கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு (ⓘ) என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும்.

ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். பொதுவாகக் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்வதற்கு, ஏற்கனவே இருக்கும் ஒரு எண்ணக்கருவையோ, வழிமுறையையோ மேம்படுத்தி ஒரு கண்டுபிடிப்பாக்க முடியும் என்ற புரிதல் இருப்பது அவசியம். சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு.

கண்டுபிடிப்பின் வழிமுறைகள்

மனித வரலாற்றில், ஒரு வேலையைப் புதிய முறையில், இலகுவாக, வேகமாக, அதிக செயற்றிறன் கொண்ட வகையில், அல்லது மலிவாகச் செய்து முடிக்கும் நோக்குடன் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற கருத்தை ஒரு பகுதியினர் முன்வைக்கின்றனர். இவர்கள், வளங்களின் பற்றாக்குறையே கண்டுபிடிப்புக்களுக்கு வழி கோலுகிறது என்று வாதிடுகின்றனர். இன்னொரு பகுதியினர், மேலதிக வளங்களே கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன என்கின்றனர். எனினும், உண்மை நிலையை, இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

எண்ணக்கருக்களும் கண்டுபிடிப்பும்

எண்ணக்கருக்களிலிருந்து (Ideas), பயனுள்ள பொருட்களையோ, ஒரு வழிமுறையையோ புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் ஆயினும், ஒரு மூல எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவதென்பது எப்பொழுதும் முழுமையாக நடைபெறக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் எண்ணக்கருக்கள் பல சமயங்களில் இயல்புக்குப் பொருத்தமற்றவை ஆகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையுமாக இருக்கின்றன. ஆகாயக் கோட்டை கட்டுதல் போன்ற சூழ்நிலைகள், ஆக்கத்திறனை (creativity) வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கக்கூடும் எனினும், நடைமுறைச் சிக்கல்களால் இவை கண்டுபிடிப்புக்களாக மாறுவதில்லை. கண்டுபிடிப்பின் வரலாறு இத்தகைய பல ஆகாயக் கோட்டைகளைக் கண்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

தொழினுட்பம்படிமம்:Ta-கண்டுபிடிப்பு.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சத்திமுத்தப் புலவர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்செண்டிமீட்டர்ஜிமெயில்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெருங்கதைஆண்டு வட்டம் அட்டவணைஇல்லுமினாட்டிசுகன்யா (நடிகை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கீர்த்தி சுரேஷ்குறவஞ்சிஇந்தியன் (1996 திரைப்படம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்பொது ஊழிமீனா (நடிகை)கொடுக்காய்ப்புளிசென்னைஇந்திய தேசிய காங்கிரசுபுறப்பொருள்இந்திய நாடாளுமன்றம்ஔவையார்கணம் (கணிதம்)உத்தரகோசமங்கைசதுரங்க விதிமுறைகள்செப்புஆற்றுப்படைவிளையாட்டுகுணங்குடி மஸ்தான் சாகிபுஇந்தியத் தலைமை நீதிபதிபழமுதிர்சோலை முருகன் கோயில்ஜன்னிய இராகம்புதிய ஏழு உலக அதிசயங்கள்போக்கிரி (திரைப்படம்)தமிழ்நாடுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)நாம் தமிழர் கட்சிதசாவதாரம் (இந்து சமயம்)சங்க காலம்இந்தியன் பிரீமியர் லீக்அந்தாதிதிராவிட இயக்கம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பூனைஆண் தமிழ்ப் பெயர்கள்சுபாஷ் சந்திர போஸ்புலிமுருகன்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்அகரவரிசைஐக்கிய நாடுகள் அவைகுப்தப் பேரரசுதேவேந்திரகுல வேளாளர்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பசுமைப் புரட்சிகருட புராணம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கலிங்கத்துப்பரணிதொல்லியல்வெந்து தணிந்தது காடுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்தைப்பொங்கல்தமிழ் மன்னர்களின் பட்டியல்முன்னின்பம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்மு. கருணாநிதிஉமறுப் புலவர்சிலம்பரசன்கம்பர்கன்னத்தில் முத்தமிட்டால்பாரதிதாசன்முத்தரையர்🡆 More