உயிரி இயற்பியல்

உயிரி இயற்பியல் (Biophysics) என்பது உயிரியல் அமைப்புக்கள் குறித்து ஆராய இயற்பியல் தத்துவங்களையும் செய்முறைகளையும் பயன்படுத்தும் ஓர் பல்துறை அறிவியல் கல்வியாகும்.

இவ்வியலானது உயிரியின் பரிமாணங்களான (Bio Scale) அணு முதற்கொண்டு மூலக்கூறு, உயிரணுக்கள்(cell), திசு, உறுப்புகள், உடலம், சூழல் தொகுதிவரையலான உயிரியல் அமைப்பின் பல்வேறு நிலைகள் விவரிக்கப்படுகின்றன. இவ்வியலை உயிரியல் மற்றும் இயற்பியலின் பாலமாகவும் குறிப்பிடலாம். இந்த பாடத்திட்டமும் உயிர்வேதியியல், நானோ தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல், வேளாண்இயற்பியல், மற்றும் தொகுதி உயிரியல் பாடத்திட்டங்களும் பெருமளவில் மேற்பொருந்தி உள்ளன.

உயிரி இயற்பியல்
ஒளிச்சேர்க்கை தொகுத்தல் மையம்.

வரலாறு

இயற்பியலையும், உயிரியலையும் ஒப்பிடும் பொது உயிரி இயற்பியல் புதிய மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும்.

  • 1592 - கலீலியோ கலிலி படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு 1610 வரை வடிவியல், இயக்கவியல், மற்றும் வானியல் பயிற்றுவித்தார். இவர் குழி, குவி ஆடிகளுடைய கூட்டு நுண்ணோக்கியைக் கண்டறிந்தார்.
  • 1602 - வில்லியம் ஹார்வி இரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிற இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார்.
  • 1662 - மார்செலோ மால்பீஜி - நுண்ணோக்கி உடற்கூறியலை மேம்படுத்துதல், மால்பீஜியன் குழாய்களைக் கண்டறிதல்.
  • 1840களில், பெர்லினைச் சேர்ந்த உடலியக்கவியல் வல்லுநர்கள் (the Berlin school of physiologists) உடற்செயலியலை உயிரற்ற காரணிகளைக் (வெப்பம், அழுத்தம், ஒளி) கொண்டு ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் ஹெர்மான் வான் ஹெல்மோட்ஸ்(Hermann von Helmholtz), எர்னஸ்ட் ஹென்ரிச் வெபெர்(Ernst Heinrich Weber), கார்ல் எஃப். டபில்யூ. லட்விக் (Carl F. W. Ludwig), ஜோன்னஸ் பீட்டர் முல்லர் (Johannes Peter Müller).
  • 1957ல் - உயிரி இயற்பியல் குழுமம் தொடங்கப்பட்டது. இன்று உலகெங்குமுள்ள ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரி இயற்பியல் வல்லுநர்கள் உறுப்பினர்களாயுள்ளனர்.

கண்ணோட்டம்

மூலக்கூறு உயிரி இயற்பியல், உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலைப் போன்று உயிர் இயக்கத்தின் பல்வேறு வினாக்களுக்கும் சிறப்பான அளவில் விடையளிக்கின்றன.

உயிரி இயற்பியலாளர்கள்,

  • உயிரிகளின் கல அமைப்புகளின் இயக்கம், பரிமாணம், சூழல் விளைவுகள் பற்றியும்,
  • டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏக்களின் இடையேயான தொடர்புகளை அறியவும்,
  • புரதச்சேர்க்கை, இயக்க ஒழுங்கமைவு பற்றி ஆராயவும்

மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

உயிரி இயற்பியல் வரலாறுஉயிரி இயற்பியல் கண்ணோட்டம்உயிரி இயற்பியல் மேற்சான்றுகள்உயிரி இயற்பியல் வெளி இணைப்புகள்உயிரி இயற்பியல்அணுஅறிவியல்இயற்பியல்உயிரியல்உயிர்வேதியியல்கட்டமைப்புசூழல்திசுநானோ தொழில்நுட்பம்பல்துறைமைமூலக்கூறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மூலம் (நோய்)தமிழ் விக்கிப்பீடியாபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தமிழர் நிலத்திணைகள்சுந்தர் பிச்சைதூது (பாட்டியல்)நாகப்பட்டினம்பட்டினத்தார் (புலவர்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஆபுத்திரன்முத்துலட்சுமி ரெட்டிகிளிபணவீக்கம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபில்லா (2007 திரைப்படம்)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைசமயக்குரவர்பிரபு (நடிகர்)திருவள்ளுவர்குகன்நாயக்கர்தமிழ்ப் பிராமிஆப்பிள்தங்கராசு நடராசன்கன்னத்தில் முத்தமிட்டால்வேதநாயகம் சாஸ்திரியார்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்ஆழ்வார்கள்இசுலாமிய வரலாறுஇன்று நேற்று நாளைவிஜய் ஆண்டனிதமிழ் இலக்கியம்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்இந்திய வரலாறுநன்னூல்புனித யோசேப்புகலைகைப்பந்தாட்டம்இன்குலாப்மாத்திரை (தமிழ் இலக்கணம்)காயத்ரி மந்திரம்தமிழ்குறியீடுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மண் பானைஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)பில் சோல்ட்மேழம் (இராசி)பிள்ளையார்உயர் இரத்த அழுத்தம்மா. க. ஈழவேந்தன்கலிங்கத்துப்பரணிஎஸ். ஜானகிகாரைக்கால் அம்மையார்வால்மீகிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்குக்கு வித் கோமாளிதாயுமானவர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கவிதைசங்க காலப் புலவர்கள்வைக்கம் போராட்டம்கிருட்டிணன்குணங்குடி மஸ்தான் சாகிபுஒற்றைத் தலைவலிசித்தர்கள் பட்டியல்வசுதைவ குடும்பகம்மகரம்வட்டார வளர்ச்சி அலுவலகம்விளம்பரம்இயற்கைபழமுதிர்சோலை முருகன் கோயில்சேரன் செங்குட்டுவன்பணவியல் கொள்கைபிரியா பவானி சங்கர்தமிழ்விடு தூதுதேவநேயப் பாவாணர்சிவபெருமானின் பெயர் பட்டியல்🡆 More