அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (ஆங்கில மொழி: Avengers: Age of Ultron) என்பது 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.
இது மார்வெல் வரைகதை குழுவான அவென்ஜர்ஸ் என்ற வரைகதை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் | |
---|---|
இயக்கம் | ஜோஸ் வேடன் |
தயாரிப்பு | கேவின் பேகே |
மூலக்கதை | அவேஞ்சர்ஸ் ஸ்டான் லீ ஜாக் கிர்பி |
திரைக்கதை | ஜோஸ் வேடன் |
இசை | பிரையன் இடைலர் டேனி எல்ஃப்மேன் |
நடிப்பு | ராபர்ட் டவுனி ஜூனியர் கிறிஸ் இவான்ஸ் மார்க் ருஃப்பால்லோ கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஜெர்மி ரேன்நேர் சாமுவேல் எல். ஜாக்சன் ஆரோன் டெய்லர்-ஜோன்சன் எலிசபெத் ஓல்சென் ஜேம்ஸ் சப்டர் பவுல் பெட்டனி தோமஸ் கிரெட்ச்மன் கோபி ஸ்மல்டேர்ஸ் அந்தோணி மேக்கி ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் |
ஒளிப்பதிவு | பேன் டேவிஸ் |
படத்தொகுப்பு | ஜெப்ரி போர்ட் லிசா லாசெக் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 13, 2015(டால்பி திரையரங்கம்) மே 1, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $444-495.2 மில்லியன்1 |
மொத்த வருவாய் | $1.405 மில்லியன் |
இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகமாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினோராவது திரைப்படமும் ஆகும். கேவின் பேகே என்பவர் தயாரிப்பில் ஜோஸ் வேடன் என்பவர் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன், ஆரோன் டெய்லர்-ஜோன்சன், எலிசபெத் ஓல்சென், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன், ஜேம்ஸ் சப்டர், கோபி ஸ்மல்டேர்ஸ், அந்தோணி மேக்கி, ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
அவென்ஜர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 13 ஏப்ரல் 2015 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1 மே 2015 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது, இது 2015 ஆம் ஆண்டில் நான்காவது மிக அதிக வசூல் செய்த படமாகவும் மற்றும் உலக ரீதியாக ஐந்தாவது மிக அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018 ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டும் வெளியானது.
இந்த உலகத்தை வேற்றுகிரகவாசிகளிடமிருந்து காப்பதற்காக டோனி ஸ்டார்க் அல்ட்ரான் எனப்படும் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அனால் அவர் உருவாக்கிய ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராய் திரும்புகின்றது. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இயந்திரங்களிடமிருந்து மனிதர்களை எப்படி சூப்பர் ஹீரோஸ் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை.
இந்தியாவில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டியிலும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
This article uses material from the Wikipedia தமிழ் article அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.