விந்து சேகரிப்பு

விந்து சேகரிப்பு (Semen Collection) செயல்முறை என்பது மனிதர்களில் ஆண்கள் அல்லது மற்ற விலங்குகளில் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி செயற்கை விந்தூட்டல், அல்லது மருத்துவ ஆய்விற்காக விந்தணுவினை சேகரித்தலைக் குறிக்கும்.

விந்து சுய இன்பம் (உ.ம். குதிரை மற்றும் நாய்கள்), முன்னிற்குஞ்சுரப்பி வருடியோ, செயற்கை பெண்குறியினைப் பயன்படுத்தியோ, ஆண்குறியில் அதிர்வினை தூண்டியோ, மின்மூலம் விந்தணுவினை வெளியேற்றியோ சேகரிக்கலாம். அருகிவரும் இனங்களிலிருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு குறை வெப்பநிலையில் பாதுகாத்து மரபணு வளங்களைப் பாதுகாக்கவும் விந்தணு சேகரிப்பு உதவுகிறது.

விந்து சேகரிப்பு
செயற்கை கருவூட்டலில் குதிரைகளிலிருந்து விந்து சேகரிக்கப் பயன்படும் உள்ளமைக்கப்பட்ட செயற்கை பெண்குறி

பல்வேறு இனங்களில் சேகரிப்பு முறைகள்

மனிதர்கள்

மனிதர்களிடமிருந்து விந்து சேகரிக்கும் முறைகள் பின்வருமாறு:

  • சுய இன்பம் மூலம் சுத்தமான கோப்பை ஒன்றில் விந்தணு சேகரிக்கப்படுகிறது. விந்து மாதிரியைச் சேகரிக்க இது மிகவும் பொருத்தமான பொதுவான வழியாகும்.
  • சேகரிப்பு ஆணுறை எனப்படும் சிறப்பு வகை ஆணுறைகளைப் பயன்படுத்தி உடலுறவின் மூலம் சேகரித்தல். சேகரிப்பு ஆணுறைகள் சிலிகான் அல்லது பாலியூரிதீனால் தயாரிக்கப்படுகின்றன; ஏனெனில். இரப்பர் மரப்பாலினால் ஆன ஆணுறைகள் விந்தணுக்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது. பல ஆண்கள் சுய இன்பத்திற்கும் சேகரிப்பு ஆணுறைகளை விரும்புகிறார்கள். சில மதங்கள் சுயஇன்பத்தை முற்றிலும் தடைசெய்கின்றன. கருத்தடை செய்வதைத் தடைசெய்யும் மதங்களைப் பின்பற்றுபவர்கள் துளையிடப்பட்ட சேகரிப்பு ஆணுறைகளை பயன்படுத்தலாம். இருப்பினும், இத்தகைய மாதிரிகள் சுத்தமான கோப்பையில் சுயஇன்பம் மூலம் சேகரிக்கப்பட்டதை விந்தணுவினை விடத் தரம் குறைந்தவையாக உள்ளன.
  • காயிட்டசு குறுக்கீடு (திரும்பப் பெறுதல்). இந்த நுட்பத்தால், மனிதன் உடலுறவின் போது ஆணுறுப்பினை பெண்ணின் குறியிருந்து நீக்கி அகலமான கழுத்து கோப்பை அல்லது பாட்டிலில் சேகரித்தல்.
  • அறுவைசிகிச்சை மூலம் பிரித்தெடுத்தல், எடுத்துக்காட்டாக, விந்து வெளியேற்றிக் குழாயில் அடைப்பு உள்ளபோது கருவுறுதல் நடைபெறாது. இத்தகைய சூழலில் விந்தணு விந்து நாளத்திலிருந்து நேரடியாக அறுவைச்சிகிச்சை மூலம் எடுக்கப்படுகிறது. விந்தணு திரவத்தில் விந்தணுக்கள் இல்லாத ஆண்களுக்கு இம்முறை பயன்தருகிறது.
  • ஆண்குறியில் அதிர்வினைத் தூண்டியும் மற்றும் எலெக்ட்ரோ எஜாகுலேஷன் முறையும்முதுகெலும்புக் காயம் உள்ள ஆண்களில் விந்தணு வெளியேற்று முறைகளாகும். இதில் இடுக்கிப் போன்ற சாதனத்தினைப் பயன்படுத்தி ஆண்குறியின் மொட்டினை தூண்டி விந்தணு வெளியேறத் தூண்டப்படுகிறது.

3-5 நாட்கள் இடைவெளியில் விந்தணு சேகரித்தல் பயன் தருகிறது. நீண்ட காலம் விந்தணு வெளியேற்றாமல் இருந்து சேகரிக்கப்படும் விந்தணுவில் எவ்வித கூடுதல் பலனும் உள்ளதாகத் தெரியவில்லை.

