கருத்தடை உறை

கருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும்.

இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும். விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் கருத்தடை உறைகள் பயன்படுகின்றன.

கருத்தடை உறை
கருத்தடை உறை
சுருட்டப்பட்ட கருத்தடை உறை
பின்புலம்
உச்சரிப்பு/ˈkɒndəm/ or UK: /ˈkɒndɒm/
வகைதடுப்பு
முதல் பயன்பாடுபண்டைய
இயற்கை மீள்மம்: 1855
மரப்பால் (லேடெக்ஸ்): 1920கள்
பாலியூரிதீன்: 1994
பாலிசோபிரீன்: 2008
கருத்தரிப்பு விகிதங்கள் (முதல் ஆண்டு, மரப்பால்)
சரியான பயன்பாடு2%
வழக்கமான பயன்பாடு18%
பயன்பாடு
மீள்தன்மைஆம்
பயனர் நினைவூட்டல்கள்மரப்பால் கருத்தடை உறைகள் எண்ணெய் சார்ந்த தனிப்பட்ட லூப்ரிகண்டால் சேதமடைகின்றன
நன்மை மற்றும் தீமை
பால்வினை நோய் தடுப்புஆம்
நன்மைகள்சுகாதார வருகைகள் தேவையில்லை மற்றும் குறைந்த செலவு
கருத்தடை உறை
ஆணுறை ஒன்று
கருத்தடை உறை
பெண்ணுறை ஒன்று

கருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன. ஆணுறைகள் ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும்போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது.

மிகச் சரியான முறையிலும், ஒவ்வொரு பாலுறவின்போதும் ஆணுறை பயன்படுத்தப்படுமாயின் ஆண்டொன்றுக்கு 2% கருத்தரிப்பு நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளை வழக்கமான பயன்பாட்டின் அடிப்படையில் பார்க்கையில், கருத்தரிப்பு வீதமானது ஆண்டொன்றுக்கு 18% மாக இருக்கிறது. ஆனாலும், உறைப் பயன்பாடானது, கொணோறியா, கிளமிடியா, en:trichomoniasis,[தெளிவுபடுத்துக] en:hepatitis B,[தெளிவுபடுத்துக] எயிட்சு போன்ற பால்வினை நோய்கள் ஏற்படும் அபாயத்தை மிகவும் அதிகளவில் கட்டுப்படுத்துவதுடன், அக்கிக் கொப்பளங்கள், மனித சடைப்புத்துத் தீ நுண்மம், சிபிலிசு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் ஓரளவு கட்டுப்படுத்துகிறது.

வரலாறு

கருத்தடை உறை 
ஆணுறையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற விளக்கப்படம்

1564 முதல் கருத்தடை உறைகள், பால்வினை நோய்களின் தாக்கத்திலிருந்து தடுக்கப்படுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இரப்பரால் செய்யப்பட்ட உறைகள் 1855 இலும், latex ஆல் செய்யப்பட்ட உறைகள் 1920 இலும் பயன்பாட்டுக்கு வந்தன. இவை உலக சுகாதார அமைப்பின், அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் பட்டியலில், மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான சுகாதார முறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகளவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான முறையாக 10% மானோர் இந்த உறைகளைப் பயன்படுத்தியதாக 2012 இல் வந்த ஒரு அறிக்கை கூறுகின்றது. இந்த உறைகளின் பயன்பாடு வளர்ந்த நாடுகளில் அதிகமாக உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான இரண்டாவது பொதுவான முறையாகவும் (22%), ஐக்கிய அமெரிக்காவில் மூன்றாவது பொதுவான முறையாகவும் (15%) இந்த உறைகளின் பயன்பாடு இருக்கின்றது அண்ணளவாக, ஆண்டொன்றுக்கு 6-9 பில்லியன் உறைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணுறைகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் விற்பனை வளர்ந்த நாடுகளில் குறைவாகவே உள்ளது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், எயிட்சு தடுப்புத் திட்டங்கள் இருந்தாலும் கூட, அங்கே இந்த பெண்ணுறைப் பயன்பாடு அவற்றை ஈடுசெய்வதுபோல் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. பெண்ணுறைகளை அணிந்துகொள்ள சாமர்த்தியம் தேவைப்படுவதனாலும், அவற்றின் விலை ஆணுறைகளைவிடவும் அதிகமாக இருப்பதனாலும், அவற்றைப் பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியமான சூழ்நிலையாலும், இவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நாடுகளில், 6-9 பில்லியன் ஆணுறைகளும், 12 மில்லியன் பெண்னுறைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெண்கள் தாமாகவே திட்டமிட்டு, எயிட்சு நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக எடுக்கக்கூடிய முன்முயற்சியாக பெண்ணுறைகளின் பயன்பாடு இருப்பதனால், இவற்றின் விநியோகத்தை நோயுள்ள நாடுகளில் அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அவற்றின் உயர் விலை காரணமாக இம்முயற்சி பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.

