அன்னா மாணி: இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி

அன்னா மாணி (23 ஆகத்து 1918 – 16 ஆகத்து 2001) ஓர் இந்திய இயற்பியலாளரும் வானிலை ஆய்வாளரும் ஆவார்.

இவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். இவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். இவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளை வெளியிட்டார்.

அன்னா மாணி
அன்னா மாணி: இளமை வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, மறைவு
அன்னா மாணி
பிறப்பு(1918-08-23)23 ஆகத்து 1918
திருவிதாங்கூர், கேரளம்
இறப்பு16 ஆகத்து 2001(2001-08-16) (அகவை 82)
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியா
துறைவானிலையியல், இயற்பியல்
பணியிடங்கள்இந்திய வானிலை ஆராய்ச்சி துறை, புனே

இளமை வாழ்க்கை

அன்னா மாணி பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். இவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. இவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். இவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, இவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 இல், இவர் இயற்பியல் மற்றும் வேதியியலில் மாநிலக் கல்லூரி, சென்னையில் இருந்து இளநிலை அறிவியல் கௌரவ பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, இவர் பேராசிரியர் ச. வெ. இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். இவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் இவருக்கு மறுக்கப்பட்டது. இவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், இவர் இம்பீரியல் காலேஜ் இலண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார். 1948இல் இந்தியா திரும்பிய பிறகு, இவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். இவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார். இவர் 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார். இவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவை - 1980இல் 'The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981இல். Solar Radiation over India. இவர் 1987இல் கே. ஆர். ராமநாதன் பதக்கம் வென்றார்.

மறைவு

1994இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 16 ஆகத்து 2001இல் திருவனந்தபுரத்தில் காலமானார்.

வெளியீடுகள்

மேற்கோள்கள்

Tags:

அன்னா மாணி இளமை வாழ்க்கைஅன்னா மாணி தொழில் வாழ்க்கைஅன்னா மாணி மறைவுஅன்னா மாணி வெளியீடுகள்அன்னா மாணி மேற்கோள்கள்அன்னா மாணிஇயற்பியல்காற்று ஆற்றல்சூரிய ஆற்றல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உடன்கட்டை ஏறல்இணையம்ஐம்பூதங்கள்நயினார் நாகேந்திரன்கர்மாஇரசினிகாந்துஇலக்கியம்ஐங்குறுநூறுசிறுகதைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கிரியாட்டினைன்கண் (உடல் உறுப்பு)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதளபதி (திரைப்படம்)ஆய்த எழுத்துதிருமலை நாயக்கர் அரண்மனைவேற்றுமையுருபுமொழிபலாவேர்க்குருபாட்ஷாதிரைப்படம்அஸ்ஸலாமு அலைக்கும்கிராம ஊராட்சிசித்திரகுப்தர் கோயில்சமூகம்நிணநீர்க் குழியம்சொல்இந்தியாவில் இட ஒதுக்கீடுமறைமலை அடிகள்நினைவே ஒரு சங்கீதம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)அடல் ஓய்வூதியத் திட்டம்உரைநடைஅகநானூறுவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைநுரையீரல் அழற்சிநாம் தமிழர் கட்சிஓரங்க நாடகம்முத்துராமலிங்கத் தேவர்யானைஇராமலிங்க அடிகள்பறையர்திணைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சுற்றுச்சூழல் மாசுபாடுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சங்க காலம்கம்பர்இரட்டைக்கிளவிகம்பராமாயணத்தின் அமைப்புகும்பம் (இராசி)வேலு நாச்சியார்தமிழர் விளையாட்டுகள்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடியாழ்வித்துபுறப்பொருள் வெண்பாமாலைசெண்டிமீட்டர்நாயன்மார்ஜோக்கர்கல்வெட்டுகொல்லி மலைசிறுபாணாற்றுப்படைமுடியரசன்ஒத்துழையாமை இயக்கம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழச்சி தங்கப்பாண்டியன்திராவிட மொழிக் குடும்பம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்களப்பிரர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்காடுஅறுபடைவீடுகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்🡆 More