எலோ தரவுகோள் முறை

எலோ தரவுகோள் முறை (Elo rating system) சதுரங்கம் போன்ற போட்டியாளர்-எதிர்-போட்டியாளர் பங்கேற்கும் விளையாட்டுக்களில் விளையாட்டாளர்களின் ஒப்பு நோக்கத்தக்க திறன் நிலைகளை கணக்கிடுவதற்கான முறையாகும்.

இந்த முறையை உருவாக்கிய அங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் அர்பத் எலோ பெயரிலேயே இது குறிப்பிடப்படுகிறது.

எலோ தரவுகோள் முறை
அர்பத் எலோ, எலோ தரவுகோள் முறையைக் கண்டறிந்தவர்

சதுரங்க விளையாட்டில் தரவரிசை நிர்ணயிக்க எலோ முறை உருவாக்கப்பட்டாலும் தற்காலத்தில் இது மற்ற பல விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பல போட்டியாளர்கள் பங்கேற்கும் நிகழ்பட ஆட்டங்களிலும், அணி விளையாட்டுக்களான காற்பந்தாட்டம், அமெரிக்க கல்லூரி காற்பந்து, கூடைப்பந்தாட்டம், பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் போன்றவற்றிலும் தரவரிசைப் படுத்தும் முறையாக எலோ முறை பயன்படுத்தப்படுகிறது.

இரு விளையாட்டாளர்களின் தரவுகோள்களுக்கிடையேயான வேறுபாடு அவர்களுக்கிடையே நடக்கும் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே முடிவுற உதவுகிறது. சமநிலையில் உள்ள போட்டியாளர்களுக்கிடையேயான ஆட்டங்களில் இருவருமே இணையான ஆட்டங்களில் வெல்ல (ஒவ்வொருவருக்கும் 50% வெற்றி) வாய்ப்புண்டு. எதிராளியை விட 100 புள்ளிகள் கூடுதலாக உள்ள போட்டியாளர் வெல்ல 64% வாய்ப்பும் 200 புள்ளிகள் கூடுதலாக உள்ளவர் வெல்ல 76% வாய்ப்பும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஓர் விளையாட்டாளரின் எலோ தரவுகோள் ஓர் எண்ணால் குறிக்கப்படுகிறது. தரப்பட்டியலில் உள்ள விளையாட்டாளர்களுடன் பெறும் வெற்றி/தோல்விகளைப் பொறுத்து விளையாட்டாளரின் தரவுகோள் எண் கூடியும் குறைந்தும் வரும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர் தோல்வியடைந்தவரிடமிருந்து புள்ளிகளை பெறுவர். எவ்வளவு புள்ளிகள் பெறுவார்கள் அல்லது இழப்பார்கள் என்பது இருவரது தரவுகோள்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைச் சார்ந்திருக்கும். உயர்ந்த எண் பெற்றுள்ள விளையாட்டாளருக்கும் குறைந்த நிலையில் உள்ள விளையாட்டாளருக்கும் நடக்கும் ஆட்டத்தொடரில் உயர்ந்த நிலையில் இருப்பவர் கூடுதல் வெற்றிகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடிய எண்ணுள்ளவர் வென்றால் ஒருசிலப் புள்ளிகளே தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆனால் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளர் வென்றால் மிகுந்த புள்ளிகளை தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளருக்கு சில புள்ளிகள் உயர்நிலை விளையாட்டாளரிடமிருந்து மாற்றப்படும்.

மேற்சான்றுகள்

Tags:

அங்கேரிஅமெரிக்க ஐக்கிய நாடுஅர்பத் எலோஇயற்பியல்சதுரங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கலாநிதி மாறன்அத்தி (தாவரம்)வெ. இராமலிங்கம் பிள்ளைகருப்பைமுதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ்நாடு அமைச்சரவைவரலட்சுமி சரத்குமார்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிமாதம்பட்டி ரங்கராஜ்காம சூத்திரம்நீக்ரோதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அரிப்புத் தோலழற்சிமாநிலங்களவைகாப்பியம்குண்டலகேசிமீனாட்சிசுந்தரம் பிள்ளைதிராவிசு கெட்பொது ஊழிதிருமூலர்சார்பெழுத்துகலிங்கத்துப்பரணிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்தியப் பிரதமர்இயோசிநாடிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவி. கே. சின்னசாமிமருதம் (திணை)குண்டூர் காரம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழ் மாதங்கள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழில் சிற்றிலக்கியங்கள்தங்கர் பச்சான்தருமபுரி மக்களவைத் தொகுதிநான்மணிக்கடிகைநீரிழிவு நோய்காளமேகம்பாரத ரத்னாசட் யிபிடிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பெரியாழ்வார்வெந்து தணிந்தது காடுமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்அகழ்ப்போர்சின்னம்மைஇலிங்கம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கலம்பகம் (இலக்கியம்)அருந்ததியர்முகேசு அம்பானிஅகமுடையார்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மக்களாட்சிகாச நோய்பத்து தலகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சிவாஜி (பேரரசர்)பொன்னுக்கு வீங்கிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாட்டாளி மக்கள் கட்சிஹிஜ்ரத்அரசியல்இந்திய தேசியக் கொடிசீரடி சாயி பாபாலியோஅபினிசுற்றுச்சூழல் பாதுகாப்புசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மு. கருணாநிதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமண்ணீரல்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்அண்ணாமலையார் கோயில்விஜய் (நடிகர்)சங்க இலக்கியம்அறுபடைவீடுகள்🡆 More