அவீச்சி

டிம் பெர்குலிங் (Tim Bergling; 8 செப்டம்பர் 1989 – 20 ஏப்ரல் 2018), பரவலாக அவரது திரைப் பெயர் அவீச்சி (Avicii; ə-VEE-chee; வணிகமுறையில் ΛVICII மற்றும் ◢ ◤) ஓர் சுவீடிய இசைக்கலைஞரும் இசைத்தட்டாளரும் கலப்பிசைக் கலைஞரும் ஆவார்.

இசைத்தட்டுத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

அவீச்சி
அவீச்சி
2014இல் அவீச்சி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டிம் பெர்குலிங்
பிற பெயர்கள்
  • டிம் பெர்கு
  • டிம் லைடென்
  • டாம் ஹேங்சு
  • டிம்பர்மேன்
பிறப்பு(1989-09-08)8 செப்டம்பர் 1989
ஸ்டாக்ஹோம், சுவீடன்
இறப்பு20 ஏப்ரல் 2018(2018-04-20) (அகவை 28)
மஸ்கத், ஓமான்
இசை வடிவங்கள்
  • இலத்திரனியல் நடன இசை
  • முன்னேறுவீடு
  • மின்னில்லம்
தொழில்(கள்)
  • இசைக் கலைஞர்
  • இசைத்தட்டாளர்
  • கலப்பிசையாளர்
  • வட்டு தயாரிப்பு
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்2006–2018
வெளியீட்டு நிறுவனங்கள்
  • அவீச்சி
  • யூனிவர்சல் இசைக் குழுமம்
இணைந்த செயற்பாடுகள்
  • டேவிடு கெத்தா
  • வைக்கிளெஃப் ஜீன்
  • கோல்டுப்ளே
இணையதளம்avicii.com

பெர்குலிங்கின் அறிமுகத் தொகுப்பில், இட்ரூ (மெய்) (2013), இலத்திரனியல்சார் இசையில் பல்வேறுவகை இசைநடைகளும் கலந்து வெளியானது; இது இசை விமரிசகர்களிடம் பொதுவான நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. பதினைந்தும் மேற்பட்ட நாடுகளில் இது விரைவிலேயே முதல் பத்திடங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. ஆத்திரேலியா, சுவீடன், டென்மார்க்கு,ஐக்கிய அமெரிக்க நடனவிசை பட்டியல்களில் முதலிடம் பிடித்தது. 2015இல் தனது இரண்டாவது கலைக்கூடத் தொகுப்பான இஸ்டோரீசு (கதைகள்) வெளியிட்டார். ஆகத்து 10, 2017இல் அவீச்சி (01) என்ற இசைத்தட்டை வெளியிட்டார். ஏப்ரல் 20, 2018 இல் ஓமான் நாட்டில் மரணமடைந்தார்.

அவீச்சி 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இசைத்தட்டாளர்களுக்கான இதழால் (DJ Magazine) ஆண்டுதோறும் வெளியிடப்படும் முதல் 100 இசைத்தட்டாளர்கள் பட்டியலில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருந்தார். 2012ஆம் ஆண்டில் டேவிட் கெத்தாவுடன் அவர் ஆற்றிய படைப்பு "சன்ஷைன்" (கதிரொளி)க்காகவும் 2013இல் தனது பாட்டு "லெவல்சு" (நிலைகள்)க்காவும் இருமுறை கிராமி விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ குட் பி தி ஒன் (நிக்கி ரோமெரோவுடன்), "வேக் மீ அப்!" (அமெரிக்கப் பாடகர் அலோ பிளாக்குடன்), "யூ மேக் மீ", "ஏய் பிரதர்", "அடிக்டக்டு டு யூ", மற்றும் "கொல்லைடு" (பிரித்தானியப் பாடகர் லியோனா லெவிசுடன்) பரவலாக அறியப்பட்ட இவரது பாடல்களில் சிலவாகும்.

வாழ்க்கை வரலாறு

பிறப்பு

அவீச்சி செப்டம்பர் 8, 1989 இல் ஸ்டாக்ஹோம், சுவீடனில் பிறந்தார். அவரது பிறந்த பெயர் டிம் பெர்லிங்; இருப்பினும் அவர் தொழில் ரீதியாக அவீச்சி, டிம் பெர்கு என்ற பெயர்களால் அறியப்படுகிறார்; டிம் லைடென், டாம் ஹேங்சு, டிம்பர்மேன் என்பன இவரது பிற புனைபெயர்களாகும்.

இசை வாழ்க்கை

அவீச்சி 
அவீச்சி 2011 இல், பன்னாட்டுப் புகழை அடைவதற்கு முன்னர், இலண்டனில் ஒரு கச்சேரியில்.

2008 ஆம் ஆண்டில் தனது 18ஆம் அகவையில் இசையுலகிற்கு வெளிவந்தார்; தம்முடைய காமோதோர் 64 குறுங்கணினியில் இருந்த "சோம்பேறி ஜோன்சு" என்ற காணொளி விளையாட்டுப் பாட்டை கலப்பிசையில் மீளமைத்து வெளியிட்டார்; இது சோம்பேறி லேசு என்ற பெயரில் ஸ்ட்ரைக் ரிகார்டிங் நிறுவனத்தால் விற்பனைக்கு விடப்பட்டது.

அவீச்சி பீட் டாங் என்ற வணிகப் பெயருடன் ஏப்ரல் 2008 இல் மேன்மேன் என்ற இசைத்தொகுப்பை சொந்தமாக வெளியிடப்பட்டார். இது "பாசுட்டு டிராக்சு" என்ற போட்டியில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து அவீச்சி உலகெங்கிலும் உள்ள பல இசைத்தட்டு வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் முன்பதிவு முகமைகளைத் தொடர்பு கொண்டார்.

