எட்வின் ஆல்ட்ரின்

புசு ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார்.

இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

புசு ஆல்ட்ரின்
Buzz Aldrin
எட்வின் ஆல்ட்ரின்
விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை இளைப்பாறியவர்
பிறப்பு சனவரி 20, 1930 (1930-01-20) (அகவை 94)
கிளென் ரிட்ஜ், நியூ ஜேர்சி, எட்வின் ஆல்ட்ரின் ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில் போர் விமானி
படிநிலை கேணல், ஐக்கிய அமெரிக்க விமானப் படை
விண்பயண நேரம் 12 நாட்கள், 1 மணி, 52 நிமி
தெரிவு 1963 நாசா பிரிவு
பயணங்கள் ஜெமினி 12, அப்பல்லோ 11
பயண
சின்னம்
எட்வின் ஆல்ட்ரின் எட்வின் ஆல்ட்ரின்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் அமெரிக்காவில் உள்ள மான்கிளேர் என்னுமிடத்தில் 1930 ஜனவரி 20ஆம் நாள் பிறந்தவர். அமெரிக்கப் படைக் கல்விக்கழகத்தில் (War Academy) 1951இல் படித்துப்பட்டம்பெற்றார். பின்னர் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.

எட்வின் ஆல்ட்ரின் 
அப்பலோ-11 பயணத்தின் போது அல்ட்ரின் சந்திரத் தரையில் நடக்கிறார்.

அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். முதன் முதலாக 1966ஆம் ஆண்டு நவம்பர் 11இல் ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஐந்தரை மணிநேரம் விண்கலத்திலிருந்து வெளிவந்து நடந்தார். இதன்மூலம் வெற்றிடத்தில் மனிதன் திறம்படச் செயல்பட முடியும் என்பதை எண்பித்துக் காட்டினார்.

இறுதியில் ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். நான்கு நாட்களுக்குப் பின்னர் இவ்விண்கலம் நிலவில் இறங்கியது. சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார். இருவரும் சுமார் இரண்டு மணிநேரம் நிலவில் நடந்தனர். அப்போது அங்கு சிதறிக் கிடந்த கல் மாதிரிகளைச் சேகரித்தனர். நிறைய ஒளிப்படங்களை எடுத்தனர். தொடர் ஆய்வுக்கென பல்வேறு கருவிகளை நிறுவினர். பின்னர் மீண்டும் விண்கலம் திரும்பி மைக்கேல் காலின்ஸ், நீல் ஆல்டெனுடன் சேர்ந்து பூமிக்குத் திரும்பினாார். ஜூலை 24ஆம் நாளன்று பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கினர்.

1971ஆம் ஆண்டு விண்வெளித்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்றார். பின்னர் விமானிப் பயிற்சிப் பள்ளித் தலைவராகத் தன் பணியைத் தொடர்ந்தார். 1972இல் அங்கிருந்தும் ஓய்வு பெற்றார். ‘பூமிக்குத் திரும்பினோம்' எனும் நூலைத் தன் விண்வெளிப் பயண அனுபவ அடிப்படையில் எழுதியுள்ளார்.

எட்வின் ஆல்ட்ரின் 
அல்ட்ரினால் எடுக்கப்பட்ட சந்திரத்தரையில் அவரது காலடியின் புகைப்படம்., ஜூலை 20, 1969.

"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

எட்வின் ஆல்ட்ரின் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buzz Aldrin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

1930அப்பல்லோ 11ஐக்கிய அமெரிக்காசந்திரன்ஜனவரி 20நீல் ஆம்ஸ்ட்ரோங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிய ஜனதா கட்சிகிளிபத்துப்பாட்டுஅக்கி அம்மைஉமறு இப்னு அல்-கத்தாப்பால்வினை நோய்கள்சித்தர்புதுச்சேரிஎயிட்சுமுதலுதவிஹரிஹரன் (பாடகர்)நஞ்சுக்கொடி தகர்வுஇலங்கையின் வரலாறுதிருப்பாவைமுதுமொழிக்காஞ்சி (நூல்)ஒற்றைத் தலைவலிதேம்பாவணிகல்லீரல்திருவள்ளுவர் சிலைசெவ்வாய் (கோள்)இந்திய விடுதலை இயக்கம்ஐம்பெருங் காப்பியங்கள்அரிப்புத் தோலழற்சிபாளையக்காரர்பஞ்சாபி மொழிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விடுதலை பகுதி 1வராகிஇமாம் ஷாஃபிஈவாட்சப்மதுரைக் காஞ்சிசங்கர் குருஅறுசுவைசுரைக்காய்லக்ன பொருத்தம்அனைத்துலக நாட்கள்ரோசாப்பூ ரவிக்கைக்காரிஅமேசான் பிரைம் வீடியோநாட்டு நலப்பணித் திட்டம்தொலைக்காட்சிமலக்குகள்எங்கேயும் காதல்எட்டுத்தொகைவளையாபதிவீரமாமுனிவர்இரண்டாம் உலகப் போர்மழைநீர் சேகரிப்புமக்காஐயப்பன்அம்லோடிபின்69வியாழன் (கோள்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குப்தப் பேரரசுகளவழி நாற்பதுவே. செந்தில்பாலாஜிவேளாண்மைபாலை (திணை)இசுலாமிய வரலாறுஇந்திரா (தமிழ்த் திரைப்படம்)குறுந்தொகைசூல்பை நீர்க்கட்டிபுங்கைமு. கருணாநிதிமாணிக்கவாசகர்சென்னை சூப்பர் கிங்ஸ்இளங்கோவடிகள்நாம் தமிழர் கட்சிவல்லினம் மிகும் இடங்கள்நேச நாயனார்தமிழ் எழுத்து முறைஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956தலைவி (திரைப்படம்)முத்தரையர்தற்குறிப்பேற்ற அணிஇலக்கியம்தெலுங்கு மொழிஅன்னி பெசண்ட்என்டர் த டிராகன்🡆 More