியம் வரையும் தொழில் புரிந்த இவருடைய தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

ஒக்குசாய் தனது வாழ்நாளில் குறைந்தது முப்பது பெயர்களால் அறியப்படுகிறார். அக்காலத்து ஓவியர்களிடையே பல பெயர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் நடைமுறையாக இருந்தது என்றாலும் ஒக்குசாய் வைத்துக்கொண்ட பெயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். இவர் அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டார். இம் மாற்றங்கள் இவரது கலை உற்பத்தி பாணி என்பவற்றோடு தொடர்பு பட்டிருந்தது. இது, இவரது வாழ்க்கையை பல கட்டங்களாகப் பிரிப்பதற்கு வழிவகுத்தது. 12 ஆவது வயதில் ஒரு புத்தகக் கடை மற்றும் வாடகை நூலகத்தில் பணிபுரிவதற்காக ஒக்குசாயை அவருடைய தந்தை அனுப்பி வைத்தார். இத்தகைய வியாபார நிறுவனங்கள் சப்பானிய நகரங்களில் பிரபலமான நிறுவனங்களாக இருந்தன. மரப் பலகைகளில் வெட்டி உருவாக்கப்படும் புத்தகங்களை வாசிப்பது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் பிரபலமான பொழுதுபோக்காகும்.

14 ஆவது வயதில் ஒக்குசாய் மரம் செதுக்கும் பயிற்சியாளராக பணிபுரியத் தொடங்கினார். 18 வயது வரை இதே பயிற்சியாளராக நீடித்த ஒக்குசாய் கட்சுகாவா சுங்சோவின் படப்பிடிப்பு வளாகத்தினுள் பிரவேசித்தார். கட்சுகாவா பள்ளியின் தலைவரான சுங்சோ ஓர் உக்கியோ-இ வகை ஓவியர் ஆவார். மரப்பலகைகளில் அச்சோவியம் செதுக்கும் இக்கலையில் ஒக்குசாய் பின்னாளில் வல்லவரானார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சுங்சோ போன்ற உக்கியோ-இ கலைஞர்கள் அந்த சமயத்தில் சப்பான் நகரங்களில் பிரபலமான பணிப்பெண்கள் மற்றும் கபுக்கி நடிகர்களின் படங்களை முன்வைத்து ஓவியங்கள் வரைந்தனர்.

ஒரு வருடம் கழிந்த பின்னர் ஒக்குசாயின் பெயர் முதல் முறையாக மாற்றம் கண்டது. ஒக்குசாயின் முதலாளியால் சுன்ரோ என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டார். 1779 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கபுகி நடிகர்களின் தொடர்ச்சியான படங்களை இந்தப்பெயரிலேயே ஒக்குசாய் முதன்முதலாக அச்சேற்றினார். சுன்சோவின் படப்பிடிப்பு நிலையத்தில் பணிபுரிந்த பத்தாண்டுக் காலத்தில் ஒக்குசாய் தனது முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டார் . 1790 களின் முற்பகுதியில் அவர் இறந்துவிட்டார் என்பது மட்டுமல்லாமல் மிகக் குறைவாக அறியப்பட்டவராகவும் இருந்தார்.1797 ஆம் ஆண்டில் ஒக்குசாய் மறுபடியும் திருமணம் செய்து கொண்டார், ஆனால் இரண்டாவது மனைவியும் கூட சிறிது காலத்திற்கு பிறகு இறந்து போனார். இவ்விரு மனைவியர் மூலம் ஒக்குசாய் இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்களுக்கு தந்தையானார். இவருடைய இளைய மகள் அய்யும் பின்னாளில் ஒரு ஓவியராக மலர்ந்தார் .

1793 ஆம் ஆண்டில் சுன்சோவின் இறப்பிற்குப் பிறகு, ஒக்குசாய் மற்ற பாணியிலான கலைகளை ஆராயத் தொடங்கினார். பிரெஞ்சு மற்றும் டச்சு பாணியிலான செம்பு செதுக்கல்கள், ஐரோப்பிய பாணி கலைகள் உள்ளிட்ட புதிய பானிகளை இவரால் பெற முடிந்தது. சுங்சோவின் தலைமை சீடரான சுங்கோவினால் கட்சுகாவா பள்ளியிலிருந்து ஒக்குசாய் விரைவில் வெளியேற்றப்பட்டார். சுங்கோவின் கைகளால் தான் தொல்லைக்குள்ளானது, தன் கலைத்துவ பாணி வளர்ச்சிக்கு ஒரு துண்டுதலாக அமைந்ததாக ஒக்குசாயே இந்நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஒக்குசாய் தன்னுடைய படைப்புகளின் பொருளை மாற்றிக் கொண்டார். உக்கியோ-இ வகை பாரம்பரிய பொருள்களான அரசமங்கைகள் மற்றும் நடிகர்களின் உருவங்களில் இருந்து விலகிச் சென்றார். அதற்கு பதிலாக, இவரது வேலை பல்வேறு சமூக நிலைகளில் இருக்கும் சப்பானிய மக்களின் தினசரி வாழ்க்கை மற்றும் இயற்கை தொடர்பான படங்களில் கவனம் செலுத்தினார். இம்மாற்றம் உக்கியோ-இ வகை கலையிலும் ஒக்குசாயின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