கால்நடைகள்

குதிரைகள்

குதிரைகளில் விந்து சேகரிப்புக்கு, பயன்படுத்தப்படும் பொதுவான முறை செயற்கையான பெண்குறியினைப் பயன்படுத்துவதாகும். இம்முறையில் சேகரிக்கப்பட்ட விந்து சேகரித்த சோதிக்கப்பட்டு, நீர்த்தப்பட்டு, பின்னர் விரும்பிய பயன்பாட்டிற்கு ஏற்ப சேமிக்கப்படுகிறது. விந்து திரவமாகவோ அல்லது உறைந்த நிலையிலோ சேமிக்கலாம். விந்தணுக்களை நீர்த்துப்போகச் செய்து சேமிக்கும் போது பல வகையான நிலைப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆற்றல் தருபவையாகவும் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் உறைந்த விந்துக்கு உறைநிலையில் பாதுகாப்பு தருபவை. சேமிப்பு பண்பினை மேம்படுத்துவதற்கும், திரவ விந்து சேமிப்பு காலத்தினை அதிகரிப்பதற்கும், விந்திலிருந்து பாக்டீரியாக்களைக் குறைப்பதற்கும் அல்லது அகற்றுவதற்கும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கேனிட்கள்

நாய்கள்

ஆண் நாயிடமிருந்து விந்து சேகரிக்க, செயற்கை பெண்குறி பயன்படுத்தப்படுகிறது. இது மெல்லிய மரப்பாலால் செய்யப்பட்ட கூம்பு வடிவமுடையது. இதன் முடிவில் சேகரிக்கும் குழாய் உள்ளது. லேட்டக்ஸ் அமைப்பின் உட்புறம் உராய்வினைத் தடுக்கும் பொருட்கள் பூசப்பட்டிருக்கும். எஸ்ட்ரசு சுழற்சியில் இருக்கும் ஆண் நாய் பெண் நாயினுடன் இணைய அனுமதிக்கப்படுகிறது. தூண்டலுக்கு உட்படுத்தப்பட்டும் விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஒருவர் தன் கைகளைப் பயன்படுத்தி அனுபவமில்ல பெண் நாயின் உணர்ச்சியினை தூண்டுவார். பொதுவாக ஆண் நாய் பெண் நாயினைத் தழுவும் போது விந்து சேகரிப்பவர் ஆண் நாயின் ஆண்குறியில் லேடெக்ஸ் ஸ்லீவுக்கு விரைவாகச் செலுத்துவார். இதில் வெளியேற்றப்படும் விந்து, விந்து குழாயில் சேகரிக்கப்படுகிறது. விந்து வெளியேறும் போது இடுப்பு உந்துதல் இயக்கங்களை நாய் தொடங்குகிறது.

ஓநாய்கள்

ஓநாய்களில் கைகளைப் பயன்படுத்தித் தூண்டியோ அல்லது எலக்ட்ரோதூண்டுதல் மூலமாகவோ விந்துணுவினை சேகரிக்கலாம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

நூலியல்

காண்டாமிருகத்திலிருந்து விந்து சேகரிப்பு

வெளி இணைப்புகள்

  • ஆண்கள் அறைகள் ஒரு பிரித்தானிய பத்திரிகையாளர் விந்து சேகரிப்பு நிகழ்வை உற்று நோக்குகிறார்.

Tags:

விந்து சேகரிப்பு பல்வேறு இனங்களில் சேகரிப்பு முறைகள்விந்து சேகரிப்பு மேலும் காண்கவிந்து சேகரிப்பு மேற்கோள்கள்விந்து சேகரிப்பு நூலியல்விந்து சேகரிப்பு வெளி இணைப்புகள்விந்து சேகரிப்புசுய இன்பம்செயற்கை பெண்குறிசெயற்கை விந்தூட்டல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாடுஜன கண மனவைணவ சமயம்புரி ஜெகன்நாதர் கோயில்காற்று வெளியிடைதொல்காப்பியம்அக்கினி நட்சத்திரம்செம்மொழிசனீஸ்வரன்பிள்ளையார்குலுக்கல் பரிசுச் சீட்டுதிருமூலர்திராவிட மொழிக் குடும்பம்இராபர்ட்டு கால்டுவெல்அயோத்தி தாசர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பழமொழிதேசிக விநாயகம் பிள்ளைசுய இன்பம்சிலேடைசிறுநீரகம்தமிழ் எண்கள்தொகைநிலைத் தொடர்விநாயகர் அகவல்ஐந்திணை எழுபதுகட்டுரைஉத்தரகோசமங்கைஉரிப்பொருள் (இலக்கணம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்காயத்ரி மந்திரம்அட்சய திருதியைஉவமையணிமுடக்கு வாதம்கோயம்புத்தூர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்நெல்லிபுறப்பொருள் வெண்பாமாலைசுற்றுச்சூழல் பாதுகாப்புஏறுதழுவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கரகாட்டம்இயற்கை வளம்இந்திய தேசிய சின்னங்கள்பெரியபுராணம்மனித உரிமைகாவிரிப்பூம்பட்டினம்தமிழ்த்தாய் வாழ்த்துஆசாரக்கோவைகாதல் தேசம்மதுரைக்காஞ்சிசாகிரா கல்லூரி, கொழும்புநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்திய அரசுசிலம்பரசன்மகரம்திருவிழாதிருப்பதிசன்ரைசர்ஸ் ஐதராபாத்அந்தாதிபறவைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தொல்காப்பியர்சீவகன்பர்வத மலைவிளம்பரம்மத கஜ ராஜாஇன்குலாப்பில்லா (2007 திரைப்படம்)அதியமான்முக்குலத்தோர்மூலிகைகள் பட்டியல்தமிழர் நிலத்திணைகள்நாழிகைகன்னத்தில் முத்தமிட்டால்விபுலாநந்தர்இராவணன்புதுச்சேரிதேவநேயப் பாவாணர்வராகி🡆 More