அரிட்டாபட்டி கல்வெட்டுகள்

அரிட்டாபட்டி கல்வெட்டுகள், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைந்த அரிப்படாபட்டி கிராமத்தில் உள்ள அரிட்டாபட்டி மலைக்குன்றில் உள்ளது.

இம்மலைக் குன்றின் கிமு இரண்டாம் நூற்றாண்டு சமணப் படுக்கைகளும், அதன் மேல் இரண்டு வரியில் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளது. இம்மலைக்குன்றில் மகாவீரர் புடைப்புச் சிற்பத்தின் கீழ் 1,300 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்து தமிழ் வட்டெழுத்து கல்வெட்டும், ஒரு குடைவரை கோயிலும் உள்ளது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் அரிட்டாபட்டி மலைக்குன்றில் கண்டெடுக்கப்பட்டது. அரிட்டாபட்டி மலைக்குன்றின் தமிழி கல்வெட்டும், வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும்.

அரிட்டாபட்டி கல்வெட்டுகள்
அரிட்டாபட்டி குன்றுகள்
அரிட்டாபட்டி கல்வெட்டுகள்
குடைவரைக் கோயில் - அரிட்டாபட்டி குன்றுகள்

அமைவிடம்

அரிட்டாபட்டி கல்வெட்டுக்கள் மேலூருக்கு மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரை நகரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள அரிட்டாபட்டி மலைக்குன்றில் உள்ளது.

கல்வெட்டுக்களின் விளக்கம்

தமிழ்ப் பிராமி கல்வெட்டு

கிமு இரண்டாம் நூற்றாண்டு அரிட்டாபட்டி தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளை கள ஆய்வுகளில் திருத்தமாக பாடம் வாசிக்கப்பட்டு ஐ. மகாதேவன் என்பவர் தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்டார்.தமிழ்ப் பிராமி கல்வெட்டில் நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இக்குகைத் தளத்தை கட்டுவித்தான் என்றுள்ளது. சிழிவன் என்பது செழியன் என்னும் பாண்டியர் குடிப்பெயராகும். அதினன் வெளியன் என்பது கொடையாளியின் இயற்பெயராகும். வெள் என்பதன் நீட்டலே வேள் என்பது ஆய்வு முடிபாகும். எனவே நெல்வேலியை ஆண்ட அதினன் என்னும் வேள் அமைத்து வைத்த கற்படுக்கையாக இதனைக் கருதலாம். இவ்வேள் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வட்டெழுத்து கல்வெட்டு

அரிட்டாபட்டி கல்வெட்டுகள் 
மகாவீரர் புடைப்புச் சிற்பத்தின் கீழ் வட்டெழுத்து கல்வெட்டுகள்

திருப்பிணையன் மலையிலிருந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட மகாவீரர் திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பாண்டியர் கால இக்கல்வெட்டு 1300 ஆண்டுகள் பழமையானது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரிட்டாபட்டி கல்வெட்டுகள் அமைவிடம்அரிட்டாபட்டி கல்வெட்டுகள் கல்வெட்டுக்களின் விளக்கம்அரிட்டாபட்டி கல்வெட்டுகள் இதனையும் காண்கஅரிட்டாபட்டி கல்வெட்டுகள் மேற்கோள்கள்அரிட்டாபட்டி கல்வெட்டுகள் வெளி இணைப்புகள்அரிட்டாபட்டி கல்வெட்டுகள்அரிட்டாபட்டி ஊராட்சிஅரிட்டாபட்டி மலை, மதுரைஅரிட்டாபட்டி, மதுரைஇந்தியக் குடைவரைக் கோயில்கள்கிமுசைனம்தமிழ்ப் பிராமிபாண்டியர்புடைப்புச் சிற்பம்மகாவீரர்மதுரை மாவட்டம்மேலூர் ஊராட்சி ஒன்றியம்வட்டெழுத்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

மே நாள்ஐங்குறுநூறு - மருதம்முதல் மரியாதைவிஷால்கார்லசு புச்திமோன்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குணங்குடி மஸ்தான் சாகிபுபிரீதி (யோகம்)ஈரோடு தமிழன்பன்காளை (திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தனுசு (சோதிடம்)சேலம்மலைபடுகடாம்ரோசுமேரிபஞ்சாயத்து ராஜ் சட்டம்எலுமிச்சைஒன்றியப் பகுதி (இந்தியா)ஔவையார்ஆறு108 வைணவத் திருத்தலங்கள்பரதநாட்டியம்கலித்தொகைஎஸ். ஜானகிபுனித யோசேப்புபஞ்சதந்திரம் (திரைப்படம்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கற்றாழைகிருட்டிணன்முதலாம் உலகப் போர்சிலப்பதிகாரம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மெய்யெழுத்துஐஞ்சிறு காப்பியங்கள்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)சங்ககாலத் தமிழக நாணயவியல்சுயமரியாதை இயக்கம்வளையாபதிதொடை (யாப்பிலக்கணம்)இரைச்சல்கூத்தாண்டவர் திருவிழாதமிழர்வெப்பநிலைபூலித்தேவன்தீபிகா பள்ளிக்கல்லிங்டின்ஆகு பெயர்ஜன கண மனமதுரைக் காஞ்சிபறையர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கருத்துதேவயானி (நடிகை)தமிழ் மன்னர்களின் பட்டியல்சீறாப் புராணம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்வைகைமு. க. ஸ்டாலின்பறவைக் காய்ச்சல்எட்டுத்தொகைகணையம்கேள்விகில்லி (திரைப்படம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திக்கற்ற பார்வதிசிந்துவெளி நாகரிகம்தனிப்பாடல் திரட்டுதொல். திருமாவளவன்ஆய்த எழுத்து (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிமனோன்மணீயம்பிரேமம் (திரைப்படம்)பதிற்றுப்பத்துரெட் (2002 திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்பரிதிமாற் கலைஞர்புவிவிபுலாநந்தர்🡆 More