2011–12: "லெவல்சு" மற்றும் பன்னாட்டுப் புகழ்

அவீச்சி 
2008இல் அறிமுகப்படுத்தப்பட்ட அவீச்சி வணிகச் சின்னம்

2011இல் தனது "லெவல்சு" என்ற இசைத்தொகுப்பை பொதுவெளியில் வெளியிட்டார். இந்தப் பாட்டு எட்டா ஜேம்சு பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலான சம்திங் காட் அ ஓல்டு ஆன் மீ என்ற பாடலின் துளிகளை உள்ளடக்கியிருந்தது. இத்தொகுப்பு ஆஸ்திரியா, பெல்ஜியம், பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, கிரேக்கம் (நாடு), அயர்லாந்து, இத்தாலி, the நெதர்லாந்து, சுலோவீனியா, ஐக்கிய இராச்சியம், நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள்ளாக இருந்தது; அங்கேரி, நோர்வே சுவீடன் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.

2012ஆம் ஆண்டில் டேவிடு கெத்தாவுடன் இணைந்து பாடிய "சன் ஷைன்" என்ற பாட்டிற்காக சிறந்த நடன இசை என்ற பகுப்பில் கிராமி விருதுக்கு நியமிக்கப்பட்டார். லியோனா லெவிசின் கொல்லைடு என்ற ஒற்றைப் பாட்டில் அவீச்சியின் "ஃபேடு இன்டூ டார்க்னசு" என்ற பாடலின் துளிகள் இடம்பெற்றது. இப்பாடலில் இதற்குரிய மூலக்குறிப்பை குறிப்பிடாததால் அவீச்சி இதற்கு தடை வாங்க முயன்றார். இருப்பினும் இச்சர்ச்சைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் வண்ணம் லெவிசின் சார்பாளர் லெவிசும் அவீச்சியும் இணைந்து இப்பாடலை வெளியிடுவதாக அறிவித்தார்.

இறப்பு

2016இல் அவீச்சிக்கு அதிகளவிலான குடிப்பழக்கத்தால் கடும் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதன்பிறகு நேரலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்தினார்.

ஏப்ரல் 20, 2018 அன்றுபெர்குலிங்கின் தொடர்பாளர் டயானா பேரன் ஓமான் நாட்டின் மசுக்கட்டு நகரில் அவர் இறந்ததாக அறிவித்தார். இவரது விசிறிகளுக்கும் குடும்பத்தினருக்கும் கால்வின் ஆரிசு, மார்ஷ்மெல்லோ, டெட்மவுசு, மார்ட்டின் காரிக்சு, செட் போன்ற இசைத்தட்டாளர்களும் ரீட்டா ஓறா, துவா லிப்பா, மடோனா போன்ற பாடகர்களும் உட்பட பல இசைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அவீச்சி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அவீச்சி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அவீச்சி வாழ்க்கை வரலாறுஅவீச்சி மேற்கோள்கள்அவீச்சி வெளியிணைப்புகள்அவீச்சிஆங்கில ஒலிப்புக் குறிகள்சுவீடன்திரைப் பெயர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுமைப்பித்தன்அகநானூறுதிருச்சிராப்பள்ளிஅணி இலக்கணம்விண்ணைத்தாண்டி வருவாயாதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சே குவேராஆண் தமிழ்ப் பெயர்கள்நுரையீரல் அழற்சிபாண்டியர்குமரகுருபரர்வே. செந்தில்பாலாஜிதமிழ்நாட்டின் அடையாளங்கள்வேர்க்குருபாரிமு. க. ஸ்டாலின்செங்குந்தர்இரண்டாம் உலகம் (திரைப்படம்)அங்குலம்சிலப்பதிகாரம்உலகம் சுற்றும் வாலிபன்தமிழ் எண்கள்திருமுருகாற்றுப்படைகார்த்திக் (தமிழ் நடிகர்)நரேந்திர மோதிதமிழ்நாடு காவல்துறைதிருவிளையாடல் புராணம்உரிச்சொல்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பள்ளர்இலங்கை தேசிய காங்கிரஸ்வெ. இராமலிங்கம் பிள்ளைவாற்கோதுமைவ. உ. சிதம்பரம்பிள்ளைகாதல் கொண்டேன்பிரேமம் (திரைப்படம்)பெரியாழ்வார்சிவாஜி கணேசன்இயேசு காவியம்இலங்கைகாதல் (திரைப்படம்)பாரத ரத்னாசூரியக் குடும்பம்சினைப்பை நோய்க்குறிகலிங்கத்துப்பரணிகாமராசர்ஏப்ரல் 26வாலி (கவிஞர்)ஈரோடு தமிழன்பன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இரட்டைக்கிளவிதற்கொலை முறைகள்புற்றுநோய்திருமணம்நீக்ரோபெரும்பாணாற்றுப்படைமனித உரிமைவானிலைபரிபாடல்உவமையணிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)முத்தரையர்முன்னின்பம்புதினம் (இலக்கியம்)பாசிசம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பிள்ளையார்உத்தரகோசமங்கைவேலுப்பிள்ளை பிரபாகரன்சா. ஜே. வே. செல்வநாயகம்ஞானபீட விருதுகொன்றை வேந்தன்தமிழ்த்தாய் வாழ்த்துஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசூர்யா (நடிகர்)கல்விக்கோட்பாடுஓ காதல் கண்மணிமத கஜ ராஜா🡆 More