தரவு

தரவுகள் (Data)என்பன பயனுடையதாகக் கருதப்படும் குறிப்புகளாகும்.

அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். ஏதொன்றையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் எனில் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவைகள் தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள், கண்டுபிடிப்புகள் முதலியன பெற இயலும். தரவுகள், தகவல்களுக்கான முதல் வடிவங்கள் ஆவன; தரவுகளின் மீது சில அல்லது பல செயல்முறைகள் செய்யபட்டு அவை மக்களால் கொள்ளக்கூடியத் தகவல்களாக மாறுகின்றன.

வரலாறு

இலத்தீன் மொழியில் dare (தர்) எனில் தா என்று பொருள், அதன் வழி தரப்பட்டது என்னும் பொருள் படும் datum என்னும் சொல் 2,300 ஆண்டுகளாக மேற்குலகில் பயன்பாட்டில் உள்ளது. கி.மு. 300ல் யூக்ளிட் என்னும் கிரேக்க அறிஞர் ஆக்கிய நூல்களில் ஒன்று Dedomena டெடோமெனா (இலத்தீனில் Data) என்பதாகும். வடிவ கணிதம் போன்ற துறைகளில் தரப்பட்ட செய்திகளை data (தரவுகள்) என்று குறிப்பது வழக்கம். தரப்பட்டதை சரியானது, உண்மையானது என்று கொள்வதும் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. இன்று கணினியியல், அறிவியல், பொறியியல், மருத்துவ இயல், போன்ற அறிவியல் துறைகளில், எண்கள், சொற்கள், அளவீடுகள் என பலவும் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இலத்தீனில் இருந்து பெற்ற இன்றைய ஆங்கிலச் சொல்லாகப் பயன் படும் data (டேட்டா) என்பது பன்மை, datum (டேட்டம்) என்பது ஒருமை. எனினும் ஒற்றைக் குறிப்புதனையும் data என்று சொல்வது் இன்று சரியென ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. தமிழில் தரவு, தரவுகள் என வழங்கப்படுகின்றன.

Tags:

அழுத்தம்உயரம்எண்ஒலிஒளிகண்டுபிடிப்புவெப்பநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வெண்பாதமிழர் நெசவுக்கலைபகத் சிங்சிந்துவெளி நாகரிகம்ஹர்திக் பாண்டியாஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஅஜித் குமார்சுற்றுச்சூழல் பாதுகாப்புகிராம ஊராட்சிகுத்தூசி மருத்துவம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்பூட்டுபத்துப்பாட்டுஊரு விட்டு ஊரு வந்துசனீஸ்வரன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வாட்சப்இயேசு பேசிய மொழிகாடைக்கண்ணிபிரெஞ்சுப் புரட்சிரவிச்சந்திரன் அசுவின்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கீர்த்தி சுரேஷ்மக்களவை (இந்தியா)முதலாம் உலகப் போர்கல்லணைதமிழ்நாடு சட்டப் பேரவை2024 இந்தியப் பொதுத் தேர்தல்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)முல்லைப்பாட்டுஉவமையணிவிஷ்ணுகண்ணனின் 108 பெயர் பட்டியல்வினோஜ் பி. செல்வம்தேர்தல் நடத்தை நெறிகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இந்திய அரசியல் கட்சிகள்தன்னுடல் தாக்குநோய்மலையாளம்கர்மாகுறுந்தொகைதமிழ்நாடுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)காம சூத்திரம்வேற்றுமையுருபுவேதாத்திரி மகரிசிமனித மூளைவெண்குருதியணுஎட்டுத்தொகைஅம்பேத்கர்முத்துலட்சுமி ரெட்டிமதுரை மக்களவைத் தொகுதிபுவிவெப்பச் சக்திமக்காதமிழ்நாட்டின் மாவட்டங்கள்காடுவெட்டி குருஅபுல் கலாம் ஆசாத்பிரேமலதா விஜயகாந்த்மொழிபெயர்ப்புஎடப்பாடி க. பழனிசாமிஇராமாயணம்நாயக்கர்ராதாரவிஜன கண மனராதிகா சரத்குமார்மீன்வேளாண்மைபொது ஊழிபிள்ளைத்தமிழ்மட்பாண்டம்அத்தி (தாவரம்)நிதி ஆயோக்ஹாட் ஸ்டார்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்குருத்து ஞாயிறு🡆 More