வாழ்வின் உச்சங்கள்

அடுத்த காலகட்டத்தில் ஒக்குசாயின் தவாரய பள்ளியுடனான தொடர்பால் இவருக்கு தவாரய சோரி என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. சுரிமோனோ என்ற பெயரிலான பல தூரிகை ஓவியங்களை இவர் தீட்டினார். மேலும் இக்கால கட்டத்தில் நகைச்ச்வைக் கவிதைகளுக்கான கையோகா இகான் விளக்கப்படங்களையும் இவர் வரைந்தார். 1798 ஆம் ஆண்டில், ஒக்குசாய் தன்னுடைய பெயரை ஒரு மாணவருக்கு சமர்ப்பித்துவிட்டு ஒரு சுதந்திர கலைஞனாக முதன்முறையாக ஒரு பாடசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார், அப்போது ஒக்குசாய் தொமிசா என்ற புதிய பெயரைப் பெற்றார்.

1800 ஆம் ஆண்டுகளில் ஒக்குசாய் உக்கியோ-இ வகைக் கலையை உருவப்படக்கலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தவில்லை.

மேலும் இவர் பிறந்த ஊரான எடோவின் ஒரு பகுதியைக் குறிக்கும் கத்சுசிக்கா ஒக்குசாய் என்ற மிகவும் பிரபலமாக அறியப்பட்ட பெயர் பின்னர் வடக்கு படப்பிடிப்பகம் என்று அறியப்பட்ட பெயரையும் அவர் ஏற்றுக்கொண்டார், அந்த ஆண்டில் கிழக்கு தலைநகரம், எடோவின் எட்டு காட்சிகள் என்ற இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார். தனது சொந்த மாணவர்களை ஈர்த்த காரணத்தால் இறுதிக் காலத்தில் 50 மாணவர்களுக்கு ஓவியக் கலையைக் கற்பித்தார்.

அடுத்த பத்தாண்டுகளில் ஒக்குசாயின் கலை மற்றும் தன்னியக்க மேம்பாட்டுத் திறமை காரணமாக அவர் பெருமளவில் மேலும் புகழ்பெற்றார்.1804 ஆம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ திருவிழாவில், பெளத்த துறவி தருமாவின் 600 அடி (180 மீ) நீளம் கொண்ட உருவப்படத்தை துடப்பம் மற்றும் மையைக் கொண்டு உருவாக்கினார். ஒருமுறை சோகன்கன் ஐயனரியின் சபையில் மற்றொரு தூரிகை ஓவியக் கலைஞருடன் போட்டியிட ஒக்குசாய் அழைக்கப்பட்டார். சோகன் முன்னிலையில் ஒக்குசாயின் ஓவியம் உருவாக்கப்பட்டது. காகிதத்தில் ஒரு நீல வளைவை வரைந்து, அதன் குறுக்காக இரத்தம் சிந்திய கால்களுடன் ஒரு கோழி பின்தொடர்ந்து செல்வது போன்ற ஓவியத்தை வரைந்தார். தட்சுலா ஆற்றில் சிவப்பு நிற மேப்பிள் இலைகள் மிதந்து செல்கின்றன என அந்த ஓவியத்திற்கு உரிய விளக்கத்தை சோகனுக்கு அளித்து நடைபெற்ற போட்டியில் வென்றார்.

