வட்டெழுத்து

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும்.

வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

வட்டெழுத்து
இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு
வட்டெழுத்து
வட்டெழுத்து
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை
திசைleft-to-right Edit on Wikidata
மொழிகள்தமிழ், மணிப்பிரவாளம்
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தமிழி
தோற்றுவித்த முறைகள்
தமிழ் எழுத்துமுறை
நெருக்கமான முறைகள்
கிரந்தம்
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

வட்டெழுத்து தோற்றம்

வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால் (கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.

ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர். மு.வரதராசனார் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.[யார்?]

கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

குயிலெழுத்து

சங்ககாலக் குயிலெழுத்து நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம். கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் என்றது இங்குக் கருதத் தக்கது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

வட்டெழுத்து தோற்றம்வட்டெழுத்து குயிலெழுத்துவட்டெழுத்து இவற்றையும் பார்க்கவட்டெழுத்து மேற்கோள்கள்வட்டெழுத்துதமிழிதமிழ்மலையாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் புத்தாண்டுசின்னம்மைசுற்றுலாநாயக்கர்சமூகம்இந்தியத் தலைமை நீதிபதிகாமராசர்கா. ந. அண்ணாதுரைஇந்திய நாடாளுமன்றம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தங்கம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சிவாஜி கணேசன்கில்லி (திரைப்படம்)வேதம்சிறுகதைபூனைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நாச்சியார் திருமொழிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சிவனின் 108 திருநாமங்கள்விஜய் (நடிகர்)விஜயநகரப் பேரரசுவெட்சித் திணைமலேரியாசங்க காலம்அம்பேத்கர்பரணர், சங்ககாலம்கபிலர் (சங்ககாலம்)சப்ஜா விதைபெண்ணியம்குழந்தை பிறப்புபதினெண்மேற்கணக்குசித்த மருத்துவம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தேவிகாசிறுதானியம்கன்னியாகுமரி மாவட்டம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பரணி (இலக்கியம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்கருத்தரிப்புதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருவிளையாடல் புராணம்வெந்தயம்இரைச்சல்விளம்பரம்கூலி (1995 திரைப்படம்)தமிழ் நீதி நூல்கள்குருதி வகைவிஷ்ணுஆப்பிள்தமிழ்நாடு அமைச்சரவைமகரம்மழைநீர் சேகரிப்புநாடகம்தேவாரம்திருட்டுப்பயலே 2மகாபாரதம்சித்தர்கள் பட்டியல்அண்ணாமலையார் கோயில்வேலு நாச்சியார்அக்பர்புணர்ச்சி (இலக்கணம்)முகலாயப் பேரரசுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழக வெற்றிக் கழகம்தமிழ் எழுத்து முறைபத்துப்பாட்டுரத்னம் (திரைப்படம்)இந்தியாவில் பாலினப் பாகுபாடுவட்டாட்சியர்திருவாசகம்குடும்ப அட்டைமுதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உடுமலை நாராயணகவிஅட்சய திருதியை🡆 More