வகைகள்

ஆணுறை

பொதுவாக ஆணுறைகள் இரப்பர் மரப்பாலைப் பயன்படுத்தியே தயார் செய்யப்படுகின்றன எனினும், குறைந்தளவில் பொலியூரத்தீன் அல்லது இளம் செம்மறியாட்டின் சிறுகுடல் போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ஆணுறைகள் இலகுவான பயன்பாடு, இலகுவில் கிடைக்கும் தன்மை, மற்றும் குறைந்தளவு பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் சாதகமானதாக இருக்கின்றன. இறப்பர் மரப்பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், பொலியூரத்தீன் அல்லது வேறு செயற்கைத் தயாரிப்புக்களைப் பயன்படுத்தலாம். ஆணுறைகள் ஒரு தடைவை மட்டுமே பயன்படுத்தப்படும்.

பெண்ணுறை

கருத்தடை உறை 
பெண்ணுறையில் படம்
கருத்தடை உறை 
பெண்ணுறையில் படம்

பெண்ணுறைகள் பொதுவாக Polyurethane கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. ஆணுறைகளினால் ஏற்படும் தொற்றுநோய்ப் பாதுகாப்பின் அளவைவிட, பெண்ணுறைப் பயன்பாடு குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட இந்த பெண்ணுறைகள், முதலாவது காரணமாக ஆண்கள் ஆணுறைகள் பயன்படுத்த தயாரில்லாத சூழ்நிலைகளிலும், இரண்டாவதாக காரணமாக ஆண்களிடமிருந்து பால்வினை நோய்கள் பெறப்படுவதிலிருந்து தடுக்கும் நோக்குடனும் பயன்படுத்தப்படுகின்றன.

பக்க விளைவுகள்

Latex க்கு ஒவ்வாமை கொண்டவர்களில், தோல் நமைச்சல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றும். ஒவ்வாமைத் தன்மை அதிகம் கொண்டவர்களாயின், மிகவும் அபாயமான சூழ்நிலையையும் கொடுக்கக்கூடும். Latex உறைகளின் தொடர்ந்த பயன்பாடு, ஒவ்வாமைத் தன்மையை சிலரில் அதிகரிக்கச் செய்யக்கூடும். விந்தணுக்களைக் கொல்லக்கூடிய சில பதார்த்தங்கள் இத்தகைய உறைகளில் இருந்தால் அவையும், இப்படியான ஒவ்வாமைத் தன்மைக்குக் காரணமாகலாம்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கருத்தடை உறை வரலாறுகருத்தடை உறை வகைகள்கருத்தடை உறை பக்க விளைவுகள்கருத்தடை உறை இவற்றையும் பார்க்கவும்கருத்தடை உறை மேற்கோள்கள்கருத்தடை உறை வெளி இணைப்புகள்கருத்தடை உறைகருத்தரிப்புபாலுறவுபால்வினை நோய்கள்மீட்சிப்பண்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருக்காலம்ஜெயம் ரவிதமிழர்மு. அ. சிதம்பரம் அரங்கம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சஞ்சு சாம்சன்சங்க காலப் புலவர்கள்அருந்ததியர்வாஞ்சிநாதன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தனுஷ் (நடிகர்)தமிழிசை சௌந்தரராஜன்அரங்குவட்டாட்சியர்சிலம்பம்யாழ்நடுக்குவாதம்இயேசுகுறிஞ்சிப் பாட்டுஅன்னி பெசண்ட்சி. விஜயதரணிசுவாதி (பஞ்சாங்கம்)கடையெழு வள்ளல்கள்பரிதிமாற் கலைஞர்தோஸ்த்அன்புமணி ராமதாஸ்விவேகானந்தர்களஞ்சியம்ஆங்கிலம்இராவண காவியம்விஜயநகரப் பேரரசுசுய இன்பம்சங்க இலக்கியம்யுகம்பட்டினப் பாலைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முதலாம் உலகப் போர்சூரரைப் போற்று (திரைப்படம்)கட்டுவிரியன்பிள்ளைத்தமிழ்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அட்சய திருதியைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்திய ரிசர்வ் வங்கிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பொருநராற்றுப்படைகாதல் கொண்டேன்ஹர்திக் பாண்டியாவெ. இறையன்புதேம்பாவணிகொடைக்கானல்வேதம்மக்களாட்சிதற்கொலை முறைகள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பெரியபுராணம்பாமினி சுல்தானகம்சதயம் (பஞ்சாங்கம்)போக்குவரத்துதமிழ் எழுத்து முறைஇந்திய தேசிய காங்கிரசுபுற்றுநோய்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வடிவேலு (நடிகர்)தமிழ்த் தேசியம்குகேஷ்ஐங்குறுநூறுமாணிக்கவாசகர்வெள்ளியங்கிரி மலைதிருமலை நாயக்கர்இராவணன்மஞ்சும்மல் பாய்ஸ்உணவுச் சங்கிலிபாஞ்சாலி சபதம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆயுள் தண்டனைகல்லீரல்பூலித்தேவன்🡆 More