வட்டெழுத்து

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும்.

வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

வட்டெழுத்து
இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு
வட்டெழுத்து
வட்டெழுத்து
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை
திசைleft-to-right Edit on Wikidata
மொழிகள்தமிழ், மணிப்பிரவாளம்
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தமிழி
தோற்றுவித்த முறைகள்
தமிழ் எழுத்துமுறை
நெருக்கமான முறைகள்
கிரந்தம்
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

வட்டெழுத்து தோற்றம்

வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால் வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால் (கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.

ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர். மு.வரதராசனார் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.[யார்?]

கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

குயிலெழுத்து

சங்ககாலக் குயிலெழுத்து நடுகல்லில் செய்தி எழுதப் பயன்படுத்தப்பட்டது. வழிப்போக்கர்கள் இதனைப் படிக்காமல் செல்வார்களாம். கல்லில் குயின்று எழுதப்பட்ட எழுத்தைக் குயிலெழுத்து என்றனர். மூங்கிலைக் குயின்று குழல் செய்யும் கலைஞரைக் குயிலுவ மாக்கள் என்றது இங்குக் கருதத் தக்கது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

வட்டெழுத்து தோற்றம்வட்டெழுத்து குயிலெழுத்துவட்டெழுத்து இவற்றையும் பார்க்கவட்டெழுத்து மேற்கோள்கள்வட்டெழுத்துதமிழிதமிழ்மலையாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிதிருமுருகாற்றுப்படைதிருநாவுக்கரசு நாயனார்தாராபாரதிதிருமலை நாயக்கர் அரண்மனைஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)மக்களாட்சிசேலம் மக்களவைத் தொகுதிமுலாம் பழம்வேளாண்மைமஞ்சும்மல் பாய்ஸ்இந்திரா காந்திஇசுலாம்மயங்கொலிச் சொற்கள்கலிங்கத்துப்பரணிஆண் தமிழ்ப் பெயர்கள்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிபலத்தீன் நாடுமனித மூளைகுலசேகர ஆழ்வார்மதுரைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பாண்டியர்வி.ஐ.பி (திரைப்படம்)கிருட்டிணன்கருக்காலம்ஈரோடு மக்களவைத் தொகுதிசந்திரயான்-1கர்மாமலையாளம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024அருந்ததியர்காசி காண்டம்லோகேஷ் கனகராஜ்இலக்கியம்மாதேசுவரன் மலைசுருதி ஹாசன்அண்ணாமலை குப்புசாமிமதீச பத்திரனபதிற்றுப்பத்துபாவலரேறு பெருஞ்சித்திரனார்உரைநடைஎம். கே. விஷ்ணு பிரசாத்ரஷீத் கான்சங்க இலக்கியம்சங்க காலப் புலவர்கள்உவமைத்தொகைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பட்டினப் பாலைசிவாஜி கணேசன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சினைப்பை நோய்க்குறிவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)லோ. முருகன்அம்பேத்கர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்வெ. இராமலிங்கம் பிள்ளைகாதல் கவிதைமுத்துராமலிங்கத் தேவர்அன்மொழித் தொகைபுறநானூறுதிருவாரூர் தியாகராஜர் கோயில்இலங்கையின் மாவட்டங்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கடையெழு வள்ளல்கள்சிலப்பதிகாரம்ம. பொ. சிவஞானம்தபூக் போர்திருச்சிராப்பள்ளிஅறநெறிச்சாரம்மலேசியாமு. களஞ்சியம்புறாஇந்து சமயம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுசிறுவாபுரி முருகன் கோவில்ஆகு பெயர்பி. கோவிந்தராஜ்🡆 More