1807 ஆம் ஆண்டு ஒக்குசாய் பிரபலமான நாவலாசிரியர் தக்கிசாவா பாகின் உடன் இணைந்து விளக்கப்பட புத்தகங்கள் வெளியீட்டு வரிசையில் ஒத்துழைத்தார். இருவருக்குமிடையில் தோன்றிய கலை வேறுபாடு காரணமாக இவர்களின் இணைப்பு ஒத்துழைப்பு அவர்களின் நான்காவது புத்தகத்தின் போதே முடிவுக்கு வந்தது. இந்த வெளியீட்டாளர், ஒக்குசாய் அல்லது பாகின் என்ற இருவரில் ஒருவரை மட்டுமே தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நிலையில் புத்தக வெளியீட்டாளர் ஒக்குசாயையே தேந்தெடுத்தார். அந்த காலத்தில் அச்சிடப்பட்ட படைப்புகளில் விளக்கப் படங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவாக இந்நிகழ்ச்சி அமைந்தது. ஒக்குசாய் தனது படைப்புகளைக் கொண்டுள்ள புத்தகங்கள் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். சீனக் கவிதைத் தொகுப்பின் சப்பானிய பதிப்பான டோசிசென் எகோனின் என்ற புத்தகத்தின் ஒக்கோசாயின் வடிவமைப்புகள் தொடர்பாக வெளியீட்டாளர்களுக்கும் பலகை வடிவமைப்பாளர்களுக்கும் ஒக்குசாய் எழுதிய கடிதங்களின் இரண்டு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகத்தில் ஒக்குசாயின் பாணியில் இருக்கவேண்டிய சில முகங்கள் வெட்டப்படுவதில் எகவா டோம்கிச்சி தவறாக வழிநடத்தியுள்ளதாக புத்தகத்தின் வெளியீட்டாளருக்கு ஒக்குசாய் ஒரு கடிதம் எழுதினார். ஒக்குசாய் எகவா டோம்கிச்சியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது மட்டுமல்லாமல் ஒக்குசாய் பெரிதும் மதிக்கக் கூடிய ஒரு வடிவமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தக வடிவமைப்பில் ஈடுபட்டிருந்த மற்றொரு வடிவமைப்பாளர் சுகிதா கின்சியுக்கிற்கு ஒக்குசாய் நேரடியாக ஒரு கடிதம் எழுதினார். கின்சியு வடிவமைத்திருந்த ஓவியத்தின் கண்களும் மூக்கும் தான் விரும்பிய பாணியில் இல்லை என்றும் அவை திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். நூற்றுக்கணக்கான படிகளில் புத்தகம் தயாரிக்கப்பட்டு முடிந்த பிறகும் புத்தக வெளியீட்டாளர் ஒக்குசாயின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தேவையான திருத்தங்கள் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதே ஒக்குசாயின் வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பைக் காட்டுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

ஒக்குசாய்: இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும், வாழ்வின் உச்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Katsushika Hokusai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஒக்குசாய் இளமைக் காலமும் ஓவியப் பயிற்சியும்ஒக்குசாய் வாழ்வின் உச்சங்கள்ஒக்குசாய் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓவியங்கள்ஒக்குசாய் மேற்கோள்கள்ஒக்குசாய் புற இணைப்புகள்ஒக்குசாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விருத்தாச்சலம்ஆடுதிராவிடர்தமிழ்மகாபாரதம்அயோத்தி தாசர்மணிமேகலை (காப்பியம்)இந்தியன் (1996 திரைப்படம்)ஏ. ஆர். ரகுமான்முகம்மது நபிசிலம்பம்ஐரோப்பாகுமரி அனந்தன்இந்தியப் பிரதமர்மேற்குத் தொடர்ச்சி மலைஇயேசு பேசிய மொழிசிதம்பரம் நடராசர் கோயில்தேனி மக்களவைத் தொகுதிரயத்துவாரி நிலவரி முறைகொல்லி மலைராதாரவிதொல். திருமாவளவன்எம். ஆர். ராதாவெண்பாமறைமலை அடிகள்வேலு நாச்சியார்வட்டாட்சியர்பிரேசில்காதல் மன்னன் (திரைப்படம்)தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகணியன் பூங்குன்றனார்கல்விகலிங்கத்துப்பரணிபெருங்கடல்இரவு விடுதிசுடலை மாடன்கள்ளர் (இனக் குழுமம்)ரோசுமேரிஅனுமன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழ்ப் பருவப்பெயர்கள்மரபுச்சொற்கள்தங்கம் தென்னரசுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ் மாதங்கள்இன்னா நாற்பதுதேர்தல் பத்திரம் (இந்தியா)பத்து தலசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நற்றிணைமுத்தரையர்நபிதென்காசி மக்களவைத் தொகுதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்இந்திய ரூபாய்இந்திய அரசுதிருட்டுப்பயலே 2விளையாட்டுதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்நான்மணிக்கடிகைநாயன்மார்அண்ணாமலை குப்புசாமிவரலாறுகயிறு இழுத்தல்குருகொன்றைஇந்திய உச்ச நீதிமன்றம்சித்திரைவெ. இராமலிங்கம் பிள்ளைகருத்தரிப்புஉயிர்ப்பு ஞாயிறுபுரோஜெஸ்டிரோன்தேவநேயப் பாவாணர்கண்ணாடி விரியன்சூரைபெங்களூர்வேளாண்மை🡆 More