1977 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1977 ல் நடைபெற்றது.

ஜனதா கட்சியின் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரானார்

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977
1977 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
← 1974 ஆகஸ்ட் 6, 1977 1982 →
  1977 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டி
கட்சி ஜனதா கட்சி
சொந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம்

தேர்வு வாக்குகள்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

முந்தைய குடியரசுத் தலைவர்

பக்ருதின் அலி அகமது
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

நீலம் சஞ்சீவ ரெட்டி
ஜனதா கட்சி

பின்புலம்

ஆகஸ்ட் 6, 1977ல் இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. 1974ல் குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது பதவியில் இருக்கும் போதே பெப்ரவரி 11, 1974ல் மரணமடைந்தார். புதிய தேர்தல் நடத்துவதற்கு முன்னர் 1977 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால் துணைக்குடியரசுத் தலைவர் பசப்பா தனப்பா ஜாட்டி தற்காலிக குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி படுதோல்வி அடைந்து ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. ஜனதா கட்சி அரசு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம் (திருத்தம்), 1977 இனை இயற்றி, உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்க அதிகாரம் வழங்கியது. பின் ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த சஞ்சீவ ரெட்டி ஜனதா கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தோல்வியால் நிலை குலைந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரசு எந்த வேட்பாளரையும் நிறுத்த வில்லை. வேறு பலர் மனுதாக்கல் செய்திருந்தாலும் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இதனால் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியாஜனதா கட்சிநீலம் சஞ்சீவ ரெட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெப்பநிலைசங்க காலப் புலவர்கள்சுப்பிரமணிய பாரதிநிறைவுப் போட்டி (பொருளியல்)முகம்மது நபிசிங்கம்தேம்பாவணிதேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்மூவேந்தர்முத்துராமலிங்கத் தேவர்பஞ்சபூதத் தலங்கள்புரோஜெஸ்டிரோன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்போக்கிரி (திரைப்படம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்அபினிகுற்றியலுகரம்நன்னூல்திருமூலர்கேரளம்தேவயானி (நடிகை)பள்ளுஇலங்கையின் மாவட்டங்கள்வெள்ளியங்கிரி மலைஅன்னை தெரேசாநாளந்தா பல்கலைக்கழகம்வராகிதிருமலை (திரைப்படம்)சித்திரைபறவைஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்விலங்குஅய்யா வைகுண்டர்சித்திரைத் திருவிழாபுவிநைட்ரசன்பீப்பாய்கொங்கு வேளாளர்குற்றாலக் குறவஞ்சிமங்கலதேவி கண்ணகி கோவில்மாதேசுவரன் மலைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்காளமேகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கடவுள்இன்னா நாற்பதுகண்ணதாசன்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்நஞ்சுக்கொடி தகர்வுகுடும்ப அட்டைசொல்இராமலிங்க அடிகள்முல்லைப்பாட்டுசித்திரம் பேசுதடி 2மதுரைக்காஞ்சிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)நினைவே ஒரு சங்கீதம்பூக்கள் பட்டியல்இரா. இளங்குமரன்மாரியம்மன்எச்.ஐ.விகள்ளுகுலசேகர ஆழ்வார்நயினார் நாகேந்திரன்இன்ஸ்ட்டாகிராம்தமிழ் விக்கிப்பீடியாலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ஓமியோபதிதிணையும் காலமும்சிறுதானியம்வாட்சப்நிலாகருப்பை நார்த்திசுக் கட்டிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இளங்கோவடிகள்🡆 More